Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, January 27, 2011

டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தாளை பூர்த்தி செய்யும் போது கவனிக்கவேண்டியவை


வி.ஏ.ஓ., குரூப் 1 , குரூப் 2 என வரிசையாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவினரும் ஆர்வமுடனும், நம்பிக்கையுடனும் அப்ளை செய்கிறார்கள். கலந்துகொள்ளும் பலர் விண்ணப்பத்தாளை பூர்த்தி செய்வதிலேயே போதிய கவனமுடன் இருப்பதில்லை. தன்னுடைய நண்பர்கள் எதை தெரிவு செய்கிறார்களோ அதையே தாங்களும் தெரிவு செய்தல் என தொடங்கி பல பல சொதப்பல்கள் செய்கிறார்கள்.
               நண்பர்களே....  எழுத்து தேர்வில் நீங்கள் ஜெயிப்பது மட்டும் வேலை வாங்கி தராது. இந்த எழுத்துத் தேர்வில் ஜெயித்த பிறகுதான் நீங்கள் உண்மையான தேர்வுக்கு அனுப்பப்படுகிறீர்கள். யோசித்து பாருங்கள். நீங்கள் ஒரு லோக்கல் கம்பனியில் வேலை கேட்டு போகும்போது  அவர்களுடன் உங்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுகிறது. கம்பெனி காரர்கள் வந்திருக்கும் 25, 30 பேரில் உங்களை தேர்ந்தெடுப்பது சுலபம். ஆனால் அரசாங்க வேலைகள், வங்கிப்பணிகள், கார்பொரேட் வேலைகளுக்கு பல்லாயிரம் பேர் விண்ணப்பிப்பதால், அவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அழைத்து தெரிவு செய்வது மிக மிக கடினம். எனவே தங்களுக்கேற்ற ஆட்களை வடிகட்டி எடுக்கும் வேலைதான் இந்த written exams. இந்த எழுத்து தேர்விலும் வடிகட்டசரியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யப்படாத படிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன.  எனவே ஒரு பொதுவான TNPSC Application form ஐ எப்படி fillup செய்வது என்று அடிப்படை விஷயங்களை குறிப்பிடுகிறேன். உங்களில் ஒரு சிலருக்காவது இது உதவலாம்.

> விண்ணப்பத்தாளை வாங்கியதுமே முதல் வேலையாக  இங்க் பேனாவில் உங்கள் கையொப்பத்தை போட்டுவிடுங்கள். பெரும்பாலானவர்கள் எல்லாம் பூர்த்தி செய்துவிட்டு, கையொப்பமிட மறந்துவிடுவார்கள்.

> விண்ணப்பத்தாளை நிரப்ப ஆரம்பிக்கும்போது Ballpoint pen, ஒரு blade, ஒரு HP பென்சில், ஷார்ப்னர், ஒரு எரேசர், உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, நீங்கள் கடைசியாக படித்த படிப்பின் Provisional அல்லது  Degree certificate  மற்றும் இந்த பணி சம்பந்தமான செய்தித்தாள் விளம்பரம் இவற்றை பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள்.

>  விண்ணப்பத்தாளுடன் தகவல் சிற்றேடும் தருவார்கள். அதில் நான்காவது பக்கத்தில் ஒரு சாம்பிள் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும். அதை பின்பற்றி (காப்பி பண்ணிடாதீங்க மக்களே...) உங்கள் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். என்னைகேட்டால், முதல் முறை விண்ணப்பிப்பவர்கள் 11 ம் பக்கம் ஒரு காலி விண்ணப்பம் இருக்கும். அதை பூர்த்தி செய்து அதை போல ஒரிஜினலில் நிரப்பலாம்.

> பொதுவாக பின்தங்கிய வகுப்பினருக்கு  முதல் மூன்று முறை இலவசமாக அரசு தேர்வுகள் எழுதும் சலுகை தரப்படுகிறது. மற்றவர்களுக்கு முன்ன பின்ன இருக்கலாம்.

