Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, October 26, 2010

கடவுளாக ஜிம் கேரி

நேற்று தான் நான் BRUCE ALMIGHTY படம் பார்த்தேன். ஏற்கனவே வந்த EVAN ALMIGHTY யின் வெற்றியை தொடர்ந்து இப்போது இந்த படம். கான்செப்ட் ஒன்று தான். இந்த உலகம் இப்படி இருக்கே, எனக்கு மட்டும் இப்படி நடக்குதே, நான் மட்டும் கடவுளா இருந்தேன்னு வச்சுக்க.... இப்படி எல்லாம் ஹீரோ கடவுளை திட்ட, கடவுள் 'இருந்து பாரு டா மவனே' னு தன் சக்திகளை கொடுத்து விடுகிறார். அதன் பிறகு நடப்பவை மீதி கதை.
என் hot favorite hero ஜிம் கேரியின் படம் என்பதால் மிகவும் ரசிக்க முடிந்தது. Body language மற்றும் facial expressions க்கு   யார் பெஸ்ட் என கேட்டால் என் ஓட்டு ஜிம் கேரிக்கே. வசனங்களும் ரசிக்க கூடியதாக இருந்தது. ஒரு காட்சியில் ப்ருசின் மனைவி ப்ரூசை பார்த்ததும் "Oh my God!" என்கிறாள். உடனே ப்ரூஸ் "என்னை ப்ரூஸ் என்றே கூப்பிடு டார்லிங்" என்கிறான். இன்னொரு காட்சியில் ஒரு பிச்சைகாரன் "are you blind?" (கண்ணிருந்தால் பிச்சை போடுங்கள் என்ற அர்த்தத்தில் ) எழுதி வைத்திருக்கிறான். உடனே ப்ரூஸ் "No, I am late" என்றவாறு ஓடுகிறான். இன்னும் நிறைய சின்ன சின்ன விஷயங்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை கொஞ்சம் கூட வெட்கமே படாம என்ஜாய் பண்ணி நடித்து எல்லா தரப்பு பார்வையாளர்களையும்  மகிழ்விக்கும் நடிகர்கள் ஹாலிவுட்டில் இரண்டு பேர். ஒன்று ஜிம் கேரி. இரண்டாவது நம்ம மிஸ்டர் பீன் (ரோவன் அட்கின்சன்)

சமீபத்தில் எனக்கு வந்த எஸ் எம் எஸ் இல் மிஸ்டர் பீன் பில்கேட்ஸிடம் மூன்று கேள்விகள் கேட்கிறார்

1 கீபோர்டில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் மாறி மாறி உள்ளன. எப்போது நீங்கள் சரி செய்த வெர்ஷனை வெளியிடுவீர்கள்?
2 ஸ்டார்ட் பட்டன் இருப்பது போல ஏன் ஸ்டாப் பட்டன் இல்லை?
3 நாங்கள் இப்போது எம்எஸ் வோர்ட் (MS Word) கற்றுக்கொண்டு விட்டோம். எப்போது எம் எஸ் செண்டன்ஸ் (MS Sentence) வெளியிடுவீர்கள்?
4 கடைசியாக ஒரு பர்சனல் கேள்வி. உங்கள் பெயரில் gate ஐ வைத்துக்கொண்டு நீங்கள் ஏன் windows ஐ வெளியிட்டீர்கள்?
நல்லா இருக்குல ...

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றி

6 comments:

மாணவன் said...

அருமை சகோ,
ஹாலிவுட் படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க சூப்பர்
நம்ம இன்னும் அந்த அளவுக்கு வளரலை
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நம்ம தளத்திற்கு வந்துள்ளீர்கள் சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி ரொம்ப நன்றி
முடிந்தால் தொடர்ந்து இனைந்திருங்கள்
வரும்போது உங்கள் ஓட்டையும் போட்டுவிட்டு செல்லுங்கள் உங்களைப்போன்ற பல நண்பர்களை சென்றடைய உதவியாய் இருக்கும்
பில்கேட்ஸிடம் மூன்று கேள்விகள் கலக்கல்...
தொடருங்கள்....
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

ஜிஎஸ்ஆர் said...

BRUCE ALMIGHTY இந்தப் படம் தான் தமிழில் கொஞ்சம் மாற்றம் செய்து வந்த அறை எண் 305ல் கடவுள் எப்படியிருந்தாலும் இந்த படத்தை பார்த்து விட வேண்டியது தான்

மாணவன் said...

//வணக்கம் நண்பர்களே இந்த பதிவு நம் அருமை நண்பர் மின்னஞ்சல் வழியாக அவருடைய தளத்தில் அவர் விரும்பும் தளங்களை அவருடைய தளத்தில் காண்பிக்க விரும்புவதாகவும் அவர் இனைத்திருக்கும் தளங்கள் அவருடைய நண்பர் தளங்கள் புதிதாக பதிவு எழுதினால் தானாகவே அப்டேட் ஆக வேண்டும் என்பதாக கேட்டிருந்தார்//

இதைப்போன்று நீங்களும் உங்கள் நண்பர் மற்றும் உங்களுக்கு பிடித்த வலைத்தளங்களை உங்கள் தளத்தில் இனைக்க வேண்டுமா....

எனக்கு குருவாகவும் ஆசானாகவுன் நல்ல நண்பராகவும் திகழும் அருமை நண்பர் ஜிஎஸ்ஆர் தளத்திற்கு செல்லவும் http://gsr-gentle.blogspot.com/2010/10/blog-post_25.html

ஒருமுறை சென்று பாருங்கள் நிச்சயம் பயனுள்ள தொழில்நுட்ப தகவல்களைப்பெறலாம்

உங்களுக்கு வலைப்பூவைப்பற்றி அல்லது கணினி சார்ந்த சந்தேகங்கள் ஏதாவது இருப்பின் அவரிடம் மின்னஞ்சல் மூலமாக கேட்கலாம் அதற்குரிய வசதி அவர் தளத்திலேயே உள்ளது

உங்களின் இந்த பதிவிற்கு 2வதாக கருத்துரை வழங்கியிருக்காரே அவரேதான்

பாலா said...

உண்மையிலேயே படத்தில் பல காட்சிகள் ரசிக்கும் படி அமைத்திருப்பார்கள். அந்த செய்தி வாசிப்பாளரை கலாய்க்கும் போது ஜிம் கேரியின் முக பாவனைகள் அட்டகாசமாக இருக்கும்.

எஸ்.கே said...

படம் பார்த்திருக்கிறேன். விமர்சனம் நன்றாக உள்ளது!

வெங்கட் said...

ஐ..!! ஜிம் கேரி..
எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..!!