Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Saturday, January 7, 2012

ப்ளாக் எழுதுவது எப்படி?

யாராவது உங்க Facebook id என்னன்னு கேட்டாலே இப்பவெல்லாம் நான் ப்ளாக் பத்தி அளந்து விடறது உண்டு. நீங்களும் எழுதுங்க. செமையா இருக்கும் (????) அப்படி இப்படின்னு ஒரு பத்து ஸ்கின் ப்ராப்ளம் பத்தி... ச்சே... ஒரு பத்து பெனிபிட்ஸ் பத்தி சொல்ல ஆரம்பிச்சுடறேன். ஆனா, அவங்க எப்படி ஆரம்பிக்கறதுன்னு கேட்டா, வாய் வார்த்தை விளக்கம் பத்தல. அவங்களுக்காக இந்த பதிவு.ஒரு விஷயத்தை சுருக்கமா சொல்ல ட்விட்டர், பஸ் எல்லாம் உண்டு. அதே விஷயத்தை விளக்கமா சொல்ல உங்களுக்குன்னு நேர்ந்து விட்டதுதான் ப்ளாக். இந்த வசதியை நமக்கு Blogger, Wordpress ன்னு ரெண்டு பேர் தராங்க. பிளாக்கர்ல தான் எனக்கு அனுபவம் அப்படிங்கறதால அது சம்பந்தமாவே எனக்கு தெரிஞ்ச விளக்கத்தை தரேன்.

1. www.blogger.com அப்படிங்கற அட்ரஸ் ல போங்க.
2. Left side ல Create a new blog-> get started அப்படின்னு இருக்கற பட்டனை கிளிக் பண்ணுங்க. ஒரு புது விண்டோ  Open ஆகும் .
3. அதுல உங்க மெயில் ஐடி மற்றும் மத்த விஷயங்கள குடுத்துடுங்க.
4. அதுலயே Display name ன்னு ஒண்ணு கேட்கும். நிஜ பெயர் குடுக்கறவங்க நிஜ பேர் குடுங்க. புனைபெயர்ல எழுதணும்னு நினைக்கறவங்க அந்த பெயரை குடுங்க.


இதோட முதல் விண்டோல வேலை முடிஞ்சுது. அடுத்தது next குடுத்ததும் "Name your blog" ன்னு ஒரு விண்டோ வரும். அதுல,
1. Blog title அப்படிங்கற இடத்துல உங்க Blog heading ஆ என்ன வரணும்னு நினைக்கறீங்களோ அதை டைப் பண்ணுங்க. மேல கொட்டை எழுத்துல சாதாரணமானவள் ன்னு எழுதி இருக்கே, அதான் blog title. இது தமிழ்ல வரணும்னா உங்க mail அ திறந்து compose ல வெச்சு, மொழி தேர்வு செய்யற பட்டனை கிளிக் பண்ணி அதில் தமிழை தேர்ந்தெடுத்துக்கோங்க. இதுக்கு நீங்க தமிழ் typing தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லை. வாங்க அப்படின்னு டைப் பண்ண vanga அல்லது vaanga ன்னு டைப் செய்தால் போதும். வேறு வார்த்தைகள் காண்பித்தால் backspace அடித்து அது காட்டும் options ல choose பண்ணிக்கலாம். ரொம்ப ஈஸி. (இந்த முறையில் தான் நீங்கள் உங்கள் தளத்திலும் பதிவு எழுதப்போகிறீர்கள்.)


உங்கள் பெயர் தமிழில் வர எண்ணினால் இந்த முறையை பின்பற்றி மெயிலில் டைப் செய்து copy செய்து இந்த blog title கேட்கும் இடத்தில் paste செய்யுங்க.


2. அடுத்து blog address. என்  ப்ளாக் அட்ரஸ் www.sadharanamanaval.blogspot.com . அது போல உங்களுக்கும் ஒரு அட்ரஸ் உருவாக்கிக்கொள்ளலாம். நான் அட்ரஸ், பெயர் ரெண்டுமே சாதாரணமானவள் ன்னு வெச்சுக்கிட்டேன். சிலர் ப்ளாக் அட்ரஸ் ஒண்ணும், ப்ளாக் டைட்டில் ஒண்ணும், டிஸ்ப்ளே நேம் ஒண்ணும் வெச்சுக்கறாங்க. உங்கள் விருப்பம் எப்படியோ அப்படி வெச்சுக்கோங்க. Blog URL அப்படின்னு இனி எங்கே mention பண்ணி இருந்தாலும், அங்கே நீங்க குடுக்க வேண்டியது இந்த அட்ரஸ் தான்.

அடுத்தது Choose Template
இங்க உங்க blog என்ன background ல என்ன கலர்ல தெரியனும்னு நினைக்கறீங்களோ, உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை தேர்ந்தெடுத்துக்கோங்க. இப்போதைக்கு ஒண்ணை வெச்சுக்கிட்டு, பின்னாடி மாத்திக்கறதுன்னாலும் Edit Template போய்
மாத்திக்கலாம்.இதை முடிச்சதும் உங்களுக்கே உங்களுக்குன்னு ஒரு ப்ளாக் ரெடி :)

(தொடரும்)

25 comments:

மதுமதி said...

புதியவர்களுக்கான விளக்கமான பதிவு.. பதிவுக்கு நன்றி..நேரமிருந்தால் எனது தளம் வந்து செல்லவும்..த.ம 1

ராஜி said...

இதை முடிச்சதும் உங்களுக்கே உங்களுக்குன்னு ஒரு ப்ளாக் ரெடி :)

>>
நாம போடுற மொக்கைகளை படிக்க பலியாடுகளும் அங்கேயும்(blogger.com) ரெடி

தங்கம் பழனி said...