> தேர்விற்கு தேர்ந்தெடுக்கும் பாடங்கள் என்பது மிகவும் முக்கியம். நீங்கள் +2 வரை தமிழில் படித்திருந்தால், கவலையே படாமல் பொது தமிழ் எடுத்து விடுங்கள். அதுதான் உண்மையில் மிக சுலபம். 

> விருப்பப்பாடம் என்பது நீங்கள் பட்டப்படிப்பு படித்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த எழுத்து தேர்வில் நீங்கள் தேர்வு பெற்றவுடன் நடக்கும் இன்டர்வியூவில் உங்களிடம் நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்ப பாடத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும். எனவே நீங்கள் எந்த துறையில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியுமோ அந்த துறையை விருப்ப பாடமாக தேர்ந்தெடுங்கள்.

> எல்லாவற்றையும் விட முக்கியம் பதவி முன்னுரிமை. பெரும்பாலானோர் தங்கள் தகுதி- பதவிக்குரிய தகுதி இரண்டையும் கவனிக்காமல், அதிக அளவில் எந்த துறையில் ஆட்கள் தேவையோ அதற்கு விண்ணப்பிக்கிறார்கள். இது மிக மிக தவறு. அதிக ஆட்கள் கேட்கும் துறைகளில் நிச்சயமாக குறிப்பிட்ட படிப்பிற்கோ, தகுதிக்கோ முன்னுரிமை தருகிறார்கள். இன்னும் சில பதவிகள் மாற்று திறனாளிகளுக்கோ, பழங்குடியினர் போன்றோருக்கோ மட்டுமே தரப்படுகிறது. and என்பதற்கும் or என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை மனதில் நிறுத்தி பதவியை தேர்ந்தெடுங்கள். உங்கள் தகுதிக்கென ஒதுக்கப்பட்ட பதவிகளில் குறைந்த இடமே இருக்கலாம். ஆனால் அதற்கு போட்டி மிக மிக குறைவாக இருக்கும். உதாரணமாக நூறு காலியிடங்கள் உள்ள பதவிக்கு ஐம்பதாயிரம் பேர் போட்டி இடலாம். ஆனால் பத்து காலி இடங்கள் உள்ள இடத்திற்கு நூறு பேர் மட்டுமே போட்டி இடலாம். 

>> அடுத்ததாக ஆட்கள் தேர்ந்தெடுக்கும் முறை. சில பதவிகளுக்கு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு இரண்டுமே தேவைப்படுகிறது. ஆனால் சில பதவிகளுக்கு எழுத்து தேர்வு மட்டுமே போதுமானதாக உள்ளது. இதை பெரும்பாலானோர் கவனிப்பதே இல்லை.

>> மேலும் , தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவை தேவைப்படும் பதவிகளுக்கு சில சமயம் சலுகையும் வழங்கப்படுகிறது. அதாவது, அந்த பதவிகளுக்கு அப்ளை செய்யும்போது நிர்ணயிக்கப்பட்ட தகுதி இல்லாவிட்டாலும், நீங்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது அந்த தகுதி பெற்றிருக்க வேண்டும் என. ஸோ, நீங்கள் இதன்மூலமும் கணிசமான வெற்றி வாய்ப்பை பெற முடியும். 

> இணைக்க வேண்டிய சான்றுகள் பிரிவில் நீங்கள் Date of Birth, Educational qualification for adequate knowledge in Tamil, HSC மூன்றுக்குமே பொதுவாக +2 சர்டிபிகேட் ஜெராக்சை வைத்தால் போதுமானது. உங்கள் அதிக பட்ச கல்வி தகுதிக்கான சான்றிதழ் ஜெராக்ஸ், ஜாதிச்  சான்றிதழ் ஜெராக்ஸ்,  நடத்தை சான்றிதழ்  கட்டாயம். மற்றவை உங்கள் தகுதிக்கேற்ப இணைக்கலாம். இணைத்துவிட்டு அவற்றையும் ஷேட் செய்யவும். இவற்றில் நடத்தை சான்றிதழ் தவிர, மற்ற அனைத்தும் ஜெராக்ஸ் என்பதால் அனைத்திலும் 'True Copy Attested' என்று எழுதி உங்கள் கையொப்பமிடவும். 

