இப்போதெல்லாம் மொபைல் நெட்வொர்க்குகளுடன் மல்லு கட்டிய பதிவுகளை அதிகமாக பார்க்க முடிகிறது. இதே அனுபவம் எனக்கும் நிகழ்ந்துள்ளது. கேவலம் முப்பது ரூபாய் போவது நம் யாருக்கும் பெரிதில்லை. அதை இந்த மொபைல் கம்பெனிகாரன்கள் சொல்லாமல் கொள்ளாமல் திருடுவது தான் நம் அனைவருக்கும் கடுப்பேற்றும். இல்லையா? வாருங்கள். என் அனுபவத்தையும் கேளுங்கள். (படியுங்கள்னு போடணுமோ?)
கடந்த 6,7 வருடங்களாக ஏர்செல் ப்ரீபெய்டு வாடிக்கையாளரான நான் சில மாதங்களுக்கு முன் இரவு 8 மணிக்கு EC செய்தபின் சில மணி நேரங்களில் 30 ரூபாய் குறைந்தது. அதிர்ச்சி அடைந்து உடனே எல்லாரையும் போல கஸ்டமர் கேரை (121) தொடர்பு கொண்டு புகார் செய்தேன். வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியுடன் இது குறித்த மொக்கை விவரங்கள் நீளுமாதளால் நான் உரையாடல் வடிவில் முடிந்தவரை சுருக்கமாக தருகிறேன். நடுவுல வாங்க, போங்க, மேடம் எல்லாம் போட்டுக்கங்க.
நான் : என் பேரு இது. நம்பர் இது. பிரச்சனை இது.
வா.சே.மை.அ: உங்களுக்கு நிச்சயம் உதவறோம் (தவறாமல் இடம்பெறும் வாக்குறுதி). இது சம்பந்தமா எதுவும் எங்கள் database ல add ஆகல. நான்கு மணி நேரத்துக்கு பிறகு தான் add ஆகும். அதனால காலைல தொடர்பு கொள்ளுங்க. வேறு ஏதேனும் தகவல் தேவைபடுதுங்களா?
நான் : (எது சம்பந்தமா ப்ளாக் போடறதுன்னு சந்தேகம். உதவுவீங்களா?) இப்போதைக்கு எதுவும் இல்லைங்க
வா.சே.மை.அ:ஏர்செல்லை அழைத்தமைக்கு நன்றி. Thank you
(அடுத்த நாள் காலை எழுந்து பல் விலக்கியதும்)
நான் : என் பேரு இது. நம்பர் இது. பிரச்சனை இது. கடைசியா பேசினப்ப இப்படி சொன்னாங்க.
வா.சே.மை.அ: உங்களுக்கு நிச்சயம் உதவறோம். உங்க மொபைல்ல டயலர் ட்யூன் வைச்சிருக்கிங்க. அதனால தான் உங்ககிட்ட பணம் எடுத்திருக்காங்க.
நான் : ஆ.... என்னது? டயலர் ட்யுனா? நான் வைக்கலையே. என்ன பாட்டுங்க?
வா.சே.மை.அ: கொஞ்ச நேரம் லைன்ல வெயிட் பண்ணுங்க
(டோடடடோடடோடடோடடோயிங் அதாங்க... வெயிடிங்ல வர மியூசிக்)
வா.சே.மை.அ: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க மிஸ் _________. செக் பண்ணினதுல '--------' படத்தில இருந்து '-------' பாட்டு வச்சிருக்காங்க... .
நான் : .........................(அதிர்ச்சி. ஏன்னா அது காதலனும் காதலியும் காட்டுக்குள் தனியாக பாடும் இளையராஜா பாட்டு.) தயவு செய்து அந்த பாட்டை உடனடியா கேன்சல் பண்ணுங்க. என் மானமே போயிடும்.
வா.சே.மை.அ: கேன்சல் பண்ண இந்த நம்பருக்கு கூப்பிட்டு சொல்லுங்க. 48 மணி நேரத்துல கேன்சல் ஆயிடும்.
