Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, December 28, 2010

தமிழ்மண விருதில் ஒரு சுயேட்சைக்கு டெபாசிட் கிடைச்சுடுச்சு

'தமிழ்மணத்தில் பதிவுகள் தேர்ந்தெடுத்து விருது தரப்போறோம். உங்களுக்கு எந்த பதிவை சேர்க்க விருப்பமோ சேருங்க' னு ஒரு மெயில் வந்துச்சு. நானும் எதார்த்தமா அவங்க குடுத்த டைம் ல போஸ்ட் பண்ணின  என்னுடைய மூணு பதிவ சேர்த்தேன்.

1 . ஆத்திகத்துக்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவு (சமூக விமர்சனம்)

2 . நிஜமாகவே கடவுள் இந்த உருவத்தில் தான் இருப்பாரா (சுய தேடல்)

3 . நண்பனின் காதலி சந்தோஷுக்கு என்ன முறை (நகைச்சுவை)

அதுக்கப்பறம் தான் தெரிஞ்சுது இது பெரிய பெரிய ஆளுங்க போட்டி போடற இடம். நாம வேடிக்கை பாக்கத்தான் லாயக்குன்னு. அதனால நான் போட்டிக்கு பேர் குடுத்தத கமுக்கமாவே வச்சுகிட்டேன். யார்கிட்டயும்  ஓட்டும் கேக்கல. நான் பாட்டுக்கு யாருடையது பிடிச்சிருந்ததோ அவங்களுக்கு போட்டுட்டு வந்துட்டேன். இப்ப ஒரு பதிவரின் 'நன்றி' பதிவை படிச்சு பாத்துட்டு இரண்டாம் கட்ட ஓட்டுக்கு அவரோடது வந்திருக்குன்னு அவருக்கு ஓட்டு போட போய் பாத்தா ..................
...........
..............
.......................
என்னுடைய முதல் ரெண்டு பதிவும் அங்க 'present madam' சொல்லி உக்காந்திருக்கு... எனக்கு சர்ப்ரைசே தாங்கல... அதனால நானும் எனக்கு சாரி என் பதிவுக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நன்றி சொல்ல இந்த பதிவ போட்டே ஆகணும் இல்லையா... அதனால விளம்பரப்படுத்தாமலே எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...

இரண்டாம் கட்டத்துக்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நண்பன், ஊர்காரன், போன்ற எல்லா எல்லைகளையும் தவிர்த்து தகுதி இருக்கற பதிவுகளுக்கு ஓட்டு போடலாம் வாங்க.

சந்தேகம்: இது தமிழ்மணம் சம்பந்தப்பட்ட பதிவாச்சே. இதை மற்றவைகளில் இணைக்கலாமா?

இதற்கு பின்னூட்டம் இடும் அனைவருக்கும் நன்றிகள்.

Sunday, December 26, 2010

உங்கள் கையெழுத்தும் குணாதிசயமும்

நம்ம கையெழுத்து எப்படி இருக்கோ அப்படி தான் தலையெழுத்தும்னு  பொதுவா சொல்லுவாங்க. ஆனா, நம்ம கையெழுத்தை வச்சு நம்ம குணத்தை கண்டுபிடிக்கவும் முடியும். அதுக்கான சில குறிப்புகள் தான் இந்த பதிவு.

பெரிய எழுத்தாக எழுதுவோர்: 
 பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். 

சிறிய எழுத்தாக எழுதுவோர்: 
 எதையும் திட்டவட்டமாக முடிப்பதில் வல்லவர்கள். 

வலப்பக்கம் சாய்த்து  எழுதுவோர்: 
எதிர்கால வாழ்வில் இன்பமாய் இருப்பார்கள். 

இடப்பக்கம் சாய்த்து  எழுதுவோர்:       
பயந்த சுபாவம் உள்ளவர்கள் , நடந்துபோன காரியங்களை நினைத்து வருந்துவார்கள். 
 
எழுத்துக்களை நீட்டி எழுதுவோர்: 
எதிலும் பற்றற்று இருப்பார்கள்.

எழுத்துக்களை நீட்டி நீட்டி அசாதாரணமாக எழுதுவோர்: 
எந்த காரியத்திலும் அசாதாரண துணிச்சலை காட்டுவார்கள்.


கிறுக்கலாக எழுதுவோர்: 
குழப்ப மனம் படைத்தவர். எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதப்படுத்துவர்.


கட்டமாக எழுதுவோர்: 
ஆடம்பரப்பிரியர்கள். சோம்பேறிகள்.

வட்டமாக முடிப்பவர்கள்: 
பயந்த சுபாவமுள்ள திறமைசாலிகள். 

நான் பரிசோதித்து  பார்த்த வரை பெரும்பாலும் உண்மையாகவே உள்ளது. நீங்களும் check பண்ணிக்கோங்க. (பத்து மொக்க பதிவு போட்டா ஒரு உபயோகமான பதிவும் போடணும்னு போட்டது. பாத்து சொல்லுங்க. இதாவது உபயோகமான்னு)
இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

Friday, December 24, 2010

பதிவுலகில் பாலிடிக்ஸா? இன்னும் பிற சந்தேகங்கள்

கடை போட்டு ரெண்டு மாசமாகியும் பதிவு சம்பந்தமான பல சந்தேகங்கள் இன்னும் இருக்கின்றன. சந்தேகங்களுக்கு சமமாக குழப்பங்களும் உண்டு. இந்த சந்தேகங்களும் குழப்பங்களும் என் பதிவு சம்பந்தமாக மட்டும் இல்லை. முழு பதிவுலகம் சம்பந்தப்பட்டது. ஆனால் இந்த பதிவில்,  நாம், நம் பதிவு, நம்  பின்னூட்டம் என்றே குறிப்பிடுகிறேன். யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. இந்த பதிவு போடும்போது ஏற்படும் சந்தேகங்களை இப்போது கேட்கிறேன். அவ்வப்போது தோன்றுவதை இனி ஒவ்வொரு பதிவிலும் கேட்கிறேன். இந்த சந்தேகங்களில் திமிர் போன்ற ஒரு தொனி தெரியலாம். ஆனால் சத்தியமாக அவை தெரிந்துகொள்ளும் ஆவலில் தான் கேட்கப்படுகிறது.  உதவுங்கள். (அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு பின்னூட்டம் இடுவதை தவிர்க்கவும் :-)    )


1 . பின்னூட்டம் போடும் அனைவருக்கும் நாமும் கண்டிப்பாக பதிலுக்கு பதில் தந்தே ஆக வேண்டுமா? ஏனெனில் நான் பார்த்த பதிவர்களின் பதிவுகளில் அப்படிதான் செய்திருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் தலைப்பில் இருந்து விலகி விடுகின்றனவே..
 (அப்படி இல்லைங்க. அது நம்ம இஷ்டம் தான். ஒருத்தருக்கொருத்தர் நேரில் பேசிக்கறதுக்கு பதிலா இப்படி பேசிக்கறோம்)

2. பதிவு சம்பந்தமான தங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டம் இடாமல்,  அதற்கு பதிலாக 'உங்கள் பதிவு அருமை' 'சூப்பர்' 'நல்ல பதிவு' என்று மட்டும் பதிவிடுவதால் என்ன உபயோகம்? அந்த பதிவு பற்றிய சொந்த கருத்துகளை இரண்டொரு வார்த்தைகளில் சொல்லிவிட்டு, பாராட்டலாமே.. பாராட்டை நான் குற்றம் சொல்லவில்லை. பாராட்டு என்பது மற்றவர்களை ஊக்குவிக்கும் விஷயம். வாலி சொன்னது போல 'ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்' தான். ஆனால் வெறும் பாராட்டு மட்டும் சலிக்காமல் கேட்டுக்கொண்டிருக்க நாம் என்ன மிஸ்டர் எக்ஸா?  பாராட்டுடன் உங்கள் அனுபவ கருத்துகளையும் பதிவு செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே. (சூப்பர் சந்தேகங்க)

3 . நம் பதிவில் யார்யார் பின்னூட்டம் இடுகிறார்களோ, அவர்களுடைய பதிவில் நாமும்  பின்னூட்டம் இட வேண்டுமா? பதிவுலக சம்ப்ரதாயங்கள் பற்றி எனக்கு இன்னும் சரியாக தெரியவில்லை. ( அது நம்ம இஷ்டம் 2 )

4 . நம் பதிவிற்கு யார் follower ஆகி இருக்கிறார்களோ அவர்களுக்கு நாமும் follower ஆக வேண்டுமா? தொழில்நுட்ப பதிவுகள் நீங்கலாக பொது தலைப்புகளில் பதிவிடுபவர்களை  குறிப்பிட்டு கேட்கிறேன். (அது நம்ம இஷ்டம் 3)

5 . சிலருடைய  ப்ளாகில் follower ஆகும் option இல்லையே. என்ன செய்வது? (போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாமே)

6 . ஓட்டு போடுவதன் பயன் என்ன? காரணம் தெரியாமலேயே நான் படிக்கும் பக்கங்கள் அனைத்திற்கும் ஓட்டு போட்டுக்கொண்டிருக்கிறேன். நானும் ஓட்டு பட்டை வைத்துக்கொண்டிருக்கிறேன். பிரபலமாகவா? ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் நம்மிடம் சரக்கு இருந்தால் வந்து பார்ப்பார்கள் அல்லவா? Ad sense இருந்தாலாவது உபயோகம். தமிழ் பதிவர்களுக்கு அதுவும் இல்லை. பின் எதற்கு? நிஜமாகவே தெரியவில்லை. (ஓட்டு போட்டா காசு தருவாங்கன்னு தான்)

7 . நாம் எழுதும் அனைத்து பதிவுகளையும் submit பண்ணவேண்டுமா? இது போன்ற சந்தேகம், நான் விருது வாங்கிட்டேன், இத்தன பேர் என் பதிவ பாக்கறாங்க அப்படின்னு எல்லாம் நான் அப்பப்ப பதிவு போடுவேன். இந்த மொக்கை எல்லாம் கூட submit பண்ணனுமா? (ஹப்பா.. மொக்கைனு அவங்களே ஒத்துகிட்டாங்க)

8 . பல site களில் ஏதோ script கொடுத்து காப்பி பேஸ்ட் செய்துகொள்ளுங்கள் னு கொடுத்திருக்காங்களே. அதை design -> edit Html ல எந்த இடத்தில் பேஸ்ட் செய்யவேண்டும்? (இருக்கறதிலேயே இது ஒண்ணு தான் உருப்படியான சந்தேகம்)

9 . Last But not Least இங்கும் பாலிடிக்ஸ் உள்ளது என கேள்விப்பட்டேன். பெண் பெயரில் எழுதுபவர்கள், நண்பர்கள், ஒரே ஊர்க்காரர்கள், என இன்னும் சில காரணங்களுக்காக  ஓட்டு போடுவார்களாமே? அப்படி என்றால் கருத்துக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் இல்லையா? (அப்படியா... இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே... உடனே பேர, ஊர மாத்தறேன்)

இப்போதைக்கு இவ்வளவு தான் தோணுது. இதற்கு நீங்கள் பின்னூட்டம் இடும்போது அப்ப விளக்கம் கேட்டுக்கறேன். யாரையும் காயப்படுத்தி இருந்தால், அது நான் தெரியாமல் செய்த பிழையாக மட்டுமே இருக்கும். மன்னியுங்கள். இவ்வளவு சந்தேகம் கேட்டு, யாராவது அதற்கு விளக்கம் குடுக்காம, 'நல்ல சந்தேகம். வாழ்த்துக்கள், ' அப்படின்னு பின்னூட்டம் போட்டுடாதீங்க....


விளக்கம் கொடுக்கும் அனைவருக்கும் முன்கூட்டியே நன்றிகள்.

Tuesday, December 21, 2010

பல்கலைக்கழக தேர்வில் ஜெயிப்பது எப்படி? (ஒரு அனுபவ அலசல் )

அடேய்.... எவன்டா அவன் எக்ஸாம கண்டுபுடிச்சவன்? அவன கூட மன்னிச்சுடுவேன்டா... எவன்டா அவன் அரியர்செல்லாம் கண்டுபுடிச்சவன்? அவன தான் என்னால மன்னிக்கவே முடியாது. கண்ணை கட்டிடுச்சு... (இவ்வளவு நாள் பதிவு எழுதாததற்கு இதுதான் காரணம் நண்பர்களே... )

ஓர் பலகலையின் தொலைதூரக்கல்வியில் என்னுடைய முதுகலையை படித்துக்கொண்டிருக்கிறேன். (அய்யய்யோ... தொடர் நிகழ்காலமாகி போயிடுமோ?) கடைசி வருடம். ஒரு பேப்பர் அரியர். அதற்காக படிக்க வேண்டியிருந்தது. உண்மையை சொல்லனும்னா படிக்கற மாதிரி சீன் காட்ட வேண்டியிருந்தது. இல்லாட்டி ப்ளாக் டைப் பண்ற விரல எங்க அம்மா ஒடிச்சுடுவாங்க. அதான் அடக்கி வாசிச்சுட்டு, இப்ப சுதந்திரப்பறவையா பறந்து வந்துட்டேன்.

