பதிவுலகில் உண்மையில் நேற்று எனக்கு செம BIG Day! ஒரே நாளில் நான் மூன்று முறை சந்தோஷப்பட்டேன்.
ஆம்...
நான் பதிவெழுத ஆரம்பித்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் என் பக்கம் 3000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அதுல ஒரு 500 தடவை நானே பார்த்திருப்பேன், friends க்கு காமிச்சிருப்பேன்னு வைங்க... மீதி தடவை எல்லாம் மற்றவர்கள் பார்த்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நன்றி நண்பர்களே...
இரண்டாவது சந்தோஷம் எல்.கே கொடுத்த விருது.
மற்றுமொரு சந்தோஷம் அருண் பிரசாத் என்னை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியது..
இவர்கள் இருவரும் என் பதிவை விருது தரவும், அறிமுகப்படுத்தவும் தகுதியானது என எண்ணியதே எனக்கு ரொம்ப சந்தோஷம்.எல்.கே வுக்கு கொடுத்த பின்னூட்டத்தையே நான் மீண்டும் குறிப்பிடவிரும்புகிறேன். தத்தி தத்தி நடக்கும் குழந்தையை, ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் வந்ததுபோல் சுற்றத்தார் உற்சாகப்படுத்துவது போல் தான் இந்த நண்பர்களும் எங்களை (விருதும் அறிமுகமும் பெற்ற என் போன்ற மற்ற பதிவர்களை) ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி எல்.கே. நன்றி அருண்..
நான் ரொம்ப சாதாரணமான ஆள். எனக்கு உங்கள் அனைவரின் ஊக்கம் ரொம்பவே நெகிழ வைக்கிறது. நன்றி என்பது உணர்வு பூர்வமானது. எனவே நன்றிகளை வார்த்தைகளில் சொல்ல முயற்சித்து டைப் செய்தால் இவ்வளவுதான் பதிவிட முடிகிறது. .
(பின்குறிப்பு: நானும் விருது வாங்கிட்டேன்... நானும் விருது வாங்கிட்டேன் னு அவார்ட மேலே வச்சு கொஞ்ச நாள் சீன் போட்டுக்கறேனே...)
.
Thirukkural
45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.
Thursday, December 2, 2010
Wednesday, December 1, 2010
பதிவர் சாதாரணமானவள் கோர்ட்டுக்குப் போனார்
என் இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக நான் நேற்று கோர்ட் வாசல்படியை மிதிக்க வேண்டியதாக போய் விட்டது. என் குடும்பத்தில் யாரும் இப்படி கோர்ட்டுக்குச் சென்றதில்லை. எல்லாம் என் தோழியால் வந்தது...
நானும் என் தோழியும் துணி வாங்குவதற்காக கடைவீதி சென்றோம். அவள் வண்டியில் தான். அவள் தான் ஓட்டினாள். நான் நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் 'தேமே' என பின்னால் உட்கார்ந்திருந்தேன். துணிக்கடைக்கு தான் போவாள் என்று இருந்தால், திடீரென ஒரு Beauty Parlour முன் வண்டியை நிறுத்தினாள். தன் புருவத்தை பார்லரில் சரி செய்துகொண்டு, அடுத்து துணிக்கடை செல்லலாம் என்றாள். சரி என்று உடன் சென்றேன்.
அந்த பார்லரம்மா துணை தொழிலாக ஆள் பிடிக்கும் வேலையை செய்வார் போல் இருக்கிறது. (அதாங்க M.L.M). காத்திருக்கும் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து இதை படிங்க என்றார். அதில் செல்பேசி உபயோகிப்பவர்களை பாதுகாக்கும் நோக்கோடு சிம் கார்டை விட சிறிய தகடு ஒன்றை போனில் சொருகிக்கொண்டால் கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று எழுதி இருந்தது.
