Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, November 18, 2010

பணம் தின்னிகள் பற்றிய வயித்தெரிச்சல் பதிவு

பூ வாசத்தையும் ஊதுபத்தி வாசத்தையும் எப்போதாவது துர்நாற்றமாக உணர்ந்திருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்களும் இழவு வீட்டுக்கு சென்றிருப்பீர்கள். எனக்கு பிடித்த அத்தை ஒருவர், Bank Employee, பாத்ரூம் சென்றபோது Pressure அதிகமாகி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடைசியில் அநியாயமாக இறந்து போனார். அவர்கள் சேர்க்கப்பட்ட மருத்துவமனை கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற நான்கெழுத்து மருத்துவமனை. ஈரோடு கிளை. ஆனாலும் அங்கே உயிருடன் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே வரும்போது உயிருடன் பெரும்பாலும் வரமாட்டார்கள்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் என் அம்மா வழி மாமா ஒருவருக்கு நெஞ்சு வலி வந்தது. இது பிரபலமான மருத்துவமனை என்பதால் கொண்டுபோய் சேர்த்தார்கள். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு விட்டது என்றார்கள், ஆபரேஷன் செய்யவேண்டும் என்றார்கள், ஊசி போட வேணும் என்றார்கள்.. (ஒரு ஊசியின் விலை 25,000.) இன்னும்  பல டெஸ்ட்டுகள் எடுக்கவேண்டும் என்றார்கள்... சில டெஸ்ட்டுகள் எடுத்தார்கள்.. நிலைமை சீரியஸ் என்றார்கள்...  ஸ்பெஷலிஸ்டுகள் வரவேண்டும் என்றார்கள்... என்னென்ன கதை அடிக்க முடியுமோ அத்தனையும் அடித்தார்கள்.

பார்த்தார் அவர் மகன்! இங்கே ஆகும் செலவை தாக்குபிடிக்க முடியாது என்று சென்னைக்கு கூட்டி செல்ல முடிவெடுத்தார்.  (ஒரு முன்னணி தனியார் தொலைகாட்சியில் கேமரா மேனாக மாமா மகன் இருப்பதால், சென்னை அரசு மருத்துவமனையில் ஏதோ concession உண்டாம்.) அப்போது பார்க்க வேண்டுமே... இந்த மருத்துவமனை ஊழியர்களின் அடாவடியை. மாமாவை விடவே மாட்டேன் என்று ஒரே பிடிவாதம். நான் கூட நெகிழ்ந்து போனேன். பேஷன்ட் மேல் இவ்வளவு பாசமா என்று. ஆனால், மாமா மகன் 'வச்சுகோங்க. ஆனா காசு ஒரு பைசா கூட தர மாட்டோம்' என்று சொன்னதும் தான் விட்டார்கள். (வடை போச்சே...) பின்னர் சென்னைக்கு கூடி வந்து பரிசோதித்ததில் தான் தெரிந்தது அது வெறும் வாயு தொந்தரவு என்று.

இன்னுமொரு உதாரணம்... எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் 93 வயதான தந்தையும் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால், அவசரத்திற்கு என்று அதே மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அப்பாவின் நண்பர் தைரியசாலி, வர்மக்கலை அறிந்தவர், மருத்துவ முறைகளையும் ஓரளவு அறிந்தவர் (மருத்துவம் அல்ல). இந்த முறை நடந்த கூத்து இன்னும் அருமை. முதலில் வைத்தியம் செய்த மருத்துவர் எதற்கோ லீவ் எடுக்க, மருத்துவமனையில் பேஷண்டுக்கு வைத்தியத்தை தொடர வந்தவர் ஒரு கிட்னி specialist. என்னடா இது கேனத்தனமா இருக்கே என்று நண்பர் கேட்க, என்னென்னமோ சமாளித்திருக்கிறார்கள். இவர் நோண்டிநோண்டி கேட்கவும் 'பார்ட்டி தெளிவாக இருக்கிறார் என்று விட்டு விட்டார்கள்'. அதன் பிறகும் ஏனோதானோவென்ற வைத்தியம் தொடர்ந்திருக்கிறது. நண்பர் அங்கிருந்து எப்படியோ வெளியே வந்து வேறு டாக்டரிடம் காட்டி சரிசெய்திருக்கிறார்கள்.

தீபாவளியன்று கீழே விழுந்த அத்தையை, அன்று வேறு மருத்துவமனைகள் விடுப்பாக இருந்த காரணத்தினால் மேற்கூறிய பெருமை வாய்ந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். விலைஏற்றத்தால் இந்த முறை ஊசி விலை 45000 . இருப்பினும் கொடுத்தார்கள். வேலைக்காகவில்லை. அத்தை எங்களை விட்டு போய்விட்டார்.

அதிகமாக fees வாங்கினால் தரமான மருத்துவமனை என்று எந்த முட்டாள் சொன்னது? ஒரு முட்டாள் சொல்லி இருப்பான். ஒரு லட்சம்  முட்டாள்கள் அதை follow செய்கிறார்கள்.
இனியாவது கௌரவத்துக்காக செலவு செய்யாமல், ஒரு மருத்துவமனையில் சேர்க்கும் 
முன், ஏற்கனவே அந்த மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்களின் அனுபவத்தை கேட்டு விட்டு சேருங்கள். ஏனென்றால், தவறான தேர்ந்தெடுப்பால் வீணாவது பணம் மட்டும் அல்ல, உயிரும் கூட தான்....