நான் பரீட்சை எழுதின என் அனுபவத்தை சொல்றேன். முதல் வருடம் என்னைப்  பார்த்து  நானே ஆச்சரியப்படும் அளவு படித்தேன் (கொஞ்சம் ஓவரா இருக்கா? விடுங்க... விடுங்க ... ) அந்த வருட பரிட்சையில் சாதாரண மதிப்பெண்களே கிடைத்தன. சரி, இரண்டாம் வருடம் நல்லா டைம் எடுத்து படிச்சு percentage அதிகப்படுத்தனும்னு  நினைச்சு செமினார் வகுப்புகள் எல்லாம் கலந்துகிட்டு, (கலந்துகிட்டு. underline பண்ணிகோங்க. கவனிச்சு இல்ல)'மே மாசம் எழுதறதுக்கு பதிலா டிசம்பர்ல எழுதலாம். அப்பதான் நிறைய டைம் கிடைக்கும். இன்னும் நல்லா படிக்கலாம் 'னு இருந்தேன்.

ஆனா university ல ஒரு வித்யாசமான scheme நடைமுறையில் உள்ளது. அதாவது, எங்கள் கல்வியாண்டில் எழுதாமல், இடையில் எழுதினால், இரண்டுக்கும் அதாவது may, december இரண்டுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டுமாம். (அடப்பாவிங்களா... இப்படியா காசு புடுங்குவீங்க?) சரி காசு எப்படினாலும் கட்டறோம், ஒரு attempt ட்ரை பண்ணலாமே னு கால்குறைமனதோடு (அரைகுறையையும் விட கம்மி) எழுதினேன். 1 இல்ல , 2 இல்ல 5 பேப்பர். உலக அதிசயமா அஞ்சும் அதிக மார்க்கோட பாஸ். பர்செண்டேஜும் எகிறுச்சு.

ஆனா இப்ப மூணாவது வருஷத்துல எனக்கு பயங்கர குழப்பமா போச்சு. படிச்சு எழுதறதா இல்ல கதை விடுறதான்னு. இப்ப எனக்கு மூணு பேப்பர் தான்ங்கறதால என் சோம்பேறித்தனத்துக்கு சப்போர்ட்டா இரண்டு பேப்பர் படிக்காமலும், கடின உழைப்புக்கு சப்போர்ட்டா ஒரு பேப்பர் படிச்சும் எழுதலாம்னு முடிவெடுத்து எழுதினேன்.  ரிசல்டும் வந்தது. படிக்காமல் எழுதிய இரண்டிலும் பாஸ். படித்து எழுதிய ஒன்றில் பெயில். (என்னாங்கடா நடக்குது இங்க....) அந்த அரியர் பேப்பரைத்தான் இந்தமுறை எழுதி வந்திருக்கிறேன். நான் பெற்ற அனுபவத்தின் பயனாக 'படிக்காமல்' எழுதி இருக்கிறேன். ரிசல்ட்டை பாத்துடலாம்...

நானும் ஒவ்வொரு எக்ஸாமுக்கும் பாக்கறேன், அது என்ன மாயமோ தெரியல... ஒரு மாசமா படிக்க ட்ரை பண்ணினாலும் பரீட்சைக்கு முந்தின நாள் அதுவும் முந்தின நைட்டு பதியற மாதிரி எப்பவும் பதியறதே இல்ல. அநேகமா இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கும். யாராவது விஞ்ஞானிகள் இதற்கு விளக்கம் குடுத்தா நல்லாஇருக்கும்.

இந்த விஷயம் எவ்வளவு விசித்திரமோ அதே அளவு இன்னொரு விசித்திரமும் உண்டு.

அது என்னன்னா, நாம ஒழுங்கா படிச்சு எழுதற பரிட்சைல வாங்கற மார்க்கை  விட own ஆ கதை விடுற பரிட்சைல தான் அதிக மார்க் வாங்கறோம். இந்த அனுபவமும் பெரும்பாலானவங்களுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படினா திருத்தறவங்க, நம்ம creative knowledge க்குத்தான் மார்க் போடறாங்களா? நம்ம education system அ புரிஞ்சுக்கவே முடியலையே...


இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்

Monday, December 13, 2010

நீங்கள் பார்த்த மானஸ்தனுக்கு எத்தனை வயதிருக்கும்?

நீங்கள் பார்த்த மானஸ்தனுக்கு எத்தனை வயதிருக்கும்? ஒரு 20? 40? 60? நான் ஒரு மானஸ்தனை பார்த்தேன். அவன் வயது 6 முதல் 8 க்குள் தான் இருக்கும். பார்க்க பரிதாபமாய், கசங்கிய அழுக்கான உடையில், சோர்ந்த விழிகளுடன், கலைந்த தலையுடன், உண்மையில் பிச்சைகாரன் என்று எண்ணக்கூடிய அத்தனை தகுதிகளுடனும் தான் அவனை முதன்முறையாக கண்டேன்.

            இந்த பதிவை டைப் செய்யும்போது ஒவ்வொரு முறை அவன் இவன் என்று எழுதும்போது மனம் அவர் இவர் என்றே குறிப்பிடும்படி விரும்பியது.  இருப்பினும் அப்படி குறிப்பிடும்போது நம் மனம் பெரிய ஆளாக கற்பனை செய்து விடும் என்பதால் அவன் என்றே குறிப்பிடுகிறேன். 

                சனிக்கிழமை மாலை ஒரு Group discussion.  அதில் கலந்து கொண்டு நானும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தான் அந்த பையன் உள்ளே எட்டிப்பார்த்தான். அவனை பார்த்ததும் எங்கள் மாஸ்டர் 'என்ன' என்று கேட்டார். அவன் மிக மெதுவான குரலில் 'அண்ணா... இந்த செல்போன் கவர் வாங்கிக்கங்கண்ணா... பத்து ரூபாய் தான்.' என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான். நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்ததால் எனக்கு சரியாக கேட்கவில்லை. நான் நினைத்தேன், அவன் தன் குடும்ப கஷ்டத்தை சொல்லி பிச்சை கேட்கிறான் என்று. மாஸ்டர் எங்களுடன் பேசிக்கொண்டே தன் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாயை எடுத்து அவன் பாக்கெட்டில் வைக்க போனார்....

          அது தான் தாமதம்.... உடனே அவன் சரேலென தன் சட்டையை இழுத்துக்கொண்டு 'கவர் வேணும்னா வாங்கிகோங்க. சும்மாவெல்லாம் காசு வேண்டாம் ' என்றான். சத்தியமாக நாங்கள் எல்லாம் அதிர்ந்துவிட்டோம். இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அந்த தோற்றத்துடன் இருந்த ஒரு பையனிடம் இவ்வளவு விரைவான பதில்... சான்சே இல்ல...

         இந்த தன்மானத்தை பாராட்டவே நாங்கள் ஆளுக்கு ஒரு செல்போன் கவர் வாங்கினோம். நாங்கள் வாங்கிய போது அவனின் வியாபார சுறுசுறுப்பை மிகவும் ரசித்தோம். அந்த பையன் வெளியேறும் நேரம் எங்கள் வகுப்பு தோழி ஒருவர் தாமதமாக வந்தார். அவருக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது. அவர் தனக்கும் ஒரு கவர் வேண்டும் என்று கேட்கவே, போய்கொண்டிருந்த அவனை  மீண்டும் அழைத்து கவர் தர சொன்னோம். பணம் தரும் நேரத்தில் தோழியிடம் 10 ரூபாய் நோட்டு இல்லை. நூறு ரூபாயாக தான் இருந்தது. மாஸ்டர்," கவலை படாதீங்க. பையன்கிட்ட சில்லறை இருக்கு. அவன் கிட்டே வாங்கிக்கலாம் " என்று கூற, அவன் சில்லறை எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவனை பற்றி தோழியிடம் சொன்னேன். அவரும் வியந்து போனார். வேகவேகமாக பணத்தை அடுக்கிஎண்ணிய அச்சிறுவன் தன்னிடம் 70 ரூபாய் மட்டுமே இருந்ததை கூறினான். (90 ரூபாய் தேவை). தோழி 'இருக்கட்டும்பா. மீதிய நீயே வச்சுக்கோ' என கூற, அவன் என்ன செய்வது என்று மிக சில வினாடிகளே யோசித்து அடுத்து செஞ்சான் பாருங்க ஒரு காரியம்...

           டக்குனு 3 கவரையும் 70 ரூபாயையும்  அந்த பெண்ணின் டேபிள் மேல் வைத்துவிட்டு விடுவிடுவென கிளம்பினான். சத்தியமா எல்லாரும் freeze ஆயிட்டோம். சட்டென முதலில் சுதாரித்த மாஸ்டர் அவனை பிடித்து நிறுத்தி அந்த பெண்ணை சில்லறை வாங்கி வந்து கொடுக்க வைத்தார். உண்மைல இத்தன வருஷ வாழ்க்கைல நான் இந்த மாதிரி ஒரு யோக்கியன சந்திச்சதே இல்ல. அந்த நிமிஷம் வரை என்மேல் எனக்கு ஒரு பெருமை இருந்தது. நானும் business செய்வதால் மற்றவர்களுக்கு மீதி காசு தரும்போது பைசா சுத்தமாக தந்துவிடுவேன். (பெரும்பாலும் மற்றவர்கள் amount ஐ round செய்து  விடுவார்கள்.) நான் சகல வசதிகளுடன் இருக்கிறேன். நான் நியாயமாக நடந்துகொள்வதில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த சிறுவன், அவ்வளவு வறுமையிலும் நேர்மையாக இருக்கிறானே... அடுத்தவர் சொத்துக்கு ஆசை படாமல்... அது தான் நேர்மை. அது தான் நியாயம்.

           இதன் பின் தலைவர் பற்றிய விவரங்கள் கேட்டோம். பெயர் நாசர். அரசு பள்ளியில் படிக்கிறார். (வகுப்பு மறந்துவிட்டது. இரண்டாவதோ மூன்றாவதோ. ) சனி ஞாயிறு அன்று இவர்தான் விற்பனை பிரதிநிதி. மற்ற நாட்களில் அப்பா வியாபாரத்தை பார்த்துக்கொள்வார்.

                 இப்பேற்பட்ட நபரை நான் வாழ்வில் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள மொபைலில் படம் பிடித்தேன். 'எங்கே.. காட்டுங்கக்கா...' என்றான். மீண்டும் எடுத்து காட்டினேன். மகிழ்ந்தான். கொஞ்சம் வெளிச்சமும் தரமும் போதவில்லை. அநேகமாக அடுத்த வாரமும் வருவான் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
 இது தான் அந்த மானஸ்தனின் போட்டோ:ஒரு பத்து ரூபாய் பொருளுக்கு தன்மானத்தை இழக்க விரும்பாத இந்த பையன் எங்கே.... பல கோடி ரூபாய்க்கு மானத்தோடு சேர்ந்து எதையும் விற்க தயங்காத அரசியல்வாதிகள் எங்கே...


இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

Wednesday, December 8, 2010

ஏ டண்டணக்கா.... ஏ டணக்குணக்கா...

         எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு ரைமிங் இது. காரணம் நான் ஏதாவது பந்தா பண்ணிக்கணும்னா, அந்த விஷயத்தை சொன்ன பின்,  நான் இதை சொல்லி தான் முடிப்பேன். கொஞ்ச நாட்களாக தான் இந்த பழக்கம். இப்ப ஏன் சொல்றேங்கறீங்களா? அழகு குறிப்பு பற்றிய போஸ்ட் இன்ட்லி ல பிரபலமானவைல  வந்திருக்காம். மெயில் வந்துச்சு... எப்பவும் பதிவுல என் 'முதல்' சந்தோஷத்தை உங்க கூட தான பகிர்ந்துக்குவேன்... அதான் இப்பவும் பகிர்ந்துகிட்டேன். இப்ப சொல்லுங்க ...

ஏ டண்டணக்கா.... 
ஏ டணக்குணக்கா... 

ஸ்ஸ்ஸ்ஸ் .... யாரப்பா அங்க? இந்த Girls dress ல எல்லாம் காலர் வைக்க மாட்டாங்களா?
 போகற போக்க பார்த்த 'இப்பவே கண்ணை கட்டுதே' பதிவுல வெங்கட் சொன்னது போல ஆட்டோகிராப் போட வேண்டி வந்துடும் போல இருக்கே...


(ஹி ஹி ஹி. பழம் தின்னு கொட்ட போட்டவங்க எல்லாம் இந்த பதிவை படிப்பீங்க. அவங்கெல்லாம் பொழச்சு போறா சின்ன பொண்ணு னு விட்ருங்க ப்ளீஸ் )

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கும் வாழ்த்துசொல்றவங்களுக்கும்  முன்கூட்டியே நன்றிகள்.


.

Monday, December 6, 2010

ஏற்கனவே அழகா இருக்கறவங்க இதை படிக்க வேண்டாம்.

                     எண்ணை சருமம் கொண்டவர்களுக்கு எப்போதும் முகத்தில் அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை அதிகம். அதற்கு காரணம் அழுக்குகளும் இறந்த செல்களும். நார்மல் ஸ்கின் உள்ள முகத்தில் உள்ள அழுக்குகளை விட ஆயில் ஸ்கின் உள்ள முகங்கள் விரைவில் அழுக்கடையும். எனவே தான் முகப்பரு, கரும்புள்ளிகள், ப்ளாக்ஹெட்ஸ், எண்ணை வடியும் முகம் என பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க சில டிப்ஸ்.

