Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, April 25, 2011

நான் தான் சொன்னேன்ல...

என்னடா இவ்ளோ நாளா பதிவே காணோம்னு பார்த்தீங்களா? நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல... ஸ்ரீரங்கம் ரங்கநாயகி சன்னதில, தல விருட்சம் பக்கத்துல ஒரு சுலோகம் இருக்கும். அந்த சுலோகத்த படிச்சா, செல்வம் சேரும்னு எல்லாம் இந்த பதிவுல சொன்னேன்ல... இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு...

நான் அதை படிச்சுட்டு வந்ததும், இவ்ளோ நாளா ஆர்டர் தராத பார்ட்டி, தேடி வந்து ஆர்டர் குடுத்துட்டு போய்ட்டாங்க. அதுவும் எப்படி? இவ்வளவு நாள் நான் போட்டோ ஆல்பம் டிசைனிங்க்கு வாங்கின சார்ஜ் ரொம்ப கம்மி, மத்தவங்க எல்லாம் என்போல ஒண்ணரை மடங்கு அதிகமா வாங்கறாங்கனு சொல்லி, super charge கொடுத்திருக்காங்க.

அதுக்காக ஒன்பதரை மணிக்கு முன்னால் சூரியனை பார்த்திராத நான், இந்த பத்து நாட்களாக இதற்காகவே ஆறு, ஏழு மணிக்கெல்லாம் எழுந்து 'Hard work' எல்லாம் பண்ணி (சிரிக்காதீங்க...) வொர்க்க முடிச்சு குடுத்தேன். தலைவர் பிரிண்ட் போட்ட இடம், ஆல்பம் ஒட்டின இடம், அவருடைய கஸ்டமர் என எல்லா இடங்களிலும் 'சூப்பரா இருக்குனு'  ஒரே பாராட்டு மழையாம்.... (ஏ.... எல்லாரும் பாத்துக்கோங்க... நானும் டிசைனர் தான்... நானும் டிசைனர் தான்...)

ஸோ.... இந்த காரணத்துக்காகதான் ஒரு பத்து பதினஞ்சு நாளா பதிவு போட முடியல.  அடுத்ததுக்கும் இதே மாதிரி நாள் ஆகும்னு நெனைக்கறேன். ஏன்னா,  நமக்கு அடுத்த ஆர்டரும் கிடச்சுடுச்சுல்ல மக்கா.... 

OK... Jokes apart.... என்னதான் நான் ஏற்கனவே Hardworker ஆ இருந்தும், ஏற்கனவே நல்ல designer ஆ இருந்தும், (அட... நம்புங்கப்பா...) இந்த குறிப்பிட்ட ஆளிடம் ஆர்டர் கிடைக்காமல் இருந்தது. இப்ப கிடைச்சதுக்கும், சார்ஜ் அதிகமாக்கி வருமானம் உயர்ந்ததற்க்கும் ஒரே காரணமா நான் நினைப்பது அந்த மந்திரங்கள் தான். ஸோ என்னால முடிஞ்ச காரியமா இந்த பதிவை நான் ரங்கநாயகிக்கு டெடிகேட் செய்யறேன்... (பதிவுலகில பதிவ டெடிகேட் செஞ்ச முதல் ஆள் நானாதான் இருக்கும்னு நினைக்கறேன். ரைட்டா? )

எப்பவுமே நான் பதிவு போட்டா, அது யாராவது ஒருத்தருக்காவது ஏதாவது ஒரு விஷயமாவது தெரிஞ்சுக்க உபயோகமா இருக்கணும்னு நினைப்பேன். அதனால இந்த பதிவுல என் மெசேஜ் - ஸ்ரீ ரங்கம் போனீங்கன்னா, அந்த மந்திரங்களை படிச்சுட்டு வாங்க...

7 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்லாச் சொன்னீங்க போங்க...

சி.பி.செந்தில்குமார் said...

டிசைனரு.? ஹி ஹி

எல் கே said...

நல்ல விஷயம்தான் . வாழ்த்துக்கள். மென்மேலும் உயருங்கள்

மாணவன் said...

//எப்பவுமே நான் பதிவு போட்டா, அது யாராவது ஒருத்தருக்காவது ஏதாவது ஒரு விஷயமாவது தெரிஞ்சுக்க உபயோகமா இருக்கணும்னு நினைப்பேன். அதனால இந்த பதிவுல என் மெசேஜ் - ஸ்ரீ ரங்கம் போனீங்கன்னா, அந்த மந்திரங்களை படிச்சுட்டு வாங்க...//

:))

தொடரட்டும் உங்கள் மகத்தான பணி....

ரஹீம் கஸ்ஸாலி said...

ஓகே..ஓகே

Anonymous said...

Hi, heart touching movie.
I went to Sri Renganathaswamy on 22/04/2011. It was very nice and peaceful. After I went there I’m feeling better and getting peaceful life……….God is great so be kind to everyone… Thank you.
P.Dhanagopal
Singapore

Anonymous said...

டிசைனர்னா என்னங்க?