அவங்க புத்தகத்த குடுத்த மரியாதைக்காக அந்த தகட்டின் விலை பற்றி விசாரித்தேன். விலை ஆயிரம் ரூபாயாம்.உங்க போன்ல வச்சிருக்கீங்களான்னு கேட்டேன். அவங்க தெளிவா 'நான் புது போன் மாத்தி 2 நாள் தான் ஆச்சு. பழைய போன் ல இருக்கு. புதுசுக்கு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்' னு சொன்னாங்க. ஆஹா அவங்களா நீங்க னு மனசுல நெனச்சுகிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்.
ஆண்களே... உங்களுக்கு ஒரு டிப்ஸ். . பெண்களுக்கு நாங்கள் அழகாக இருப்பது தெரிந்துவிட்டால், கண்டிப்பாக அதை சோதித்துப்பார்ப்போம் எத்தனை பேர் நம்மை பார்க்கிறார்கள் என்று. பெரும்பாலும் இதை பா.செ.முன், பா.செ.பின் என இரண்டு வகைக்குள் அடக்கி விடலாம். அதாவது பார்லர் செல்வதற்கு முன், பார்லர் சென்ற பின் :-)
தோழியின் புருவம் இப்போது நல்ல வடிவமைப்போடு இருந்ததால் இப்போது அவளுக்கு தன்னம்பிக்கை ஏறி இருந்தது. அது என் துரதிர்ஷ்டம். எனவே அம்மணி தன் அழகை செக் செய்ய அடுத்து சென்றது தாலுகா ஆபீஸுக்கு.. இங்க எதுக்கு வந்தன்னு கேட்டேன்.பட்டதாரி கணக்கெடுப்புக்கு பதிவு பண்ணிவிட்டு 5 நிமிடத்தில் கிளம்பிவிடலாம் என்றாள். அவள் பட்டதாரி கணக்கெடுப்புக்கு பதில் பார்வையாளர் கணக்கெடுப்பு செய்கிறாள் என்று பின்புதான் தெரிந்தது. என் வாழ்வின் மிக முக்கியமான நேரம் நெருங்கிக்கொண்டிருப்பது தெரியாமல், நானும் போய் ஒரு அப்ளிகேஷன் வாங்கி என் பையில் வைத்தேன்.
அப்படியே ஒரு அரைமணி நேரம் சென்றது. அவள் நடந்த நடைக்கு அவளின் செருப்பும் அறுந்தது. அவள் ஆர்வமும் பொசுக்கென போய்விட்டது. எனவே இப்போது கடுப்புடன் வேகவேகமாக தன் வேலையை முடித்துக்கொண்டு வண்டியில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தாள். அடுத்ததாவது அவள் துணிக்கடை போவாள் என்று நம்பி, நான் பின்னால் ஏறி அமர்ந்தேன்.
ஆனால்......
அவள் அழைத்துச்சென்றது....
மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்துக்கு....
எனக்கு அது நீதிமன்றம் என்றே தெரியவில்லை. அந்தக்கால கட்டிடக்கலையுடன் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை. அதுவும் ஏதோ அரசாங்க அலுவலகம் போல் தான் என்றெண்ணி உள்ளே சென்ற பின்புதான் தெரிந்தது அது ஒரு கோர்ட் என்று. மனம் நடுநடுங்கி போய் விட்டது. என் குடும்பத்தார் யாரும் செல்ல துணியாத ஒரு இடம்... நான் கோர்ட் நடுவில்.... எல்லாம் என் தோழியால் வந்தது.
சொல்ல மறந்து விட்டேனே... அவள் ஒரு வழக்குரைஞர்.
அதன் பின் அங்கும் அவள் வேலையை முடித்துக்கொண்டு, துணிக்கடை சென்று துணி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். (செம experience இல்ல)
இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்குமுன்கூட்டியே நன்றிகள். கடுப்பாகாமல் பின்னூட்டம் இருபவர்களுக்கு இன்னும் நன்றிகள்.

Subscribe to:
Posts (Atom)