நான் : அதுக்குள்ள என் இமேஜ் போயிடும். நீங்க தயவு செஞ்சு கேன்சல் பண்ணுங்க ப்ளீஸ்....
வா.சே.மை.அ: ஓகே. லைன்ல வெயிட் பண்ணுங்க மேடம்.
(டோடடடோடடோடடோடடோயிங்)
வா.சே.மை.அ: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க மிஸ் _________.அந்த பாட்டை கேன்சல் பண்ணிட்டோம் .
நான் : (உங்களாலேயே பண்ண முடியும்போது எதுக்கு வேற நம்பர் குடுத்தீங்க?) சரி அப்படியே பணத்தையும் refund பண்ணிடுங்களேன்.
வா.சே.மை.அ: அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க. நீங்க டயலர் ட்யூன் வச்சதால அதை கேன்சல் மட்டும் தான் எங்களால பண்ண முடியும்
நான் : நான் டயலர் ட்யூன் வைக்கவே இல்லீங்க. moreover, அந்த நேரம் கம்பெனில இருந்து எந்த போன்காலும் வரவே இல்லைங்க. நீங்களே செக் பண்ணி பாருங்க. அப்படி வந்திருந்த நீங்க எடுத்த பணத்த பத்தி நான் கேக்கவே இல்ல.
வா.சே.மை.அ: ஓகே. லைன்ல வெயிட் பண்ணுங்க மேடம்.
(டோடடடோடடோடடோடடோயிங்)
வா.சே.மை.அ: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க மிஸ் _________. நாங்க செக் பண்ணி பாத்ததுல ஏர்செல்ல இருந்து உங்களுக்கு கால் வரலனு தெரியவருதுங்க..
நான் : அப்ப என் பணத்த திருப்பி add பண்ணிடுங்க
வா.சே.மை.அ: மன்னிக்கணுங்க. அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க.
நான் : (புடுங்க மட்டும் வசதி இருக்கோ?) என்னங்க இப்படி சொல்றீங்க. எடுத்தது நீங்கதான? அப்ப நீங்க தான திருப்பி குடுக்கணும்.
வா.சே.மை.அ: மன்னிக்கணுங்க. அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க.
நான் : (திரும்ப திரும்ப பேசற நீ) என்னங்க இது முட்டாள் தனமா இருக்கு. நான் வைக்காத பாட்டுக்கு நீங்களா பணம் எடுத்துட்டு தரமாட்டேங்கறீங்க?
வா.சே.மை.அ: சரி நான் என் மேலதிகாரிகிட்ட connect பண்ணறேன். அவங்ககிட்ட பேசுங்க.
நான் : பண்ணுங்க.
வா.சே.மை.அ :ஓகே. லைன் ல வெயிட் பண்ணுங்க மேடம்.
(டோடடடோடடோடடோடடோயிங்)
வா.சே.மை.அ 2: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க. உங்களுக்கு என்ன தகவல் தேவைபடுதுங்க?
நான் : (மறுபடியும் முதல்ல இருந்தா? இப்பவே கண்ணை கட்டுதே...) சார்... இது இது இப்படி இப்படி ஆகிபோச்சு. எனக்கு என் பணம் வேணும்
வா.சே.மை.அ 2: மன்னிக்கணுங்க. அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க.
நான் : (இதைதான அந்த அக்காவும் சொன்னாங்க.) அப்படினா நான் 'ட்ராய்' ல கம்ப்ளைன்ட் பண்ணட்டுமா?
வா.சே.மை.அ 2 : (பண்ணிக்கோ) இதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது மேடம். எங்ககிட்ட பணம் refund பண்ற வசதி இல்லைங்க.
நான் : கடைசியா கேக்கறேங்க. என் பணம் திரும்ப வருமா? வராதா?
வா.சே.மை.அ 2: சாரிங்க. வராது.
