Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, August 9, 2011

புத்தக கண்காட்சியில் ஒருநாள்...

ஆச்சரியமா இருக்கு. மாசம் பத்து பதிவு போட்ட காலம் மலையேறி போனது போல ஒரு பீலிங். இந்த வருஷ பதிவு லிஸ்ட மன்த்வைஸ் பாத்தா, மாசத்துக்கு  வெறும் ஒரே ஒரு பதிவு  மட்டுமே கூட போட்டிருக்கேன். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. பதிவு எழுத ஆரம்பிச்ச புதுசுல மாஞ்சு மாஞ்சு யோசிப்பேன். எதெல்லாம் வித்யாசமா தோணுதோ, எதெல்லாம் புது அனுபவமா இருக்கோ அதெல்லாம் சகட்டு மேனிக்கு டைப் பண்ணிட்டு இருந்தேன். இந்த வருஷம் என்ன ஆச்சுன்னே தெரில... பதிவெழுத வளையவே மாட்டேங்குது. இப்பவும் புது புது அனுபவங்கள் கிடைக்குது தான். ஆனா நெட் ஓபன் பண்ணவே கடுப்பா இருக்கு.  நேர்மையா சொல்லனும்னா பின்னூட்டம் போடாட்டி நம்மள மறந்துடுவாங்கன்னே அதையாவது போடறேன். நாமதான் இப்படி ன்னு நெனச்சு என்னோட சேர்ந்து பதிவெழுத ஆரம்பிச்சவங்களோட லிஸ்ட பார்த்தா பெரும்பாலும் அங்கேயும் அதே கதை இருந்தது தான் இந்த ரணகளத்துலயும் ஒரு ஆறுதல்

Leave it...
By the way, எங்க ஊர்ல திருவிழா... உடனே 'பெரிய மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்த போறோம்' னு டொனேஷன் கேக்க போறேன்னு நினைச்சுக்காதீங்க . நான் சொன்ன திருவிழா 'புத்தக திருவிழா' .
ஒவ்வொரு வருஷமும் ஆசை ஆசையா காத்துகிட்டு, காசு சேர்த்து வச்சுகிட்டு, நான் காத்திருப்பது இந்த விழாவுக்காகதான். போன 6 வருஷமா எனக்கு முழு ஸ்டால்களையும் பார்ப்பது முடியாத காரியமா இருந்துச்சு. கூட கூட்டிட்டு போற ஆளுங்க அப்படி. 'கிளம்பலாம் கிளம்பலாம்'னு என்னை இழுத்துட்டு தான் வெளில வருவாங்க. இந்த வருஷம் தான் ரெண்டு முறை போனேன். அதுவும் என்போல் கமிட்மென்ட் இல்லாத புத்தக காதலர்களுடன். திணற திணற புத்தகங்களை பார்த்து ரசித்தேன். வாங்கி மகிழ்ந்தேன். நான் பாலகுமாரனின் வாசகி. நான் முதன்முதலில் படித்த அவருடைய நாவல் 'கனவு குடித்தனம்'. சோகம்  என்னவெனில், அந்த நாவலை இன்றுவரை முழுமையாக படிக்கவில்லை. (அந்த கதைக்கு தனி பதிவு போடுகிறேன்.)
 அந்த நாவலை வாங்க மட்டும் ஏனோ இன்னும் மனம் வரவில்லை. ஒவ்வொருவருடமும் புத்தக கண்காட்சிக்கு போவேன், இந்த புத்தகம் இருக்கா என தேடுவேன், எடுத்து பார்த்துவிட்டு வைத்து விடுவேன். ஒருவேளை படித்து முடித்துவிட்டால் அந்த புத்தகத்தின் மேல் உள்ள காதல் குறைஞ்சுடுமோ? தெரியல...

பதிவர் இராஜ ராஜேஸ்வரி ( மணிராஜ்) குறிப்பிட்டுள்ளது போல "வாசிப்பது என்பது சுவாசிப்பது. வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்" என்ற வரிக்கேற்ப பல
சுவாசிப்பவர்களை இங்கே காண முடிந்தது...

