Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, December 13, 2010

நீங்கள் பார்த்த மானஸ்தனுக்கு எத்தனை வயதிருக்கும்?

நீங்கள் பார்த்த மானஸ்தனுக்கு எத்தனை வயதிருக்கும்? ஒரு 20? 40? 60? நான் ஒரு மானஸ்தனை பார்த்தேன். அவன் வயது 6 முதல் 8 க்குள் தான் இருக்கும். பார்க்க பரிதாபமாய், கசங்கிய அழுக்கான உடையில், சோர்ந்த விழிகளுடன், கலைந்த தலையுடன், உண்மையில் பிச்சைகாரன் என்று எண்ணக்கூடிய அத்தனை தகுதிகளுடனும் தான் அவனை முதன்முறையாக கண்டேன்.

            இந்த பதிவை டைப் செய்யும்போது ஒவ்வொரு முறை அவன் இவன் என்று எழுதும்போது மனம் அவர் இவர் என்றே குறிப்பிடும்படி விரும்பியது.  இருப்பினும் அப்படி குறிப்பிடும்போது நம் மனம் பெரிய ஆளாக கற்பனை செய்து விடும் என்பதால் அவன் என்றே குறிப்பிடுகிறேன். 

                சனிக்கிழமை மாலை ஒரு Group discussion.  அதில் கலந்து கொண்டு நானும் நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தான் அந்த பையன் உள்ளே எட்டிப்பார்த்தான். அவனை பார்த்ததும் எங்கள் மாஸ்டர் 'என்ன' என்று கேட்டார். அவன் மிக மெதுவான குரலில் 'அண்ணா... இந்த செல்போன் கவர் வாங்கிக்கங்கண்ணா... பத்து ரூபாய் தான்.' என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான். நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்ததால் எனக்கு சரியாக கேட்கவில்லை. நான் நினைத்தேன், அவன் தன் குடும்ப கஷ்டத்தை சொல்லி பிச்சை கேட்கிறான் என்று. மாஸ்டர் எங்களுடன் பேசிக்கொண்டே தன் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாயை எடுத்து அவன் பாக்கெட்டில் வைக்க போனார்....

          அது தான் தாமதம்.... உடனே அவன் சரேலென தன் சட்டையை இழுத்துக்கொண்டு 'கவர் வேணும்னா வாங்கிகோங்க. சும்மாவெல்லாம் காசு வேண்டாம் ' என்றான். சத்தியமாக நாங்கள் எல்லாம் அதிர்ந்துவிட்டோம். இதை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அந்த தோற்றத்துடன் இருந்த ஒரு பையனிடம் இவ்வளவு விரைவான பதில்... சான்சே இல்ல...

         இந்த தன்மானத்தை பாராட்டவே நாங்கள் ஆளுக்கு ஒரு செல்போன் கவர் வாங்கினோம். நாங்கள் வாங்கிய போது அவனின் வியாபார சுறுசுறுப்பை மிகவும் ரசித்தோம். அந்த பையன் வெளியேறும் நேரம் எங்கள் வகுப்பு தோழி ஒருவர் தாமதமாக வந்தார். அவருக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது. அவர் தனக்கும் ஒரு கவர் வேண்டும் என்று கேட்கவே, போய்கொண்டிருந்த அவனை  மீண்டும் அழைத்து கவர் தர சொன்னோம். பணம் தரும் நேரத்தில் தோழியிடம் 10 ரூபாய் நோட்டு இல்லை. நூறு ரூபாயாக தான் இருந்தது. மாஸ்டர்," கவலை படாதீங்க. பையன்கிட்ட சில்லறை இருக்கு. அவன் கிட்டே வாங்கிக்கலாம் " என்று கூற, அவன் சில்லறை எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவனை பற்றி தோழியிடம் சொன்னேன். அவரும் வியந்து போனார். வேகவேகமாக பணத்தை அடுக்கிஎண்ணிய அச்சிறுவன் தன்னிடம் 70 ரூபாய் மட்டுமே இருந்ததை கூறினான். (90 ரூபாய் தேவை). தோழி 'இருக்கட்டும்பா. மீதிய நீயே வச்சுக்கோ' என கூற, அவன் என்ன செய்வது என்று மிக சில வினாடிகளே யோசித்து அடுத்து செஞ்சான் பாருங்க ஒரு காரியம்...