இதை ஒரு காப்பி ஜெராக்ஸ் எடுத்துகொண்டு ரெஜிஸ்டர் தபாலில் அனுப்பி விடவும்.
அவ்வளவு தான். இந்த பதிவு எனக்கு தெரிந்த அடிப்படை டிப்ஸ்களை உள்ளடக்கியது.இன்னும் நன்றாக விளக்குபவர்கள் விளக்கலாம்.

Sunday, January 16, 2011

மொபைல் கம்பெனிகள் பிடுங்கிய பணத்தை திரும்பப்பெறும் வழிமுறைகள்


இப்போதெல்லாம் மொபைல் நெட்வொர்க்குகளுடன் மல்லு கட்டிய பதிவுகளை அதிகமாக பார்க்க முடிகிறது. இதே அனுபவம் எனக்கும் நிகழ்ந்துள்ளது. கேவலம் முப்பது ரூபாய் போவது நம் யாருக்கும் பெரிதில்லை. அதை இந்த மொபைல் கம்பெனிகாரன்கள் சொல்லாமல் கொள்ளாமல் திருடுவது  தான் நம் அனைவருக்கும் கடுப்பேற்றும். இல்லையா? வாருங்கள். என் அனுபவத்தையும் கேளுங்கள். (படியுங்கள்னு போடணுமோ?)

கடந்த 6,7 வருடங்களாக ஏர்செல் ப்ரீபெய்டு வாடிக்கையாளரான நான் சில மாதங்களுக்கு முன் இரவு 8 மணிக்கு EC செய்தபின் சில மணி நேரங்களில் 30 ரூபாய் குறைந்தது. அதிர்ச்சி அடைந்து உடனே எல்லாரையும் போல கஸ்டமர் கேரை (121) தொடர்பு கொண்டு புகார் செய்தேன். வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியுடன் இது குறித்த மொக்கை விவரங்கள் நீளுமாதளால் நான் உரையாடல் வடிவில் முடிந்தவரை சுருக்கமாக தருகிறேன். நடுவுல வாங்க, போங்க, மேடம் எல்லாம் போட்டுக்கங்க.

நான்                  : என் பேரு இது. நம்பர் இது. பிரச்சனை இது.

வா.சே.மை.அ: உங்களுக்கு நிச்சயம் உதவறோம் (தவறாமல் இடம்பெறும் வாக்குறுதி). இது சம்பந்தமா எதுவும் எங்கள் database ல add ஆகல. நான்கு மணி நேரத்துக்கு பிறகு தான் add ஆகும். அதனால காலைல தொடர்பு கொள்ளுங்க. வேறு ஏதேனும் தகவல் தேவைபடுதுங்களா?

நான்                   : (எது சம்பந்தமா ப்ளாக் போடறதுன்னு சந்தேகம். உதவுவீங்களா?)  இப்போதைக்கு எதுவும் இல்லைங்க

வா.சே.மை.அ:ஏர்செல்லை அழைத்தமைக்கு நன்றி. Thank you

(அடுத்த நாள் காலை எழுந்து பல் விலக்கியதும்)
நான்                  : என் பேரு இது. நம்பர் இது. பிரச்சனை இது. கடைசியா பேசினப்ப இப்படி சொன்னாங்க.

வா.சே.மை.அ: உங்களுக்கு நிச்சயம் உதவறோம். உங்க மொபைல்ல டயலர் ட்யூன் வைச்சிருக்கிங்க. அதனால தான் உங்ககிட்ட பணம் எடுத்திருக்காங்க. 

நான்                  : ஆ.... என்னது? டயலர் ட்யுனா? நான் வைக்கலையே. என்ன பாட்டுங்க?

வா.சே.மை.அ: கொஞ்ச நேரம் லைன்ல வெயிட் பண்ணுங்க

(டோடடடோடடோடடோடடோயிங் அதாங்க... வெயிடிங்ல வர மியூசிக்)

வா.சே.மை.அ: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க மிஸ் _________. செக் பண்ணினதுல '--------' படத்தில இருந்து '-------' பாட்டு வச்சிருக்காங்க... .

