ஒரு மாசத்துக்கு 4,5 பதிவு எழுதிட்டு இருந்த நானா இவ்ளோ நாளா எழுதாம இருக்கேன்... ஆச்சரியமா இருக்கு. அட .. எழுதாட்டி போகுது. படிக்க கூட வலைப்பூ பக்கம் ஒதுங்கறதே இல்ல. இதுக்கு ஒரே காரணம் கல்யாணம் தான். கணவரோ அவர் பெற்றோரோ தடுப்பதில்லை. ஆனாலும் ப்ளாக் போடலாம்னு பார்த்தா 'இப்போ இது ரொம்ப முக்கியமா' ன்னு மனசு உக்கார விடறதே இல்ல. எனக்கு தெரியுது... attitude அ மாத்திகிட்ட எல்லாம் மாறிடும் தான் . ஆனாலும் .....
முன்னைக்கு நான் ரொம்ப நெகடிவ் திங்கரா மாறிட்டேனோ அப்டின்னு வேற தோணுது. நீங்களே என் பழைய பதிவுகளை படிச்சு பாருங்க. அது எவ்ளோ உற்சாகமா இருக்கு. என் கல்யாணத்துக்கு அப்பறம் வந்த பதிவுகளை படிச்சு பாருங்க. எனக்கே கடுப்பா இருக்கு. இந்த பதிவு எழுதும் போது கூட பெருசா உற்சாகம் ஒண்ணும் இல்ல. நான் மட்டும் தான் இப்படியா? இல்ல கல்யாணம் ஆனா பொண்ணுங்க எல்லாருக்கும் இப்படியா? பெண் பதிவர்கள் இதுக்கு விளக்கம் குடுத்தா பரவால்ல . நான் கொஞ்சம் தெளிவாவேன். (Maybe என் போன்ற மற்ற பெண் பதிவர்களும்) .
திருமணம் ஆன பெண் பதிவர்கள் அப்டின்னாலே அவங்க பதிவு சமையல் குறிப்பு, கோவில், சாமி, மிஞ்சி போனா ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் இந்த வட்டத்துக்குள்ளேயே தான் இருக்கோம். ofcourse , இதெல்லாம் உண்மையில் மிகப்பெரிய செயல்கள் தான். இருந்தாலும் பசங்க மாதிரி பொது விஷயங்கள் எழுதற பெண் பதிவர்கள் ரொம்ப குறைவா இருக்கற மாதிரி இருக்கு. ஏன் இப்படி?
ஒரே குழப்பமா இருக்கு

2 comments:
குழம்ப ஆரம்பித்து விட்டீர்களா...? இனி தெளிவு கிடைத்திடும் - இப்பதிவை போல...! ஹா... ஹா...
தொடர வாழ்த்துக்கள்...
எனக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டதுண்டு. நினைப்பதை அப்பொழுதே தாளில் குறிப்பெழுதி வைத்துவிடுவேன். இடைவெளிவிட்டால் திரும்ப வருவது சிரமமாக இருக்கும். நல்லதை வாசிக்க இணைய வாசகர்கள் நாங்கள் இருக்கிறோம், தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துகள்.
Post a Comment