Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, November 28, 2010

எதன் எல்லை எது? (சும்மா ஜாலி புதிர்)

எதை பற்றி எழுதுவது என்ற குழப்பத்தில் கடந்த சில நாட்களாக பதிவிட முடியவில்லை. நேற்றுதான் Blog போட ஒரு matter கிடைத்தது. ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஏதாவது ஒரு எல்லை இருக்கும் அல்லவா... அது என்னவாக இருக்கும் என்பதை கொஞ்சம் நகைச்சுவையோடும்  அதே சமயம் 'அட அதுவும் உண்மைதான்' என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்த ஒரு பேப்பரை படிக்க நேர்ந்தது.
உதா:
HEIGHT OF FASHION: வேஷ்டியில் ஜிப் 

இது போன்ற சில கேள்விகளை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள அதை இங்கே பதிவிடுகிறேன். ஆனால் கேள்வி மட்டும். விடை உங்களின் வித்யாசமான சிந்தனைகளை கண்ட பின்.

கேள்விகள் :
1 HEIGHT OF SECRECY?
2 HEIGHT OF ACTIVE LAZINESS?
3 HEIGHT OF LAZINESS?
4 HEIGHT OF CRAZINESS?
5 HEIGHT OF FORGETFULNESS?
6 HEIGHT OF STUPIDITY?
7 HEIGHT OF HONESTY?
8 HEIGHT OF SUICIDE?
9 HEIGHT OF DEHYDRATION?
10 HEIGHT OF HOPE?

கேள்வியை ஆங்கிலத்தில் தருவதற்கு மன்னிக்கவும். சில வார்த்தைகளை தமிழில் எப்படி மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை. craziness-stupidity இவை இரண்டையும் எப்படி வித்தியாசப்படுத்துவது என்று சில பல குழப்பங்களால், ஆங்கிலத்திலேயே தருகிறேன். பதில் தமிழிலேயே இருக்கலாம்.


.

18 comments:

எஸ்.கே said...

What is height of Secrecy?

காலி விசிட்டிங் கார்டுகள் தருவது.

ஹரிஸ் said...

சார்..எனக்கு இங்குலீபிஸ் தெரியாது..

சாதாரணமானவள் said...

உங்களுக்கு இங்கிலீஷ் தான் தெரியாதுன்னு பார்த்தா, சார் ஆ மேடமா னும் தெரியலையே ஹரிஷ் சார். எஸ்.கே சார் உங்க விடை சரி. அப்டியே மத்ததுக்கும் முயற்சி பண்ணிடுங்க.

ஹரிஸ் said...

சார் ஆ மேடமா னும் தெரியலையே ஹரிஷ் சார்.//

சாரினு டைப் பண்ணுறதுக்கு தான் சார்னு டைப் பண்ணீட்டேன் அக்கா..

பயணமும் எண்ணங்களும் said...

HEIGHT OF LAZINESS?மூச்சு விட..

பயணமும் எண்ணங்களும் said...

HEIGHT OF SUICIDE?

சிலர் எழுதும் பதிவு.. நானும்தான்.:)

நா.மணிவண்ணன் said...

1 .மனம் 2 .முழிப்பு வந்தபின்பும் எழுதிருக்காமல் இருப்பது 3.வாழைபழத்தை உரித்து சாப்பிடணுமே என்று நினைப்பது அவ்வளவுதாங்க இதுக்கு மேல மூளை வேலை செய்யமாட்டேங்குது

மாணவன் said...

//3 HEIGHT OF LAZINESS?//

பதிவைப் படித்துவிட்டு கருத்துரை வழங்காமல் செல்வது...

எப்படி நம்ம பதில்...

மற்றவைகளுக்கும் கண்டுபிடிக்கனுமா? அந்தளவுக்கு நம்ம அறிவுக்கு எட்டல..

நீங்களே சொல்லிடுங்கள்
ஏன்னா நான் மாணவன்...
நீங்கள் ஆசிரியை...

LK said...

எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்

Prasanna said...

//HEIGHT OF HOPE?//

வெங்கடேஷ் பிரசாத் பாட்டிங் ஆட வந்த பெறகும் இந்தியா ஜெயிசுடும்னு நம்பறது..

பாலா said...