 நான்                  : .........................(அதிர்ச்சி. ஏன்னா அது காதலனும் காதலியும் காட்டுக்குள் தனியாக பாடும் இளையராஜா பாட்டு.) தயவு செய்து அந்த பாட்டை உடனடியா கேன்சல் பண்ணுங்க. என் மானமே போயிடும்.

வா.சே.மை.அ: கேன்சல் பண்ண இந்த நம்பருக்கு கூப்பிட்டு சொல்லுங்க. 48 மணி நேரத்துல கேன்சல் ஆயிடும்.

நான்                  : அதுக்குள்ள என் இமேஜ் போயிடும். நீங்க தயவு செஞ்சு கேன்சல் பண்ணுங்க ப்ளீஸ்....

வா.சே.மை.அ: ஓகே. லைன்ல வெயிட் பண்ணுங்க மேடம்.

                              (டோடடடோடடோடடோடடோயிங்)

வா.சே.மை.அ: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க மிஸ் _________.அந்த பாட்டை கேன்சல் பண்ணிட்டோம் .

நான்                  : (உங்களாலேயே பண்ண முடியும்போது எதுக்கு வேற நம்பர் குடுத்தீங்க?)  சரி அப்படியே பணத்தையும் refund பண்ணிடுங்களேன்.

வா.சே.மை.அ: அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க. நீங்க டயலர் ட்யூன் வச்சதால அதை கேன்சல் மட்டும் தான் எங்களால பண்ண முடியும்

நான்                  :  நான் டயலர் ட்யூன் வைக்கவே இல்லீங்க. moreover, அந்த நேரம் கம்பெனில இருந்து எந்த போன்காலும் வரவே இல்லைங்க. நீங்களே செக் பண்ணி பாருங்க. அப்படி வந்திருந்த நீங்க எடுத்த பணத்த பத்தி நான் கேக்கவே இல்ல.

வா.சே.மை.அ: ஓகே. லைன்ல வெயிட் பண்ணுங்க மேடம்.

                              (டோடடடோடடோடடோடடோயிங்)

வா.சே.மை.அ: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க மிஸ் _________. நாங்க செக் பண்ணி பாத்ததுல ஏர்செல்ல இருந்து உங்களுக்கு கால் வரலனு தெரியவருதுங்க.. 

நான்                  : அப்ப என் பணத்த திருப்பி add பண்ணிடுங்க

வா.சே.மை.அ: மன்னிக்கணுங்க. அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க. 

நான்                   : (புடுங்க மட்டும் வசதி இருக்கோ?) என்னங்க இப்படி சொல்றீங்க. எடுத்தது நீங்கதான? அப்ப நீங்க தான திருப்பி குடுக்கணும்.

வா.சே.மை.அ: மன்னிக்கணுங்க. அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க.

நான்                  : (திரும்ப திரும்ப பேசற நீ) என்னங்க இது முட்டாள் தனமா இருக்கு. நான் வைக்காத பாட்டுக்கு நீங்களா பணம் எடுத்துட்டு தரமாட்டேங்கறீங்க? 

வா.சே.மை.அ: சரி நான் என் மேலதிகாரிகிட்ட connect பண்ணறேன். அவங்ககிட்ட பேசுங்க. 

நான்                   : பண்ணுங்க.

வா.சே.மை.அ :ஓகே.  லைன் ல வெயிட் பண்ணுங்க மேடம்.

                              (டோடடடோடடோடடோடடோயிங்)

வா.சே.மை.அ 2: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க. உங்களுக்கு என்ன தகவல் தேவைபடுதுங்க?

நான்                     : (மறுபடியும் முதல்ல இருந்தா? இப்பவே கண்ணை கட்டுதே...) சார்... இது இது இப்படி இப்படி ஆகிபோச்சு. எனக்கு என் பணம் வேணும்

வா.சே.மை.அ 2: மன்னிக்கணுங்க. அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க.

நான்                     : (இதைதான அந்த அக்காவும் சொன்னாங்க.) அப்படினா நான் 'ட்ராய்' ல கம்ப்ளைன்ட் பண்ணட்டுமா?