First Step :
                       எந்த ஒரு அழுக்கையும் முகத்தில் இருந்து எடுப்பதற்கு முதலில் செய்ய வேண்டியது நம் முகத்தில் உள்ள நுண்ணிய துளைகளை OPEN செய்வது. இதற்கு நாம் ஆவி பிடிக்க வேண்டும் (உடனே சுடுகாட்டுக்கு சுற்றுலா செல்லாதீர்கள். நான் சொல்வது நீராவி). கொதிக்க வைத்த நீரில் முகம், கழுத்து, மூக்குப்பகுதி ஆகியவற்றில் நன்கு படுமாறு ஆவி பிடியுங்கள். நன்கு வியர்த்தும், ஆவி முகத்தில் பட்டும் வெளிவரும் நீரை நல்ல காட்டன் துணியால் அழுத்தி துடைத்துக்கொள்ளுங்கள்.

Second Step:
                       ஒரு சேப்டி பின்னை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின் பக்கம் உள்ள வட்டத்தின் நடுவில் black head இருக்குமாறு வைத்து, அதை கொஞ்சம் இலேசாக அழுத்தி பலமுறை வெளிப்பக்கமாக தள்ளவும். ஒவ்வொருமுறை தள்ளும்போதும், blackhead இல் இருந்து  கொஞ்சம் கொஞ்சமாக முடி போல் அழுக்கு வெளியே வருவதை காண்பீர்கள். இப்படி ஒவ்வொரு அல்லது ஒரே பக்கமாக வெளிவரும் தன்மையுள்ள blackhead களையும் அழுத்தி அழுத்தி வெளியேற்றுங்கள்.  (ஜாக்கிரதை. மிக அழுத்தமாக அழுத்தி எடுத்தால், முகத்துளை பெரிதாகிவிடும்)
                       ப்யூட்டி பார்லர்களில் இதையே தான் கொஞ்சம் வேறு விதமான (மேலே உள்ள படத்தில் உள்ள) ஊசியை வைத்து செய்கிறார்கள். வெளியில் வர அடம் பிடிக்கும் அழுக்கை நுனியில் உள்ள ஊசியால் குத்தி பின் அழுத்தி வெளியேற்றுகிறார்கள். இதே பொருளை வைத்து இதே வேலை தான் முகப்பருவுக்கும் செய்கிறார்கள். ஆனால் முகப்பருவை பொறுத்தவரை அது அதிகமாகி விடும் அல்லது வீங்கிவிடும்  என்று நான்  அஞ்சுவதால், பர்சனலாக  நான் அதை சப்போர்ட் செய்யவில்லை.  (பயப்படாதவர்கள் செய்து பார்க்கலாம். உங்கள் இஷ்டம்)

Third Step:
               பின் மூல்தானி மிட்டி போட்டுக்கொள்ளுங்கள். அது எண்ணைபசையை உறிஞ்சிக்கொள்ளும். (இது மூல்தான் என்னுமிடத்தில் உள்ள களிமண். கடைகளில்  கிடைக்கும்)

Last Step: 
                  இப்படி முகத்துளைகளை விரிவடையச்செய்து, அழுக்குகளை வெளியேற்றிய பின், அந்த துளையை மூட வேண்டும். இல்லாவிட்டால் அது இன்னும் அதிக அளவில் அழுக்குகளை சேகரித்துக்கொள்ளும். எனவே விரிவடைய வெந்நீர் உபயோகித்தது போல, முகத்துளைகளை மூட ஐஸ் கட்டி அல்லது ஐஸ் வாட்டர் உபயோகித்து முகத்தை கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை  செய்யலாம்.

    
               இவை தவிர, சுத்தமான தேனை தினமும் முகத்தில் தடவி வந்தால்  நல்ல பலனை அடையலாம். வேப்பங்கொளுந்தை அரைத்து தடவினாலும் அது நல்ல ஆன்டிசெப்டிக்காக செயல்படுகிறது. சுத்தமான நீரைஅதிகமாக குடித்து வந்தால் முக அழகு சம்பந்தமான பிரச்சனைகள் மட்டுமல்ல, உடல் ரீதியான பிரச்சனைகளும் பெருமளவில் சரியாகிறது. அனுபவத்தில் அனைவருக்கும் உபயோகித்து பார்த்த பின்பே இந்த பதிவை இடுகிறேன். ஸோ தாராளமாக ட்ரை பண்ணலாம்.

ஏற்கனவே அழகா இருக்கறவங்கனு குறிப்பிட்டதால் அநேகமாக அதிகமாக பின்னூட்டம் வராது னு நினைக்கறேன். ;) இருப்பினும்  இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

Friday, December 3, 2010

திருக்குறள் விளக்கம் (நம்ம ஸ்டைல்ல)

திருக்குறள் ஒண்ணும் புரிஞ்சுக்க கஷ்டமான மொழி நடையில நம்ம தலைவர் திருவள்ளுவர் எழுதல. ரொம்ப ஈசியாதான் எழுதி இருக்கிறார். கொஞ்சம் முயற்சி செஞ்சு ஆர்வத்துடன் கவனிச்சா, ஒரே தடவையில அர்த்தம் பதிஞ்சு போகுது. இந்த தளத்துல நிறைய பெரியவர்கள் இதுவரை கொடுத்துள்ள அளவுக்கு திருக்குறள் விளக்கம் எதிர்பார்க்காதீங்க. ஒரு சாதாரண ஆளா, சாதாரண முறையில என் சிற்றறிவு புரிஞ்சுகிட்ட விதத்தில விளக்கம் குடுக்கறேன். முடிஞ்சவரைக்கும் விரிவா இல்லாம, சுருக்கமா தர முயற்சிக்கறேன். உங்களுக்கும் எளிதா புரியும்.
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு
அதாவது: கடவுள் தான் எல்லாத்துக்கும் அடிப்படை

2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.

அதாவது: கடவுளை கும்பிடாட்டி படிச்சும் வேஸ்ட்டு

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.

அதாவது: கடவுளை நினைச்சுட்டே இருந்தா சாகாம ரொம்ப நாள் என்ஜாய் பண்ணலாம்.

4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


அதாவது:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளை சேர்ந்தா No Problem at all.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 


அதாவது: கடவுளை உண்மையா விரும்பினா பாவம் புண்ணியம் எல்லாம் பிரச்சனை இல்ல

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
   நெறிநின்றார் நீடுவாழ் வார்

அதாவது: கண்டதையும் பண்ணாம கண்டிப்போட  இருந்தா 'கன்' மாதிரி இருக்கலாம்.


7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
   மனக்கவலை மாற்றல் அரிது.

அதாவது: கடவுள்கிட்ட சரணாகதி அடையாதவங்க கவலை பட்டுகிட்டேதான் இருப்பாங்க

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.

அதாவது: கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான். ஆனா கைவிட்ருவான்

9. கோள்இல் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.

அதாவது: 'தல' யை (கடவுளை) வணங்காட்டி தலையே வேஸ்டு 

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
      இறைவன் அடிசேரா தார்.

அதாவது: ஆண்டவனையே நினைச்சா அடுத்த பிறவியே கிடையாது.

11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
      தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

அதாவது: மழை தான் அமிர்தம்

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
      துப்பாய தூஉம் மழை.


அதாவது: மழை தான்  உணவு 

13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து 
      உள் நின்று உடற்றும் பசி 


அதாவது: மழை மட்டும் இல்லாட்டி பசி நம்மள வாட்டிடும்

 14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
      வாரி வளங்குன்றிக் கால்

அதாவது: மழை பெய்யாதுனா உழவர் உழ மாட்டார்


15. கேடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
      எடுப்பதூவும் எல்லாம் மழை

அதாவது: கெடுப்பது - கொடுப்பது ரெண்டுமே மழை தான்.


16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
     பசும்புல் தலைகாண்பு அரிது.
அதாவது: மழை இல்லாட்டி ஓரறிவுள்ள புல்கூட முளைக்காது.
 
17.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
     தான்நல்கா தாகி விடின்
அதாவது: மழை இல்லாட்டி கடலும் வத்திடும்

18.சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
     வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
அதாவது: மழை இல்லாட்டி தேவர்களுக்கு பூஜையும் கிடையாது, ஒண்ணும் கிடையாது...

19. தானம் தவம்இரண்டும்  தங்கா வியன்உலகம்
      வானம் வழங்கா தெனின்.
அதாவது: மழை இல்லாட்டி மத்தவங்களுக்கான தானமும், தனக்கான தவமும் செய்ய முடியாது.


20. நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
      வான்இன்று அமையாது ஒழுக்கு.
அதாவது:
தண்ணி இல்லாட்டி எப்படி உலகம் இல்லையோ அதே போல மழை இல்லாட்டி யாரும் ஒழுக்கமா இருக்க முடியாது. 

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
      வேண்டும் பனுவல் துணிவு.
அதாவது: பற்றில்லாதவங்கள பெருமையா சொல்றதே நூல்களுக்கு துணிவு. 

22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
     இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

அதாவது:  பற்றில்லாதவங்கள பெருமையோட எண்ணிக்கையும் இதுவரை பிறந்து இறந்தவங்க எண்ணிக்கையும் சமம் 

23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
      பெருமை பிறங்கிற்று உலகு
அதாவது: 
ஆராய்ந்து தெளிந்து அறத்தை மேற்கொண்டால் பெருமை. 


24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
      வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
அதாவது: ஐம்புலன்களை அறிவால அடக்கினவன் வீடுங்கற உலகத்துக்கு விதை போன்றவன் 
(Sorry Friends. இந்த குறளை என் ஸ்டைல்ல   சுருக்கமா விளக்க முடியல. ) 


25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
       இந்திரனே சாலுங் கரி.
 
அதாவது: ஐம்புலன்களை அடக்கினவனுக்கு உதாரணம் இந்திரன் தான்  

26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
       செயற்கரிய செய்கலா தார்.
அதாவது:
முடியாததை முடிச்சு காட்டுறவன் தான் பிஸ்தா  

27. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
      வகைதெரிவான் கட்டே உலகு.
அதாவது:
ஐந்து புலன்களின் வேலையின் வகையை அறிந்தவனிடம் உலகம் உள்ளது.


28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
     மறைமொழி காட்டி விடும்.
அதாவது:
ஒருத்தரோட வாக்கின் பெருமைய அவங்க சொல்லிட்டு போன வார்த்தைகளே காட்டிடும் 

29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
      கணமேயுங் காத்தல் அரிது.
அதாவது:
  நல்ல குணத்தை எல்லாம் மலை மாதிரி வெச்சிருக்கற  நல்லவன் ஒரு செகண்ட் கோபப்பட்டாலும் கோபப்படுத்தினவன் முடிஞ்சான் 

30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
      செந்தண்மை பூண்டொழுக லான் 

அதாவது: எல்லோர்கிட்டயும் அருளோட இருக்கறவன்தான் அந்தணன் (ஐயர் as well as Higher) 

31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
      ஆக்கம் எவனோ உயிர்க்கு.
அதாவது:
சிறப்பும் செல்வமும் கிடைக்க அறவழியே நல்லது. 

32.அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
      மறத்தலின் ஊங்கில்லை கேடு
அதாவது:  அறம் தான் top. அதை மறந்தா flop  

33.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
     செல்லும்வா எல்லாஞ் செயல்
அதாவது: விடாமல் அறச்செயலை செய்யணும்

34.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
    ஆகுல நீர பிற.  

அதாவது: அப்பழுக்கில்லாத அறத்தை பின்பற்றுபவனே அறன். மத்ததெல்லாம் வெறும் ஆரவாரம் 

35.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
     இழுக்கா இயன்றது அறம்
   
 அதாவது: அறம்னா வேற ஒண்ணும் இல்ல, பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இது நாலும் இல்லாம இருக்கறது தான்.


36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
      பொன்றுங்கால் பொன்றாத் துணை

அதாவது: வயசுப்பசங்களா இருக்கறப்பவே அற வழில போங்க. வயசான காலத்துல பார்த்துக்கலாம்னு விட்ராதீங்க.

37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிபை
      பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
 
அதாவது:  பல்லக்குல போறவனுக்கும், பல்லக்கு தூக்கறவனுக்கும் அறத்தின் பயனை விளக்காதீங்க. ஏன்னா, அவங்கவங்க வேலைய அவங்கவங்க பார்க்கறதுதான் அறம்38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
        வாழ்நாள் வழியடைக்குங் கல்
அதாவது:  தினமும் செய்யும் அறம், அடுத்தடுத்த பிறவி வருவதை அடைக்கும் கல்லாகும்


39. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
      புறத்த புகழும் இல
அதாவது: அறவழியில வர்றது தான் ஒரிஜினல் புகழ். ஒரிஜினல் இன்பம். 


