Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, January 30, 2012

பொழுது போகாதவங்களுக்கு நாளே போய்டும்

தொடர்ந்த இழப்புகளுக்கு பிறகு blog பக்கமே வர முடியாமல் இருந்தது. சமீபத்தில் தான்  Blog updates பார்த்தேன். எடுத்த உடனே அருண் பிரசாத்தின் 'சூரியனின் வலை வாசலி'ல் Hunt for Hint உடைய பெரியண்ணன் Klueless 7 ரிலீஸ் ஆகி இருப்பதாக இருந்தது. கூடவே அறிவாளிகளுக்கான விளையாட்டு என்று உசுப்பேற்றி இருந்தார்.  நாம அறிவாளி இல்லன்னாலும் அது மத்தவங்களுக்கு தெரியாம பாத்துக்கறதுல தான நம்ம புத்திசாலித்தனம் இருக்கு. (ஐயய்யோ ... தெரிஞ்சு போச்சே...)
அதனால ரிலீஸ் ஆகி ரொம்ப நாள் ஆனாலும் அந்த விளையாட்ட விளையாடி பார்த்துடலாம்னு நம்ம்ம்மம்ம்ம்பி விளையாட ஆரம்பிச்சேன்... நாள் போனதே தெரியல... ரொம்ப உத்து பார்த்து கண்ணு வலிக்க ஆரம்பிச்சதால அப்படியே விளையாட்டுக்கு ஒரு STOP card போட்டுட்டு ப்ளாக் எழுத வந்துட்டேன்.
எனக்கு அந்த game ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. ரிலீஸ் ஆகி நாளானதால் கூகுளில் நிறைய களு கிடைக்கிறது. ஆனாலும் சில லெவல்களுக்கு ம்ஹும்.... தாவு தீர்ந்துடுது. 

சில பிரச்சனைகள் கல் மாதிரி. கண்ணுக்கு முன்னாடி வைச்சா கல்லு பூதாகரமா தெரியும். தூரமா பிடிச்சு பார்த்தா ரொம்ப சின்னதா இருக்குமே, அது மாதிரி தான் இதுல பெரும்பாலான லெவல்ஸ். நேரமே போகலைங்கறவங்க இதை விளையாடி பாருங்க. நாள் போறதே தெரியாது. சரி போஸ்டிங் போடலைனா மக்கள் மறந்துடுவீங்களேன்னு இது ஒரு formality post. அடுத்த முறை ஏதாவது உபயோகமா போடறேன்...

Saturday, January 21, 2012

மீண்டும் அடுத்த அடி!


 என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

எனக்கு தாய்மாமா ஆறு பேர். அதில் முதல் மாமா கடந்த வாரம் இறந்து விட்டார். இரண்டு கிட்னிகளும் பழுதான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த வியாழன் இறந்துவிட்டார். ஆயா தன் முதல் மகனை காத்திருந்து அழைத்துச் சென்றுவிட்டதாக எல்லோரும் கூறுகின்றார்கள். அன்பான மாமாவை இழந்த வேதனையில் இருக்கிறேன். 

ப்ளாக் போடுவது பற்றிய பதிவை கொஞ்சம் தாமதமாக தொடர்கிறேனே... 

மன்னியுங்கள் நண்பர்களே..

Tuesday, January 10, 2012

ப்ளாக் எழுதுவது எப்படி? இரண்டாம் பாகம்

முதல் பகுதியை படிக்க இங்கே செல்லவும் . இந்த மாதிரி கலர் மாறியோ, underline பண்ணி இருந்தாலோ, மௌசை கொண்டு போனால் hand symbol வந்தாலோ அவங்க ஏதோ இன்னொரு லிங்கை குடுத்திருக்காங்கன்னு அர்த்தம். உங்களுக்கு வேணும்னா அங்க கிளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

இப்ப உங்க ப்ளாக் ரெடி ஆகிடுச்சு இல்லையா? இப்ப அந்த ஸ்க்ரீனை பாருங்க.

மேலே இடப்புறம் ஒரு காலி இடம் இருக்குதா? அங்கே நீங்கள் போகும் ப்ளாகில் குறிப்பிட்ட பக்கத்தை தேட keyword எனப்படும் குறிச்சொல்லை குடுக்கலாம். அப்படி கொடுத்தால் அவங்க எந்தெந்த பதிவில் அந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறார்களோ அந்த பதிவை கொண்டுவந்து கொடுக்கும்.

அடுத்து FOLLOW : அந்த ப்ளாக் உங்களுக்கு பிடித்திருந்து, அவங்க பதிவுகளை இடும் போது  உங்களுக்கு அது தெரிவிக்கப்பட வேண்டுமானால் இதற்காக நீங்கள் தனியாக bookmark வைப்பதெல்லாம் தேவை இல்லை. இதை க்ளிக் செய்துகொண்டால் நீங்க அந்த பதிவருக்கு follower ஆகிடுவீங்க. மேலும் ஒருத்தருக்கு எத்தனை followers என்பது அந்த பதிவர் காட்டும் கெத்து. (அதனால் நீங்க பதிவு எழுதறீங்களோ இல்லையோ follower சேர்க்கப்பாருங்க). நீங்கள் அவங்க பதிவுகளை உங்க பேரிலும் படிக்கலாம். பேர் சொல்ல விரும்பாமல் anonymous ஆகவும் படிக்கலாம். உங்க விருப்பம்.