நான் : (வேறு வழியின்றி) இப்படி எங்ககிட்ட பணம் புடுங்கறதுக்கு வேற எதுனா வேலை பண்ணலாம் (போய் பிச்சை எடுக்கலாம்) நான் போனை வைக்கறேன்.
வா.சே.மை.அ 2:வேறு ஏதாவது தகவல் தேவைபடுதுங்களா?
நான் : (அடேய்... உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா?) தந்த வரைக்கும் போதும்.
வா.சே.மை.அ 2:ஏர்செல்லை அழைத்தமைக்கு ரொம்ப நன்றி.
இந்த உரையாடல் ஒரேமுறையில் நடந்ததை போல போட்டிருக்கிறேன். ஆனால், 24 மணிநேரத்தில் ஆகிவிடும், 48 மணிநேரத்தில் ஆகிவிடும், 96 மணிநேரத்தில் ஆகிவிடும் என்று தள்ளிப்போட்டு டார்ச்சர் செய்து கடைசியில் மேற்கண்ட மேலதிகாரியிடம் முடிவான பதில் வந்தது.
இதன் பின்னும் என் மனம் கொதிப்புடனே இருந்தது. சினிமாவில் வருவது போல இவங்களையெல்லாம் தட்டிகேட்க ஒருத்தன் வரமாட்டானா என்று தோன்றியது.
அதன்பின் 'டிராயில்' புகார் கொடுக்கலாம் என்று நெட்டில் தேடினேன். அங்கு புகார் பண்ணுவதன் வழிமுறைகளும் விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்படி customer care இல் complaint செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இரண்டாவது ஸ்டெப்பாக அந்தந்த ஏரியா nodal officers க்கு மெயில் மூலமாக புகார் அனுப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி நோடல் ஆபிசரின் ஈமெயில் ஐடியை கண்டுபிடித்து புகார் அனுப்பினேன்.
நான் அனுப்பிய இரண்டு மணி நேரங்களில் என் மொபைலுக்கு அவரிடம் இருந்தே கால் வந்தது. 'நீங்கள் பணம் குறைந்ததுமே உடனடியாக வா.சே.மை. அதிகாரியை தொடர்புகொண்டு புகார் அளித்ததால், நீங்கள் டயலர் ட்யுனை வைத்திருக்கமாட்டீர்கள் என்று எங்களுக்கு நம்புகிறோம் (லாஜிக்காம்) . எனவே உங்கள் பணம் 30 ரூபாயும் உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது' என்று கூறினார். அதே போல ஐந்தே நிமிடத்தில் முறையாக என் பணம் add ஆகிவிட்டது ...அதையும் அந்த ஆபீசர் திரும்ப கால் செய்து செக் செய்துகொண்டார். வெறும் புலம்பல் மட்டும் போதவில்லை. பொறுமையாகவும், முறையாகவும் ஸ்டெப் எடுத்ததால் இது சாத்தியப்பட்டது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் ரீசார்ஜ் கார்டுக்கு பின் உள்ள கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால் அநேகமாக காசு வசூலிக்கிறார்கள். மூன்று நிமிடங்களுக்கு ஐம்பது பைசா. ஆனால், எல்லா நெட் வொர்கிலும் பொதுவாக, புகார் செய்யவென்று தனியாக ஒரு எண் உள்ளது. (நெட்டில் தேடிக்கொள்ளுங்கள்.) அங்கு கட்டணம் வசூலிப்பதில்லை. உங்கள் புகாரை அங்கே பதிவு செய்யுங்கள். அது தோல்வியடைந்தால் இரண்டாவதாக மெயில் மூலம் பதிவு செய்யுங்கள். (http://www.trai.gov.in/serviceproviderslist.asp). அதன்பின் ட்ராயை தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். இன்னுமொரு நற்செய்தி. TRAI இனி நேரடியாக ஆன்லைனில் புகார் செய்யும் முறையை அமலுக்கு கொண்டுவரப்போகிறது. அடுத்ததாக SMS மூலமாகவும்.நான் இங்கு பதிவிட்டிருப்பது பிரச்சனை வந்த பிறகு எப்படி சமாளிப்பது என்று. ஆனால், உண்மையில் பிரச்சனையே வரக்கூடாது. அது தான் சிறந்த நிர்வாகம்.
