Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, December 28, 2012

சமீபத்தில் ஒரு பாடல் கேட்டேன். மால்குடி சுபா குரலில் அத்தனை உருக்கம்... காதல் கொண்ட ஒரு பெண்ணின் சோகமும்,விரக்தியும்,பயமும் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.  இந்த வரிகளை ரசிக்க நினைத்தால் ஒரே பாடலின் வரிகளாக (I mean தொடர்ச்சியாக) எடுத்துக்கொள்வதை விட  இரண்டிரண்டு வரிகளாக எடுத்து பிரேக் விட்டு ரசியுங்கள். நல்லா இருக்கும்.
song upload செய்ய முயற்சி பண்ணினேன். சரியா வரல. யாராவது லிங்க் கொடுத்தால் போட்டுடறேன்.


பாடல்:
பூ மீது யானை
பூ வலியை தாங்குமோ... 

தீ மீது வீணை
போய்  விழுந்தால் பாடுமோ... 

போ என்று சொன்னால்
வரும் நினைவும் போகுமோ... 

போராடும் அன்பில் அட
ஏன்தான் காயமோ...

கண்ணீர் கவிதைகள்  எந்தன் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளாய் எந்தன் கன்னம் நிறையுதே... 

இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே...
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே...

autumn, wallpaper, fantasy, wallpapers

ஹே... உடைத்து பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே...

குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில் உடையாதே..

உடைத்து பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே...

குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தின் உலகத்தில் உடையாதே.. 

காதல் போலவே நோயும் இல்லையே  யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே...விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவே வலி தருமோ...

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவே வலி தருமோ...

வேறு வேறென  நினைவு போகையில்
காதல் கொள்தல் பாவம்

அது சேரும் வரையிலே
யாரும் துணை இல்லே
ஆதி கால சாபம்...

வேகமா படிக்காதீங்கன்னா கேக்க மாட்டீங்களே... இப்படி படிச்சா இந்த பாடலில் உள்ள வலி எப்படி புரியும்? ம்? ஸ்க்ரோல் பண்ணி மேல போய்  மறுபடி படிங்க.


படம்: டிஷ்யூம்
இசை: விஜய் ஆன்டனி
பாடல்: புகழேந்தி5 comments:

இராஜராஜேஸ்வரி said...

வேகமா படிக்காதீங்கன்னா கேக்க மாட்டீங்களே... இப்படி படிச்சா இந்த பாடலில் உள்ள வலி எப்படி புரியும்? ம்? ஸ்க்ரோல் பண்ணி மேல போய் மறுபடி படிங்க.


அப்படித்தாங்க ஆச்சு மீண்டும் படிக்க நேர்ந்தது ..

ஸ்கூல் பையன் said...

http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Dishyum/Dishyum_-_Poo_Meedhu.mp3http://www.arthika.net/1234TB/new/Dishoom/TamilBeat.Com - Poo Meedhu Jaa.mp3

மேற்கண்ட சுட்டிகளில் இந்தப் பாடலை தரவிறக்கிகொள்ளலாம்... நன்றி...

Tamil Magazine said...

நல்ல பாடல்
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

சுபத்ரா said...

பாடலைத் தரவிறக்கிக் கேட்டேன்.. நன்றாக இருந்தது.

மனோ சாமிநாதன் said...

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

அன்புடன்
மனோ சாமிநாதன்