SHARE: அந்த பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம்னா share மூலமாக   twitter, facebook, google reader க்கு பகிர்ந்துகொள்ளலாம். 

REPORT ABUSE: இது பத்தி எனக்கு கொஞ்சம் டவுட்டு. நல்லா தெரிஞ்சவங்க யாராவது விளக்கம் தரலாம். எனக்கு தெரிஞ்சு (எனக்கு தெரிஞ்ச இல்ல) கெட்டவார்த்தை அல்லது தொந்தரவு தரும் விளம்பரம், வன்முறை வார்த்தைகள், copyright piracy செய்யப்பட்ட வார்த்தைகள் இருந்தால் அதை நாம் பிளாக்கர் மாமாவிடம் ரிப்போர்ட் செய்ய இந்த பட்டன் உதவும்.

NEXT BLOG: இதை கிளிக் செய்தால் மற்றவர்களின் ப்ளாகை காட்டும். இது எந்த கான்செப்டில் வேலை செய்கிறது எனக்கு இன்னும் புரியாத புதிர்.


அடுத்து வலது புறம் நீங்கள் என்ன ஈமெயில் ஐடியில் உள்ளே நுழைந்தீர்களோ அந்த அட்ரஸ் காட்டும்.


DASHBOARD: இது  உங்க ப்ளாகில் உங்க பிரைவேட் ஏரியா. இது கொஞ்சம் பெரிய ஏரியா என்பதால் சுருக்கமா இப்போதைக்கு சொல்றேன். இங்க இதுவரை நீங்க குடுத்த settings, details, appearance, நீங்க follow செய்யறவங்களோட பதிவுகள், இன்னும் பிற விஷயங்கள் இருக்கும். முக்கியமான ஏரியா.


MY ACCOUNT: நீங்க உங்க ப்ளாக்ல இருந்தா மட்டும் இது வரும். மத்தவங்க ப்ளாக்ல இருந்தா வராது. இங்க நீங்க Password, Mail id, Photo மாத்திக்கலாம். Privacy setting, இன்னும் என்னென்னவோ இருக்கு. இங்க நான் நுழைய அவசியம் வரல. அதனால விளக்கமா சொல்லமுடியல.


SIGN OUT: உங்களுக்கே தெரியும், இது நம்ம கணக்குல இருந்து வெளியேற.


FOLLOWERS : என்னை கேட்டா இவங்க தெய்வங்கள்.... நாம என்ன மொக்கை போட்டாலும் சலிக்காம படிக்கறவங்க. அதிலயும் கமெண்ட் போடறவங்க குலதெய்வங்கள்... நம்ம பதிவை யார் யார் follow பண்றாங்களோ அவங்க விவரத்தை இங்க கிளிக் பண்ணி தெரிஞ்சுக்கலாம். இதே மத்தவங்க blogspot ஆ இருந்தா,  மேல நாம follow பண்ணினோம்ல.. அப்படி follow பண்ணினதும் நம்ம போட்டோ இந்த followers list ல வந்துடும்.  மேல follow பட்டன், இங்க follow this site பட்டன் ரெண்டும் ஒரே வேலையை தான் செய்யுது. அப்படி follow செஞ்ச Site பிடிக்கலேன்னா, sign in ன்னு தெரியுதே அங்க sign பண்ணி  settings ல போய் unfollow செஞ்சுக்கலாம்.


அடுத்து ABOUT ME: அட... என்னை பத்தி இல்லைங்க. அந்தந்த பதிவர்கள் அவங்கவங்கள பத்தி கதை விட்டுக்கறது இங்க தான். சில பதிவுகள படிச்சதும் எழுதுனவங்கள பத்தி தெரிஞ்சுக்க ஆசை படுவோம். அப்படி தெரிஞ்சுக்க இங்க போகலாம். ரொம்ப டீடெயிலா தெரிஞ்சுக்க View my Complete profile க்கு போங்க. அங்க அவங்க வேற ஏதாவது ப்ளாக் எழுதறாங்களாங்கற விவரமும் சேர்ந்து கிடைக்கும்.

இதெல்லாம் இரண்டாவது ஸ்க்ரீனின் விளக்கங்கள்.
(தொடரும்)

Saturday, January 7, 2012

ப்ளாக் எழுதுவது எப்படி?

