Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, January 21, 2013

எது சுகம்?

எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை வந்தது. காரணம் பெரியதாக ஒன்றும் இல்லை. உருளை கிழங்கை தீய்ச்சுட்டோம். அதுக்கு காரணம் நீ நான் ன்னு ஒரு மானங்கெட்ட சண்டை. அந்த சண்டையை சாக்கா வெச்சு இத்தனை நாள் என் மேல் இருந்த குறையை அவங்களும் அவங்க மேல இருந்த குறையை நானும் சொல்லிக்கிட்டோம். அப்ப என் கணவரை பார்க்கத்தான்  பாவமா இருந்துச்சு. அவர் அம்மா பையன். ஆனா அதே சமயம்  நான்னா உயிர். ரெண்டு பேருக்கும் நடுவுல அவர் தவிச்சதால தான்,  மனசு கேக்காம மாமியாரும் மருமகளும் சண்டைய முடிச்சுகிட்டோம்.

நான் ஒரு இடத்துல மனத்தாங்கல் வந்துச்சுன்னா பெரும்பாலும் உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பிடுவேன். அப்ப தான் பிரச்சனையை பெருசாகாம இருக்கும். நானும் தனிமைல என்கிட்டே  குறை இருக்கா, அதுக்கு என்ன காரணம், எப்படி சரி பண்ணிக்கறதுன்னு யோசிச்சு சரி பண்ணிக்குவேன். அதனால  'நான் எங்க வீட்டுக்கு போய் ஒரு ரெண்டு நாளைக்கு தங்கிட்டு வரேன்னு' சொல்லிட்டு வந்துட்டேன். சண்டை போட்டுட்டு கோவிச்சுகிட்டு வராம சமாதானம் ஆகி, என் கணவரோட தான் வந்தேன். அதனால எங்க அம்மா அப்பா ஒண்ணும்  சொல்லல.

எங்க வீட்டுக்கு வந்து நான் செஞ்ச முதல் காரியம் குளிச்சுட்டு ரெய்கி தியானம் பண்ணினது தான். உண்மையிலேயே மனசுல இருந்து ஒரு பெரிய கல்லை எடுத்து வெளிய போட்ட மாதிரி இருந்துச்சு. தொடர்ந்து ரெண்டு நாளும் காலைல சக்தியூட்டும் தியானமும், சாயந்திரம் சக்ரா  தியானமும்  செஞ்சேன். சண்டை போட்ட நாளுக்கு முன்னாடி வரை யாராவது அந்த ரெண்டு கேள்வியையும் கேட்டா உடனே  ஏதோ துக்கம் தொண்டையை அடைச்ச மாதிரி அழுகை வர்ற மாதிரி இருக்கும். ஆனா தியானம் செஞ்சு மனசை சரி செஞ்சுகிட்டதால அந்த ஸ்ட்ரெஸ் போய்டுச்சு.

மூணாவது நாள் அவங்க வீட்டுக்கு போனதும் அவங்க எப்பவும் போல பேசினாங்க . நானும் சரி ஆகிட்டேன். அன்றிலிருந்து தியானம் செய்ய தவறவே இல்ல. இந்த சமயத்துல எங்க அப்பா 'திருச்சில மூச்சு பயிற்சி கிளாஸ் நடத்தறாங்க. நீயும் கலந்துக்கறயா?ன்னு கேட்டார். என் ஆதர்ச எழுத்தாளர் பாலகுமாரன் இதை பத்தி பலவிதமா சொல்லி இருக்கறதால என்னன்னு தான் தெரிஞ்சுக்கலாம்னு சரின்னு  சொல்லிட்டேன். போன சனிக்கிழமை காலைல 4 மணிக்கு நானும் அப்பாவும் பஸ்ல கிளம்பினோம். ஸ்பாட்டுக்கு போக 9.30 ஆகிடுச்சு.