40.  செயற்பால தோறும் அறனே ஒருவற்கு
உயற்பால தோறும் பழி
அதாவது: எவ்வளவு முடியுமோ அவ்ளோ முயற்சி பண்ணி அறம் செஞ்சுக்கோ. அதே சமயம் பழி வராம காத்துக்கோ. 41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்


நல்லாற்றின் நின்ற துணை
அதாவது: குடும்பஸ்தன்னு யார சொல்வாங்க? அவன மையமா வெச்சு வாழும் பெற்றோர், மனைவி, குழந்தைக்கு துணையா இருக்கறவனை தான்.

43.தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
அதாவது: முன்னோர்களையும், தெய்வத்தையும் , விருந்தாளிங்களையும், சொந்தக்காரங்களையும் கூடவே தன்னை தானும் அறநெறி தவறாமல் போற்றுவது இல்லறத்தானின் சிறந்த கடமை.
44.பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்
அதாவது:சமுதாயத்துக்கு அஞ்சி நியாயமா வாழ்ந்தா குடும்ப வாழ்வில குறைவு இருக்காது.


45.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
     பண்பும் பயனும் அது.
அதாவது: குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

 
(இந்த போஸ்ட் வாரத்துக்கு ஒரு முறை குறளுக்கு விளக்கம் எழுதும்போது update ஆகிக்கிட்டே இருக்கும். )


.

Thursday, December 2, 2010

அனைவருக்கும் நன்றி !

பதிவுலகில் உண்மையில் நேற்று எனக்கு செம BIG Day! ஒரே  நாளில் நான் மூன்று முறை சந்தோஷப்பட்டேன். 

ஆம்...

          நான் பதிவெழுத ஆரம்பித்து ஒன்றரை மாதங்களே ஆன நிலையில் என் பக்கம் 3000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. அதுல ஒரு 500 தடவை நானே பார்த்திருப்பேன், friends க்கு  காமிச்சிருப்பேன்னு வைங்க... மீதி தடவை எல்லாம் மற்றவர்கள் பார்த்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நன்றி நண்பர்களே...

 இரண்டாவது சந்தோஷம் எல்.கே கொடுத்த விருது.
 மற்றுமொரு சந்தோஷம் அருண் பிரசாத் என்னை வலைசரத்தில்  அறிமுகப்படுத்தியது..
        
             இவர்கள் இருவரும் என் பதிவை விருது தரவும், அறிமுகப்படுத்தவும் தகுதியானது என எண்ணியதே எனக்கு ரொம்ப சந்தோஷம்.எல்.கே வுக்கு கொடுத்த பின்னூட்டத்தையே நான் மீண்டும் குறிப்பிடவிரும்புகிறேன். தத்தி தத்தி நடக்கும் குழந்தையை, ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் வந்ததுபோல் சுற்றத்தார் உற்சாகப்படுத்துவது போல் தான் இந்த நண்பர்களும் எங்களை (விருதும் அறிமுகமும் பெற்ற என் போன்ற மற்ற பதிவர்களை) ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி எல்.கே.   நன்றி அருண்..

           நான் ரொம்ப சாதாரணமான ஆள். எனக்கு உங்கள் அனைவரின் ஊக்கம் ரொம்பவே நெகிழ வைக்கிறது. நன்றி என்பது உணர்வு பூர்வமானது. எனவே நன்றிகளை வார்த்தைகளில் சொல்ல முயற்சித்து டைப் செய்தால் இவ்வளவுதான் பதிவிட முடிகிறது. .

(பின்குறிப்பு: நானும் விருது வாங்கிட்டேன்... நானும் விருது வாங்கிட்டேன் னு அவார்ட மேலே வச்சு கொஞ்ச நாள் சீன் போட்டுக்கறேனே...)


.

Wednesday, December 1, 2010

பதிவர் சாதாரணமானவள் கோர்ட்டுக்குப் போனார்

            என் இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக நான் நேற்று கோர்ட் வாசல்படியை மிதிக்க வேண்டியதாக போய் விட்டது. என் குடும்பத்தில் யாரும் இப்படி கோர்ட்டுக்குச் சென்றதில்லை. எல்லாம் என் தோழியால் வந்தது...

                     நானும் என் தோழியும் துணி வாங்குவதற்காக கடைவீதி சென்றோம். அவள் வண்டியில் தான். அவள் தான் ஓட்டினாள். நான் நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் 'தேமே' என பின்னால் உட்கார்ந்திருந்தேன். துணிக்கடைக்கு தான் போவாள் என்று இருந்தால், திடீரென ஒரு Beauty Parlour முன் வண்டியை நிறுத்தினாள். தன் புருவத்தை பார்லரில் சரி செய்துகொண்டு, அடுத்து துணிக்கடை செல்லலாம் என்றாள். சரி என்று உடன் சென்றேன்.

                       அந்த பார்லரம்மா துணை தொழிலாக ஆள் பிடிக்கும் வேலையை செய்வார் போல் இருக்கிறது. (அதாங்க M.L.M). காத்திருக்கும் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து இதை படிங்க என்றார். அதில் செல்பேசி உபயோகிப்பவர்களை பாதுகாக்கும் நோக்கோடு சிம் கார்டை விட சிறிய தகடு ஒன்றை போனில் சொருகிக்கொண்டால் கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து  தப்பிக்கலாம் என்று எழுதி இருந்தது.

                    அவங்க புத்தகத்த குடுத்த மரியாதைக்காக அந்த தகட்டின் விலை பற்றி விசாரித்தேன். விலை ஆயிரம் ரூபாயாம்.உங்க போன்ல வச்சிருக்கீங்களான்னு கேட்டேன். அவங்க தெளிவா  'நான் புது போன் மாத்தி 2 நாள் தான் ஆச்சு. பழைய போன் ல இருக்கு. புதுசுக்கு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்' னு சொன்னாங்க.  ஆஹா அவங்களா நீங்க னு மனசுல நெனச்சுகிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்.

             ஆண்களே... உங்களுக்கு ஒரு டிப்ஸ். . பெண்களுக்கு நாங்கள் அழகாக இருப்பது தெரிந்துவிட்டால், கண்டிப்பாக அதை சோதித்துப்பார்ப்போம் எத்தனை பேர் நம்மை பார்க்கிறார்கள் என்று. பெரும்பாலும் இதை பா.செ.முன், பா.செ.பின் என இரண்டு வகைக்குள் அடக்கி விடலாம். அதாவது பார்லர் செல்வதற்கு முன், பார்லர் சென்ற பின் :-)

             தோழியின் புருவம் இப்போது நல்ல வடிவமைப்போடு இருந்ததால் இப்போது அவளுக்கு தன்னம்பிக்கை ஏறி இருந்தது. அது என் துரதிர்ஷ்டம். எனவே அம்மணி தன் அழகை செக் செய்ய அடுத்து சென்றது தாலுகா ஆபீஸுக்கு.. இங்க எதுக்கு வந்தன்னு கேட்டேன்.பட்டதாரி கணக்கெடுப்புக்கு பதிவு பண்ணிவிட்டு 5 நிமிடத்தில் கிளம்பிவிடலாம் என்றாள். அவள் பட்டதாரி கணக்கெடுப்புக்கு பதில் பார்வையாளர் கணக்கெடுப்பு செய்கிறாள் என்று பின்புதான் தெரிந்தது. என் வாழ்வின் மிக முக்கியமான நேரம் நெருங்கிக்கொண்டிருப்பது தெரியாமல், நானும் போய் ஒரு அப்ளிகேஷன் வாங்கி என் பையில் வைத்தேன்.

            அப்படியே ஒரு அரைமணி நேரம் சென்றது. அவள் நடந்த நடைக்கு அவளின் செருப்பும் அறுந்தது. அவள் ஆர்வமும் பொசுக்கென போய்விட்டது. எனவே இப்போது கடுப்புடன் வேகவேகமாக தன் வேலையை முடித்துக்கொண்டு வண்டியில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தாள். அடுத்ததாவது அவள் துணிக்கடை போவாள் என்று நம்பி, நான் பின்னால் ஏறி அமர்ந்தேன்.

ஆனால்......

அவள் அழைத்துச்சென்றது....

மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்துக்கு....

எனக்கு அது நீதிமன்றம் என்றே தெரியவில்லை. அந்தக்கால கட்டிடக்கலையுடன் இருந்ததால் அடையாளம் தெரியவில்லை. அதுவும் ஏதோ அரசாங்க அலுவலகம் போல் தான் என்றெண்ணி உள்ளே சென்ற பின்புதான் தெரிந்தது அது ஒரு கோர்ட் என்று. மனம் நடுநடுங்கி போய் விட்டது. என் குடும்பத்தார் யாரும் செல்ல துணியாத ஒரு இடம்... நான் கோர்ட் நடுவில்.... எல்லாம் என் தோழியால் வந்தது.

சொல்ல மறந்து விட்டேனே... அவள் ஒரு வழக்குரைஞர்.

அதன் பின் அங்கும் அவள் வேலையை முடித்துக்கொண்டு, துணிக்கடை சென்று துணி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். (செம experience இல்ல)

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்குமுன்கூட்டியே நன்றிகள். கடுப்பாகாமல் பின்னூட்டம் இருபவர்களுக்கு இன்னும் நன்றிகள்.

Sunday, November 28, 2010

எதன் எல்லை எது? (சும்மா ஜாலி புதிர்)

எதை பற்றி எழுதுவது என்ற குழப்பத்தில் கடந்த சில நாட்களாக பதிவிட முடியவில்லை. நேற்றுதான் Blog போட ஒரு matter கிடைத்தது. ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஏதாவது ஒரு எல்லை இருக்கும் அல்லவா... அது என்னவாக இருக்கும் என்பதை கொஞ்சம் நகைச்சுவையோடும்  அதே சமயம் 'அட அதுவும் உண்மைதான்' என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்த ஒரு பேப்பரை படிக்க நேர்ந்தது.
உதா:
HEIGHT OF FASHION: வேஷ்டியில் ஜிப் 

இது போன்ற சில கேள்விகளை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள அதை இங்கே பதிவிடுகிறேன். ஆனால் கேள்வி மட்டும். விடை உங்களின் வித்யாசமான சிந்தனைகளை கண்ட பின்.

கேள்விகள் :
1 HEIGHT OF SECRECY?
2 HEIGHT OF ACTIVE LAZINESS?
3 HEIGHT OF LAZINESS?
4 HEIGHT OF CRAZINESS?
5 HEIGHT OF FORGETFULNESS?
6 HEIGHT OF STUPIDITY?
7 HEIGHT OF HONESTY?
8 HEIGHT OF SUICIDE?
9 HEIGHT OF DEHYDRATION?
10 HEIGHT OF HOPE?

கேள்வியை ஆங்கிலத்தில் தருவதற்கு மன்னிக்கவும். சில வார்த்தைகளை தமிழில் எப்படி மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை. craziness-stupidity இவை இரண்டையும் எப்படி வித்தியாசப்படுத்துவது என்று சில பல குழப்பங்களால், ஆங்கிலத்திலேயே தருகிறேன். பதில் தமிழிலேயே இருக்கலாம்.


.

Thursday, November 18, 2010

பணம் தின்னிகள் பற்றிய வயித்தெரிச்சல் பதிவு

பூ வாசத்தையும் ஊதுபத்தி வாசத்தையும் எப்போதாவது துர்நாற்றமாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்களும் இழவு வீட்டுக்கு சென்றிருப்பீர்கள். எனக்கு பிடித்த அத்தை ஒருவர், Bank Employee, பாத்ரூம் சென்றபோது Pressure அதிகமாகி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடைசியில் அநியாயமாக இறந்து போனார். அவர்கள் சேர்க்கப்பட்ட மருத்துவமனை கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற நான்கெழுத்து மருத்துவமனை. ஈரோடு கிளை. ஆனாலும் அங்கே உயிருடன் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே வரும்போது உயிருடன் பெரும்பாலும் வரமாட்டார்கள்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் என் அம்மா வழி மாமா ஒருவருக்கு நெஞ்சு வலி வந்தது. இது பிரபலமான மருத்துவமனை என்பதால் கொண்டுபோய் சேர்த்தார்கள். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு விட்டது என்றார்கள், ஆபரேஷன் செய்யவேண்டும் என்றார்கள், ஊசி போட வேணும் என்றார்கள்.. (ஒரு ஊசியின் விலை 25,000.) இன்னும்  பல டெஸ்ட்டுகள் எடுக்கவேண்டும் என்றார்கள்... சில டெஸ்ட்டுகள் எடுத்தார்கள்.. நிலைமை சீரியஸ் என்றார்கள்...  ஸ்பெஷலிஸ்டுகள் வரவேண்டும் என்றார்கள்... என்னென்ன கதை அடிக்க முடியுமோ அத்தனையும் அடித்தார்கள்.

பார்த்தார் அவர் மகன்! இங்கே ஆகும் செலவை தாக்குபிடிக்க முடியாது என்று சென்னைக்கு கூட்டி செல்ல முடிவெடுத்தார்.  (ஒரு முன்னணி தனியார் தொலைகாட்சியில் கேமரா மேனாக மாமா மகன் இருப்பதால், சென்னை அரசு மருத்துவமனையில் ஏதோ concession உண்டாம்.) அப்போது பார்க்க வேண்டுமே... இந்த மருத்துவமனை ஊழியர்களின் அடாவடியை. மாமாவை விடவே மாட்டேன் என்று ஒரே பிடிவாதம். நான் கூட நெகிழ்ந்து போனேன். பேஷன்ட் மேல் இவ்வளவு பாசமா என்று. ஆனால், மாமா மகன் 'வச்சுகோங்க. ஆனா காசு ஒரு பைசா கூட தர மாட்டோம்' என்று சொன்னதும் தான் விட்டார்கள். (வடை போச்சே...) பின்னர் சென்னைக்கு கூடி வந்து பரிசோதித்ததில் தான் தெரிந்தது அது வெறும் வாயு தொந்தரவு என்று.

