உங்களுக்காகத்தான் இந்த பதிவு...

68 வருஷத்துக்கு முன்னாடி இந்த காந்தி தாத்தா பண்ணின தப்பு சுதந்திரம் வாங்கி குடுத்தது. வெள்ளைகாரங்க ஆட்சில எல்லாம் ஒழுங்கா நடந்துட்டு இருந்துது. நம்ம ஆளுங்க பெருசா கழட்டுற மாதிரி 'சுதந்திரம் குடு சுதந்திரம் குடு' னு வாங்கி எல்லாத்தையும் வீணாக்கிட்டாங்க. இப்ப மட்டும் நாம என்னமோ அடிமை இல்லாத மாதிரி சுதந்திர தினம் கொண்டாடுறோம். இப்பவும் நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு அடிமையாதான இருக்கோம். எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, இன்னும் என்னெல்லாம் நாட்டை கெடுக்க முடியுமோ அத்தனையும் நடக்குது. இதுக்கு பேசாம ஆங்கிலேயருக்கே அடிமையாவே இருந்திருக்கலாம். விதவிதமா வசதிகளாவது கிடைச்சிருக்கும்
68 வருஷத்துக்கு முன்னாடி இந்த காந்தி தாத்தா பண்ணின தப்பு சுதந்திரம் வாங்கி குடுத்தது. வெள்ளைகாரங்க ஆட்சில எல்லாம் ஒழுங்கா நடந்துட்டு இருந்துது. நம்ம ஆளுங்க பெருசா கழட்டுற மாதிரி 'சுதந்திரம் குடு சுதந்திரம் குடு' னு வாங்கி எல்லாத்தையும் வீணாக்கிட்டாங்க. இப்ப மட்டும் நாம என்னமோ அடிமை இல்லாத மாதிரி சுதந்திர தினம் கொண்டாடுறோம். இப்பவும் நம்ம நாட்டு அரசியல்வாதிகளுக்கு அடிமையாதான இருக்கோம். எங்க பார்த்தாலும் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, இன்னும் என்னெல்லாம் நாட்டை கெடுக்க முடியுமோ அத்தனையும் நடக்குது. இதுக்கு பேசாம ஆங்கிலேயருக்கே அடிமையாவே இருந்திருக்கலாம். விதவிதமா வசதிகளாவது கிடைச்சிருக்கும்
இப்படி பேசுபவர்களிடம் பொதுவான வெறும் ஐந்து கேள்விகள். இந்த கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று பதிலளித்தால் போதுமானது. பதில்களை உங்கள் மனசாட்சி படி உங்களுக்குள் சொல்லிக்கொண்டால் போதும்
2. தியேட்டரில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நான் க்யூ முறையையே பின்பற்றுகிறேன். உதா: ரேஷன் கடை, கோவில், இன்ன பிற இடங்கள்.
3. இதுவரை அரசு அலுவலகங்களில் நான் லஞ்சம் கொடுக்க மறுத்து, எவ்வளவு நாள் ஆனாலும், நேர்மையான வழிமுறையிலேயே எனக்கு தேவையான ஆவணங்களை பெற்றிருக்கிறேன்.
4. கல்வியறிவு இல்லாதவர் யாரேனும் எனக்கு தெரிந்தவராக இருந்தால், அவருக்கு என்னால் முடிந்தவரை குறைந்தபட்சம் உயிரெழுத்து மெய்யெழுத்து மட்டுமாவது கற்றுக்கொடுத்திருக்கிறேன்.
5. என் வீட்டு குப்பையை பக்கத்து வீட்டுக்கு தள்ளி என் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போலல்லாமல், நிஜமாகவே என் வீட்டை போலவே என் தெருவையும் என்னால் முடிந்த அளவு சுத்தமாக வைத்திருக்கிறேன். உதா: தெரு குண்டும் குழியுமாக இருந்தால், அதை என் போன்ற அக்கறையாளர்களுடன் சேர்ந்தோ தனியாகவோ அடைக்கிறேன். குறைந்தபட்சம் முனிசிபாலிடியில் புகாராவது செய்கிறேன்.
ஆம் என்று பதில் சொன்னவர்கள் மேற்கொண்டு புலம்பலாம். அதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. (இவர்கள் புலம்புவதில்லை என்பது என் கணிப்பு)
ஒருவேளை மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள்
- signal பார்த்துக்கிட்டு wait பண்ணிட்டு இருந்தா, எனக்கு நான் போற வேலை முடிஞ்ச மாதிரிதான். Moreover, நான் வெயிட் பண்ணி நின்னுட்டு இருந்தா, எனக்கு பின்னாடி இருக்கறவனுங்க போற வேகத்துல என்னை அடிச்சுபோட்டு போய்ட்டே இருப்பானுங்க.
- ஐயோ... க்யுவா ? அது எனக்கு அலர்ஜி. அதனாலதான் நான் எங்க போனாலும் சிறப்பு டிக்கெட் வாங்கிடுவேன். இல்லாட்டி புகுந்தடிச்சு உள்ள புகுந்துவேன். வலிமையுள்ளவருக்கே உலகம் சொந்தம்ன்னு நம்பற ஆளு நான்.
