Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Saturday, May 21, 2011

'டிட்டு' போக 'டன்' வந்தான் - திகில் அனுபவம்

 
நேற்றிரவு நள்ளிரவில் விட்டு விட்டு  பவர் கட்... அம்மா, அப்பா மற்றும் நான் நல்ல உறக்கத்தில் இருந்தோம். சுமார் ஒரு  மணியளவில் கதவுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது. பிளாஸ்டிக் பேப்பரை கசக்குவது போல, இங்கும் அங்கும் இழுத்து செல்வது போல, என்று கலவையான சப்தங்கள். அப்பா சாப்ட் நேச்சர் ஆள். அம்மா ஓவர் பில்ட்அப் ஆள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வெளியே யாராவது ஆட்கள் இருப்பார்களோ என்று பயம் வந்தது...என்னை எழுப்பி விஷயத்தை சொன்னார்கள். என் ஸ்கூட்டியை மூடி வைத்திருந்த கவருக்குள் எலி புகுந்திருக்கும் அம்மா என்றேன். என் அப்பா ஜன்னலை திறந்து பார்த்துட்டு, 'கவர் அப்படியே தான் இருக்கு' என்றார். அதுக்கப்பறம் எனக்கும் பயம் வந்துடுச்சு. வெளி லைட்டை  போட்டா, சத்தம் இல்லை. off பண்ணினா உடனே சத்தம் வருது. ஜன்னல் வழியா வெளியே பார்த்தா யாரும் தெரியல. 

சரி, இரண்டு வீடு தள்ளி  இருக்கும் கஸினுக்கு போன் செய்தால் மொபைல் சுவிட்ச் ஆப். மூன்றாவது வீட்டில் இருக்கும் இன்னொரு அத்தைக்கு போன் செய்து கஸினை கூப்பிட சொன்னால், அத்தையும் அவர் வீட்டு கதவை யாரோ தட்டியது போல இருந்ததால் ஒரு மணி நேரமா தூங்காம பயத்தோட இருப்பதாக சொன்னார். வேறு வழி என்ன என்று யோசித்த போது, பக்கத்து வீட்டு அண்ணனின் மொபைல் நம்பரை என்றைக்கோ குறித்து வைத்தது நினைவுக்கு வந்தது. நடுநிசி இரண்டு மணிக்கு அந்த அண்ணனுக்கு போன் செய்தேன். 'அண்ணா, யாரோ எங்க வீட்டு காம்பௌண்டுக்குள் குதித்திருப்பது போல இருக்கு. நீங்க கொஞ்சம் வந்து வெளில இருந்து பாருங்கண்ணா. கதவை திறக்க பயமா இருக்கு' என்றேன். அந்த அண்ணனும் வந்து பார்த்துட்டு, 'யாரும் இல்லமா. வெளில வாங்க' என்றார்.

