'தமிழ்மணத்தில் பதிவுகள் தேர்ந்தெடுத்து விருது தரப்போறோம். உங்களுக்கு எந்த பதிவை சேர்க்க விருப்பமோ சேருங்க' னு ஒரு மெயில் வந்துச்சு. நானும் எதார்த்தமா அவங்க குடுத்த டைம் ல போஸ்ட் பண்ணின என்னுடைய மூணு பதிவ சேர்த்தேன்.
1 . ஆத்திகத்துக்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவு (சமூக விமர்சனம்)
2 . நிஜமாகவே கடவுள் இந்த உருவத்தில் தான் இருப்பாரா (சுய தேடல்)
3 . நண்பனின் காதலி சந்தோஷுக்கு என்ன முறை (நகைச்சுவை)
அதுக்கப்பறம் தான் தெரிஞ்சுது இது பெரிய பெரிய ஆளுங்க போட்டி போடற இடம். நாம வேடிக்கை பாக்கத்தான் லாயக்குன்னு. அதனால நான் போட்டிக்கு பேர் குடுத்தத கமுக்கமாவே வச்சுகிட்டேன். யார்கிட்டயும் ஓட்டும் கேக்கல. நான் பாட்டுக்கு யாருடையது பிடிச்சிருந்ததோ அவங்களுக்கு போட்டுட்டு வந்துட்டேன். இப்ப ஒரு பதிவரின் 'நன்றி' பதிவை படிச்சு பாத்துட்டு இரண்டாம் கட்ட ஓட்டுக்கு அவரோடது வந்திருக்குன்னு அவருக்கு ஓட்டு போட போய் பாத்தா ..................
...........
..............
.......................
என்னுடைய முதல் ரெண்டு பதிவும் அங்க 'present madam' சொல்லி உக்காந்திருக்கு... எனக்கு சர்ப்ரைசே தாங்கல... அதனால நானும் எனக்கு சாரி என் பதிவுக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நன்றி சொல்ல இந்த பதிவ போட்டே ஆகணும் இல்லையா... அதனால விளம்பரப்படுத்தாமலே எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...
இரண்டாம் கட்டத்துக்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நண்பன், ஊர்காரன், போன்ற எல்லா எல்லைகளையும் தவிர்த்து தகுதி இருக்கற பதிவுகளுக்கு ஓட்டு போடலாம் வாங்க.
சந்தேகம்: இது தமிழ்மணம் சம்பந்தப்பட்ட பதிவாச்சே. இதை மற்றவைகளில் இணைக்கலாமா?
இதற்கு பின்னூட்டம் இடும் அனைவருக்கும் நன்றிகள்.
Thirukkural
45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.
Tuesday, December 28, 2010
Sunday, December 26, 2010
உங்கள் கையெழுத்தும் குணாதிசயமும்
நம்ம கையெழுத்து எப்படி இருக்கோ அப்படி தான் தலையெழுத்தும்னு பொதுவா சொல்லுவாங்க. ஆனா, நம்ம கையெழுத்தை வச்சு நம்ம குணத்தை கண்டுபிடிக்கவும் முடியும். அதுக்கான சில குறிப்புகள் தான் இந்த பதிவு.
இடப்பக்கம் சாய்த்து எழுதுவோர்:
பயந்த சுபாவம் உள்ளவர்கள் , நடந்துபோன காரியங்களை நினைத்து வருந்துவார்கள்.
நான் பரிசோதித்து பார்த்த வரை பெரும்பாலும் உண்மையாகவே உள்ளது. நீங்களும் check பண்ணிக்கோங்க. (பத்து மொக்க பதிவு போட்டா ஒரு உபயோகமான பதிவும் போடணும்னு போட்டது. பாத்து சொல்லுங்க. இதாவது உபயோகமான்னு)
இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.
பெரிய எழுத்தாக எழுதுவோர்:
பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். சிறிய எழுத்தாக எழுதுவோர்:
எதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்கள். வலப்பக்கம் சாய்த்து எழுதுவோர்:
எதிர்கால வாழ்வில் இன்பமாய் இருப்பார்கள். இடப்பக்கம் சாய்த்து எழுதுவோர்:
பயந்த சுபாவம் உள்ளவர்கள் , நடந்துபோன காரியங்களை நினைத்து வருந்துவார்கள்.
எழுத்துக்களை நீட்டி எழுதுவோர்:
எதிலும் பற்றற்று இருப்பார்கள்.எழுத்துக்களை நீட்டி நீட்டி அசாதாரணமாக எழுதுவோர்:
எந்த காரியத்திலும் அசாதாரண துணிச்சலை காட்டுவார்கள்.கிறுக்கலாக எழுதுவோர்:
குழப்ப மனம் படைத்தவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதப்படுத்துவர். கட்டமாக எழுதுவோர்:
ஆடம்பரப்பிரியர்கள். சோம்பேறிகள்.வட்டமாக முடிப்பவர்கள்:
பயந்த சுபாவமுள்ள திறமைசாலிகள். நான் பரிசோதித்து பார்த்த வரை பெரும்பாலும் உண்மையாகவே உள்ளது. நீங்களும் check பண்ணிக்கோங்க. (பத்து மொக்க பதிவு போட்டா ஒரு உபயோகமான பதிவும் போடணும்னு போட்டது. பாத்து சொல்லுங்க. இதாவது உபயோகமான்னு)
இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.
Subscribe to:
Posts (Atom)