புத்தக திருவிழாவில், நான் கவனித்த வகையில்
* பெரும்பாலும் பெண்கள் இன்னும் சமையல் குறிப்பு, மெகந்தி டிசைன் புத்தகங்களையே வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

* கொஞ்சம் கீழ்தட்டு இளைஞர்கள் ஜோதிட புத்தகத்தையும், வாழ்வில் ஜெயிப்பது எப்படி என்று கேட்பது போன்ற தன்னம்பிக்கை புத்தகங்களையும் வாங்குகிறார்கள்.

*  கவர்மென்ட் வேலை தேடுபவர்கள் பொதுஅறிவு புத்தகங்களை வாங்கி தங்களை exhibit செய்கிறார்கள்.

* குழந்தைகளின் சாய்ஸ் கலர் அடிக்கும் புத்தகங்கள்.

* குடும்பத்தலைவர்கள் டிவியில் பார்த்தவர்களின் படம் இருக்கும் புத்தகங்களை புரட்டி, விலையை பொறுத்து வாங்குகிறார்கள்.

* கூட்டமான இடம் என்பதால் வயதானவர்கள் குறைவு. வந்தவர்கள் கம்பராமாயணமும் சுந்தரகாண்டமும் தேடுகிறார்கள்.

* அதிலும் இசம் புத்தகங்கள் (அதாங்க கம்யுனிசம், மார்க்சிசம்) ம்ஹும்.... காற்று வாங்குகிறது.

*   பொருளாதார ரீதியாக செட்டில் ஆன இளைஞர் கூட்டமே இலக்கியம் பக்கம் போகிறது. பெருமையாக 'இது இரண்டாவது முறை, மூன்றாவது முறை வருகிறேன்' என்றும், 'ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன் இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன்' என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். மகிழ்ச்சியாக இருந்தது... 

 தபூ ஷங்கர் போன்றோரின் கவிதைகளை ஒவ்வொரு ஸ்டாலிலும் கொஞ்சம் கொஞ்சம் படித்து புத்தகத்தை கண்காட்சியிலேயே படித்து முடித்தவர்களும் இருந்தார்கள்.

 பிரபாகரன், ஹிட்லர், சே குவேரா போன்ற புத்தகங்களை பிரித்து பார்த்து ஒரு தடவு தடவி வைத்தவர்களும் இருந்தார்கள்.

'மச்சி... அதோ அந்த ஸ்டால்ல பிகர் கூட்டம் மச்சி. நீ இங்க என்ன பண்ற?' என்று நண்பனின் புத்தக தேடலுக்கு முற்றுபுள்ளி வைத்தவர்கள் இருந்தார்கள்.

 'சூ... சும்மா அழ கூடாது. முதல் கடைலயே புத்தகம் வாங்கிடகூடாது. கடைசி வரைக்கும் பார்த்துட்டு எந்த கடைல கம்மியா இருக்கோ அங்க தான் வாங்கணும்' என்று கலர் அடிக்கும் புத்தகம் கேட்டு அழுத குழந்தையை சமாதானபடுத்திய  தந்தைகளும் இருந்தார்கள்.

கலவியல் சம்பந்தமான புத்தகங்களை கூட்டம் இல்லாத ஸ்டாலின் மூலையில் நின்று யாருக்கும் தெரிந்து விடகூடாது என்ற பதைபதைப்புடன் படித்தவர்கள் இருந்தார்கள்.
'என்ன புத்தகம் வாங்கின?' என்று கேட்கும் தெரிந்தவர்களிடம், பெருமையாக டிக்சனரியையும், அட்லசையும் காட்டும் பள்ளி செல்லும் பையன்கள் இருந்தார்கள்.
 திடீரென்று தன் பெயர் சொல்லி கூப்பிடும் தெரிந்த அக்காவின்  குரல் கேட்டு திரும்பிபார்க்கும் பெண், அந்த அக்காவுக்கும் புத்தக கண்காட்சி வரும் அளவு புத்தகத்தின் மீது ஆர்வம் இருக்கும் என தெரிய வந்த வியப்பை புருவம் தூக்கி காட்டும் வியப்பின் வெளிப்பாடும் இருந்தது.