திருந்தாத ஜென்மங்கள்:
இவ்வளவு மல்லுக்கட்டி ஜெயித்த பின்னும் மறுபடியும் ஒருநாள் Internet GPRS ஐ அனுப்பி 1.50 ரூபாயை பிடுங்கினார்கள். அட, இன்னொருநாள் வெறும் 6 ரூபாய்தான் வெச்சிருந்தேங்க. அது இந்த பக்கி பசங்களுக்கு புடிக்கல, அதுல அஞ்சு ரூபாய் எடுத்துகிட்டானுங்க. கஸ்டமர் கேருக்கு கூப்பிட்டு விவரத்த சொல்லி பணத்த கேட்டேன். பழைய பதில் தான் வந்தது. கடுப்புடனும் சலிப்புடனும் ஏர்செல் ஓனர் பேர் கேட்டேன். அவனும் புரிஞ்சுகிட்டு 'அது சம்பந்தமான விவரங்கள் எதுவும் தரமாட்டோம்' னு சொல்லிட்டான். அதனால என்ன? அதான் பதிவு போட்டு மானத்த முடிஞ்சவரை வாங்கறோமே.... கோடிகோடியாக சேர்த்தபின்பும் இந்த திருட்டு பிச்சைக்கார நாய்கள் எதற்காக இப்படி நம்போன்ற பொதுமக்களின் பணத்தை பிடுங்குகிறார்களோ .... இவர்களிடம் இருந்து வரும் dialer tune, miss call alert, friendship zone, love tips போன்றவற்றை நிறுத்த முடியாதா? DO NOT CALL சேவை என்பது இவர்கள் தொல்லையை உள்ளடக்காதா?
நொந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கும், பரிதாபப்பட்டு ஓட்டு போடுபவர்களுக்கும் நன்றிகள்.
.
23 comments:
ட்ராய் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டால்தான் இதெல்லாம் நிற்கும்
// நொந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கும்,
பரிதாபப்பட்டு ஓட்டு போடுபவர்களுக்கும் நன்றிகள். //
அது சரி.. ஆனா பதிவையும் நாங்களே
Submit பண்ணி., ஓட்டும் போடணுமா..?
பதிவு போட்ட உடனே indli-ல சப்மிட்
பண்ணுங்க..
நல்ல பதிவு.. நல்ல தகவல்..
ட்ராய் அதிரடியாய் நடவடிக்கை எல்லாம் எடுக்காது கார்த்திக். ட்ராய் பல காலம் முன்பே தனியார் அலைபேசி நிறுவனங்களால் வாங்கப்பட்டு விட்டது :( எனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி நானும் எழுதுகிறேன்…
TRAI ஆன்லைனில் புகார் வசதி வரும் நாளை நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் எல்.கே... நான் சப்மிட் பண்றதுக்குள்ள நீங்க பார்த்திருப்பீங்க அல்லது இன்று ஞாயிறு என்பதால் இன்ட்லி பிஸியாக இருந்திருக்கும் வெங்கட். எழுதுங்கள் வெங்கட் நாகராஜ். நிறையப்பேர் சொல்றாங்களே என்றாவது யாராவது நடவடிக்கை எடுப்பார்கள பார்க்கலாம். பின்னூட்டத்திற்கு நன்றிகள் நண்பர்களே...
/ நான் சப்மிட் பண்றதுக்குள்ள நீங்க பார்த்திருப்பீங்க //
அந்த வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி
மாதிரியே பேசுறீங்க..
போஸ்ட் போட்டதும் சப்மிட் பண்ணுங்கன்னு
தான் சொன்னேன்.. இன்னிக்கு போஸ்ட் போட்டுட்டு
ரெண்டு நாள் கழிச்சி சப்மிட் பண்ணுவீங்க போல..