வா.சே.மை.அ 2 : (பண்ணிக்கோ) இதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது மேடம். எங்ககிட்ட பணம் refund பண்ற வசதி இல்லைங்க.

நான்                     : கடைசியா கேக்கறேங்க. என் பணம் திரும்ப வருமா? வராதா?

வா.சே.மை.அ 2: சாரிங்க. வராது. 

நான்                  : (வேறு வழியின்றி) இப்படி எங்ககிட்ட பணம் புடுங்கறதுக்கு வேற எதுனா வேலை பண்ணலாம் (போய் பிச்சை எடுக்கலாம்) நான் போனை வைக்கறேன்.

வா.சே.மை.அ 2:வேறு ஏதாவது தகவல் தேவைபடுதுங்களா?

நான்                     : (அடேய்... உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா?) தந்த வரைக்கும் போதும்.

வா.சே.மை.அ 2:ஏர்செல்லை  அழைத்தமைக்கு ரொம்ப நன்றி.


                                இந்த உரையாடல் ஒரேமுறையில் நடந்ததை போல போட்டிருக்கிறேன். ஆனால்,  24 மணிநேரத்தில் ஆகிவிடும், 48 மணிநேரத்தில் ஆகிவிடும், 96 மணிநேரத்தில் ஆகிவிடும் என்று தள்ளிப்போட்டு டார்ச்சர் செய்து கடைசியில் மேற்கண்ட மேலதிகாரியிடம் முடிவான பதில் வந்தது.
இதன் பின்னும் என் மனம் கொதிப்புடனே இருந்தது. சினிமாவில் வருவது போல இவங்களையெல்லாம் தட்டிகேட்க ஒருத்தன் வரமாட்டானா என்று தோன்றியது.

                                அதன்பின் 'டிராயில்' புகார் கொடுக்கலாம் என்று நெட்டில் தேடினேன். அங்கு புகார் பண்ணுவதன் வழிமுறைகளும் விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்படி customer care இல் complaint செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இரண்டாவது ஸ்டெப்பாக அந்தந்த ஏரியா nodal officers க்கு மெயில் மூலமாக புகார் அனுப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி நோடல் ஆபிசரின் ஈமெயில் ஐடியை கண்டுபிடித்து புகார் அனுப்பினேன்.

                      நான் அனுப்பிய இரண்டு மணி நேரங்களில் என் மொபைலுக்கு அவரிடம் இருந்தே கால் வந்தது. 'நீங்கள் பணம் குறைந்ததுமே உடனடியாக வா.சே.மை. அதிகாரியை தொடர்புகொண்டு புகார் அளித்ததால், நீங்கள் டயலர் ட்யுனை வைத்திருக்கமாட்டீர்கள்  என்று எங்களுக்கு நம்புகிறோம் (லாஜிக்காம்) . எனவே உங்கள் பணம் 30 ரூபாயும் உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது' என்று கூறினார். அதே போல ஐந்தே நிமிடத்தில் முறையாக என் பணம் add ஆகிவிட்டது ...அதையும் அந்த ஆபீசர் திரும்ப கால் செய்து செக் செய்துகொண்டார். வெறும் புலம்பல் மட்டும் போதவில்லை. பொறுமையாகவும், முறையாகவும் ஸ்டெப் எடுத்ததால் இது சாத்தியப்பட்டது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். 


எனக்கு தெரிந்த வழிமுறைகள்:
                 