- கிழிஞ்சுது போங்க... காசு குடுத்தோமா வேலைய ஒரே நாள்ல முடிச்சோமா னு இல்லாம... அவனுங்க எத்தன நாள் இழுத்தடிப்பாங்க தெரியுமா? ஆபீஸ்ல லீவ் யாரு உங்க அப்பனா தருவான்? அந்த loss of pay க்கு பயந்துட்டு தான ஒரே நாள்ல காசை குடுத்து வேலைய முடிக்கறோம்
- என்னது? class எடுக்கறதா? நான் என் குழந்தைக்கே டியுஷன் தான் வெச்சிருக்கேன். இதுல எவன் படிச்சா என்ன? நாசமா போனா என்ன?
- C'mon Dude! R u Crazy? நான்? ரோட்ல வேலை செய்யறதா? நான் இன்ன கம்பெனில இன்ன வேலை பாக்கறேன். என் மானம் மரியாதை என்ன ஆகறது? இதெல்லாம் அரசாங்கத்தோட வேலை. எதாவது பிகர் நம்பர் வேணா கஷ்டப்பட்டு அவனை புடிச்சு இவனை புடிச்சு கண்டுபிடிப்பேனே தவிர, இந்த மாதிரி முனிசிபாலிடி நம்பரெல்லாம் யாரு கண்டுபிடிச்சுட்டு இருக்கறது?
என்று இருந்தால் புலம்ப தகுதி இல்லாதவர்கள் என்று உங்களுக்கே தெரிந்துவிடும்.
நம் அனைவருக்கும் அடிப்படை உரிமை அடிப்படை உரிமை என்று வாய் கிழிய கத்துகிறோமே... நம்மில் எத்தனை பேருக்கு அடிப்படை கடமைகள் பற்றி தெரியும்?
- தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்கணு ம்.
- எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதிக்கணு ம்..
- சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை பின்பற்றி நடக்கணு ம்..
- எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்கணு ம். நாட்டுக்காக தேவைப்படும்போது, சேவை செய்ய தயாராக இருக்கணு ம்.
- அனைவரும் சாதி, மத, மொழி, இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்கணு ம்.
- நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்கணு ம்.
- காடுகள், நதிகள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கணு ம்..
- அறிவியல்,மனிதாபிமானம்,சீர்திருத்த உணர்வுகளை வளர்க்கணு ம்..
- வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துகளை பாதுகாக்கணு ம்..
- குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தரணு ம்.
இந்த கடமைகளை ஒண்ணு ரெண்டு இல்ல, எல்லாமே பின்பற்றுபவர்கள் மட்டுமே புலம்புங்க. மத்தவங்க, இந்த கடமை எல்லாம் செஞ்சுட்டு அப்பறம் புலம்பலாம். இந்த கடமைகளையும் செய்யும்போது அதில் நாடு சார்ந்த சுயநலம் இருக்கிறதா? நம்மை மட்டுமே சார்ந்த சுயநலம் இருக்கிறதா என்று கவனித்து செய்யுங்க.

உதாரணமா, நம்மில் பலர் கடைசி கடமையை முழு மூச்சா செய்யறோம்.அதுக்கு நாடு சார்ந்த நலனை விட, நம்மளோட குழந்தை நல்லா படிச்சா, நிறைய சம்பாதிக்கும் அப்படிங்கற எண்ணமே மேலோங்கி இருக்கும். யாருக்காவது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்து, அவர்களில் ஒருவரையாவது இராணுவ சேவை அல்லது விவசாயம் அல்லது குறைந்த கட்டணத்திலோ இலவசமாகவோ சேவை செய்யும் துறை போன்ற ஏதேனும் ஒரு துறைக்கு அனுப்ப மனம் வருகிறதா? (எனக்கு இப்போதைக்கு நினைவுக்கு வந்த துறைகளையே எழுதியுள்ளேன். உண்மையில் நிறைய துறைகள் உள்ளன. Where there is a will, there is a way). நான் குழந்தைகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக படிக்க வைத்தேன் என்பதை விட நாட்டுக்காக படிக்க வைத்தேன் என்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?
இத்தனைக்கும் இந்த பதிவை நான் உண்மையில் குறுகிய கண்ணோட்டத்தில் தான் எழுதி இருக்கிறேன். அதற்கே நாம் வெட்கப்படவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்போது, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் புலம்புகிறோம்?
இந்தியா முன்னேற தடையாக உள்ள விஷயம் ஊழல், லஞ்சம், அரசியல்வாதி கிடையாது.
இந்தியா முன்னேற தடையாக உள்ள விஷயம் ஊழல், லஞ்சம், அரசியல்வாதி கிடையாது.
உண்மையான காரணம் நம்மோட சுயநலம் தான்.
எல்லாருக்கும் சுயநலம், எல்லா விஷயத்திலும் சுயநலம்.
'எனக்கு மட்டும் முன்னுரிமை கிடைக்கணும், நான் முதல்ல அனுபவிக்கணும்'. இந்த எண்ணத்தை எப்ப மாத்துறோமோ, அப்ப தான் நம்ம நாடு பற்றி நாம பெருமைப்படும் நிலைமையை அடைவோம்.
Anyway, சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே! இந்தியனாய் பிறந்ததற்கு பெருமைப்படுவோம்! ஜெய் ஹிந்த் !