For ur Info..
நீங்க போஸ்ட் போட்டது 6.08
நான் சப்மிட் பண்ணினது 7.23
//For ur Info..
நீங்க போஸ்ட் போட்டது 6.08
நான் சப்மிட் பண்ணினது 7.23//
அவங்களே ஏர்டெல்கிட்ட மாட்டிட்டு ஒரு மார்கமான நிலைல பதிவு போட்டு இருக்காங்க....இதுல Statistics வேற பேசிட்டு விடுங்க வெங்கட்
@ சாதாரணமானவள்
அப்படியே அந்த nodal officers mail id, websites details கொடுத்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்
அட வயசான காலத்துல மறதி வர்றது சகஜம் தான வெங்கட். ஆமா... நீங்க விஜயகாந்த் fanஆ? புள்ளி விவரத்துல கலக்கறீங்க. உண்மைல போஸ்ட் போட்டதும் முதல்ல இணைச்சது இன்ட்லி ல தான். அது ஏனோ லேட் ஆகியிருக்கு.
@அருண் பிரசாத்
ஒவ்வொரு மொபைல் கம்பெனி வெப்சைட்லயும் contact details ல நம்ம zone க்கு தனிதனியா அட்ரஸ் குடுத்திருப்பாங்க. அதனால குறிப்பிட்டு சொல்ல முடியல.
No need to call 121, 198 is a toll free number for complaint....
நிஜமாகவே, இது சாதாரணமானவளின் அசாதாரணமான பதிவு..........
கஸ்டமர் கேர் போல பொறுப்பற்ற கபோதிகளை எங்குமே நான் பார்த்ததில்லை. இதில் ஆணும் சரி பெண்ணும் சரி. வெட்டித்தனமான வேலைக்கு சம்பளம் வாங்குபவர்கள்.
இது என் அனுபவம்!!
ஏதோ காரணத்துக்காக AirTel , என் அக்கௌன்ட் ல இருந்த 36 ரூபாய் எடுத்துட்டாங்க... அவங்கட்ட பேசி பேசி , ஒரு வழியா இன்னைக்கு தான் என் பணம் எனக்கு திரும்பி வந்துச்சு....
நீங்க இதை பத்தி நல்லாவே எழுதி இருக்கீங்க!!!
இது உண்மைதான் ! இதனால் நான் aircel சிம்-ஏ தூக்கி எறிஞ்சுட்டேன் சார் ?வேற என்ன செய்ய ?
@ தல தளபதி
ya. you are right.
நன்றி கிருஷ்ணகுமார், மதுரை பாண்டி.
@ ராமலிங்கம்
அங்கு வேலை செய்பவர்களை குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லைங்க. நம்மள மாதிரி எத்தன பேர்கிட்ட திட்டு வாங்கணும். அதுக்குதான் சம்பளம் வாங்கறாங்க போல இருக்கு. management and government இரண்டும் சரியாக இல்லாததால் தான் நம் பணம் இப்படி திருடப்படுகிறது.
@ நரேந்திரன்
சிம்மை தூக்கி எரிந்து விடுவதால் பிரச்சனை முடியறதில்லைங்க. உதாரணமா எனக்கு ஏர்செல்ல பிரச்சனை. மதுரைபாண்டிக்கு ஏர்டெல்ல பிரச்சனை.
உங்களுக்கு காசு திருப்பி கொடுத்ததே அதிசியம் தான் வாழ்த்துகள்
எப்பவும் எல்லாம் சுலபமா எந்த பிரச்சினையும் இல்லாம கெடச்சுட்டா அப்புறம் நம் மக்கள் மந்தமாகி விடுவார்களே.........! எனவே இது போன்ற போராட்டங்களும் சிறு சிறு பிரச்சனைகளும் இருந்தால் வாழ்க்கை சற்று சவாலாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து. என்ன சொல்கிறீர்கள் சாதாரணமானவளே...!