 ஒன்றாக படித்தவர்கள், குடியிருந்தவர்கள், வேலை செய்தவர்கள் என பல பழைய நட்புகள் புதுப்பிக்கப்பட்டுகொண்டே இருந்தன.
வெளியே இருந்த கேண்டீனில், அநியாய விலையில் சுகாதாரம் குறைந்த சூழலில்  ஜிகர்தண்டா, மிளகாய் பஜ்ஜி, பானிபூரி எல்லாம் சக்கைபோடு போட்டு விற்பனை ஆகிக்கொண்டிருந்தன.
 என் வாழ்வில் முதலும் கடைசியுமாய் ஜிகர்தண்டாவை ருசித்தேன். இவ்வளவு கேவலமாக இருக்கும்ன்னு நெனைக்கவே இல்லை. ஒருவேளை அதை செய்து கொடுத்தவர் சரியாக கலந்து கொடுக்கவில்லையோ என்னவோ. (இந்த லைன் ஜிகர்தண்டா ரசிகர்கள் யாரேனும் இருந்தா, அவங்களை சமாதானபடுத்த. I have no guts to taste it again உவ்வே ...   ) 

 இப்பேர்பட்ட திருவிளையாடல்கள் நடந்தேறிய எங்கள் ஊர் புத்தக திருவிழா இனிதே இன்றுடன் முடிந்தது....

13 comments:

'பரிவை' சே.குமார் said...

புத்தக கண்காட்சிக்கு வந்தது போல் இருந்தது உங்கள் பகிர்வு.

kavitha said...

நேர்ல பேசிக் கேட்பது போல் இருக்கிறது

சி.பி.செந்தில்குமார் said...

>>vநாமதான் இப்படி ன்னு நெனச்சு என்னோட சேர்ந்து பதிவெழுத ஆரம்பிச்சவங்களோட லிஸ்ட பார்த்தா பெரும்பாலும் அங்கேயும் அதே கதை இருந்தது தான் இந்த ரணகளத்துலயும் ஒரு ஆறுதல்

haa haa சேம் பிளட்

சி.பி.செந்தில்குமார் said...

>> என் வாழ்வில் முதலும் கடைசியுமாய் ஜிகர்தண்டாவை ருசித்தேன். இவ்வளவு கேவலமாக இருக்கும்ன்னு நெனைக்கவே இல்லை. என் வாழ்வில் முதலும் கடைசியுமாய் ஜிகர்தண்டாவை ருசித்தேன். இவ்வளவு கேவலமாக இருக்கும்ன்னு நெனைக்கவே இல்லை.

haa haa ஹய்யோ ஹய்யோ

சி.பி.செந்தில்குமார் said...

எல்லாம் ஓக்கே, கடைசி வரை நீங்க காசு கொடுத்து புக் வாங்குனதா சொல்லவே இல்லையே?

சாதாரணமானவள் said...

@ சே.குமார்
நன்றிங்க

சாதாரணமானவள் said...

@ பொது நல பித்தன்
அப்படிங்களா... நன்றிங்க

சாதாரணமானவள் said...

@சி.பி.செந்தில்குமார்
நான் புக்குக்கு செலவழிச்ச காசை இங்க சொன்னா, அதை எங்க அப்பா அம்மா பார்த்தா, அடுத்த வருஷம் புக் எக்சிபிஷனுக்கு விடமாட்டாங்க. அதான் சொல்லலைங்க...

துளசி கோபால் said...

ரசித்தேன் :-)))))

Unknown said...

:) வாழ்க வளமுடன்
பாலகுமாரன் வாழ்க

Unknown said...

நல்ல எழுதுறீங்க அப்பறம் ஏன்
கொஞ்சம் இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் வரைக்கும் ........பதிவை.....:)(YOU FILL UP)...

THEN வாசிக்க சந்தோசமா இருக்கு
பிழை இல்லாம நறுவிசா எழுதுறீங்கள்.

நன்றி

rajamelaiyur said...

Your writing style super

சாதாரணமானவள் said...

@ துளசி கோபால்
ரசித்ததற்கு நன்றி மேடம்
@ சிவா
வாங்க வாங்க... நீங்களும் பாலா ரசிகரா?
ஓகே.. ஓகே... பதிவை இழுத்துட்டேன் னு சொல்றீங்களா? குறைச்சுக்கறேன்
@ ராஜா
நன்றி நண்பரே