Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, February 7, 2011

இந்த பதிவுக்கு டைட்டில் தரத்தெரியவில்லை

            இணைய பதிவுகளை நான் படிப்பது மிகவும் குறைவு. காரணம் நான் படித்த பலரின் பதிவுகள் வெறும் நகைச்சுவை உணர்வுடனும், எந்த உபயோகமான தகவல்களையும் உள்ளடக்கியதாக இல்லாமலும், நான் நின்னேன், நடந்தேன், போனேன், வந்தேன் என்பதாகவும் தான் இருக்கின்றன.( 'இந்த விமர்சனம் என் பதிவுகளை முக்கியமாக குறிப்பிடட்டும், நான் ஒண்ணும் பெரிய இவ இல்ல' என்பதற்காக இந்த வார்த்தைகளை போட்டுள்ளேன். மற்றவர்களை குறிப்பிட விரும்பவில்லை.) எனவே தான் பெரும்பாலும் நான் மற்றவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட மாட்டேன். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஓட்டு மட்டும் போட்டு விட்டு வந்து விடுவேன்.

             எனக்கு இலக்கியம், இலக்கியவாதி, அந்த ist , இந்த ist  இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாது. நான் படிக்கும் ஒரு விஷயம் அரை நிமிடமாவது என்னை மௌனத்தில் ஆழ்த்த வேண்டும். கால் நிமிடமாவது மனதை அழுத்த வேண்டும். நான் வேலை எதுவும் இல்லாமல் யோசிக்கும்போது கொஞ்ச நேரமாவது 'அன்னைக்கு படிச்சோமே ஒரு விஷயம். அந்த எழுத்துகளின் மூலம் என்ன சொல்ல வந்திருக்கிறார்கள்' என்று யோசிக்க வைக்க வேண்டும். எனக்கு அது தான் இலக்கியம். எனவே அது போன்ற பதிவுகளை தேடிக்கொண்டே இருக்கிறேன்.

             இப்படி இருக்கையில், என் கணினியில் எதேச்சையாக 'ஓம் சிவோஹம்'  பாடலை (நான் கடவுள்)  கேட்ட நான், அதன் வரிகளை இணையத்தில் தேடியபோது http://thiral.blogspot.com என்னும் ஒரு தளம் சிக்கியது. அந்த பாடலுக்கு வரிகளையும், அந்த வரிகளின் அர்த்தங்களையும் தாங்கி நின்ற இந்த பதிவில் மனம் நின்றது. பாடலை winamp இல் ஓடவிட்டு, வரிகளை திருப்தியாக ரசித்த பின், அந்த தளத்தில் வேறென்ன பதிவுகள் இடப்பட்டிருந்தன என்பதை அசுவாரசியமாக பார்த்தேன். தலைப்புகள் மிகவும் வித்யாசமாக இருந்தன. இவர் இந்த மாதிரி தலைப்பில் என்னதான் எழுதி இருக்கிறார் என்று பார்க்கும் விருப்பத்தில் கையில் சிக்கிய பதிவை க்ளிக்கினேன். உண்மையிலேயே அருமையான நடை. வித்தியாசமான பதிவுகள். என் டேஸ்டுடன் ஒத்துப்போகிறவர்களுக்கு (மட்டும்) பிடிக்கும். ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி மாறி பொளந்து கட்டுகிறார் மனிதர். கணக்குக்காக வாரம் ரெண்டு மூணு பதிவு போடாமல்,எழுதியே ஆகவேண்டும் என்று எழுதாமல், தனக்கு தோன்றும்போது மட்டும் பதிவிடுபவர் போலும். எந்த இணைப்புகளிலும் இணைத்துக்கொள்ளவில்லை. குறைந்த ஆனாலும் நல்ல பதிவுகள். எனக்கு இவர் பதிவுகள் முழு திருப்தி. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், மொக்கை பதிவு போடும் எனக்கே 60 followers. ஆனால் ஆழமான பதிவுகளை இட்ட இவரின் தளத்தின் followers வெறும் மூன்றே பேர். என்ன சொல்ல... சரி, நான் போய் நாலாவதா சேர்றேன். 

11 comments:

எல் கே said...

இந்த மாதிரி நெறையப் பதிவர்கள் உள்ளனர்

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வாரேன் பாஸ்...

MANO நாஞ்சில் மனோ said...

// thiral.blogspot.com.//

ஒப்பன் ஆகமாட்டேங்குது பாஸ்....

Unknown said...

மொக்கை பதிவு போடும் எனக்கே 60 followers. ஆனால் ஆழமான பதிவுகளை இட்ட இவரின் தளத்தின் followers வெறும் மூன்றே பேர். என்ன சொல்ல... //

அதுதாங்க நிலமை. ரொம்ப சீரியஸ்- ஆன மேட்டரை யாரும்(நானும்) விரும்புவதில்லை. உங்கள் தேடலுக்கு பயன் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்.

சமுத்ரா said...

நீங்கள் அந்த ப்ளாக்-ஐ ஆஹா ஒஹோ என்கிறீர்கள்..அனால் எனக்கு படித்துப் பார்த்தால் ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது..

மாணவன் said...

பயனுள்ள ஒரு தளத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க சகோ...

சாதாரணமானவள் said...

ஆமாங்க L.K
@ நாஞ்சில் மனோ
இப்ப open ஆகும் சார்
@ கே.ஆர். விஜயன்
//ரொம்ப சீரியஸ்- ஆன மேட்டரை யாரும்(நானும்) விரும்புவதில்லை. உங்கள் தேடலுக்கு பயன் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்.//
அது உண்மை தான் சார். யாரும் னு சொல்லாதீங்க. பெரும்பாலானவர்கள்னு சொல்லுங்க. ஆனாலும் ஒரு விஷயமுமே இல்லாம பலபேர் கடனுக்கு பதிவு போடறாங்க பாருங்க... அதான் சலிப்பாகுது. வாழ்த்துக்களுக்கு நன்றி
@ சமுத்ரா
'என் டேஸ்டுடன் ஒத்துப்போகிறவர்களுக்கு (மட்டும்) பிடிக்கும். ' என்று சொல்லி இருக்கிறேனே... மேலும் நான் ஆஹா ஓஹோ என்று குறிப்பிட்டதாக தோணவில்லை. 'வித்யாசமாக உள்ளது. நீங்களும் பாருங்கள்' என்ற தொனியிலேயே சொல்லி இருக்கிறேன். அதிகம் புத்தகம் படிப்பவர்கள் வேண்டுமானால் அந்த தளத்தை ரசிக்கலாம் என்று நினைக்கிறேன் சகோ...
@ மாணவன்
நன்றிங்க...

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள ஒரு தளத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

Anonymous said...

நீங்க சொல்லிட்டீங்க இல்ல?இனி அவருக்கு ஃபாலோயர்ஸ் எகிரிடும்

Thanglish Payan said...

Armai pathivu..

jayakumar said...

you kindly visit my blog...and leave your comments there please..