                       நீங்கள் ரீசார்ஜ் கார்டுக்கு பின் உள்ள கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால் அநேகமாக காசு வசூலிக்கிறார்கள். மூன்று நிமிடங்களுக்கு ஐம்பது பைசா. ஆனால்,  எல்லா நெட் வொர்கிலும் பொதுவாக, புகார் செய்யவென்று தனியாக ஒரு எண் உள்ளது. (நெட்டில் தேடிக்கொள்ளுங்கள்.) அங்கு கட்டணம் வசூலிப்பதில்லை. உங்கள் புகாரை அங்கே பதிவு செய்யுங்கள். அது தோல்வியடைந்தால் இரண்டாவதாக மெயில் மூலம் பதிவு செய்யுங்கள். (http://www.trai.gov.in/serviceproviderslist.asp). அதன்பின் ட்ராயை தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். இன்னுமொரு நற்செய்தி. TRAI இனி நேரடியாக ஆன்லைனில் புகார் செய்யும் முறையை அமலுக்கு கொண்டுவரப்போகிறது. அடுத்ததாக  SMS மூலமாகவும்.நான் இங்கு பதிவிட்டிருப்பது பிரச்சனை வந்த பிறகு எப்படி சமாளிப்பது என்று. ஆனால், உண்மையில் பிரச்சனையே வரக்கூடாது. அது தான் சிறந்த நிர்வாகம்.

திருந்தாத ஜென்மங்கள்: 

                          இவ்வளவு மல்லுக்கட்டி ஜெயித்த பின்னும் மறுபடியும் ஒருநாள் Internet GPRS ஐ அனுப்பி 1.50 ரூபாயை பிடுங்கினார்கள். அட, இன்னொருநாள் வெறும் 6 ரூபாய்தான் வெச்சிருந்தேங்க. அது இந்த பக்கி பசங்களுக்கு புடிக்கல, அதுல அஞ்சு ரூபாய் எடுத்துகிட்டானுங்க. கஸ்டமர் கேருக்கு கூப்பிட்டு விவரத்த சொல்லி  பணத்த கேட்டேன். பழைய பதில் தான் வந்தது. கடுப்புடனும் சலிப்புடனும் ஏர்செல் ஓனர் பேர் கேட்டேன். அவனும் புரிஞ்சுகிட்டு 'அது சம்பந்தமான விவரங்கள் எதுவும் தரமாட்டோம்' னு சொல்லிட்டான். அதனால என்ன? அதான் பதிவு போட்டு மானத்த முடிஞ்சவரை வாங்கறோமே.... கோடிகோடியாக சேர்த்தபின்பும் இந்த திருட்டு பிச்சைக்கார நாய்கள் எதற்காக இப்படி நம்போன்ற பொதுமக்களின் பணத்தை பிடுங்குகிறார்களோ .... இவர்களிடம் இருந்து வரும்  dialer tune, miss call alert, friendship zone, love tips போன்றவற்றை நிறுத்த முடியாதா? DO NOT CALL சேவை என்பது இவர்கள் தொல்லையை உள்ளடக்காதா?

நொந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கும், பரிதாபப்பட்டு ஓட்டு போடுபவர்களுக்கும் நன்றிகள்.

.

Monday, January 10, 2011

பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

                     'வினை முடித்தன்ன இனியன்' னு யாரோ ஒரு பெரியவர் (அநேகமாக வள்ளுவர்) சொன்னது தப்பே இல்ல. கொடுத்த வேலைய முடிச்சுட்டு ஹப்பானு உக்கார்ற சுகம் எதுலயும் கிடையாது. பணி நிமித்தம் நிறைய ஆணிகள். எனவே தான் பதிவிட முடியவில்லை.

                       தமிழ்மணத்துல பாத்தா நம்ம பதிவு ஊத்திக்கிச்சு. ஆனா தகுதிவாய்ந்த பதிவுகள் தான் ஜெயிச்சிருக்கு. நல்லது. தேர்ச்சி அடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். பதிவு எழுதி ரெண்டு மாசத்துல ரெண்டாவது ரவுண்டு வந்தது வரை எனக்கு பெருமையே. ஊக்குவித்தவர்களுக்கு நன்றிகள் பல.