           டக்குனு 3 கவரையும் 70 ரூபாயையும்  அந்த பெண்ணின் டேபிள் மேல் வைத்துவிட்டு விடுவிடுவென கிளம்பினான். சத்தியமா எல்லாரும் freeze ஆயிட்டோம். சட்டென முதலில் சுதாரித்த மாஸ்டர் அவனை பிடித்து நிறுத்தி அந்த பெண்ணை சில்லறை வாங்கி வந்து கொடுக்க வைத்தார். உண்மைல இத்தன வருஷ வாழ்க்கைல நான் இந்த மாதிரி ஒரு யோக்கியன சந்திச்சதே இல்ல. அந்த நிமிஷம் வரை என்மேல் எனக்கு ஒரு பெருமை இருந்தது. நானும் business செய்வதால் மற்றவர்களுக்கு மீதி காசு தரும்போது பைசா சுத்தமாக தந்துவிடுவேன். (பெரும்பாலும் மற்றவர்கள் amount ஐ round செய்து  விடுவார்கள்.) நான் சகல வசதிகளுடன் இருக்கிறேன். நான் நியாயமாக நடந்துகொள்வதில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த சிறுவன், அவ்வளவு வறுமையிலும் நேர்மையாக இருக்கிறானே... அடுத்தவர் சொத்துக்கு ஆசை படாமல்... அது தான் நேர்மை. அது தான் நியாயம்.

           இதன் பின் தலைவர் பற்றிய விவரங்கள் கேட்டோம். பெயர் நாசர். அரசு பள்ளியில் படிக்கிறார். (வகுப்பு மறந்துவிட்டது. இரண்டாவதோ மூன்றாவதோ. ) சனி ஞாயிறு அன்று இவர்தான் விற்பனை பிரதிநிதி. மற்ற நாட்களில் அப்பா வியாபாரத்தை பார்த்துக்கொள்வார்.

                 இப்பேற்பட்ட நபரை நான் வாழ்வில் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள மொபைலில் படம் பிடித்தேன். 'எங்கே.. காட்டுங்கக்கா...' என்றான். மீண்டும் எடுத்து காட்டினேன். மகிழ்ந்தான். கொஞ்சம் வெளிச்சமும் தரமும் போதவில்லை. அநேகமாக அடுத்த வாரமும் வருவான் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
 இது தான் அந்த மானஸ்தனின் போட்டோ:ஒரு பத்து ரூபாய் பொருளுக்கு தன்மானத்தை இழக்க விரும்பாத இந்த பையன் எங்கே.... பல கோடி ரூபாய்க்கு மானத்தோடு சேர்ந்து எதையும் விற்க தயங்காத அரசியல்வாதிகள் எங்கே...


இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றிகள்.

20 comments:

மாணவன் said...

அருமையான நிகழ்வுகளை பதிவிட்டு நெகிழ வைத்து விட்டீர்கள் அருமை...

மாணவன் said...

//ஒரு பத்து ரூபாய் பொருளுக்கு தன்மானத்தை இழக்க விரும்பாத இந்த பையன் எங்கே.... பல கோடி ரூபாய்க்கு மானத்தோடு சேர்ந்து எதையும் விற்க தயங்காத அரசியல்வாதிகள் எங்கே...//

ஒன்றும் சொல்வதற்கில்லை...

அந்த சிறுவன் நாசர் வாழ்வில் வறுமை ஒழிந்து எல்லாம் வளங்களும் பெற்று நல்முடன் வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

உங்களுக்கு சிறப்பு நன்றிகளும் வாழ்த்துக்களும் இப்படியொரு நெகிழ்வான நிகழ்வை பகிர்ந்தமைக்கு

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

வெங்கட் நாகராஜ் said...