வகுப்பெடுத்தவர் ஒரு புத்த பிக்கு. வகுப்பில் என்ன நடத்தினாங்கன்னு கேட்டா 'ஒண்ணும் நடத்தல. ஒரு நாள் முழுக்க 31 விதமா அவங்கவங்க மூச்சை கவனிச்சோம்'ன்னு தான் சொல்லணும். ஆனா அதனோட பலன் அற்புதம். நினைச்சதெல்லாம் நடந்துச்சு.

வகுப்பு முடிஞ்சதும் பஸ்ல இடம் கிடைக்கணும்னு நினைச்சேன். (ஏன்னா அது பொங்கல் லீவ்). பயணம் முழுக்க பஸ் பெரும்பாலும் காலியாகவே வந்துச்சு.

சமயபுரம் டர்னிங்ல பஸ் நிரம்புச்சு. யாராவது குண்டா வந்து உக்காந்தா அசைய முடியாதேன்னு நினைச்சு கவலைப்பட்டேன். நிறைய பேர் ஏறினாங்க. நான் என் போலவே ஒரு ஒல்லி பெண் ஏறியதை பார்த்தேன் அந்த பெண் வந்து உக்காந்தா பரவாயில்லையே ன்னு நினைச்சேன். நிறைய சீட்  காலியா இருந்தாலும் கரெக்டா அந்த பொண்ணே வந்து என் பக்கத்து சீட்லயே உக்காந்துச்சு.

காத்து சேராதுன்னு எனக்கு முன்னாடி சீட் காரங்க ஜன்னல சாத்தணும்னு நினைச்சேன். அதுவும் நடந்துச்சு.

வீட்டுக்கு வந்து சேரும்போது மணி நைட்டு 10.30. முகம் கழுவல, வைப் பேப்பர் கொண்டு போகல முகம் எப்படி இருக்குமோன்னு கண்ணாடிய பார்த்தா  சர்ப்ரைஸ்!!! காலைல வச்ச திருநீறு  கூட கலையல. முகம் அவ்ளோ பிரகாசமா இருந்துச்சு. முகத்துல கொஞ்சம் கூட டயர்ட் இல்லையேன்னு அம்மாவுக்கு கூட ஆச்சரியம்.

 இத்தனை வருஷமா கவனமில்லாம அனிச்சையா  செஞ்சிட்டு இருந்த மூச்சு விடறதை ஒரே ஒரு நாள் கவனிச்சதுக்கே இவ்வளவு பலன். அதெப்படி மூச்சு விடறதுக்கும் இப்படி எல்லாம் நடக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?ன்னு கேக்கலாம். அதை ஒரு குரு மூலமா கேட்டீங்கன்னா உங்களுக்கும் நன்மை, நம்பிக்கை வரும். நான் இப்ப தான் எல்.கே.ஜி. எனக்கு சரியா சொல்ல வரல. எங்கயாச்சும் இது போல வகுப்பு நடந்துச்சுன்னா நீங்களும் கலந்துக்கோங்க. அதை அனுபவிச்சாதான் அருமை தெரியும். அப்படி எதுவும் அற்புதம் நடக்காட்டியும் கூட, உடம்பு அசையாம எதை பத்தியும் நினைக்காம மூச்சை பத்தி மட்டும் உங்க கவனம் இருக்கறது ஆனந்தம். எந்திரிக்கவே மனசு வராது. நல்லா இருக்கும். வேற எந்த வேலை செஞ்சுட்டு இருந்தாலும் உங்க கவனம் உங்க மூச்சுக்கே வரும். அது ஒரு வித சுகம்ங்க.

16 comments:

Tamil Latest Movie News said...

பதிவு நன்றாக இருக்கிறது.
மிக்க நன்றி.

Anbu said...

கதையா அல்லது நிஜமா?, நன்றாக இருக்கிறது. எங்கள் ஊரில் நடக்கும் அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

மூச்சுப்பயிற்சி பற்றி ஆனந்தமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் உதவும் மூச்சுப்பயிற்சி Part 1

வாழ்த்துக்கள்...

Muruganandan M.K. said...

அனுபவபூர்வமான அருமையான பதிவு.
மனதை அமைதியாக்கல் முக்கியம்தான்.
வழிகள் பல
எமக்கேற்றதை தேடிப் பிடிப்போம்.

