Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, October 7, 2011

ஹாய்... I AM BACK :)

விபத்தில் அடிபட்டிருந்த எனக்கு ஆறுதல் சொன்ன அனைவருக்கும் முதலில் நன்றி...

இரண்டாவது, வடிவேல் விஜயகாந்த் பதிவுக்கு சிலர் தனிமனிதர் தாக்குதல் போல இருப்பதாக பின்னூட்டம் மூலம் வருத்தப்படுகிறார்கள். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார்மூலமாகவோ வந்த குறுஞ்செய்தியாக இருந்தாலும், நான் யோசிக்காமல் பதிவிட்டதற்காக வருத்தப்படுகிறேன். இனியும் யாரையும் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக அந்த பதிவை நீக்கி விடுகிறேன். மன்னியுங்கள் நண்பர்களே..
 

இப்ப விபத்து சம்பந்தப்பட்ட பதிவு.
விஷயம் என்னனா..

நானும் என் தோழியும் (அதாங்க... என்னை கோர்ட்டு படி ஏற வைத்தாளே... அவள்தான்) ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு போவோம். எங்க வீட்ல அப்பா அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்டு. வண்டில போகறதுக்கெல்லாம் விட மாட்டாங்க.  அதனால முதல்ல கொஞ்ச வாரம் ஒழுக்கமா பஸ்ல போயிட்டு பஸ்ல வந்தோம். அப்பறம் பெருந்துறை போய் அங்க இருந்து பிரெண்ட் வண்டிய எடுத்துட்டு சென்னிமலை போயிட்டு, திரும்பி வந்து வண்டியை பெருந்துறைல குடுத்துட்டு அங்கிருந்து பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். இப்படி போயிட்டிருந்த எங்க வாழ்க்கை பயணத்துல....... போலீஸ் என்டர் ஆச்சு.

எப்பவும் போல அந்த வாரம் ஈங்கூர் ரோட்ல வண்டில போயிட்டு இருந்தோமா.... போற வழில அவளோட ஆள் (ன்னு நெனச்சிட்டு இருந்த ஆள் )கிட்ட இருந்து போன் வந்து மிஸ் கால் ஆயிடுச்சு. அம்மணி உடனே ஆளில்லாத ஒரு காட்டுல பஸ் ஸ்டாப் கிட்ட வண்டிய  ஓரம் கட்டிட்டு (ப்ரீயா பேசலாம்னு) கால் பண்ணினா. சார் அங்க யார்கிட்டயோ பிசியா பேசிட்டு இருந்தாப்ல. 'இருடி இருடி பேசிட்டு போலாம்'னு கெஞ்சி கேட்டா. நானும் இரக்க மனசுகாரி ஆச்சா.... சரின்னு சொல்லிட்டேன். ரெண்டு பேரும் வரக்காட்டுல வெயிட் பண்ணினோம்.

சுத்தியும் ஒரு கடைகண்ணி, வீடு வாசல் ஒன்னும் இல்ல. எங்களுக்கு எதிர்த்தாப்படி ஒரு பதினொன்னாவது பன்னண்டாவது படிக்கற பையன் மட்டும் ஒரு பைக்ல உக்காந்து மெசேஜ் அனுப்பிகிட்டு இருந்தான். அட நீயுமாடான்னு மனசுல நெனச்சுகிட்டு, நாங்க பாட்டுக்கு பேசிட்டு இருந்தோம். கொஞ்ச நேரத்துல ஒரு பையன் வந்து அந்த பையன் கூட பேசிட்டு இருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்துல இன்னொரு பையனும் வந்துட்டான். கொஞ்சம் சந்தேகமா இருந்துது. இவள வாடின்னு கூப்பிட்டா, போலாம் போலாம்னு சொல்றாளே தவிர எந்திரிக்க மாட்டேங்கறா. கண்ட கதையும் அடிச்சுட்டு இருந்தவ, திடீர்னு 'போலாம் வா... போலீஸ் வண்டி வருது'ன்னு சொல்லி எந்திரிச்சா. எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு.