Madam,
Change to BSNL, they are having very good schemes but they are not properly advertising. For example, for Post Paid Connections & Land Line Numbers, they are issuing Free Sim Card and the call between the numbers are free. Also they are charging for seconds; above all, the courtesy of the BSNL staff members are excellent (if the same was before 5 years the fall in numbers have not happened).
Your blog is good - Yes we must fight whenever necessary.
எனக்கு உங்கள் பதிவிலேயே மிக மிக பிடித்தது இந்தப் பதிவு தான். என்ன கொடும 120 கு ரீசார்ஜ் பண்னினேன். 30 ரூபாய எடுதுடங்கா. வந்துசே ஒரு கோவம். உங்களுக்கு ஏற்பட்ட அதே விவாதம் தான் எனக்கும் அவர்களுடன் ஏற்பட்டது. என்ன ஒரு கட்டதுல நான் போதுமடா சாமி என்று முடித்து கொண்டேன்.
//போராட்டங்களும் சிறு சிறு பிரச்சனைகளும் இருந்தால் வாழ்க்கை சற்று சவாலாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.//
உண்மைதான் நண்பரே.. ஆனால் சுரண்டலும், ஏமாற்றுதலும் நடந்து, நம் உரிமையையும் நிலைநாட்ட முடியாதபோது விரக்தியும் வெறுப்பும் ஏற்படுகிறதே... என்ன செய்ய?
@ Rathnavel
ஆரம்பத்தில் BSNL இல் டவர் பிரச்சனை இருந்தது. அதனால்தான் பெரும்பாலானோர் airtel, aircel வாங்கினார்கள். இல்லாவிட்டால் BSNL கொடிகட்டி பரந்திருக்கும், எங்களுக்கும் பிரச்சனை இல்லாமல் இருந்திருக்கும்.
@கவி
//எனக்கு உங்கள் பதிவிலேயே மிக மிக பிடித்தது இந்தப் பதிவு தான்.//
அதாவது உபயோகமாக இருந்தது இது ஒன்றுதான் அப்படிங்கறீங்களா?
இந்த மாதிரி அநியாயமா காசு புடுங்கும்போது வயிறு எரியுது. அவங்களே சப்ஸ்க்ரைப் பண்ணிக்கிட்டு காசையும் டெபிட் பண்ணிர்றாங்க. ஏர்டெல்லயும் இந்தத் தொல்லை தாங்க முடியல. அப்பபோ செக் பண்ணிகிட்டே இருக்கனும். எந்தெந்த சேவை(?) எல்லாம் ஆக்டிவா இருக்குனு. பார்த்து ஸ்டாப் பண்ணலனா அப்படியே பணம் போய்கிட்டே இருக்கும். இந்தக் கமெண்ட் டைப் பண்ணிகிட்டே சந்தேகத்துல என் மொபைல்ல செக் பண்ணி பார்த்ததுல...அட கொடுமையே Airtel-Bhakti Special-னு ஏதோ ஒரு சேவை ஆக்டிவ்வா இருக்கு. ஸ்டாப் பண்ணிட்டு மிச்ச கமெண்ட்ட டைப் பண்றேன்...sssbbbaaaa
@ தளதளபதி, நீங்கள் சொன்னபடி எண்ணை மாற்றிவிட்டேன்.
@அருண் பிரசாத்
நீங்கள் குறிப்பிட்டபடி மேலே பதிவில் யாரை தொடர்பு கொள்வது என்ற விவரம் அடங்கிய இணைய முகவரி கொடுத்துள்ளேன்.
@ சுபத்ரா
இப்ப மொபைல் போர்டபிளிட்டி வந்ததும் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுருக்காங்க.
என்னையும் அவ்வப்போது நோகடிக்கிறது, Tata ..
எல்லாரும் அனுபவிக்கிற உண்மைய சொல்லிருக்கீங்க
Post a Comment