1 HEIGHT OF SECRECY?
கண்ணை மூடிக்கொண்டு பாஸ்வெர்ட் டைப் செய்வது

2 HEIGHT OF ACTIVE LAZINESS?
டிவி ரிமோட்டை காலால் இயக்குவது

3 HEIGHT OF LAZINESS?
தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்ஸ்டு கால் கொடுப்பது.

4 HEIGHT OF CRAZINESS?
தெரியலை

5 HEIGHT OF FORGETFULNESS?
ஒரு ரூபாய் ஸ்டாம்பு விலை எவ்வளவு என்று கேட்பது

6 HEIGHT OF STUPIDITY?
வீட்டை பூட்டி சாவி பத்திரமாக இருக்க ஜன்னல் வழியாக வீட்டினுள் போடுவது.

7 HEIGHT OF HONESTY?
பேஷன் டிவியில் வரும் ஆடைகளின் அழகை இமை கொட்டாமல் ரசிப்பது.


8 HEIGHT OF SUICIDE?
விஜய் படம் பார்த்து கடுப்பாகி தற்கொலை செய்துகொள்ள டிஆர் படம் பார்ப்பது.

9 HEIGHT OF DEHYDRATION?
பசு மடியில் பால் பவுடர் சுரப்பது

10 HEIGHT OF HOPE?
இந்த படம் கண்டிப்பா ஓடும் என்று ஒவ்வொரு விஜய் படத்துக்கும் செல்வது

kavi said...

HEIGHT OF CRAZINESS

ஒரு விஷத்தை சொல்வது பற்றி பயப்படவில்லை
ஆனால் சொன்ன பின்னாடி என்ன நடக்குமோ என்று பயப்படுவது

சரி என்று நினைக்கிறன்

சாதாரணமானவள் said...

சும்மா சொல்ல கூடாது.. ஒரிஜினல் பதில்களை விட உங்கள் பதில்கள் சூப்பர். அதுவும் பாலா சார்... கலக்கிட்டீங்க. ஒன்பதாவது பதில் மட்டும் என்னிடம் உள்ள பதிலுடன் ஒத்துப்போகிறது.ஆனா மத்த பதில்கள் ஓரிஜினல விட அருமையா இருக்கு,

LK said...

உங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் பெற்றுக் கொள்ளவும்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

சாதாரணமானவள் said...

விடைகள்:

1 HEIGHT OF SECRECY? காலி விசிட்டிங் கார்டு தருவது.

2 HEIGHT OF ACTIVE LAZINESS? காலையில் வாக்கிங் சென்று வீட்டுக்கு வர வாகனங்களில் லிப்ட் கேட்பது

3 HEIGHT OF LAZINESS? குழந்தையை தத்து எடுத்துக்கொள்வது

4 HEIGHT OF CRAZINESS? வெள்ளை தாளை ஜெராக்ஸ் எடுப்பது

5 HEIGHT OF FORGETFULNESS? கண்ணாடியை பார்த்ததும், அதில் தெரியும் உருவத்தை இதற்குமுன் எங்கே பார்த்தோம் என யோசிப்பது.

6 HEIGHT OF STUPIDITY? கண்ணாடி அறையில் உள்ள சாவி துவாரத்தின் வழியாக உள்ளே என்ன நடக்கிறது என பார்ப்பது

7 HEIGHT OF HONESTY? கர்ப்பிணிப்பெண் இரண்டு டிக்கெட்டுகள் வாங்குவது

8 HEIGHT OF SUICIDE? ஒரு குள்ளன் நடைபாதையில் இருந்து ரோட்டில் குதிப்பது

9 HEIGHT OF DEHYDRATION? பசு பால் பவுடரை சுரப்பது

10 HEIGHT OF HOPE? 99 வயது கிழவி லைப் டைம் சிம் கார்டு வாங்குவது.

பயணமும் எண்ணங்களும் said...

கிழவி , குள்ளன் தவிர்த்திருக்கலாம்..

:(

சுபத்ரா said...

இது எனக்கும் forwaded mail-ல் வந்துள்ளது. இருந்தாலும் பாலாவின் பதில்கள் அருமை!

Anonymous said...

craziness - பைத்தியகாரத்தனம்,ஆர்வக்கோளாறு .
stupidity- முட்டாள்த்தனம்.
என்ன அக்கா கரெக்ட் ஆ !