நாங்க கிளம்பறதுக்குள்ள, வண்டி பக்கத்துல வந்து அந்த பசங்க கிட்ட நின்னு போலிஸ்காரங்க விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு கான்ஸ்டபிள் எங்ககிட்ட வந்து விசாரிச்சாரு. கோர்ட்டு கட்டடத்த கண்டே நான் எவ்ளோ நடுங்கினேன்னு உங்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட நான்  போலிஸ பார்த்து எவ்ளோ நடுங்கி இருப்பேன்... அம்மணி வக்கீல் ஆச்சா... கான்ஸ் கிட்ட கெத்து காட்டினா. கான்ஸ் எல்லாம் கேட்டுட்டு சரிங்க இன்ஸ்பெக்டர் ஐயா கிட்ட ஒரு வார்த்த சொல்லிடுங்கன்னு சொன்னாரு. நான் freeze ஆகி அப்படியே நிக்கறேன்.

இங்க கெத்தா பேசினவ, அங்க போய் இன்ஸ்பெக்டர் கிட்ட பம்பி பம்பி பேச ஆரம்பிச்சுட்டா. நான் ரோட கூட க்ராஸ் பண்ணாம திரு திருன்னு முழிச்சுகிட்டு  நிக்கறேன்... அவரும் இவளை கிராஸ் செக் பண்ணிகிட்டே என் பக்கம் திரும்பி 'அந்த பொண்ணு யாரு' ன்னாரு.

(இங்க வெக்கறேன் தொடரும் கார்டு )
 Funny "To Be Continued" Fitted T-Shirt

14 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா வசமா மாட்டியாச்சா அய்யய்யோ போச்சு போச்சு...!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு..

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... நல்ல இடத்தில போட்டீங்க தொடரும் கார்டு...

ரைட்டர் நட்சத்திரா said...

யு ஆர் வெல்கம்

SURYAJEEVA said...

suspense பதிவுன்னு முதல்லே சொல்ல முடியாதோ? கடைசியில வந்து கடுப்பாகுதே... என்ன பண்ணலாம்?

சுபத்ரா said...

/*suryajeeva said...

suspense பதிவுன்னு முதல்லே சொல்ல முடியாதோ? கடைசியில வந்து கடுப்பாகுதே... என்ன பண்ணலாம்?*/

அம்மணிகிட்ட இருந்து அடுத்த போஸ்ட் வர்ற வரைக்கும் காத்துட்டு இருக்கலாம்..

மாய உலகம் said...

படிக்குற எனக்கே திக்குதிக்குங்குதே... அடுத்த சஸ்பென்ஸ் வேறையா.. பிபியை ஏத்தாம விடமாட்டீங்க போல அவ்வ்வ்வ்வ்வ்வ்

சாதாரணமானவள் said...

@ நாஞ்சில் மனோ
தேங்க்ஸ் மனோ

சாதாரணமானவள் said...

@ வெங்கட் நாகராஜ்

ஒரு த்ரில் வேண்டாமாங்க ? அதான்.

சாதாரணமானவள் said...

Thanks கார்த்திகேயனி

சாதாரணமானவள் said...

@ suryajeeva

அடுத்த பதிவு வரை வெயிட் பண்ணலாம் சார்

சாதாரணமானவள் said...

வாவ் சுபத்ரா...
நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லீட்டீங்களா?

நண்பி டா.....

சாதாரணமானவள் said...

@ மாய உலகம்

உங்க பிபிய ஏத்தக் கூடாதுன்னு தான் அடுத்த பதிவுல சஸ்பென்ச குறைச்சுட்டேன்

இராஜராஜேஸ்வரி said...

(இங்க வெக்கறேன் தொடரும் கார்டு!!!!)