அதன்பின் கதவை திறந்து அப்பா வெளி கேட்டை திறப்பதற்காக அப்பா சாவியுடன் செல்ல,  பின்னாடியே நானும் அம்மாவும் வெளியே வந்தோம். திடீரென அம்மா, 'ஐயோ இதென்ன மூட்டை' என்று அலறினார். பார்த்தால் மிக சிறிய மூட்டை, உள்ளே ஏதோ ஒரு உயிருள்ள அல்லது உயிரிருந்த விஷயம் போல ஒன்று. 'போச்சு... யாரோ ஏதோ குழந்தைய கொன்னு நம்ம காம்பௌண்டுக்குள் தூக்கி போட்டுட்டு போய்ட்டானுங்க போல' ன்னு நான் பயந்து நடுங்க, அம்மா அது ஏதோ நாய் போல இருக்கு என்றார். உடனே, வெளில இருக்கற அப்பாவ பத்தி கவலை படாம, நானும் அம்மாவும் உள்ள வந்து தாள் போட்டுகிட்டோம் (ஸாரிப்பா). அதற்குள் அப்பா கேட்டை திறந்து விட்டதால் அந்த அண்ணன் உள்ளே வந்து மூட்டையை குச்சியால் தள்ளி திறக்க, நம்பவே முடியவில்லை..... உள்ளே ஐந்தடிக்கும் மேலே உயரமுள்ள, ஒரு இருபது வயதுக்கு மேலே உள்ள ஒரு ஆள்... அந்த காட்சியை நீங்க நேர்ல பார்த்திருந்திருக்கணும்... அந்த மூட்டை அவ்ளோ சிறுசு. அதுக்குள்ள அவ்ளோ உயர ஆள் இருப்பதை யாராலும் அனுமானிக்கவே முடியாது. அசையாம அவ்ளோ குறுகி படுத்திருந்தான்.
அதுக்கப்பறம்  அந்த அண்ணன் 'இவனா' என்று பழக்கப்பட்ட தொனியில் சொன்னார். பக்கத்து ஏரியா பையனாம். ஸ்பிரிட்டை போதைக்காக குடித்து குடித்து மூளை செயல் இழந்து விட்டதாகவும், நேற்று மதியம் தான் அவனை அவன் அப்பா எங்க ரோட்ல போட்டுட்டு போனதாகவும் சொன்னார். அவனுக்கு நடக்க வேறு வரவில்லை. முடவன். ஊர்ந்து ஊர்ந்து தான் வெளியேறினான். அவனிடம் அப்பாவும் அண்ணனும் 'எப்படி உள்ள வந்த? கேட் பூட்டி இருக்குல்ல?' என்றெல்லாம் கேட்டுகொண்டே வெளியேற்றினார்கள். அதற்கு அவன் இன்னொரு ஆள் தன்னை தூக்கி உள்ளே போட்டதாக கூற, மீண்டும் எங்களுக்கு பயம் வந்துவிட்டது. அந்த இன்னொரு ஆள் உள்ளேயே இருந்தால் என்ன செய்வது என்று அத்தை வீட்டுபக்கமும் தேட, கஸினை எழுப்பி போனை சுவிட்ச் ஆப் செய்ததற்கு திட்டி, விஷயத்தை கூற, எல்லா இடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. எங்கும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டதும், இவன் போய்விட்டானா என்று பார்க்க வெளியே சென்று பார்த்தால் ஆளை காணோம். நன்கு உற்றுபார்த்தபோது அவன் சாக்கடைக்குள் இறங்கி அதன் வழியே நகர்ந்து செல்வது தெரிந்தது. (கவனிக்க. இனி திருடனை தேடுபவர்கள் சாக்கடை வழிகளிலும் தேடவும்).  மீண்டும் அவனிடம் சென்று விசாரிக்க, அவன் திருடுவதற்காக வந்திருப்பான் என்பதை விட புத்தி சுவாதீனத்தால் இப்படி தொந்தரவு செய்திருப்பான் என்று தோன்றியதால் விட்டு விட்டோம். அதன் பின் எங்கே தூக்கம் வருவது? எப்படியோ மூணரை மணிக்கு மேல் தூங்கினோம். மீண்டும் விடியற்காலை பத்தேமுக்காலுக்கு தான் நான் எழுந்தேன். அதற்கு பின் அம்மா சொன்னார் அவன் இன்னும் இரண்டு வீடுகளுக்கு சென்று, அங்கு காயவைத்திருந்த துணிகளை போட்டுகொண்டு, காலைகடனெல்லாம் கழித்து, அசிங்கம் செய்து, அங்கிருந்த திண்ணையில் தூங்கி, விடிந்ததும் அடி வாங்கி, ஒரு கடை வாசலில் படுத்துகொண்டான் என்று. நான் சென்று பார்த்தபோது ஒரு சாக்கு மூட்டைக்குள் தன்னை மடித்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான்... அவனிடம் திருட்டுத்தனமும் புத்திசுவாதீனமும் ஒருங்கே இருந்ததால் அவனை போலீசிடமும் பிடித்து கொடுக்க முடியவில்லை, விரட்டி அடிக்கவும் மனம் கேட்கவில்லை. எனவே மனவளர்ச்சி குன்றியோர் மையத்துக்கு போன் பண்ணி அனுப்பி வச்சாச்சு. 
சரி... இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு தான கேக்கறீங்க? அவனே ஒரு திருடன். திருட்டும் ஒரு மோசமான தொழில். அவனுக்கும், திருட்டுக்கும் எதுக்கு 'திரு'ன்னு போட்டு மரியாதை தரணும். அதான்....

10 comments:

தினேஷ்குமார் said...

அப்பா ஒரு த்ரில் ஸ்டோரி பார்த்த மாதிரி இருக்கு ...

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க எழுதுன ஸ்பீடை பார்த்தாலே புரியுது எவ்வளவு பயந்து போயிருகீங்கன்னு ஹா ஹா ஹா..

எல் கே said...

ஹஹஹா செம திகில்தான்

MANO நாஞ்சில் மனோ said...

நான் ஒரு ஐடியா சொல்லவா..?? இப்பிடி பாதுகாப்பு இல்லைனா பேசாம ஒரு நாய் வாங்கி வளருங்கள். பகலில் கட்டி போட்டு விட்டு ராத்திரி அவுத்து விட்டுருங்க, பகல்ல மறுபடியும் கட்டி போட்டுருங்க. செம பாதுகாப்பு அது, ஒரு பய உங்க வீட்டு பக்கம் வரமாட்டான் ஓகே...

Speed Master said...

வழக்கம் போல் பல்பு வாங்கினாலும் அந்த நபரை ந்ல்ல இடத்தில் சேர்ததற்கு நன்றிகள்

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ஒரு காதல் கதை
http://speedsays.blogspot.com/2011/05/love-story.html

சாதாரணமானவள் said...

@ தினேஷ்
ஆமாங்க... நேர்ல இன்னும் செம த்ரில்லிங்

சாதாரணமானவள் said...

@ மனோ
\\நீங்க எழுதுன ஸ்பீடை பார்த்தாலே புரியுது எவ்வளவு பயந்து போயிருகீங்கன்னு ஹா ஹா ஹா..\\
பயமே என்னை பார்த்தா பயப்படும். (அவ்வ்வ்வவ்வ்வ் )
\\இப்பிடி பாதுகாப்பு இல்லைனா பேசாம ஒரு நாய் வாங்கி வளருங்கள்.\\
எங்க வீட்ல என்னை வளர்க்கறதே பெருசு சகோ...

சாதாரணமானவள் said...

@ எல்.கே
ஆமாங்க... ஆனா த்ரில் கதைக்கு சிரிக்கறீங்களே ...
@ speed master
நமக்கும் நல்ல மனசுதாங்க சார்

Anonymous said...

விடியற்காலை பத்தேமுக்காலுக்கு தான் நான் எழுந்தேன்......................Ungalurla 10.45am than விடியற்காலை is it?.............விடியற்காலை should be before Sun rise...............Good wroteas well... your real inceident.
By
P.Dhanagopal
Singapore

சுபத்ரா said...

பாவம் அந்தப் பையன்... :(