(பிரிவின் வேதனையில் இருப்பதால், இந்த பதிவில் கொஞ்சம் தெளிவு இல்லை தான். மன்னியுங்கள் நண்பர்களே)

.

25 comments:

LK said...

இந்தக் கொடுமை புகழ் பெற்ற பல மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. உங்களுக்கு ஆறுதல் மட்டுமே சொல்ல இயலும் எங்களால்

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

அதிகமாக fees வாங்கினால் தரமான மருத்துவமனை என்று எந்த முட்டாள் சொன்னது? ஒரு முட்டாள் சொல்லி இருப்பான். ஒரு லட்சம் முட்டாள்கள் அதை follow செய்கிறார்கள்.

எஸ்.கே said...

தாங்கள் சொல்வது போல் நடக்கிறதுதான், மிகவும் வேதனையாக உள்ளது!

அருண் பிரசாத் said...

நான் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் பணி புரிவதால் சில விஷயங்கள் தெரியும்... எல்லா பிரபல மருத்துவமனைகளையும் சொல்ல முடியாது..சில மருத்துவமனைகளில் நடப்பது வேதனைக்குரிய உண்மை...

நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

V.Radhakrishnan said...

மிகவும் வேதனையான சம்பவம். :(

மிகவும் வருந்துகிறேன். தங்கள் அத்தை அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

மாணவன் said...

இப்படியும் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் பெரும் வேதனைக்குரியது,
"(பிரிவின் வேதனையில் இருப்பதால், இந்த பதிவில் கொஞ்சம் தெளிவு இல்லை தான். மன்னியுங்கள் நண்பர்களே)"
உங்களின் வருத்தம் வேதனை பதிவின் மூலமே தெரிகிறது சகோ தங்கள் அத்தை அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

அனைவருக்கும் விழிப்பாய் இந்த பதிவை எழுதியுள்ளீர்கள் நன்றி

LK said...

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_19.html

Anonymous said...

உங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஏதோ படத்தில விஜயகாந்த் படம் என்று நினைக்கிறேன். இறந்து போனவர் உடலுக்கு சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனை பற்றி காட்டியது தான் ஞாபகம் வருகிறது. குடும்ப வைத்தியர் என்று ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். சிகிச்சைக்கு கொடுக்கும் மருத்துவரால் குடும்ப வைத்தியருக்கு சிகிச்சை பற்றிய விளக்கம் கொடுக்க வைக்கப்பட‌ வேண்டும்.

துளசி கோபால் said...

கேக்கவே வருத்தமா இருக்கு:( நம்மூர் மருத்துவ சேவைகள்.....ப்ச்....

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் உறவினருக்கு நடந்தது பற்றி கேட்க வருத்தமாக இருக்கிறது. பணம் கொடுத்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, பணம் கொடுத்து பட்டம் வாங்கி, இது போன்ற மருத்துவமனைகளில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோள் ஆக்கிக்கொண்டுவிட்டனர் இவர்கள். வெட்கம்....

ஹரிஸ் said...

வருத்தமான விடயம்..வெங்கட் நாகராஜ்ன் கருத்தே எனதும்..

அமைதிச்சாரல் said...

படிப்புக்காக செலவழித்ததையெல்லாம், இப்படித்தான் திருப்பி எடுக்கமுடியும்ன்னு நினைச்சிட்டாங்க போலிருக்கு. சேவை மனப்பான்மையே அத்துப்போச்சு :-(

அமைதி அப்பா said...

சிலர் அன்பாக பேசும் மருத்துவர்தான் நல்ல மருத்துவர் என்பார்கள்.
எனக்குத் தெரிந்த மருத்துவர் இப்படி பேசி பேசியே பலரையும் ஏமாற்றி/குணப்படுத்தி உள்ளார்.
(இரண்டும் நடந்தது)

DHANS said...

//ஆனாலும் அங்கே உயிருடன் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே வரும்போது உயிருடன் பெரும்பாலும் வரமாட்டார்கள்//

உண்மை என்னுடைய சகோதரியின் கணவரை இவர்களின் கோவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பின்னர் அவரின் உடலைத்தான் கொண்டு வர முடிந்தது, சகோதரிய்ம் சகோதரரும் மருத்துவர்கள் தான் அதனால்தான் பின்னர் இவர்கள் மேல் ஒரு சந்தேகம் வந்து பின்னர் தெரிந்துகொண்டோம். பிரிவின் வழியில் நன் எழுதிய பதிவு எனது வலைப்பூவில்.

கண்டிப்பாக தாங்கள் குறிப்பிடும் மருத்துவமனையும் நான் குறிப்பிடும் மருத்துவமனையும் ஒன்றுதான். :(

DHANS said...

