Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, March 3, 2015

உங்கள் போட்டோ அழகாக இருக்க 15 டிப்ஸ்

நான் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுப்பதை பற்றி பேசப்போவதில்லை.
இப்பவெல்லாம் ப்ரொபைல் போட்டோ மட்டும் தான் போட்டோ. மற்றெல்லாம் அழகான போட்டோ category ல யே வராது .

1. முடிந்த வரை நேராக நின்று போஸ் கொடுப்பதை விட்டு விடுங்கள். உங்களுக்கு பிடித்த நடிக நடிகைகளின் போட்டோ 99% நேராக இருக்காது.

ajith billa க்கான பட முடிவு



2. சைடு போஸ் எடுக்கும்போது கன்னத்தின் டொக்கு தெரியாத மாதிரி தான் போட்டோ எடுக்கணும். கன்னத்தின் வளைவு உப்பி பின் கீழே வரவேண்டும். சரேல்ன்னு இறங்கக்கூடாது.
                 







3. உங்க கண்ணு அழகா இல்லன்னா அல்லது சின்ன கண்ணா இருந்தா பேசாம கூலிங் கிளாஸ் போட்டுகோங்க.


4. அழகான பெரிய கண்ணு ன்னா கூலிங் கிளாஸ சட்டைல மாட்டிக்கோங்க

5. பொண்ணுங்க கண்ணுக்கு மை வெச்சா கண்டிப்பா போட்டோல அழகா இருப்பாங்க.








6. பசங்க தாடி மீசை புது ஹேர்ஸ்டைல்ல என்ன கூத்தடிச்சு இருந்தாலும் அதை காட்ட சைடு போஸ் மட்டும் தான் குடுக்கணும்.






7. முடிஞ்சவரைக்கும் கேமராவ பார்க்காதீங்க








8. வெயில் நேரத்துல போட்டோ எடுத்தா, சூரிய வெளிச்சம் முதுகு பக்கம் இருக்கற மாதிரியும், முடில படற மாதிரியும் எடுத்தா செம லைக்ஸ் குவியும். நான் கேரண்டி.





9. புல் போஸ் குடுப்பேன்னு அடம் பிடிச்சா சுவற்றிலோ மரத்திலோ கம்பத்திலோ  சாஞ்சு  நின்னு போஸ் குடுங்க.

sivakarthikeyan க்கான பட முடிவு







10. போட்டோ எடுக்கும்போது 'சீஸ் (cheese)' சொல்லுங்க. நிறைய பேர் பல்லு தெரிஞ்சா போட்டோ நல்லா இருக்காதுன்னு அவங்களே நினைச்சுகிட்டு போட்டோவ சொதப்பிடுவாங்க. உண்மையில் மெல்லிசா கோடு மாதிரி பல் தெரிஞ்சா தான் அழகு. சீஸ் ன்னு சொல்லும்போது அது தேவையான அளவுல பல் தெரிய வைக்கும்


















11. கன்னம் சப்புன்னு இருக்கறவங்க நல்லா காது வரைக்கும் சிரிங்க. உங்க முகம் போட்டோக்கு அழகா இருக்கும்.




12. எதிர்காலத்த சிந்திக்கற மாதிரி போட்டோ வேணும் னா மேல் நோக்கி  பாருங்க







13. இறந்த காலத்த பத்தி யோசிக்கற மாதிரி வர போஸுக்கு கீழே பாருங்க







14. நேரா தான் பார்ப்பேன் ன்னா கண்ணுல ஒரு வைப்ரேஷன் குடுங்க






15. கண்களில் சிரிப்பு இருக்கும் படங்களே அதிகம் ஈர்க்கும். பெரும்பாலும் குழந்தைகள் சிரிப்பில் அதை காணலாம்
.
அவ்ளோ தாங்க டிப்ஸ். இத வெச்சு லைக்ஸ் சம்பாதிச்சுகோங்க

Saturday, February 28, 2015

ஒண்ணுமே புரியல உலகத்துல....

ஒரு மாசத்துக்கு 4,5 பதிவு எழுதிட்டு இருந்த நானா இவ்ளோ நாளா எழுதாம இருக்கேன்... ஆச்சரியமா இருக்கு. அட .. எழுதாட்டி போகுது. படிக்க கூட வலைப்பூ பக்கம் ஒதுங்கறதே இல்ல. இதுக்கு ஒரே காரணம் கல்யாணம் தான். கணவரோ அவர் பெற்றோரோ தடுப்பதில்லை. ஆனாலும் ப்ளாக் போடலாம்னு பார்த்தா 'இப்போ இது ரொம்ப முக்கியமா' ன்னு மனசு உக்கார விடறதே இல்ல. எனக்கு தெரியுது... attitude அ மாத்திகிட்ட எல்லாம் மாறிடும் தான் . ஆனாலும் .....

முன்னைக்கு நான் ரொம்ப நெகடிவ் திங்கரா மாறிட்டேனோ அப்டின்னு வேற தோணுது. நீங்களே என் பழைய பதிவுகளை படிச்சு பாருங்க. அது எவ்ளோ உற்சாகமா இருக்கு. என் கல்யாணத்துக்கு அப்பறம் வந்த பதிவுகளை படிச்சு பாருங்க. எனக்கே கடுப்பா இருக்கு. இந்த பதிவு எழுதும் போது கூட பெருசா உற்சாகம் ஒண்ணும் இல்ல. நான் மட்டும் தான் இப்படியா? இல்ல கல்யாணம் ஆனா பொண்ணுங்க எல்லாருக்கும் இப்படியா? பெண் பதிவர்கள் இதுக்கு விளக்கம் குடுத்தா பரவால்ல . நான் கொஞ்சம் தெளிவாவேன். (Maybe என் போன்ற மற்ற பெண் பதிவர்களும்) .

 திருமணம் ஆன பெண் பதிவர்கள் அப்டின்னாலே அவங்க பதிவு சமையல் குறிப்பு, கோவில், சாமி, மிஞ்சி போனா ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் இந்த வட்டத்துக்குள்ளேயே தான் இருக்கோம். ofcourse , இதெல்லாம் உண்மையில் மிகப்பெரிய செயல்கள் தான். இருந்தாலும் பசங்க மாதிரி பொது விஷயங்கள் எழுதற பெண் பதிவர்கள் ரொம்ப குறைவா இருக்கற மாதிரி இருக்கு. ஏன் இப்படி?
ஒரே குழப்பமா இருக்கு