பதிவிட்டு ரொம்ப நாள் ஆனதால நம்ம பக்கத்துக்கு ஆளுங்களை மறுபடி இழுக்கணும் இல்லையா? அதனால ஒரு சின்ன போட்டி.

வேலை பளு தெரியாம இருக்க நம்மில் பெரும்பாலானோருக்கு கம்பெனி குடுக்கற ஒரு(ரே) ஆள் இளைய ராஜா. நமக்கு வயசாகுது, நம்ம ரசனை மாறுதுங்கறதை இந்த ராட்சசனோட பாட்டை ரசிக்க ஆரம்பிக்கறதுலயே தெரிஞ்சுக்கலாம். ஸோ, நான் இங்க சில பாடல்களின் இடையில் வரும் வரிகளை குடுக்கறேன். முதல் வரிகளை கண்டுபிடிங்க. ஓகே?

1. உந்தன் சங்கீத சலங்கை ஒலி
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
2. உன்னை காணாதிருக்கும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என ஆகும்
3. ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பேரை சொல்லாதோ
பூவசந்தமே நீ மறந்ததேன்
4. நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
5. காலை பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன்மலரும் நீ என் நினைவும் நீ
6. வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
7. தேடினேன் ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
8. தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோஷம்
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்
9. கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ
Last But not Least
10. பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே
சிறகிரண்டை விரித்துவிட்டேன் இளம் வயது தடுக்கிறதே
அனேகமா ஒண்ணே ஒன்னு தான் கொஞ்சம் கஷ்டம். மீதி எல்லாம் ரொம்ப ஈசியாதான் குடுத்திருக்கேன். try பண்ணுங்க...