இன்னுமொரு உதாரணம்... எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் 93 வயதான தந்தையும் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால், அவசரத்திற்கு என்று அதே மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அப்பாவின் நண்பர் தைரியசாலி, வர்மக்கலை அறிந்தவர், மருத்துவ முறைகளையும் ஓரளவு அறிந்தவர் (மருத்துவம் அல்ல). இந்த முறை நடந்த கூத்து இன்னும் அருமை. முதலில் வைத்தியம் செய்த மருத்துவர் எதற்கோ லீவ் எடுக்க, மருத்துவமனையில் பேஷண்டுக்கு வைத்தியத்தை தொடர வந்தவர் ஒரு கிட்னி specialist. என்னடா இது கேனத்தனமா இருக்கே என்று நண்பர் கேட்க, என்னென்னமோ சமாளித்திருக்கிறார்கள். இவர் நோண்டிநோண்டி கேட்கவும் 'பார்ட்டி தெளிவாக இருக்கிறார் என்று விட்டு விட்டார்கள்'. அதன் பிறகும் ஏனோதானோவென்ற வைத்தியம் தொடர்ந்திருக்கிறது. நண்பர் அங்கிருந்து எப்படியோ வெளியே வந்து வேறு டாக்டரிடம் காட்டி சரிசெய்திருக்கிறார்கள்.

தீபாவளியன்று கீழே விழுந்த அத்தையை, அன்று வேறு மருத்துவமனைகள் விடுப்பாக இருந்த காரணத்தினால் மேற்கூறிய பெருமை வாய்ந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். விலைஏற்றத்தால் இந்த முறை ஊசி விலை 45000 . இருப்பினும் கொடுத்தார்கள். வேலைக்காகவில்லை. அத்தை எங்களை விட்டு போய்விட்டார்.

அதிகமாக fees வாங்கினால் தரமான மருத்துவமனை என்று எந்த முட்டாள் சொன்னது? ஒரு முட்டாள் சொல்லி இருப்பான். ஒரு லட்சம்  முட்டாள்கள் அதை follow செய்கிறார்கள்.
இனியாவது கௌரவத்துக்காக செலவு செய்யாமல், ஒரு மருத்துவமனையில் சேர்க்கும் 
முன், ஏற்கனவே அந்த மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்களின் அனுபவத்தை கேட்டு விட்டு சேருங்கள். ஏனென்றால், தவறான தேர்ந்தெடுப்பால் வீணாவது பணம் மட்டும் அல்ல, உயிரும் கூட தான்....

(பிரிவின் வேதனையில் இருப்பதால், இந்த பதிவில் கொஞ்சம் தெளிவு இல்லை தான். மன்னியுங்கள் நண்பர்களே)

.

Thursday, November 11, 2010

விலங்குகள்உருவத்தில் கடவுளை வழிபடுவது ஏன்?

              சாமி கும்பிடுபவர்கள் மட்டும் படித்தால் போதுமானது. இது அவர்களுக்கான பதிவு மட்டுமே.. மற்றவர்கள் இதை படித்து உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்.           கடவுளின் உருவ வழிபாட்டை பற்றி எழுதிய போது இதை டைப் செய்து வைத்தேன். ஆனால் இந்த பதிவை post செய்ய மனம் வரவில்லை. அரைகுறை மனதுடன்தான் post செய்கிறேன். பெரியார் கூட மூட நம்பிக்கைகளை தான் வெறுத்தாரே தவிர கடவுள் வழிபாட்டுக்கு தடை விதிக்கவில்லை. அதனால் தான் அவர் ஈரோட்டில் உள்ள 2 , 3 கோவில்களுக்கு கமிட்டி மெம்பராக இருந்திருக்கிறார். மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர்கள் சாமி கும்பிடும்போது 'பெரியவங்க சொல்லி இருக்காங்க' என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துகொண்டு கும்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு 'ஏன் சொல்லி இருக்கிறார்கள்' என்று சொல்ல முயற்சித்தது தவறா? நான் என்னை ஆத்திகர் என்று குறிப்பிட்டிருக்க கூடாது என நினைக்கிறேன். ஓகே. mind ல வச்சுக்கறேன். அப்பறமா use பண்ணிக்கறேன்.  விஷயத்திற்கு வருவோம். 

விலங்குகள்உருவத்தில் கடவுளை வழிபடுவது  ஏன்?
          
            கடவுள் எந்த உருவத்தில் இருப்பார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் இந்த விலங்குகளின் முகங்களை வேறு கடவுள் உடலோடு (சில சமயம் மனித உடலோடு)  எதற்காக நம் முன்னோர் இணைத்திருக்கிறார்கள்? இது எல்லோருக்கும் வரும் சந்தேகமே... இதற்கு நான் எழுத்தாளர் திரு. பாலகுமாரனின் கருத்தை கொண்டு இங்கு பதிகிறேன்.
          பொதுவாக நம் மூச்சை கவனித்தால், நாம் கோபப்படும்போது, கவலைப்படும்போது,  காம வசப்படும்போது, வெறுப்படையும்போது என negative விஷயங்களில் ஈடுபடும்போது மூச்சு கீழ்நோக்கி வேகமாக பாயும். இதை தான் அதோகதி என்பார்கள். (அதோ=கீழ்நோக்கி ; கதி = பாய்தல்) உங்கள் காமம், கோபம், குரோதத்தை அக்கணம் கட்டுப்படுத்த நினைத்தால் உடனே நீங்கள் உங்கள் மூச்சை சிறிது சிறிதாக மேல்நோக்கி முடிந்தவரை இழுத்துப்பாருங்கள். உங்கள் மனம் மாற்றமடையும். எனவே எப்போதும் நம்மை நம் மூச்சு நல்லவிதமாகவோ, கெட்ட விதமாகவோ கட்டுப்படுத்துகிறது. எனவே நாம் நம் மூச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு ஞாபகப்படுத்த தான் யானை முகம் கொண்ட விநாயகர்.

            அவ்வளவு பெரிய தும்பிக்கையின் மூலமாக மூச்சை இழுக்க நேரமாகுமல்லவா? அது போல நாமும் நம் மூச்சை நிதானமாக நீளமாக இழுக்க வேண்டும். அதன் மூலம் பிராண சக்தி நம் உடல் முழுதும் பரவி உடலும் மனமும் நல்ல நிலையில் இருக்கும். மேலும் .நான் என் கட்டுப்பாட்டிலேயே தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக இவர் தன் கையிலேயே அங்குசமும் வைத்திருப்பார். நம்மில் எத்தனை பேர் நம் மனதை கட்டுப்படுத்த முடிகிறது? So, நம் மூச்சை கட்டுப்படுத்தினால், நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை புரியவைக்க நம் முன்னோர் அமைத்த உருவமே விநாயகர்.(நன்றி: பாலகுமாரன் - முதிர்கன்னி நாவல் )
   
           அடுத்து, மனம் என்பதை ஒரு குரங்குக்கு ஒப்பிடுவார்கள். நாம் நம் கண்ணை மூடி சில நிமிடங்கள் அமர்ந்தாலே, மனக்குரங்கு பல திசைகளிலும் தாவி ஓடும். கண்டதையும் கையிலெடுத்து அக்கு அக்காக பிரித்து போடும். ஆனால் அனுமனின் உருவத்தை நாம் பார்த்தால் பெரும்பாலும் அது தியானம் செய்யும் நிலையிலேயே இருக்கும்.

                இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு குரங்கு, நிலையில்லாமல்  ஆட்டமாட கூடிய ஒரு விலங்கு, தன்னை கட்டுப்படுத்தி, தியானம் செய்கிறது. மனிதனான உன்னால் முடியாதா என நம்மை தூண்டி விட அந்த உருவத்தை கொடுத்திருக்கிறார்கள். மேலும், அனுமனின் தந்தையாக வாயுவை கூறுவதன் காரணம், வாயுவின் கவனிப்பால் குரங்கு உருவில் உள்ள அனுமன் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க முடிகிறது. அதுபோல, மூச்சை கவனித்தால் நாமும் மனம், உடலை கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும் என்பதை உணர்த்துகிறார்கள்.(நன்றி: பாலகுமாரன் - உச்சித்திலகம் நாவல் )

          அதுபோல வராக உருவம். பன்றி எப்படி தனக்கு வேண்டிய உணவாகிய கிழங்கை (நான் அந்த காலத்து பன்றிய சொல்றேங்க)   பூமிக்குள் மறைந்து இருந்தாலும் தன் முயற்சியால் அகழ்ந்து எடுக்கிறதோ அது போல நாமும் நம் மனதின் உள்ளே இருக்கும் கடவுளை, ஞான ஒளியை தேட வேண்டும் என்பதற்காக அந்த உருவத்தையும் கும்பிடுகிறோம்.

             இப்படி நான் படித்த, கேட்ட, பார்த்த விஷயங்கள் மூலமாக எனக்கு சில விளக்கங்கள் கிடைத்தது. அதில் மூச்சுப்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.  நீங்களும் உங்களுக்கு தெரிந்த உருவங்களை உங்களுக்கு கிடைக்கும் விளக்கங்களோடு பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள். கருத்துகளை பகிர்ந்து கொள்வோம். (இதை நாத்திகர் ஆத்திகர் வித்யாசமில்லாமல் பகிரலாம் தான். ஆனா என்ன பண்றது? பெரும்பாலும் ஆரோக்யமான விவாதமாக இருப்பதில்லை. அதனால் தான் சாமி கும்பிடறவங்க மட்டும்னு குறிப்பிட்டேன். யாரேனும் மனம் வருந்தினால் மன்னிக்கவும். உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. இதோட கடவுள் சம்பந்தமான விஷயத்தை நான் எழுதறத விட்டுடலாம்னு இருக்கேன். (முடியல... எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது...))

பின்குறிப்பு: நான் ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக ஆகாத நிலையில் என் பக்கம் 1600 முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்த்த அனைவருக்கும் நன்றி. follower ஆனவங்களுக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். HAPPY! :-)

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

      

Monday, November 8, 2010

ஆத்திகத்திற்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவு

               என் சென்ற பதிவு என் blog ஐ பிரபலபடுத்திய அளவு என் மற்ற பதிவுகள் செய்யவில்லை. நான் எடுத்துக்கொண்ட விஷயம் அவ்வளவு sensitive ஆனது என்பதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன். இந்த அளவு கருத்து யுத்தம் நடக்கும் என நினைக்கவில்லை. நான் அந்த பதிவுக்கு முன் வரை நாம் தனிநபர் தாக்குதல், அரசியல் போன்ற விஷயங்கள்  தவிர எதை வேணுமானாலும் எழுதலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். கடவுள் விஷயமும் கவனமாக கையாள வேண்டிய ஒன்று என்பதை புரிந்துகொண்டேன்.

                  நான் அந்த தலைப்பை எடுத்துக்கொண்டது, இந்துக்கள் தங்கள் வழிபாட்டு முறையில் உள்ள விஷயங்களுக்கு, நான் படித்து, கேட்டு, பார்த்து அறிந்து கொண்ட வேறு விதமான dimension ல் கூறப்பட்ட விளக்கங்களை பகிர்ந்து கொள்ளவே. தெக்கிகாட்டான் அவர்கள் குறிப்பிட்ட 'http://dharumi.weblogs.us/2005/09/15/66' எனும் ப்ளாக் உண்மையிலேயே அவர் எப்படி நாத்திகன் ஆனார் என்பதை பண்பட்ட முறையில் விளக்கியுள்ளார். அவர் அளவு தெளிவு என் பதிவில் இல்லாமல் போகலாம். நான் பதிவுலகிற்கு புதியவள், சிறியவள் அல்லவா... எனவே அந்த குறைக்கு மன்னிக்கவும். ஆனால், எனக்கு பதிலாக பல பதிவுலக அன்பர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

       தெளிவாக எங்கே விளக்கி இருக்கிறார்கள்? குழப்பி இருக்கிறார்கள் என்று நாத்திக நண்பர்கள் சொல்லக்கூடும். நான் நாத்திகர்களை பொதுவாக கண்டுகொள்வதில்லை. இவர்கள் மூடநம்பிக்கையையும் கடவுள் தன்மையையும் குழப்பிக்கொண்டு கடவுள் இல்லை என்பார்கள். மேலும் அவர்களுக்கு பகுத்தறிவுக்கு பதிலாக சந்தேகக்கண் தான் இருக்கும். நான் அடுத்து குறிப்பிடும் ஒரு விஷயம் முகம் சுளிக்க வைக்கலாம். எனவே மன்னியுங்கள்.

