Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Friday, October 22, 2010

மானாட மயிலாட சீசன் 5 ஜெயித்தது யார்?

விஷயம் தெரியுமா..... மானாட மயிலாட 5 ன் டைட்டில் வின்னர்கள் பாலாவும் ஸ்வேதாவும்...
இரண்டாம் பரிசு ரெஹ்மான் - ஷிவானி.
மூன்றாம் பரிசு கிரண் - லீலாவதி .
நான்காம் பரிசு (ஆறுதல் பரிசு) பயாஸ் - வர்ஷா.

எனக்கு அசாரின் நடனம் தான் பிடிக்கும். ஆனால் தலைவர் செமி பைனல்ஸில் வெளியேறி விட்டதால் இந்த முறை டைட்டில் வின்னர் பற்றி டென்ஷன் இல்லாமல் நிதானமாக காத்துக்கொண்டிருந்தேன். .

ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் முதல் பரிசு ஜெயித்தவரை அதே நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்து மீண்டும் முதல் பரிசு தருவதை உலக தொலைகாட்சியில் கலைஞர் டிவி தான் செய்கிறது. பாலாவுக்கு ஒரே ஒரு அட்வைஸ்... இனி மானாட மயிலாட சீசன் 6,7,8,9,10 என எதில் கலந்து கொண்டாலும் சண்டைகாட்சி செய்து காண்பிப்பதை குறைத்துக்கொண்டு டான்ஸ் ஆடி காட்டுங்க சார். ஏன்னா, ரெஹ்மான், லீலா, வர்ஷா எல்லோரும் நல்லா ஆடினாலும் உங்களை போல ஸ்டன்ட் செய்யாததால் உங்களுக்கு அடுத்தடுத்த இடங்களுக்கு போய் விட்டார்கள். நீங்கள் ஒரு அருமையான டான்சராக இருந்தாலும் இந்த சமயத்தில் உங்கள் நடனம் பேசப்படவில்லை. இது ஒரு நல்ல டான்சருக்கு அழகல்ல. ஓகே நீங்கள் ஹீரோ. ஆனால் உங்கள் ஹீரோயிசத்தை காட்டும் இடம் இது அல்ல. இது நடன திறமையை காடும் இடம் அல்லவா.  Any way, CONGRATS TO BALA AND SWETHA!  

நண்பர்களே... இதற்காக எனக்கு பாலா ஸ்வேதா சாண்டி பிடிக்காது என அர்த்தம் அல்ல. அருமையான டீம். கஷ்டப்பட்டதன் பலனை அடைந்தார்கள்.வாழ்த்துக்கள்!
 

7 comments:

எல் கே said...

enaku ithai paathi onnum theriyathu

வெங்கட் said...

// நீங்கள் ஒரு அருமையான டான்சராக இருந்தாலும்
இந்த சமயத்தில் உங்கள் நடனம் பேசப்படவில்லை.
இது ஒரு நல்ல டான்சருக்கு அழகல்ல. //

// இதற்காக எனக்கு பாலா ஸ்வேதா சாண்டி
பிடிக்காது என அர்த்தம் அல்ல. அருமையான டீம்.
கஷ்டப்பட்டதன் பலனை அடைந்தார்கள். //

உஸ்ஸப்பா..!!

பரிசு வாங்கினதால பாலா
நல்லா ஆடினார்னு அர்த்தம் இல்ல..

பரிசு கிடைக்காத்தால மத்தவங்க
நல்லா ஆடலைன்னும் அர்த்தம் இல்ல..

பாலா நல்ல டான்சர்..,
ஆனா அவர் இதுல டான்ஸ் ஆடலை..

மத்தவங்க டான்ஸ் ஆடினாங்க..
ஆனா அவங்க டான்ஸரான்னு தெரியல..

மத்தவங்க கஷ்டப்படலன்னு நினைக்க கூடாது..
ஆனா பாலா கஷ்டப்பட்டு தான் இருக்கார்..

என்ன.. எதுவும் புரியலையா..?
அதென்ன Comment-ல குழப்பினா மட்டும்
கேள்வி கேக்கறீங்க.. பதிவுல குழப்பினா
ஒண்ணும் கேக்க மாட்டேங்கறீங்க..

நான் வேணா முதல்ல இருந்து
தெளிவா சொல்லவா..?!!

எஸ்.கே said...

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்!

மாணவன் said...

இப்போதுதான் உங்கள் தளத்திற்கு முதன்முறை வருகிறேன் நன்றாக உள்ளது இனிதே தொடர வாழ்த்துக்கள்...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
மானாட மயிலாட பற்றி சொல்லியிருந்தீர்கள் தகவலுக்கு நன்றி
நமக்கு எப்பவுமே ஜோடி நம்பர்1 தான் இவுங்கதான் எல்லோருக்குமே முன்னோடி என்ற வகையில்...

அப்புறம் நேரம் இருந்தால் நம்ம தளத்திற்கும் வந்துட்டுபோங்க....
http://urssimbu.blogspot.com
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

சாதாரணமானவள் said...

வெங்கட்... முடியல.... விட்ருங்க.... அழுதுடுவோம்....

சாதாரணமானவள் said...

thanks s.k and maanavan

Anonymous said...

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்