                      ஆங்கில புத்தாண்டு நல்லவிதமாக ஆரம்பித்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடுத்ததா பொங்கல் வருது. சித்தப்பாவ அம்மான்னும் அத்தைய அப்பான்னும் கூப்பிடுபவர்கள் பொங்கலை தமிழ் புத்தாண்டுன்னு சொல்லி கொண்டாடுங்க. நான் சித்திரையை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவேன். எனக்கு பொங்கல் உழவர் திருநாள் தான். யாரோ சொன்னதுக்காகவேல்லாம் இத்தனை நூற்றாண்டு பழக்கத்தை மாத்திக்க முடியாது. டிவி முன்னாடி நாள் முழுவதும் உட்கார நேரம் ஒதுக்குபவர்கள் தயவு செய்து ஒரு ஐந்து நிமிடமாவது நமக்கு உணவளிக்கும் தெய்வம் உழவனை வணங்க ஒதுக்குங்கள். அவன் இல்லாவிட்டால் நமக்கு மாத்திரைகளும், டானிக்குகளும் தான் சாப்பாடு.

                         நம் அனைவரின் மனத்திலும் உழவர்கள் பற்றிய விழிப்புணர்வே இல்லை என்று தான் தோன்றுகிறது. வெறும் தொழில் துறையும் தொழில்நுட்ப துறையும் வளர்ந்தால் போதுமா? சம்பாதித்து நாம் பணம் என்னும் காகிதத்தையா சாப்பிட போகிறோம்? நான் விவசாயி என்பதை வேதனையுடனும், நான் IT Professional என்பதை பெருமையுடனும் சொல்லும் நிலையில் சமுதாயம் இருப்பது சரியல்ல. உங்களை ஒரு  விவசாயியாக எண்ணி கண்ணை மூடி சிறிது நேரம் அவன் வாழ்க்கையை virtual ஆக வாழ்ந்து பாருங்கள். பகீரென்று இருக்கும். அப்படி ஒரு ஸ்திரமற்ற நிலையில் அவன் வாழ்வது நமக்கு புரியும். நாம் அதற்கு என்ன செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். மனம் இருந்தால் உங்களுக்குள்ளும் ஓராயிரம் வழிகள் தோன்றும்.

உதாரணமாக,

1. நீங்கள் வேலையில் சேர ஒருவேளை உங்கள் விவசாய நிலம் விற்கப்பட்டிருக்கலாம். நீங்கள் இப்போது ஒரு நிலத்தை வாங்கி குத்தகைக்காவது விட்டால் விவசாயம் தெரிந்தவன் தானும் பிழைத்து நம்மையும் வாழ வைப்பான். ஷேர் போன்ற நிச்சயமற்ற விஷயத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை. அதில் குறிப்பிட்ட சதவீதம் வருங்கால சந்ததிக்காக விவசாயத்தில் முதலீடு செய்யலாமே. நீங்கள் மட்டும் சாதம் சாப்பிடுவீர்கள். உங்கள் பேரக்குழந்தைகள் மாத்திரைகள் சாப்பிட வேண்டுமா?

2. உங்களுக்கு விவசாயி யாரேனும் நண்பனாக இருந்தால் அவர்கள் கஷ்டமான நிலையில் இருந்தால் அவர்கள் தொடர்ந்து விவசாயம் நடத்த at least loan apply செய்தல், அரசின் புதிய சலுகைகளை பெறும் வழிமுறைகள்  போன்ற சிறு சிறு உதவிகளாவது செய்து கொடுக்கலாம்.

3. குழந்தைகள் பெரிதானால் டாக்டர், வக்கீல், என்ஜினியர், டீச்சர்  போன்ற தொழில்களுடன் விவசாயி என்பதையும் கௌரவமான தொழிலாக பார்க்க வையுங்கள்.
 அந்த தொழிலின் பெருமையை உணர்த்துங்கள்.

4.  ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயது வரை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சம்பாதித்து விட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்க உக்கார்ந்து கொள்ளுங்கள். உண்மையாகவே வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கலாம். எனக்கு விவசாயம் தெரியாது என்று கூறாதீர்கள். நாம் ஒண்ணும் பிறக்கும்போதே கம்ப்யுட்டர் கற்றுக்கொண்டு வரவில்லை. ஆனால் இப்போது தட்டு தட்டென்று தட்டவில்லையா? விவசாயமும் அப்படித்தான். உங்கள் கடைசி காலத்தில்  ஒரு நகரத்தின் டிஸ்கோதே பப்பில் அல்லது முதியோர் இல்லத்தில்  உட்கார்ந்திருக்கும் காட்சியையும், ஒரு பசுமையான வயல்வெளியில் உட்கார்ந்திருக்கும் காட்சியையும் நினைத்துப்பாருங்கள். எது சுகம் என தெரியும்.