             ஒரு நாத்திகனிடம் ஒரு குழந்தையின்  அப்பா இவர்தான் என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்களுக்கு அந்த பெற்றோரின் கல்யாண பத்திரிக்கையை காட்ட வேண்டும், போட்டோ ஆல்பத்தை காட்ட வேண்டும், கல்யாண வீடியோவை காட்ட வேண்டும். இவை இருந்தால் பத்தாது. அவர்களுக்கு இன்னும் விளக்க வேண்டும். டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து காட்டினால் கூட அவர்கள்  நம்ப மாட்டார்கள். டாக்டர், கம்பவுண்டரிடம் காசு கொடுத்து ரிசல்டை மாற்றியதாக சொல்வார்கள். நாத்திகர்களின் கூற்று எப்படிப்பட்டது என்பதற்கு இது உதாரணம். எனவே நான் இவர்களிடம் கடவுள் தன்மையை விளக்க முயற்சிப்பது கிடையாது.

           நான் ஒரு அறை வாங்கினாலோ, முத்தம் வாங்கினாலோ அது எப்படி இருக்கும் என்பதை நான் மட்டுமே உணர்வேன். அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முயற்சிப்பதே அபத்தம். அது போல தான் கடவுள் தன்மையும். 

             கடவுளை அறிய ஒரே ஒரு வழி தான் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அது சரணாகதி தத்துவம். கடவுளை அடையும் வரை நல்லது கெட்டது என்ன  நேர்ந்தாலும் கடவுளை அடையாமல் விடமாட்டேன், எது நடந்தாலும் உன் பொறுப்பு என்பதே அது. கடலை  தாண்ட வேண்டும் என்றால்  முழுவதும் கடக்கும் வரை பொறுமை வேண்டும். பாதி வழியில் திரும்பியவர்களே இங்கு அதிகம். எனவே தான் இது போன்ற விமர்சனங்கள் இந்து மதத்தில் அதிகம்.

கடவுளும் மின்சாரமும் ஒன்றா?
           மின்சாரம் என்பது கண்ணுக்கு தெரிவதில்லை. அதனுடன் எது தொடர்பு கொள்கிறதோ, எது தன்னை மின்சாரத்துடன் தொடர்பு கொள்ளும் விதமாக தன்னை மாற்றிக்கொள்கிறதோ, அது மட்டுமே மின்சாரத்தின் பயனை அடைகிறது. உதாரணமாக மரக்கட்டையாக இருக்கும்போது பயன்பெறாதது நிலக்கரியாக மாறிய பின் பயன் பெறுகிறது. அதனால் தான் கடவுளை பற்றி அறிய பொறுமை முக்கியம் என்றேன்.
     
       நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள். இல்லை என்ற ஒன்றை பற்றி இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒரு அறையில் பூனை இருக்கிறது என்று சொன்னால், சொன்னவர்கள்  தான் பூனையை பிடிக்க வேண்டும். பூனை இல்லை என்பவர்கள் அந்த அறைக்கே போக தேவை இல்லை. நாங்கள், ஆத்திகர்கள், கடவுள் இருக்கிறார் என்பவர்கள், தோண்டி துருவி பார்த்து பிறகு தெரிந்து கொள்கிறோமே.

              ஒரு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும்போது கூட பின்னால் ஒருவர் பிடித்துக்கொண்டிருக்கிறார் என்று நம்புகிறோம். இவ்வளவு நீளமான வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள கடவுள் உதவுகிறார் என்பதில் நம்பிக்கை வைக்ககூடாதா? கடவுள் என்பது ஒரு நம்பிக்கையாகவே இருக்கட்டுமே. . எங்கள் நம்பிக்கையை வீணாக்குவதில் உங்களுக்கு என்ன சந்தோஷம்?

       ஆத்திகர்கள்  முன்பு  குறிப்பிட்ட குழந்தையின் தந்தை குறிப்பிட்டவர்தான் என்கிறோம். எனவே  எல்லோர் மனத்திலும் தெளிவு இருக்கும். நாத்திகர்கள் 'அவர் இல்லை' என்கிறீர்கள். குழப்பம் தான். சந்தேகம் தான். குடி கெட்டது தான்.

      இன்னொரு விஷயம், நான் நாத்திக வாதத்தை எப்போது கேட்டாலும் ஒரு விஷயம் அங்கு உறுதியாக இருக்கும்.  கடவுளை நம்புகிறவர்கள் காயப்படுத்தாமல் எப்படி சொல்வது என்று பேசுவார்கள். கண்டிப்பாக விதி விலக்குகள் உண்டு. ஒத்துக்கொள்கிறேன். அதே போல நாத்திகர்கள் தெளிவாக பேசுவதாக நினைத்துக்கொண்டு மற்றவர்களை காயப்படுத்துவார்கள், இதமான தன்மையுடம் பேசவே மாட்டார்கள். கனிவு இருக்கவே இருக்காது. ஒரே ஒரு விதிவிலக்கு 'தருமி' மட்டுமே.

என் சந்தேகம்:
            அணு தான் உலகில் தோன்றிய அனைத்துக்கும் மூலம் என்னும் கூற்று அறிவியல் கூறியது என்றால் முழு முதல் அணு எப்படி வந்தது? இதை உருவாகியது யார்? அது எப்படி தானே உருவாகி இருக்கும்? இந்த கேள்விக்கு உண்மையிலேயே விடை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன். அறிவியல் அறிந்த பக்குவப்பட்ட நாத்திகவாதி விடை அளித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால், ஆத்திகவாதிகளின் விடை அனைவருக்கும் தெரியும் என்பதால் இதை நாத்திகரிடம் கேட்கிறேன்.

இதற்கு பின்னூட்டம் தருபவர்கள் தனிநபர் தாக்குதல் செய்யாமல், கோபம் இல்லாத தரமான வார்த்தைகளை உபயோகித்தால், நான் மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன். ஏனென்றால், நீங்கள் ஆத்திகரோ நாத்திகரோ, என்னை பொறுத்தவரை நட்பு, சகோ, முக்கியமாக மனிதர். மனிதத்தை கொன்று தன் கருத்தை வளர்ப்பது  முக்கியம் என நினைப்பது  முட்டாள்தனமல்லவா...

பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு முன்கூட்டியே நன்றி..

Friday, November 5, 2010

நிஜமாவே இந்த உருவத்தில் தான் கடவுள் இருப்பாரா?

உருவ வழிபாடு ஏன் வந்தது?
        படைப்பு, நகைச்சுவை, கதை, புதிர், சினிமா, பொது  னு எல்லா Field யும் தொட்டாச்சு. ஆன்மீகத்துலயும் try பண்ணி பாக்கலாமே னு யோசிச்சதுல இந்த மேட்டர் தான் சிக்குச்சு. படிச்சுட்டு  சொல்லுங்க நான் Pass or Fail னு.
 
பெரும்பாலானவர்களுக்கு இந்த சந்தேகம் வரும். கடவுளுடைய உருவம் நிஜமாகவே இப்படி தான் இருக்குமா என்று. நான் படித்த பெரும்பாலான புத்தகங்களும், கடவுளை கண்டவர்களாக சொன்னவர்களும் கூறுவது ஒன்றை தான். கடவுள் ஜோதி வடிவம்,  ஒளி வடிவம், பிரகாசமானவர். செத்துப் பிழைத்தவர்களாக (உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி) எண்ணப்படுபவர்கள் கூறும் அனுபவங்களும் ஒன்று தான். அவர்களுடைய உடலை விட்டு உயிர் பிரிந்து மேலே சென்று ஒரு பேரோளியைத்தான் சந்திப்பதாக கூறி இருக்கிறார்கள்.

                 அப்படி இருக்க, எதற்காக நம் முன்னோர்கள் இப்படி வித விதமான கடவுள் உருவங்களை உருவாக்கினார்கள்? இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் விஷயங்களை, அன்றே கண்டுபிடித்து வைத்த அன்றைய ஞானிகள் இந்த விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டிருக்கவா போகிறார்கள்? இதற்கெல்லாம் என்னால் முடிந்த வரை பதில் தர முயற்சி செய்கிறேன்.

இப்ப என் பெயர் சாதாரணமானவள் னு மட்டும் போட்டா, நீங்க என்னை, என் முகத்தை, என் குணத்தை எப்படி வேணாலும் கற்பனை பண்ணலாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகம் தோன்றலாம். ஆனா, இப்ப நான் வைச்சிருக்கற போட்டோ இருக்கே, அது என்னை பத்தி கொஞ்சமாச்சும் உங்க மனசுல சில அபிப்ராயங்கள ஏற்படுத்தி இருக்கும்.

உதாரணமா,
1 அதில் இருக்கும் முகம் போல நானும் சாந்தமா இருப்பேன்
2 இளமையா இருப்பேன்
3 மிருதுவா, அமைதியான குணமா இருப்பேன்
4 அதில் உபயோகித்திருக்கும் நீல நிறம் ஆழமான தன்மையை குறிப்பதால், என் கருத்துகளும் ஆழமாக இருக்கும்.
5 ரகசியதன்மையையும் கலந்து  இருக்கும்
6 ஒற்றை மரம் காணப்படுவதால் தனிமை விரும்பி
(என் Profile photo வ இப்ப ஒரு தடவை நல்லா பார்த்தீங்க தான :-) ) 
என எப்படி வேணும்னாலும் உங்களுக்கு தோன்றலாம்.

மேற்கூறியதில் ஒன்றாவது நீங்கள் என்னைப்பற்றி நினைத்திருப்பீர்கள்.  நான் இந்த குணங்கள் கொண்டவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் வைத்திருக்கும் படத்தின் மூலம் ஏதாவது விதத்தில் நான் உங்களுக்கு ஒரு message சொல்லி இருப்பேன்.

அதே போல இந்து மத ஞானிகளும் ஒரு இறை உருவத்தை, அதுவும் உருவமல்லாத ஒன்றை குறிப்பிட ஒரு உருவத்தை உருவாக்கினார்கள். எதுவும் இல்லாத ஒன்றை வழிபட வெற்று சுவற்றை நோக்கினால் சுவரில் உள்ள விரிசல் தெரியும். வானத்தை நோக்கினால் மேகம் தெரியும், கடலை நோக்கினால் அலை தெரியும். கண்ணை மூடினால் கண்டதெல்லாம் தெரியும். இப்படி அருவத்தை வழிபட முயற்சித்தால் நம் மனம் உருவத்தை நிர்மானித்துக்கொள்கிறதே என்று  'இதை பார்த்து கற்பனை செய்யும் மனதை குவிச்சுகோங்கடா' னு லிங்க உருவத்தை படைச்சாங்க.

டிபார்ட்மென்ட் ஸ்டோரில் எல்லாம் கிடைத்தாலும் அது அதுக்குன்னு தனி தனி பிரிவு, தனி தனி சூபர்வைசர்கள் இருப்பது போல, நம்ம ஆளுங்களுக்கு தனிதனி கவலைகளுக்கு தனிதனி சாமி தேவைபட்டாங்க. குழந்தை பிறப்புக்கு, ஆரோக்கியத்துக்கு, காசுக்கு, படிப்புக்கு, தைரியத்துக்கு, தொழிலுக்கு, காவலுக்கு, வீட்டுக்கு,  சாவுக்கு,  பாவ புண்ணியத்துக்கு என பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாத்துக்கும் தனி தனி சாமியை உருவாக்கி அவர்கள் கையில் அந்தந்த தேவைக்கேற்ப பொருட்களை சொருவி வச்சுட்டாங்க.

கான்செப்ட் என்னன்னா, நாம எது வேணும்னு நினைக்கறமோ, அதையே நினைச்சுட்டு இருந்தா, அந்த எண்ண அலைகள் மேலே இருக்கக்கூடிய காஸ்மிக் கதிர்களில் பதிவாகி அதை நடக்க வைக்குமாம். அப்படி நமக்கு வேணும்கற விஷயத்தை நாம் கும்பிடும் சாமியின் கைகளில் பார்க்கும்போது நமக்கு அது கிளிக் ஆகி விடுகிறது. ஸோ, நாம் திரும்ப திரும்ப பார்த்து, நம் எண்ண அலைகளை அனுப்ப வைக்கும் வேலை தான் இந்த உருவ வழிபாடு. (இந்த விஷயம் நாத்திகம் போல இருந்தாலும், நான் ஆத்திகவாதி என்பதால் 'அப்படி பதியப்பட்ட விஷயங்களை  நடக்க வைப்பது கடவுள்' என்றுதான் கூறுவேன். எனவே இதற்கு தனியாக பின்னூட்டம் இட வேண்டாம் :-)  )

இந்த மேட்டர் சாமி கைல இருக்கற விஷயங்களுக்கு ஓகே. ஆனால் சாமி முகங்கள் வித விதமான  மிருகங்களையும் சுமந்திருக்கிறதே அது எதற்காக?

நீங்கள் இடும் பின்னூட்டமும், ஓட்டும் தான் என் போன்ற புதிய பதிவர்களுக்கு ஊக்கி. இவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு யோசித்து (நம்புங்கப்பா..) டைப் செய்த இந்த விஷயங்களுக்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை பொறுத்து அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

Tuesday, November 2, 2010

ஒரு தந்தையின் கவிதை

சமீபத்தில் எனக்கு ஒரு மெயிலில் பின்வரும் கவிதை வந்தது. ரத்தப்புற்று நோய் வந்த ஒரு ஜிம்பாப்வே சிறுமியின் தந்தை பாடுவதாக அமைந்திருந்தது. சற்றே பெரிய கவிதை தான். என்னால் முடிந்த அளவு தமிழ் படுத்தி இருக்கிறேன். இது நோயுற்ற சிறுமியின் தந்தை மட்டுமல்ல, இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள்  வேலை பளுவின் காரணமாக தங்கள் குழந்தையிடம் இழந்த விஷயங்களை பற்றி கூறுவதாக அமைகிறது. உங்களாலும் ரசிக்க முடியும் என நினைகிறேன்.

