Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, June 26, 2011

ஸ்கூல் நாட்கள்....

ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு....

ஞாபகம் இருக்கா? நாம ஸ்கூல் போன நாட்கள்....

இதே ஜூன் மாதங்கள்ல மறுபடி ஸ்கூல் வேன், ஆட்டோ, பஸ் வந்துடும்னு அவசர அவசரமா கிளம்ப ஆரம்பிப்போம்.
நம்ம ப்ரெண்டும் நம்ம கிளாஸ்கே வரணும்னு வேண்டிக்குவோம்.

ஹைட் பிரகாரம் உட்கார வைக்கும்போது, நம்ம பிரெண்ட் பக்கத்துல நின்னு, ரெண்டு பேர் உயரத்தையும் சமமா காட்டுவோம். 

போய் நம்ம சீட்ல உட்கார்ந்ததும் மே மாத விடுமுறையில போன படத்தை பத்தி, ஊரை பத்தி கதையடிப்போம். 

புது டைம் டேபிள் ல games period எப்ப வருதுன்னு தேடுவோம். 

அந்த பீரியட எந்த டீச்சராவது எடுத்துகிட்டா கோபப்படுவோம்.

புது மிஸ் கிட்ட நல்ல பேர் வாங்க ட்ரை பண்ணுவோம்.

டீச்சர் புக் கேட்கும்போது நம்ம புத்தகத்த வேகமா முண்டியடிச்சுட்டுd குடுப்போம்.
 

பேசறவங்களோட பேர் எழுதற ஆளுக்கு தெரியாம, வாய அசைக்காம பேசிப்போம். 

பிரெண்ட்சுக்குள்ள சண்டை வந்தா டெஸ்க்ல கோடு போட்டு இடம் பிரிப்போம்.

ஒவ்வொரு டீச்சருக்கும் ஒவ்வொரு பேர் அல்லது செய்கை secret symbol ஆ இருக்கும். 

டீச்சருக்கு தெரியாம பேசிக்கறது, சிரிக்கறது, முக்கியமா.... வந்த சிரிப்பை அடக்கறதுனு பல விஷயம் நடக்கும். 

மத்தியான சாப்பாட்ட ஷேர் பண்ணிப்போம். 

பிரெண்ட்ஸ் செட் பெருசாக ஆக, நாம லஞ்ச் சாப்பிடற இடமும் கிளாஸ் ரூம், சைக்கிள் ஸ்டான்ட், கிரௌண்ட் னு பெருசாகிட்டே  போகும். 

லஞ்ச் ப்ரேக்ல விளையாட்டு, சிலருடைய படிப்ஸ் சீன்... 

மத்தியான பிரீயட்ல வர தூக்கத்தை கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணுவோம்.
சாயந்தரம் ஸ்கூல் விட்டதும் யார் முதல்ல வெளில போறதுன்னு சின்ன கிளாஸ் ல போட்டி போடுவோம்.

பெரிய கிளாஸ் வந்த பிறகு ஸ்கூல் விட்டு வெளில கடைசி செட்டா கதைபேசிட்டு போவோம். 

மன்த்லி டெஸ்ட்ல வாங்கின மார்க்க கம்பேர் பண்ணிப்போம். 

அடுத்த மாசம் எப்படியும் அடுத்தவங்கள விட முந்தணும்னு நெனச்சுக்குவோம்.

ஸ்கூல் போற நேரத்துலதான்  ப்ரோக்ரஸ்  ரிப்போர்ட்ல அப்பாகிட்ட காட்டி கையெழுத்து வாங்குவோம்.

ஞாயிற்றுகிழமைக்கு அப்பறம் ஞாயிற்றுகிழமையே வரணும்னு வேண்டிப்போம்.

திங்கள்கிழமை காலைல தான் முக்கியமான ஹோம்வொர்க்க பண்ணுவோம்.

குரூப் போட்டோல பெஸ்ட் பிரெண்டு பக்கத்துல தான் நிப்போம். காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு னு பக்தியோட போய் பரீட்சை எழுதுவோம்.

எப்படா லீவ் வரும்னு மட்டும் இல்லாம எத்தனை நாள் லீவ் அப்படிங்கறதும் முக்கியமா இருக்கும். 


அப்பறம் மறுபடி பழையபடி.....

ஹ்ம்மம்ம்ம்ம் .....
 

இந்த பதிவை என் எல்லா ஸ்கூல் பிரெண்ட்சுக்கும்... பள்ளி வாழ்க்கையை நேசிப்பவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

இந்த பதிவுக்கான கேள்வி:  
சிம் கார்டுக்கு தமிழ்ல என்ன?

5 comments:

'பரிவை' சே.குமார் said...

Pinnokki poga vaiththu vitteergal.
vazhththukkal.

வெங்கட் நாகராஜ் said...

சுகமான பள்ளி நினைவுகள்.... என் நினைவுகளையும் கிளறி விட்டது....

சாதாரணமானவள் said...

@சே குமார், வெங்கட் நாகராஜ்
எப்பவுமே எல்லாருக்கும் பிடிச்ச காலகட்டங்கள் தானே அவை

சாதாரணமானவள் said...

சிம் கார்டுக்கு தமிழ்ல என்ன?
இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சவங்க ரொம்ப ரொம்ப குறைவுன்னு தெரியும். நானே பதில் சொல்லிடறேன்.
விடை: வாடிக்கையாளர் அடையாள தொகுப்பு தகடு.

kavitha said...

ம்ம்ம்.... அப்படியே என் பள்ளி கால நினைவை வரிகளில் வடித்து தந்துவிட்டிர்கள்.
உங்களோட ஒவ்வொரு பதிவிலும் நான் காண்பது, லைவ் ஆ இருக்கு எல்லாமே.