நெகிழ்வான பகிர்வு. திரு நாசர் அவர்களின் [அவர் என்றே சொல்லலாம் தப்பில்லை] பண்பை நினைத்து உவகை கொள்கிறது மனம். இந்த சமுதாயம் அவன் வளரும்போது அவனை களங்கப்படுத்தாமல் இருக்கவேண்டுமே என்ற பயமும் ஓரத்திலே...


நட்புடன்

வெங்கட்.

சங்கவி said...

அருமையான பதிவு... அந்த பையன் நன்றாக படித்து நல்ல நிலமைக்கு வர என் வாழ்த்துக்கள்...

சே.குமார் said...

அருமையான பதிவு... அந்த பையன் நன்றாக படித்து நல்ல நிலமைக்கு வர என் வாழ்த்துக்கள்...

Arun Prasath said...

அப்டியும் பல பேர், இப்டி கூட சிலர்

துளசி கோபால் said...

இவனைப்போல் உள்ளவர்களால்தான் மழையே பொழியுது.நல்லா இருக்கட்டும் நாசர். பெரியவனா மாறும்போதும் இதே ரோசம், தன்மானம் எல்லாம் இருக்கட்டும். தொலைச்சுற மாட்டான்னு நம்புவோம்.அருமையான பதிவு. பாராட்டுகள்.

மண்டையன் said...

ஒரு பத்து ரூபாய் பொருளுக்கு தன்மானத்தை இழக்க விரும்பாத இந்த பையன் எங்கே.... பல கோடி ரூபாய்க்கு மானத்தோடு சேர்ந்து எதையும் விற்க தயங்காத அரசியல்வாதிகள் எங்கே..////////............................................மௌனம் .......................

Anonymous said...

அருமையான பதிவு

kavi said...

வலை தளங்களில் தான் நான் பல அற்புதமான நிகழ்வுகளை எல்லாம் படிக்கிறேன். உங்களுடையதும் இன்று இதில் சேர்ந்து கொண்டுள்ளது. இது போல நிறைய பதிவு போடுங்கள். சத்தியமாகச் சொல்லுகிறேன் இது போல உயிர்ப்புள்ள, நிகழ்வுகள் என்னை உச்சி வரை உற்சாகப் படுத்துகிறது

tamil blogs said...

அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
http://tamilblogs.corank.com/

ஐயையோ நான் தமிழன் said...

மனிதருள் மாணிக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை.
ஆனால் உங்கள் ஊடாக
ஒரு மனித மாணிக்கத்தை புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன்.

எங்கிருந்தாலும் அவ(ன்)ர் வறுமை ஒழிந்து சந்தோசமாய் வாழ இறைவனை துதிக்கின்றேன்

கே.ஆர்.பி.செந்தில் said...

பின்னாட்களில் இந்தப்பையன் மிகச்சிறந்த தொழிலதிபர் ஆவார் ...

சி.பி.செந்தில்குமார் said...

குட் போஸ்ட்

கோமாளி செல்வா said...

உண்மைலேயே எனக்கும் ஆச்சர்யமாகவும் ,
அதே சமயம் ரொம்ப சந்தோசமாவும் இருக்குங்க ..
அந்தப் பையன நினைச்சா .. கண்டிப்பா பெரிய ஆள வருவான் ..!!

வார்த்தை said...

இன்னுமொரு மானஸ்தனை இந்த சமூகம் சீரழிக்காது தோல்வி காணட்டும்

kavi said...

கே.ஆர்.பி.செந்தில் ஜோசியரா ? :)

surya said...

சோ good

சுபத்ரா said...

Salute to Mr.Nazer.. Thanks for sharing.

nakkeeran said...

நாசர் உன்மையன மான யிஸ் தான் வாழ்க வளமுடன் தன்மா னத்துடேன் நட்புடன் நக்கீரன்