Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, November 24, 2011

இழவு வீடு - கவிதை


இழவு வீடு

ஒவ்வொரு
இழவு வீடும்
பெருங்குரலோடுதான்
துக்கத்தை வெளிப்படுத்த
ஆரம்பிக்கின்றன.

பெண்கள்
ஒப்பாரி வைக்க
ஆண்கள்
அழுகையை அடக்கிக்கொண்டு
வெளியில் போய்
நிற்கிறார்கள்

நாட்டமை போலும்
ஒரு உறவினர்
தொலைபேசி மூலம்
தொலைதூர சொந்தங்களுக்கு
செய்தி தருகிறார்

அக்கம்பக்கம்
முதலில் வந்து
துக்கம் விசாரிக்க
மெதுவாய் கூடுகிறது
கூட்டம்

இறந்தவரை
நடுவீட்டில் வைத்து
மாலையிட்டு மரியாதை செய்து
சுற்றிலும் அமர்ந்து
ஒப்பாரி வைத்து
புகழ் பாடத்
தொடங்குகிறார்கள்

சுமார் ஒரு மணி நேரம்
கழிந்தபின்
அக்கம்பக்கம்
அகலுகிறது
சொந்த பந்தம்
நெருங்குகிறது
பெருங்குரல் அழுகை
கேவலாகிறது

மகள், மருமகளின்
கண்கள் மெதுவாக
அடுத்தவர் முகம் பார்க்க ஆரம்பிக்கிறது
வாய் மெதுவாக
இறந்தவர் எப்படி இறந்தார் என
காரணம் சொல்ல ஆரம்பிக்கிறது
தன்னால் கவனித்துக்கொள்ள இயலாத
குற்ற உணர்வை மனம் ஒத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது

இன்னும் சிறிது நேரமாகிறது
அழுதுகொண்டு வருபவர்களுடன் மட்டும்
அழுதுகொண்டு...
மற்றபடி
மௌனம் காத்துக்கொண்டு....

இன்னும் கொஞ்ச நேரம் கழிகிறது
தெரிந்தவர்கள் வர ஆரம்பிக்கின்றனர்
கண்களும் உடலும்
களைப்புடன் வரவேற்க தொடங்குகிறது
மிக நுண்ணிய புன்னகை
தென்பட தொடங்குகிறது
மெதுவாக நலம் விசாரிப்புகளும்
இடம் பிடிக்கின்றன

மேலும் சில காலம் நகர்கிறது
தத்தம் குடும்பத்தார்
நலன் நாடி
வெளியேயாகினும் சென்று
உணவு உட்கொள்ள
ரகசிய கட்டளைகள் பறக்கின்றன

முதலில் பச்சைத்தண்ணீர் கூட
குடிக்க மறுத்த உதடுகள்
இப்போது காப்பி தண்ணீர்
கொண்டு வர சொல்கின்றன

குடித்தவாறு மெதுவே ஆரம்பிக்கும்
வந்தவர் வராதவர் குறிப்புகள்
இறந்தவர் குடும்ப எதிர்காலம்
இன்னும் ஏதேனும் ரகசியம்
பிணம் எடுக்கும் நேரம்
பின்னே சென்று வழியனுப்புதலும்

அத்தனையும் முடித்து
தத்தம் வீடு சென்று
சுத்தமாக குளித்து
சாவதானமாக கட்டிலில் சாய்ந்து
சொடுக்குவார் டிவி ரிமோட்டை
இன்று நாடகம் என்ன ஆச்சோ தெரியலை என்று
தான் ஆடிவந்த நாடகம் மறந்து...
 
ரொம்ப நாளைக்கு முன்னாடியே எழுதிய கவிதை. (கவிதையா?)  Situation Posting.

15 comments:

சி.பி.செந்தில்குமார் said...

அழகான அழுகை பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

>>அத்தனையும் முடித்து
தத்தம் வீடு சென்று
சுத்தமாக குளித்து
சாவதானமாக கட்டிலில் சாய்ந்து
சொடுக்குவார் டிவி ரிமோட்டை
இன்று நாடகம் என்ன ஆச்சோ தெரியலை என்று
தான் ஆடிவந்த நாடகம் மறந்து.

ஜீரணீக்க முடியாத நிதர்சனம்

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

ஒரு இழவு வீட்டையே கண் முன் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கீங்க!! அருமை..

suryajeeva said...

நிதர்சன உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

பாலா said...

உண்மைதான். ஆனால் மாண்டவர் திரும்புவதில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். அந்த நேரத்தில் அவரைப்பற்றிய நினைவுகள் அழுகையை கிளப்பி விடுகின்றன. பிறகு நம் மனம் அவரது இழப்பை ஏற்றுக்கொள்கிறது.

Tamilraja k said...

இன்று நாடகம் என்ன ஆச்சோ தெரியலை என்று
தான் ஆடிவந்த நாடகம் மறந்து...

ரொம்ப நாளைக்கு முன்னாடியே எழுதிய கவிதை. (கவிதையா?)
ஏன் இந்த கேள்வி?
கவிதை தான். ஆனால் எல்லா இடங்களிலும் கவித்துவம் இல்லை. இறுதி வரிகளில் மொத்த வரிகளுக்கும் கவியைச் சேர்த்துவிட்டீர்கள்

மதுமதி said...

அத்தனையும் முடித்து
தத்தம் வீடு சென்று
சுத்தமாக குளித்து
சாவதானமாக கட்டிலில் சாய்ந்து
சொடுக்குவார் டிவி ரிமோட்டை
இன்று நாடகம் என்ன ஆச்சோ தெரியலை என்று
தான் ஆடிவந்த நாடகம் மறந்து...

உண்மை

மணி கன்னையன் said...

நிதர்சனமான உண்மை நானும் கண்டதுண்டு

dafodil's valley said...

கடைசி வரி அற்புதம். நச்சென்று முடித்திருக்கிறீகள்.

Part Time Jobs said...

Hi i am JBD From JBD

Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

கோவை நேரம் said...

த்ருபமான உண்மை ...

எஸ்.பி.ஜெ.கேதரன் said...

super.......

theepika said...

வாழ்க்கை ஒரு நாடகமேடை.
அதில் நாம் நடிகர்கள்.

மரணம் ஒரு முற்றுப்புள்ளி.
வாழ்க்கை வாக்கியம்
முற்றுப்புள்ளி இல்லாமல் முழுமையாகாது.

குறியீடுகளை வெறுத்தால்
வாக்கியம் அர்த்தப்படாது.

வலிகளை வழிகளிலேயே
இறக்கி வைக்க வேண்டிய
கட்டாய யதார்த்தம் மனிதர்களுக்கானது.

நமது வாக்கியங்களை
நீட்டிச் செல்வதற்காகவேனும்
நாம் நடிகர்களாகவே இருத்தல்
தவிர்க்க முடியாதது.

எல்லோருடைய முற்றுப்புள்ளிகளிலும்
ஏராளம் நாடகங்கள்
எப்போதும் அரங்கேற காத்துக்கொண்டே இருக்கும்.

மரணவீட்டின் அத்தனை காட்சிகளையும்
வரிகளாக்கிய தங்கள் படைப்பு
அருமை.

நன்றி

http://theepikatamil.blogspot.com/

தீபிகா.

Anonymous said...

மிக நன்று