நீங்க எழுதின விதம் அருமை..

பாலா said...

நீங்க ஏதோ கலாய்ச்சு பதிவெழுதி இருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் மிகவும் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி

வெங்கட் said...

புதிய பதிவர்களுக்கு பயனுள்ள பதிவு..!வாழ்த்துக்கள்..!" ப்ளாக் எழுதுவது எப்படி? "-னு டைட்டிலை பாத்ததும்.. ஆஹா.. ப்ளாக் எழுத மேட்டரே இல்லாம சும்மா இருக்கோமே.. இவிங்க எதோ ஐடியா தர்றாங்க போலன்னு ஆசையா ஓடி வந்தேன்.. :)

Ramani said...

புதிதாக பிளாக்கில் நுழைய நினைப்பவர்களுக்கு
எவ்வித குழப்பமுமின்றி மிக எளிதாக புரியும்படி
எழுதியுள்ளீர்கள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 2

மாணவன் said...

Follow Up.... :-)

கோவிந்தராஜ்,மதுரை. said...

எளிதாக புரியும்படி
எழுதியுள்ளீர்கள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

எந்த மின் நிலையம் இந்தியாவுக்குத் தேவை?

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

கோவை நேரம் said...

எப்படியெல்லாம் பதிவ தேத்துராங்கப்பா...ஐயோ...

சுபத்ரா said...

ஹாய் சாதாரணமானவள்,

ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.

புது ப்ளாகர்ஸ்க்குப் பயனுள்ள தகவல். நானும் வெங்கட் மாதிரியே நினைச்சு தான் வந்தேன்...ஏதாவது ஐடியா கொடுக்கப்போறீங்களோனு :-)

அப்புறம் தமிழில் தட்டச்சு செய்ய நிறைய மென்பொருட்கள் வந்துவிட்டனவே! அப்படியே இல்லையெனினும் Google Transliteration பக்கத்திற்குப் போயாவது பண்ணலாம்.

veedu said...

இதுப்படிச்சு...எதாவது அடிமை சிக்குச்சா...சகோ.....!

சாதாரணமானவள் said...

@ ராஜி
// நாம போடுற மொக்கைகளை படிக்க பலியாடுகளும் அங்கேயும்(blogger.com) ரெடி//
ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க...

சாதாரணமானவள் said...

@ தங்கம் பழனி
நன்றிங்க
@ பாலா
// நீங்க ஏதோ கலாய்ச்சு பதிவெழுதி இருப்பீர்கள் என்று நினைத்தேன். //
எப்பவாச்சும் தாங்க அப்படி

சாதாரணமானவள் said...

@ வெங்கட்
@ வெங்கட்
//ப்ளாக் எழுத மேட்டரே இல்லாம சும்மா இருக்கோமே.. இவிங்க எதோ ஐடியா தர்றாங்க போலன்னு ஆசையா ஓடி வந்தேன்.. :)//
இதே மாதிரி பதிவர் சங்கமத்துலயும் ஓடி வந்து பேசி இருந்தா பரவாயில்ல. பதிவை போட்டு திட்டுன ஆள் தான நீங்க.... :)

சாதாரணமானவள் said...

@ ரமணி
ரொம்ப நன்றிங்க. எழுத வந்த புதிதில் எனக்கு பல குழப்பங்கள் இருந்தன. இனி வருபவர்களுக்கு சிறு வெளிச்சமேனும் காட்டவே இந்த பதிவுகள்.

சாதாரணமானவள் said...

@ மாணவன், கோவிந்தராஜ், இராஜராஜேஸ்வரி
நன்றிங்க

சாதாரணமானவள் said...

@ கோவை நேரம்
அட, ஒரு வருஷத்துக்கு முன்னாடி இப்படி ஒரு பதிவு போடறேன்னு சேலஞ் பண்ணி இருந்தேங்க. (ref: http://sadharanamanaval.blogspot.com/2010/10/blog-post_5939.html) அதுக்காக தான் இந்த பதிவு.

சாதாரணமானவள் said...

@ சுபத்ரா
புதுசா பதிவு எழுத விரும்பறவங்களுக்காகதான் இந்த பதிவு சுபத்ரா.

//தமிழில் தட்டச்சு செய்ய நிறைய மென்பொருட்கள் வந்துவிட்டனவே! அப்படியே இல்லையெனினும் Google Transliteration பக்கத்திற்குப் போயாவது பண்ணலாம்.//
ஓ.... அப்படிங்களா... நான் இன்னும் பதிவில் குறிப்பிட்ட முறையை தான் எளிதாக இருப்பதாக எண்ணி பின்பற்றுகிறேன். தகவலுக்கு நன்றிங்க..

சாதாரணமானவள் said...

@ வீடு
இப்போதைக்கு மூணு அடிமைங்க

வெறும்பய said...

மிகவும் பயனுள்ள பதிவு..
என்னை போன்ற பல புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

// Follow Up.... :-) //

அண்ணே!! பதிவை படிச்சிடேன். ஆனா ஏதோ பாலோ-அப் அப்படினு சொல்லி இருக்கிங்களே அது என்னா அண்ணே? மீதி பதிவு கமெண்ட்ல வருமாஇப்படிக்குகோமாளி செல்வா!

prince of flowers said...

thanks

Ravi chandran said...

மிக மிக உபயோகமாக் உள்ளது.முயற்சித்து ப்ளாக் உருவாக்கம் செய்கிறேன். உங்கள் ஆலோசனைகளை தொடர்வுக்.நீங்கள் சாதரனமனவள் அல்ல.சொன்றும் தெரியாத என்னை போன்றவர்களை சொல்லி கொடுக்கும் குரு .நன்றிகள் பல.