என் குழந்தைக்காக...
இந்த‌ காலையாவது
உன் முகத்தை பார்த்ததும்
புன்னகைக்கப்போகிறேன்

இந்த‌ காலையாவது
நீ எதை அணிய விரும்புகிறாயோ,
அதையே அணிய விட்டு,
'மிக அருமை' என்று புன்னகைக்கப் போகிறேன்

இந்த‌ காலையாவது
லாண்டரிக்கு போகும் வழியில்
உன்னை பார்க்கில் விளையாட விட்டு
கூட்டி வரப்போகிறேன்

இந்த‌ காலையாவது
எல்லா சமையல் பாத்திரங்களையும்
கழுவும் இடத்தில் போட்டுவிட்டு
விடுகதைகளை கண்டுபிடிப்பது எப்படி என
கற்றுத்தரப்போகிறேன்

இந்த மதியமாவது 
தொலைபேசியின் இணைப்பை துண்டித்து,
கணிணியையும் அணைத்துவிட்டு
கொல்லைப்புறத்தில் உன்னுடன் அமர்ந்து
சோப்புக்குமிழியை ஊத‌ப்போகிறேன்

இந்த மதியமாவது 
ஐஸ்வண்டியை பார்த்து அடம்பிடிக்கும் உன்னை,
கத்தி அடக்காமல் உனக்காக ஒரு ஐஸ் வாங்கி கொடுக்கப்போகிறேன்

இந்த மதியமாவது
நீ வளர்ந்ததும் என்ன ஆவாய் என்பது பற்றி 
கவலைபடாமலும், நீ விரும்பும் எதைபற்றியும்
மாற்றுக்கருத்து கூறாமலும் இருக்க போகிறேன்

இந்த மதியமாவது
நான் 'குக்கி' செய்யும்போது
உன்னை எனக்கு உதவ அனுமதிக்கபோகிறேன்

இந்த மதியமாவது
உன்னை 'Mc Donald's' க்கு கூட்டிச்சென்று
இரண்டு பொம்மைகள் வாங்கி தரப்போகிறேன்

இந்த மாலையாவது
உன்னை என் கைக்குள் இறுக்கிக்கொண்டு
நீ எப்படி பிறந்தாய் மற்றும்
நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று
கதையாய்  சொல்லப்போகிறேன்

இந்த மாலையாவது நீ
தண்ணீர் தொட்டியில் குதிப்பதற்கு
கோபப்படாமல் இருக்கப் போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
என்னுடன் உன்னை விழித்திருக்க அனுமதித்து
எல்லா நட்சத்திரங்களையும் எண்ண
அனுமதிக்கப்போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சிகளை துறந்து
உனக்கு அருகில் மணிக்கணக்காக படுத்து
உனக்கு கதகதப்பினை கொடுக்க போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
நீ பிரார்த்தனை செய்யும்போது
உன் முடியினை கோதியவாறு,
உன் போன்ற மிகப்பெரிய பரிசை கொடுத்ததற்காக
கடவுளிடம் நன்றி சொல்லிக்கொடிருக்கப்போகிறேன்

மேலும், இன்று குட்நைட் சொல்லி முத்தமிடும்போது
உன்னை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக,
இன்னும் கொஞ்சம் அதிக நேரம் கட்டிகொண்டிருக்கப்போகிறேன்

இந்த முன்னிரவிலாவது
தங்களது தொலைந்து போன குழந்தைகளை தேடும்
அம்மா அப்பாக்களை பற்றியும்
தங்கள் குழந்தைகளை படுக்கை அறையில் பார்ப்பதற்கு  பதிலாக
சுடுகாடுகளில் போய் பார்க்கும் அம்மா அப்பாக்களை பற்றியும்
மருத்துவமனை அறைகளில் 
நோயால் அவதிப்படும்  தங்கள் குழந்தைகளை 
கவனித்துக்கொண்டிருக்கும் அம்மா அப்பாக்களை பற்றியும்
நினைத்துக் கொண்டிருக்கப்போகிறேன்

அதன் பின் கடவுளிடம் உனக்காக
நன்றி சொல்லி கேட்கப்போகிறேன்
'வேறெதுவும் வேண்டாம்...
இன்னும் ஒரு நாள் மட்டும் கொடு' என்று...

                குழந்தைகள் எவ்வளவு பெரிய பரிசு! அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் நோக்கில்,  நாம் நமக்கு எது தேவையோ அவற்றை அவர்கள் மீது திணிக்கிறோம், நமக்கு எது வேண்டுமோ அதை அவர்களுக்காக சேர்க்கிறோம். முட்டாள் தனமாக இல்லை? உண்மையில் அவர்களின் எதிர்பார்ப்பு அரண்மனை போன்ற வீடு, கார், என பெரிய செலவு வைக்கும் விஷயங்கள் அல்ல. மிக மிக சாதாரணமானவையே.  நீங்கள் உங்கள் குழந்தைகளை நேசித்தால், அவர்களுக்காக ஏதேனும் செய்ய நினைத்தால்  செய்ய வேண்டியது, அவர்களுக்கு பிடித்ததைத்தான். உங்களுக்கு பிடித்ததை அல்ல.
 
இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றி!

Thursday, October 28, 2010

நண்பனின் காதலி சந்தோஷுக்கு என்ன முறை?

இந்த முறை எழுதப்போவது உலக இணைய வரலாற்றில் முதல் முறையாக ஒரு அற்புதமான காதல் கதையை பற்றி.. இதை சினிமாகாரர்கள் படமாக எடுத்தால் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் தான். உண்மையிலேயே நண்பனின் காதலுக்கு மரியாதை கொடுத்த ஒரு அருமையான மனிதனை பற்றி தான் கூறுகிறேன்.

எங்கள் வீட்டினருகில் சந்தோஷ் என்ற பெயரில் ஒரு பையன். அப்பா கிடையாது. அம்மாவின் வளர்ப்பு. மெக்கானிக்காகவோ, என்னவோ வேலைக்கு போய்க்கொண்டிருந்தான். நண்பர்கள் வட்டம் பெரியது. அதில் ஒரு நண்பனுக்கு காதல் நோய் வந்தது இவன் துரதிர்ஷ்டம்.....

(இந்த பாராவில் வரும் 'எல்லா' என்ற வார்த்தைக்கு முன் 'சினிமாவில் வருவதை போல' என்ற வரியை சேர்த்துக்கொள்ளவும் ) எல்லா நண்பர்களை போலவே இவனும் நண்பனின் காதலுக்கு எல்லா உதவியும் செய்து வந்திருக்கிறான். காதல் ஜோடியும் வானில் சிறகடித்து பறந்திருக்கிறது. எல்லாம் நன்றாக போய்கொண்டிருந்த நேரத்தில் எல்லா பெற்றோரையும் போல பெண்ணின் பெற்றோரும் விஷயம் தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு இடத்தில் கல்யாண ஏற்பாடுகளை துரிதமாக செய்து விட்டனர். எல்லா காதலியையும் போல 'கட்டினா அவனைத்தான் கட்டுவேன்' என்று இந்த பெண் உறுதியாக இருக்க, எல்லா காதலனையும் போல பெண்ணை கடத்தி கல்யாணம் பண்ண காதலனும் தயாராக, புதியதோர் திட்டம் தயாரானது.

அதன்படி, நிச்சயதார்த்த நாள் அன்று காலையில் நண்பர்கள் கட்டம் கட்டி பெண்ணை தூக்கி விட்டார்கள். ரெஜிஸ்டர் ஆபிசில் காதலனையும் காதலியையும் கணவன் மனைவியாக ஆக ப்ரமோஷன் கொடுக்க  நண்பர்கள் தயாராக இருந்தார்கள். பெண் வீட்டாரோ 'எவனா இருந்தாலும் வெட்டுவேன்' ரேஞ்சுக்கு இவர்களை தேடிக்கொண்டிருந்தார்கள். ரெஜிஸ்திரார், தாலி, மாலை, கல்யாண பெண் அனைவரும் ரெடி. ஒரே ஒரு சின்ன பிரச்சனை. மாப்பிள்ளை வரவில்லை. நேரமோ நெருங்க, பெண்வீட்டாரோ கொலைவெறியில் தேட,  பெண்ணோ பதற, நண்பர்களுக்கு அந்த நேரத்தில் என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் தான் நம் சந்தோஷின் வாழ்வில் முக்கிய திருப்பம் வந்தது. பெண்வீட்டார் பெண்ணை பிடித்துச் சென்றுவிட்டால் தன் நண்பனின் காதலி வேறொருவருக்கு மனைவி ஆகிவிடும் சூழ்நிலை சந்தோஷின் மனதில் பெரும் புயலை ஏற்படுத்தியது. எனவே நண்பனின் காதலியை அவள் பெற்றோரிடமிருந்து காப்பாற்ற அவன் ஒரு முடிவு எடுத்தான் பாருங்க....
...........
...........
............
............
அவனே அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டான். (இந்த இடத்தில் பாயும் கடலலை, பறக்கும் பறவைகள், ஆடும் தென்னைமரம் எல்லாம் அப்டியே freeze ஆகி நிக்கணும்).
அதன் பின் சந்தோஷும், சந்தோஷின் மனைவியும்  அவன் நண்பர்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். (ஜகஜம் ஜகஜம் ஜகஜகஜம்ஜம் background music) வீட்டில் அம்மாவிடம் விஷயத்தை சொல்லி அம்மாவையும் கூட்டிக்கொண்டு வேறு எங்கோ சென்று விட்டார்கள். அடுத்த நாள் செய்திதாளில் 'பெண்ணை கடத்திய வாலிபர்' என்று செய்தி வேறு. சரி, விஷயம் இதோடு முடிந்தது என்று இருந்தால், நாடோடிகள் போலவே அதன் பின் தான் சில பல ட்விஸ்டுகள்.  என்ன என்று கேட்கிறீர்களா?

சந்தோஷ் இருக்கும் இடம் பற்றிய விவரத்தை எப்படியோ தெரிந்துகொண்டு (எவனோ போட்டு குடுத்துட்டானாம்) பெண் வீட்டார் பின்னாடியே சென்று சந்தோஷை வெளுவெளு என்று வெளுத்து, அன்றே பெண்ணை தங்களுடன் கூட்டி சென்றுவிட்டார்கள். கூடவே, வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் முடிந்தது. சந்தோஷின் நண்பன் அந்த பெண்ணை மறந்துவிட்டு  வெளியூரிலேயே வேலைபார்த்து செட்டில் ஆகி விட்டான். பெண்வீட்டாரின் பின்புலம் பெண்ணை கடத்திய பிறகுதான் தெரிந்திருக்கிறது இவனுக்கு. அதனால் தான் கல்யாணத்தன்று பார்ட்டி எஸ்கேப்.  இப்ப நம்ம சந்தோஷ் என்ன ஆனான்னு தான கேக்கறீங்க? போன வாரம் என் தம்பி பார்த்தாக சொன்னான்.. டீக்கடையில் சந்தோஷ் தன் நண்பர்களுடன் டீசாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு பையன் அவனிடம் சொன்னானாம் 'மச்சி.... அந்த பொண்ணு உன்னையே பாக்குது டா...'
CONCLUSION: சொல்ல மறந்த காதல் கதை :-)

மேற்கூறிய அனைத்து சம்பவங்களும் உண்மை. இந்த காலத்தில் நண்பனின் காதலுக்காக எந்த அளவு பசங்க இறங்கறாங்க என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். இந்த விஷயத்தை கேள்வி பட்டதும் எனக்கு ஒன்றே ஒன்று தான் தோன்றியது. உக்காந்து யோசிப்பாய்ங்களோ....

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றி !