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

sury siva said...

ஒரு கதை போல பிராணாயாமத்தின் முதல் பாடங்களை எளிதே சொல்லி இருக்கிறீர்கள்.

அழகு.

அது சரி... மாமியாருக்கும் சொல்லித் தந்தீர்களா ?
இல்லயா ?
அப்ப அட் லீஸ்ட் உங்க இந்த பதிவை படிக்கனாச்சும் சொல்லுங்க...


சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
www.vazhvuneri.blogspot.com

ஜீவன் சுப்பு said...

//யாராவது குண்டா வந்து உக்காந்தா அசைய முடியாதேன்னு நினைச்சு கவலைப்பட்டேன். நிறைய பேர் ஏறினாங்க. நான் என் போலவே ஒரு ஒல்லி பெண் ஏறியதை பார்த்தேன் அந்த பெண் வந்து உக்காந்தா பரவாயில்லையே ன்னு நினைச்சேன். நிறைய சீட் காலியா இருந்தாலும் கரெக்டா அந்த பொண்ணே வந்து என் பக்கத்து சீட்லயே உக்காந்துச்சு.//
நானும் நெறைய வாட்டி இப்டி நெனச்சுருக்கேன் ஆனா ஒரு வாட்டி கோட நெனச்சது நடக்கல ...மூச்சு பயிற்சிக்கு போகணுமோ ?
//சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.//
மிக எதார்த்தமான வரிகள் ... வாழ்த்துக்கள் ..

Unknown said...

எனக்கு ஞானம் எங்கே கிடைச்சுதுன்னு கேட்டா உங்களைத்தான் சொல்லுவேன் ஆமா...

புத்தருக்கு போதி மரம்..எனக்கு உங்கள் வலை

சாதாரணமானவள் said...

@ tamil latest movie news, Dindigul Dhanabalan, Rajarajeswari

Thank you for your comments :)

சாதாரணமானவள் said...

@anbarasu annamalai
கதை இல்லைங்க. நிஜம் தான்

சாதாரணமானவள் said...

@ Muruganandham

//வழிகள் பல
எமக்கேற்றதை தேடிப் பிடிப்போம்.//

சரிதாங்க...

சாதாரணமானவள் said...

@ தமிழ் இளங்கோ

ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்.

சாதாரணமானவள் said...

@ sury siva

ஹஹஹா .... எங்க மாமியாருக்கு படிக்க தெரியாதுங்கறது பெரிய சோகம் சார்.அதனால மூச்சு பயிற்சியை சொல்லி தந்துடலாம்கறது குட் ஐடியா... எனக்கு சொல்லிக்குடுக்க ஆசைதான். ஆனா அவங்க கத்துக்க தயாரா இல்லை. அதனாலென்ன? எனக்கு கொஞ்சம் பக்குவம் வந்துடுச்சே... அதனால இனி பிரச்சனை வராதுன்னு நம்பறேன். :)

சாதாரணமானவள் said...

@ஜீவன் சுப்பு

//நானும் நெறைய வாட்டி இப்டி நெனச்சுருக்கேன் ஆனா ஒரு வாட்டி கோட நெனச்சது நடக்கல ...மூச்சு பயிற்சிக்கு போகணுமோ ?//

ஹலோ.... இது கொஞ்சம் ஓவர்..... இந்த பதிவை நான் எதுக்கு போட்டா நீங்க எதுக்கு பீல் பண்ணிட்டு இருக்கீங்க? ம் ? :)

சாதாரணமானவள் said...

@ Sheik Mohideen

//எனக்கு ஞானம் எங்கே கிடைச்சுதுன்னு கேட்டா உங்களைத்தான் சொல்லுவேன் ஆமா...

புத்தருக்கு போதி மரம்..எனக்கு உங்கள் வலை//
இது எல்லாரையும் விட ஓவர்ங்க... கிண்டலடிக்கறதுக்கும் ஒரு அளவு இல்லாம போச்சு போங்க... :)