5. இது எனக்கு உட்பட கொஞ்சம் சிரமம். ஆனாலும் மனம் இருந்தால் செய்யலாம்தான். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உங்களுக்கு இருந்தால் அவர்களில் ஒருவரை விவசாயி ஆக்கலாம். எல்லோரும் அலுவலகத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்று சட்டம் இல்லையே. விவசாயத்துறையின் மேன்மையை விளக்கி, உங்கள் குழந்தைக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் அவர்கள் விவசாயி ஆக விரும்பினால் தடுக்க வேண்டாமே...

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது 'HAPPY PONGAL' என குறுஞ்செய்தி அனுப்புவதற்காக அல்ல. விவசாயிகளை நினைப்பதற்காகவும் தான். உழவன் சூரியனுக்கு நன்றி சொல்லட்டும். நாம் உழவனுக்கு நன்றி சொல்வோம்.
இந்த விவசாய நாட்டின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் என் போன்ற சாதாரண பெண்ணுக்கே ஐந்து ஐடியாக்கள் தோன்றினால் இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருக்கும் எத்தனை ஐடியாக்கள் தோன்றும். அவற்றையும் முடிந்தால் இங்கே பதிவு செய்யுங்கள். பதிவு செய்வதை விட அவற்றை follow செய்யுங்கள். நம் வாரிசுகளுக்காகவாவது...
.

Saturday, January 1, 2011

இனிமே ABCD எப்படி கத்துதரப்போறாங்க?

நாம படிச்சப்ப ABCD எப்படி  சொல்லி தருவாங்க?
A - APPLE                                           B - BALL
C - CAT                                               D - DOLL
E - ELEPHANT                                     F - FAN
G - GUN                                              H - HAT
I - ICE CREAM                                     J - JUG
K - KITE                                              L - LAMP
M - MONKEY                                      N - NEST
O - OWL                                              P -  PEN
Q - QUEEN                                          R - RABBIT
S - SPOON                                          T - TIGER
U - UMBRELLA                                    V - VAN
W - WATCH                                        X - X-RAY
Y - YATCH                                          Z - ZEBRA
(ஒண்ணும் இல்ல, அப்படியே நமக்கு ஞாபகம் வருதான்னு check பண்ணிக்கிட்டேன்)  

 இப்படி தான?ஆனா இப்பவெல்லாம் technology உடைய தாக்கம் அதிகமா ஆகிட்டதால இனிவரும் நாட்களில் எப்படி ABCD கத்துக்குடுப்பாங்கனு தெரியுமா? தெரிஞ்சுகோங்க .
ஒரு சின்ன கேம். மௌசை வைத்து ஸ்க்ரோல் பண்ணாமல் அம்புக்குறி பட்டனை உபயோகித்து A FOR என்ன? B FOR என்ன? என்று அடுத்து வருவதை  யூகித்து விட்டு விடையை பாருங்கள்.

A - APPLE
B - BLUETOOTH
C - CHATTING
D - DOWNLOAD
E - E-MAIL
F - FACEBOOK
G - GOOGLE
H - HACKING
I - I PHONE
J - JAVA
K - KINGSTON
L - LAPTOP
M - MESSANGER
N - NERO
O - ORKUT
P -  PICASA
Q - QUICKTIME
R - ROM
S - SERVER
T - TOUCH SCREEN
U - USB
V - VISTA
W - WI-FI
X - XP
Y - YOU TUBE
Z - ZORPIA
எப்படி இருக்கு alphabets? இது எனக்கு குறுஞ்செய்தியாக வந்தது. ஆனாலும் மறுக்க முடியாத உண்மை தானே?
 பின்னூட்டம் இடுபவர்களுக்கு தனியாக நன்றி சொல்ல ஆரம்பித்துவிட்டதால் இனி ஓட்டு போடுபவர்களுக்கு நன்றிகள்னு போடலாமா னு பார்க்கறேன்.

.