Tuesday, October 26, 2010

கடவுளாக ஜிம் கேரி

நேற்று தான் நான் BRUCE ALMIGHTY படம் பார்த்தேன். ஏற்கனவே வந்த EVAN ALMIGHTY யின் வெற்றியை தொடர்ந்து இப்போது இந்த படம். கான்செப்ட் ஒன்று தான். இந்த உலகம் இப்படி இருக்கே, எனக்கு மட்டும் இப்படி நடக்குதே, நான் மட்டும் கடவுளா இருந்தேன்னு வச்சுக்க.... இப்படி எல்லாம் ஹீரோ கடவுளை திட்ட, கடவுள் 'இருந்து பாரு டா மவனே' னு தன் சக்திகளை கொடுத்து விடுகிறார். அதன் பிறகு நடப்பவை மீதி கதை.
என் hot favorite hero ஜிம் கேரியின் படம் என்பதால் மிகவும் ரசிக்க முடிந்தது. Body language மற்றும் facial expressions க்கு   யார் பெஸ்ட் என கேட்டால் என் ஓட்டு ஜிம் கேரிக்கே. வசனங்களும் ரசிக்க கூடியதாக இருந்தது. ஒரு காட்சியில் ப்ருசின் மனைவி ப்ரூசை பார்த்ததும் "Oh my God!" என்கிறாள். உடனே ப்ரூஸ் "என்னை ப்ரூஸ் என்றே கூப்பிடு டார்லிங்" என்கிறான். இன்னொரு காட்சியில் ஒரு பிச்சைகாரன் "are you blind?" (கண்ணிருந்தால் பிச்சை போடுங்கள் என்ற அர்த்தத்தில் ) எழுதி வைத்திருக்கிறான். உடனே ப்ரூஸ் "No, I am late" என்றவாறு ஓடுகிறான். இன்னும் நிறைய சின்ன சின்ன விஷயங்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை கொஞ்சம் கூட வெட்கமே படாம என்ஜாய் பண்ணி நடித்து எல்லா தரப்பு பார்வையாளர்களையும்  மகிழ்விக்கும் நடிகர்கள் ஹாலிவுட்டில் இரண்டு பேர். ஒன்று ஜிம் கேரி. இரண்டாவது நம்ம மிஸ்டர் பீன் (ரோவன் அட்கின்சன்)

சமீபத்தில் எனக்கு வந்த எஸ் எம் எஸ் இல் மிஸ்டர் பீன் பில்கேட்ஸிடம் மூன்று கேள்விகள் கேட்கிறார்

1 கீபோர்டில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் மாறி மாறி உள்ளன. எப்போது நீங்கள் சரி செய்த வெர்ஷனை வெளியிடுவீர்கள்?
2 ஸ்டார்ட் பட்டன் இருப்பது போல ஏன் ஸ்டாப் பட்டன் இல்லை?
3 நாங்கள் இப்போது எம்எஸ் வோர்ட் (MS Word) கற்றுக்கொண்டு விட்டோம். எப்போது எம் எஸ் செண்டன்ஸ் (MS Sentence) வெளியிடுவீர்கள்?
4 கடைசியாக ஒரு பர்சனல் கேள்வி. உங்கள் பெயரில் gate ஐ வைத்துக்கொண்டு நீங்கள் ஏன் windows ஐ வெளியிட்டீர்கள்?
நல்லா இருக்குல ...

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றி

Friday, October 22, 2010

மானாட மயிலாட சீசன் 5 ஜெயித்தது யார்?

விஷயம் தெரியுமா..... மானாட மயிலாட 5 ன் டைட்டில் வின்னர்கள் பாலாவும் ஸ்வேதாவும்...
இரண்டாம் பரிசு ரெஹ்மான் - ஷிவானி.
மூன்றாம் பரிசு கிரண் - லீலாவதி .
நான்காம் பரிசு (ஆறுதல் பரிசு) பயாஸ் - வர்ஷா.

எனக்கு அசாரின் நடனம் தான் பிடிக்கும். ஆனால் தலைவர் செமி பைனல்ஸில் வெளியேறி விட்டதால் இந்த முறை டைட்டில் வின்னர் பற்றி டென்ஷன் இல்லாமல் நிதானமாக காத்துக்கொண்டிருந்தேன். .

ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் முதல் பரிசு ஜெயித்தவரை அதே நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்து மீண்டும் முதல் பரிசு தருவதை உலக தொலைகாட்சியில் கலைஞர் டிவி தான் செய்கிறது. பாலாவுக்கு ஒரே ஒரு அட்வைஸ்... இனி மானாட மயிலாட சீசன் 6,7,8,9,10 என எதில் கலந்து கொண்டாலும் சண்டைகாட்சி செய்து காண்பிப்பதை குறைத்துக்கொண்டு டான்ஸ் ஆடி காட்டுங்க சார். ஏன்னா, ரெஹ்மான், லீலா, வர்ஷா எல்லோரும் நல்லா ஆடினாலும் உங்களை போல ஸ்டன்ட் செய்யாததால் உங்களுக்கு அடுத்தடுத்த இடங்களுக்கு போய் விட்டார்கள். நீங்கள் ஒரு அருமையான டான்சராக இருந்தாலும் இந்த சமயத்தில் உங்கள் நடனம் பேசப்படவில்லை. இது ஒரு நல்ல டான்சருக்கு அழகல்ல. ஓகே நீங்கள் ஹீரோ. ஆனால் உங்கள் ஹீரோயிசத்தை காட்டும் இடம் இது அல்ல. இது நடன திறமையை காடும் இடம் அல்லவா.  Any way, CONGRATS TO BALA AND SWETHA!  

நண்பர்களே... இதற்காக எனக்கு பாலா ஸ்வேதா சாண்டி பிடிக்காது என அர்த்தம் அல்ல. அருமையான டீம். கஷ்டப்பட்டதன் பலனை அடைந்தார்கள்.வாழ்த்துக்கள்!
 

இப்பவே கண்ணை கட்டுதே...

ஸ்ஸ்ஸ்.... ஊர்ல மெசேஜ் அனுப்பறவன், சாட் பண்றவன், ஈமெயில் அனுப்பறவன், ட்வீட் பண்றவன் எல்லாம் நல்லா தான் இருக்காங்க. ஒரே ஒரு BLOG அ வைச்சுட்டு நான் படற பாடு இருக்கே.....
        
             என்னங்க பண்றது... எல்லாரும் புதிர் போடறாங்களே னு நானும் போட்டா சேலம் ரமேஷ் வந்து என்னங்க விடை வெளிப்படையா தெரியுது னு திட்டறாரு. 'எனக்கு அந்த செட்டிங் எல்லாம் தெரியாதுப்பா' னு அசின் கணக்கா சரண்டர் ஆக வேண்டி இருக்கு. ஏங்க... இதுக்கெல்லாம் guide கிடைக்காதா?


             இந்த நாள்.... உங்க மொபைல் ல reminder போட்டு வைச்சுகோங்க... நானும் உங்கள விட அதிகமா ப்ளாக் எழுதி, என்னை மாதிரி புதுசா வரவங்க 'எங்கே சாதாரணமானவள்  blog... எங்கே சாதாரணமானவள்  blog...' னு தேடி அவங்க ப்ளாக் போட என்னென்ன டிப்ஸ் குடுக்க முடியுமோ அதெல்லாம் குடுக்கல.... (அய்யய்யோ....இதுக்கு மேல எப்படி பில்ட் அப் குடுக்கறது னு தெரியலையே...) நான் சாதாரணமானவள் இல்ல... (உங்க மைன்ட் வாய்ச கேட்ச் பண்ணிட்டேன்... அதேதான்) :-)


               ஓகே .... இப்ப மேட்டருக்கு வரேன்... எப்டிங்க மத்தவங்க கமெண்ட்ஸ மறைக்கவும்  , மத்தவங்கள கமெண்ட் கொடுக்க முடியற மாதிரியும்  செட் பண்றது? மேற்கொண்டு வேறு ஏதேனும் சந்தேகம் வந்தால் எந்த ப்ளோகில் தேடலாம்? புதிய பதிவர்களுக்கும் வழி காட்டுங்களேன்...

Thursday, October 21, 2010

புதிர்... புதிர்... புதிர்....(வலைபதிவை பிரபலமாகும் முயற்சி)

நம்ம வலைபதிவை கொஞ்சம் பிரபலபடுத்த புதிர் போடுவது நல்ல வழியாக தோன்றுகிறது. புது பதிவர்கள் இம்முறையை முயற்சிக்கலாம். இதோ என் முறை.


1 . ஒரு கிளி யானையின் மேல் உட்கார்ந்ததால் யானை செத்துப்போய் விட்டது. இது எப்போது  சாத்தியம் ஆகும்?


2 . ஒரு பூக்கடையின் போர்டில் இப்படி எழுதி இருந்தது.
     சிவப்பு ரோஜா ரூ 10 , வெள்ளை ரோஜா ரூ 8 , மஞ்சள் ரோஜா ரூ 6 என.
ஒரு பொண்ணு வந்து 10 ரூபாய் கொடுத்து ரோஜா வேண்டும் என கேட்டாள். எது வேணும் னு கேட்டு அவள் கேட்ட சிவப்பு ரோஜாவை கடைகாரர் கொடுத்தார். அடுத்து ஒரு பொண்ணு வந்து 10 ரூபாய் கொடுத்து ரோஜா வேண்டும் என கேட்டாள். அதற்கு அவர் எந்த கேள்வியையும் கேட்காமல் அவராகவே ஒரு சிகப்பு ரோஜாவை கொடுத்துவிட்டார். எப்படி?


 3 . COW என்பதை 13 வார்த்தைகளில் எப்படி உச்சரிப்பீர்கள்?


4 . ஆறு ஆப்பிள்களை ஒன்பது பேருக்கு எப்படி சமமாக பகிர்ந்தளிப்பீர்கள்?

எல்லாரையும் போலவே ஒரு நாள் கழித்து இதற்கு விடை சொல்கிறேன் என்று முதலில் சொல்லி இருந்தேன். ஆனால்  என் settings தவறு காரணமாக நண்பர்கள் விடை தர முடியவில்லை. எனவே மேலும் இரண்டு நாட்களுக்கு காலத்தை நீட்டித்து சனிக்கிழமை மாலை விடை பதிவு செய்கிறேன்.
விடை தெரிந்தவர்கள் பதிலளிக்க முயன்று பாருங்கள். விடை தெரியாதவர்கள் எனக்கு நண்பர்கள் ஆகி பாருங்கள் :-)

Tuesday, October 19, 2010

முதலாளியாய் இருப்பது கேவலம். தொழிலாளியாய் இருப்பது பெருமை. எங்கே?

என் நெருங்கிய நண்பர் இன்போசியன் ஆகி விட்டார். புரியவில்லையா? இந்தியாவில் இருப்பவர் இந்தியன். அதுபோல இன்போசிஸ் இல் வேலை செய்பவர் இன்போசியன். தற்போதய கார்பொரேட் உலகம் இன்னும் என்னென்ன வார்த்தைகளை அறிமுகப்படுத்தப்போகிறதோ! நன்று...  என் நண்பர் ஒரு தமிழக மாநகராட்சியிலே சொந்தமாக தொழில் செய்துகொண்டிருந்தவர். நல்ல வருமானம் உள்ள நிலையில், 'இன்போசிஸ்' என்ற மந்திரச்சொல் அவரது குடும்பத்தாரையும், நண்பர்களையும் மயக்கி நண்பரின் தொழிலை இழுத்து மூட வைத்து விட்டு, 'ரிஸ்க்' இல்லாத வேலை என்று இன்போசிஸ் க்குள் நுழைய வைத்து விட்டது. எனக்கு புரியவில்லை. தனிக்காட்டு ராஜாவாக இருப்பதை விட கூட்டத்தில் வேலைகாரனாக இருப்பது எந்த விதத்தில் சிறந்தது? கௌரவமாக சொந்த தொழில் செய்பவருக்கு கிடைக்கும் மரியாதை விட அந்நியனுக்கு அடிமை வேலை பார்ப்பது அவ்வளவு பெருமையான விஷயமா?  இந்தியா வளர்கிறதா? இல்லை அடிமை தொழிலை வளர்க்கிறதா?  ஒண்ணுமே புரியலடா சாமி...

Thursday, October 7, 2010

பிரபுதேவா என்ன செய்வார்?

ஒரு நண்பர் தன் ப்ளாக் இல் எழுதி இருந்தார், இதற்கு முன் சரத்குமார், கமலஹாசன், பிரகாஷ் ராஜ்  மற்றும் பலர் மறுமணம் செய்து கொள்ளவில்லையா என்று. இவர்கள் அனைவரும் முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு பின்பு தான் மறுமணமோ அல்லது இணைந்து வாழ்தலையோ (Living Together) செய்தார்கள். ஆனால் பிரபுதேவா விஷயம் அப்படி அல்ல. முறைப்படி விவாகரத்து செய்யாமல் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறார். மேலும் இந்திய அடையாளங்களில் அவரும் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே அவரது விஷயம் கண்டிப்பாக மீடியாக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது. தங்கள்  உறவை இப்படி வெட்கமில்லாமல் வெளிக்காட்டும் பிரபுதேவா நயன்தாரா ஜோடி , ஒருவேளை ரம்லத் சிம்புவுடன் (ஒரு சகோதரனாக நினைத்து) சுற்றினால் சும்மா இருப்பார்களா? நயன்தாராவை விடுங்கள்... அவருக்கு பிரபு இல்லாவிட்டால் கார்த்திக்.. ஆனால் பிரபுதேவா? தன் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்?

வந்துட்டோம்ல....

இதோ நானும் ப்ளாக் எழுத வந்துட்டேன். ப்ளாக் எழுத சொல்லி குடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி. நாட்டுல நடக்குற ஒவ்வொரு விஷயத்த பத்தி கமெண்ட் குடுக்க நமக்கும் பர பரன்னு இருக்கும். அதை வெளிப்படுத்த வழி தெரியாம இருந்துச்சு. இப்ப தெரிஞ்சுடுச்சு. தாமதமாக வந்தாலும் தரமாக வரவே விரும்புகிறேன். இந்த blog இன் தரத்தை உயர்த்த நீங்களும் வழிகாட்டலாம்.