யாராவது உங்க Facebook id என்னன்னு கேட்டாலே இப்பவெல்லாம் நான் ப்ளாக் பத்தி அளந்து விடறது உண்டு. நீங்களும் எழுதுங்க. செமையா இருக்கும் (????) அப்படி இப்படின்னு ஒரு பத்து ஸ்கின் ப்ராப்ளம் பத்தி... ச்சே... ஒரு பத்து பெனிபிட்ஸ் பத்தி சொல்ல ஆரம்பிச்சுடறேன். ஆனா, அவங்க எப்படி ஆரம்பிக்கறதுன்னு கேட்டா, வாய் வார்த்தை விளக்கம் பத்தல. அவங்களுக்காக இந்த பதிவு.ஒரு விஷயத்தை சுருக்கமா சொல்ல ட்விட்டர், பஸ் எல்லாம் உண்டு. அதே விஷயத்தை விளக்கமா சொல்ல உங்களுக்குன்னு நேர்ந்து விட்டதுதான் ப்ளாக். இந்த வசதியை நமக்கு Blogger, Wordpress ன்னு ரெண்டு பேர் தராங்க. பிளாக்கர்ல தான் எனக்கு அனுபவம் அப்படிங்கறதால அது சம்பந்தமாவே எனக்கு தெரிஞ்ச விளக்கத்தை தரேன்.

1. www.blogger.com அப்படிங்கற அட்ரஸ் ல போங்க.
2. Left side ல Create a new blog-> get started அப்படின்னு இருக்கற பட்டனை கிளிக் பண்ணுங்க. ஒரு புது விண்டோ  Open ஆகும் .
3. அதுல உங்க மெயில் ஐடி மற்றும் மத்த விஷயங்கள குடுத்துடுங்க.
4. அதுலயே Display name ன்னு ஒண்ணு கேட்கும். நிஜ பெயர் குடுக்கறவங்க நிஜ பேர் குடுங்க. புனைபெயர்ல எழுதணும்னு நினைக்கறவங்க அந்த பெயரை குடுங்க.


இதோட முதல் விண்டோல வேலை முடிஞ்சுது. அடுத்தது next குடுத்ததும் "Name your blog" ன்னு ஒரு விண்டோ வரும். அதுல,
1. Blog title அப்படிங்கற இடத்துல உங்க Blog heading ஆ என்ன வரணும்னு நினைக்கறீங்களோ அதை டைப் பண்ணுங்க. மேல கொட்டை எழுத்துல சாதாரணமானவள் ன்னு எழுதி இருக்கே, அதான் blog title. இது தமிழ்ல வரணும்னா உங்க mail அ திறந்து compose ல வெச்சு, மொழி தேர்வு செய்யற பட்டனை கிளிக் பண்ணி அதில் தமிழை தேர்ந்தெடுத்துக்கோங்க. இதுக்கு நீங்க தமிழ் typing தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லை. வாங்க அப்படின்னு டைப் பண்ண vanga அல்லது vaanga ன்னு டைப் செய்தால் போதும். வேறு வார்த்தைகள் காண்பித்தால் backspace அடித்து அது காட்டும் options ல choose பண்ணிக்கலாம். ரொம்ப ஈஸி. (இந்த முறையில் தான் நீங்கள் உங்கள் தளத்திலும் பதிவு எழுதப்போகிறீர்கள்.)


உங்கள் பெயர் தமிழில் வர எண்ணினால் இந்த முறையை பின்பற்றி மெயிலில் டைப் செய்து copy செய்து இந்த blog title கேட்கும் இடத்தில் paste செய்யுங்க.


2. அடுத்து blog address. என்  ப்ளாக் அட்ரஸ் www.sadharanamanaval.blogspot.com . அது போல உங்களுக்கும் ஒரு அட்ரஸ் உருவாக்கிக்கொள்ளலாம். நான் அட்ரஸ், பெயர் ரெண்டுமே சாதாரணமானவள் ன்னு வெச்சுக்கிட்டேன். சிலர் ப்ளாக் அட்ரஸ் ஒண்ணும், ப்ளாக் டைட்டில் ஒண்ணும், டிஸ்ப்ளே நேம் ஒண்ணும் வெச்சுக்கறாங்க. உங்கள் விருப்பம் எப்படியோ அப்படி வெச்சுக்கோங்க. Blog URL அப்படின்னு இனி எங்கே mention பண்ணி இருந்தாலும், அங்கே நீங்க குடுக்க வேண்டியது இந்த அட்ரஸ் தான்.

அடுத்தது Choose Template
இங்க உங்க blog என்ன background ல என்ன கலர்ல தெரியனும்னு நினைக்கறீங்களோ, உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை தேர்ந்தெடுத்துக்கோங்க. இப்போதைக்கு ஒண்ணை வெச்சுக்கிட்டு, பின்னாடி மாத்திக்கறதுன்னாலும் Edit Template போய்
மாத்திக்கலாம்.இதை முடிச்சதும் உங்களுக்கே உங்களுக்குன்னு ஒரு ப்ளாக் ரெடி :)

(தொடரும்)