முதல் கொஞ்சம் மீள் பதிவு :
இந்த சமயத்துல எங்க அப்பா 'திருச்சில மூச்சு பயிற்சி கிளாஸ் நடத்தறாங்க. நீயும் கலந்துக்கறயா?ன்னு கேட்டார். என் ஆதர்ச எழுத்தாளர் பாலகுமாரன் இதை பத்தி பலவிதமா சொல்லி இருக்கறதால என்னன்னு தான் தெரிஞ்சுக்கலாம்னு சரின்னு சொல்லிட்டேன். போன சனிக்கிழமை காலைல 4 மணிக்கு நானும் அப்பாவும் பஸ்ல கிளம்பினோம். ஸ்பாட்டுக்கு போக 9.30 ஆகிடுச்சு.
வகுப்பெடுத்தவர் ஒரு புத்த பிக்கு. வகுப்பில் என்ன நடத்தினாங்கன்னு கேட்டா 'ஒண்ணும் நடத்தல. ஒரு நாள் முழுக்க 31 விதமா அவங்கவங்க மூச்சை கவனிச்சோம்'ன்னு தான் சொல்லணும். ஆனா அதனோட பலன் அற்புதம். நினைச்சதெல்லாம் நடந்துச்சு.
வகுப்பு முடிஞ்சதும் பஸ்ல இடம் கிடைக்கணும்னு நினைச்சேன். (ஏன்னா அது பொங்கல் லீவ்). பயணம் முழுக்க பஸ் பெரும்பாலும் காலியாகவே வந்துச்சு.
சமயபுரம் டர்னிங்ல பஸ் நிரம்புச்சு. யாராவது குண்டா வந்து உக்காந்தா அசைய முடியாதேன்னு நினைச்சு கவலைப்பட்டேன். நிறைய பேர் ஏறினாங்க. நான் என் போலவே ஒரு ஒல்லி பெண் ஏறியதை பார்த்தேன் அந்த பெண் வந்து உக்காந்தா பரவாயில்லையே ன்னு நினைச்சேன். நிறைய சீட் காலியா இருந்தாலும் கரெக்டா அந்த பொண்ணே வந்து என் பக்கத்து சீட்லயே உக்காந்துச்சு.
காத்து சேராதுன்னு எனக்கு முன்னாடி சீட் காரங்க ஜன்னல சாத்தணும்னு நினைச்சேன். அதுவும் நடந்துச்சு.
வீட்டுக்கு வந்து சேரும்போது மணி நைட்டு 10.30. முகம் கழுவல, வைப் பேப்பர் கொண்டு போகல முகம் எப்படி இருக்குமோன்னு கண்ணாடிய பார்த்தா சர்ப்ரைஸ்!!! காலைல வச்ச திருநீறு கூட கலையல. முகம் அவ்ளோ பிரகாசமா இருந்துச்சு. முகத்துல கொஞ்சம் கூட டயர்ட் இல்லையேன்னு அம்மாவுக்கு கூட ஆச்சரியம்.
இத்தனை வருஷமா கவனமில்லாம அனிச்சையா செஞ்சிட்டு இருந்த மூச்சு விடறதை ஒரே ஒரு நாள் கவனிச்சதுக்கே இவ்வளவு பலன். அதெப்படி மூச்சு விடறதுக்கும் இப்படி எல்லாம் நடக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?ன்னு கேக்கலாம். அதை ஒரு குரு மூலமா கேட்டீங்கன்னா உங்களுக்கும் நன்மை, நம்பிக்கை வரும். நான் இப்ப தான் எல்.கே.ஜி. எனக்கு சரியா சொல்ல வரல. எங்கயாச்சும் இது போல வகுப்பு நடந்துச்சுன்னா நீங்களும் கலந்துக்கோங்க. அதை அனுபவிச்சாதான் அருமை தெரியும். அப்படி எதுவும் அற்புதம் நடக்காட்டியும் கூட, உடம்பு அசையாம எதை பத்தியும் நினைக்காம மூச்சை பத்தி மட்டும் உங்க கவனம் இருக்கறது ஆனந்தம். எந்திரிக்கவே மனசு வராது. நல்லா இருக்கும். வேற எந்த வேலை செஞ்சுட்டு இருந்தாலும் உங்க கவனம் உங்க மூச்சுக்கே வரும். அது ஒரு வித சுகம்ங்க.
நண்பர்கள் இந்த மூச்சுப்பயிற்சி வகுப்பு எங்கே எப்போது நடக்கும் என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு நற்செய்தி. அடுத்த வகுப்புகள் ஆரம்பிக்கப் படுகின்றன.
மார்ச் 30ம் தேதி நடைபெறுகிறது
முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப் படுவீர்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்க:
98437 71449

7 comments:
நல்ல பகிர்வு....
வாழ்த்துக்கள்...
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
“பெண்களே நாட்டின் உயிர்மூச்சு” –என்பது இதனால் தானோ?
interesting and informative ...
@ சே. குமார், சீராளன், பேஷன் புகைப்படம்
நன்றிங்க
@செல்லப்பா
ஹஹஹா ... அப்படி தான் இருக்கும் போல.... :)
I need more detail.What is the contact number and person name.
Post a Comment