//ஆனாலும் அங்கே உயிருடன் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே வரும்போது உயிருடன் பெரும்பாலும் வரமாட்டார்கள்//

உண்மை என்னுடைய சகோதரியின் கணவரை இவர்களின் கோவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பின்னர் அவரின் உடலைத்தான் கொண்டு வர முடிந்தது, சகோதரிய்ம் சகோதரரும் மருத்துவர்கள் தான் அதனால்தான் பின்னர் இவர்கள் மேல் ஒரு சந்தேகம் வந்து பின்னர் தெரிந்துகொண்டோம். பிரிவின் வழியில் நன் எழுதிய பதிவு எனது வலைப்பூவில்.

கண்டிப்பாக தாங்கள் குறிப்பிடும் மருத்துவமனையும் நான் குறிப்பிடும் மருத்துவமனையும் ஒன்றுதான். :(

வெறும்பய said...

சொல்லிக்கொண்டே போகலாம் இது போன்ற பணத்திற்காக பிணம் தின்னி பிசாசுகளின் கதைகளை பற்றி..

சாதாரணமானவள் said...

ஆறுதல் சொல்லும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. எல்லா மருத்துவர்களும் எல்லா மருத்துவமனைகளும் இப்படி இல்லை. நல்லவர்களும் உள்ளார்கள் தான். நாம் தான் அன்னப்பறவையாக இருக்க வேண்டும். இனியாவது நாம் விழிப்புணர்வுடன் இருப்போம்.

நான் மருத்துவமனையின் பெயரை குறிப்பிடுவது சரியா தவறா என தெரியவில்லை. எனவே DHANSஇடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

KarthigaVasudevan said...

இப்படி அநியாயமாய் தனியார் மருத்துவமனைகளில் நொந்த சொந்த அனுபவங்கள் இல்லாதவர்களே இல்லை போல!

இப்போதைய பொது மென்டாலிட்டி எதற்கெடுத்தாலும் ஸ்பெசலிஸ்டுகளைப் பார்ப்பது என்பது ,முதலில் ஒரு பொது மருத்துவரிடம் சிகிச்சை எடுத்த பின் அதற்குப் பிறகும் உபாதைகள் தொடர்ந்தால் மட்டுமே அடுத்த கட்ட சிகிச்சைக்குப் போக வேண்டும் ,ஆனால் இப்போது பொது மருத்துவர்களை நாடுவதை விட ஸ்பெசலிஸ்ட் மோகம் பெருகி வருகிறது என்றே சொல்லலாம்.அதனாலான விளைவுகளே இவை.

இதே அறிவுரைகளை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பும் நாம் யோசிப்பது நல்லது.

rajvel said...

வீணாவது பணம் மட்டும் அல்ல, உயிரும் கூட தான்....வேதனை

kavi said...

அதிகமாக fees வாங்கினால் தரமான மருத்துவமனை என்று எந்த முட்டாள் சொன்னது?
இனியாவது கௌரவத்துக்காக செலவு செய்யாமல்,

உண்மை தோழி... இந்த வரிகளும், உங்களின் பதிவுகளும் யோசிக்க வைகின்றது !!...

kavi said...

தோழி!
நான் ஏற்கனவே தங்களுடன் பகிர்ந்து கொண்டது தான்.

சிறிது உடல் நிலை சரியில்லாததால், கிராமத்திலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று இருந்தேன்.
கூட்டத்தை பார்த்து பயந்து விட்டேன். சுமார் 100 பேராவது இருந்திருப்போம்.
கண்டிப்பாக வீடு திரும்ப சாயந்திரம் ஆகிவிடும் என்று தான் நினைத்துக் கொண்டு நின்று இருந்தேன்.
அரை மணி நேரம் கூட இல்லை அனைவருக்கும் மருத்துவம் பார்த்து முடித்தாகி விட்டது.
ஆச்சரியத்துடனே வரிசையில் சென்று கொண்டிருந்தேன்.
2 பெண் மருத்துவர்கள், ஒருவரைக் கூடத் தொட்டு வைத்தியம் பார்க்கவில்லை.. வந்த வேகத்திலேயே நோயாளிகள் சென்று கொண்டு இருந்தர்கள்.
அவர்களின் பேச்சிலும், நோயாளிகளிடத்தில் சிறு அனுசரணை கூட இல்லை.

இலவசம் என்று தான் வருகிறோம்.பிச்சைக்காக என்று வரவில்லையே?.

komu said...

நீங்க சொல்வதுபோல் நடக்கிறத்துதான். நம்மால் வருத்தமும் வேதனைப்படவும் மட்டுமே முடிகிறது, வேறு என்ன செய்ய?

சுபத்ரா said...

கொடுமை!!

எனது அஞ்சலிகள்.

Anonymous said...

என்ன சொல்றிங்க இது ரமணா படத்துல வர கதை மாதிரில இருக்கு. இப்படிலாம் மருத்துவமனை இருந்துச்சுனா மக்கள் எப்படி வாழ்றது.

Srini Vasan said...

போட்ட முதலை பின்னே எப்படி எடுக்கிறது ! என்னுடைய உறவினருக்கு இது போல பணம் செலவாகி , உயிர் போனது தான் மிச்சம் !