'வினை முடித்தன்ன இனியன்' னு யாரோ ஒரு பெரியவர் (அநேகமாக வள்ளுவர்) சொன்னது தப்பே இல்ல. கொடுத்த வேலைய முடிச்சுட்டு ஹப்பானு உக்கார்ற சுகம் எதுலயும் கிடையாது. பணி நிமித்தம் நிறைய ஆணிகள். எனவே தான் பதிவிட முடியவில்லை.
தமிழ்மணத்துல பாத்தா நம்ம பதிவு ஊத்திக்கிச்சு. ஆனா தகுதிவாய்ந்த பதிவுகள் தான் ஜெயிச்சிருக்கு. நல்லது. தேர்ச்சி அடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். பதிவு எழுதி ரெண்டு மாசத்துல ரெண்டாவது ரவுண்டு வந்தது வரை எனக்கு பெருமையே. ஊக்குவித்தவர்களுக்கு நன்றிகள் பல.
ஆங்கில புத்தாண்டு நல்லவிதமாக ஆரம்பித்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடுத்ததா பொங்கல் வருது. சித்தப்பாவ அம்மான்னும் அத்தைய அப்பான்னும் கூப்பிடுபவர்கள் பொங்கலை தமிழ் புத்தாண்டுன்னு சொல்லி கொண்டாடுங்க. நான் சித்திரையை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவேன். எனக்கு பொங்கல் உழவர் திருநாள் தான். யாரோ சொன்னதுக்காகவேல்லாம் இத்தனை நூற்றாண்டு பழக்கத்தை மாத்திக்க முடியாது. டிவி முன்னாடி நாள் முழுவதும் உட்கார நேரம் ஒதுக்குபவர்கள் தயவு செய்து ஒரு ஐந்து நிமிடமாவது நமக்கு உணவளிக்கும் தெய்வம் உழவனை வணங்க ஒதுக்குங்கள். அவன் இல்லாவிட்டால் நமக்கு மாத்திரைகளும், டானிக்குகளும் தான் சாப்பாடு.
நம் அனைவரின் மனத்திலும் உழவர்கள் பற்றிய விழிப்புணர்வே இல்லை என்று தான் தோன்றுகிறது. வெறும் தொழில் துறையும் தொழில்நுட்ப துறையும் வளர்ந்தால் போதுமா? சம்பாதித்து நாம் பணம் என்னும் காகிதத்தையா சாப்பிட போகிறோம்? நான் விவசாயி என்பதை வேதனையுடனும், நான் IT Professional என்பதை பெருமையுடனும் சொல்லும் நிலையில் சமுதாயம் இருப்பது சரியல்ல. உங்களை ஒரு விவசாயியாக எண்ணி கண்ணை மூடி சிறிது நேரம் அவன் வாழ்க்கையை virtual ஆக வாழ்ந்து பாருங்கள். பகீரென்று இருக்கும். அப்படி ஒரு ஸ்திரமற்ற நிலையில் அவன் வாழ்வது நமக்கு புரியும். நாம் அதற்கு என்ன செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். மனம் இருந்தால் உங்களுக்குள்ளும் ஓராயிரம் வழிகள் தோன்றும்.
உதாரணமாக,
1. நீங்கள் வேலையில் சேர ஒருவேளை உங்கள் விவசாய நிலம் விற்கப்பட்டிருக்கலாம். நீங்கள் இப்போது ஒரு நிலத்தை வாங்கி குத்தகைக்காவது விட்டால் விவசாயம் தெரிந்தவன் தானும் பிழைத்து நம்மையும் வாழ வைப்பான். ஷேர் போன்ற நிச்சயமற்ற விஷயத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை. அதில் குறிப்பிட்ட சதவீதம் வருங்கால சந்ததிக்காக விவசாயத்தில் முதலீடு செய்யலாமே. நீங்கள் மட்டும் சாதம் சாப்பிடுவீர்கள். உங்கள் பேரக்குழந்தைகள் மாத்திரைகள் சாப்பிட வேண்டுமா?
2. உங்களுக்கு விவசாயி யாரேனும் நண்பனாக இருந்தால் அவர்கள் கஷ்டமான நிலையில் இருந்தால் அவர்கள் தொடர்ந்து விவசாயம் நடத்த at least loan apply செய்தல், அரசின் புதிய சலுகைகளை பெறும் வழிமுறைகள் போன்ற சிறு சிறு உதவிகளாவது செய்து கொடுக்கலாம்.
3. குழந்தைகள் பெரிதானால் டாக்டர், வக்கீல், என்ஜினியர், டீச்சர் போன்ற தொழில்களுடன் விவசாயி என்பதையும் கௌரவமான தொழிலாக பார்க்க வையுங்கள்.
அந்த தொழிலின் பெருமையை உணர்த்துங்கள்.
4. ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயது வரை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சம்பாதித்து விட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்க உக்கார்ந்து கொள்ளுங்கள். உண்மையாகவே வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கலாம். எனக்கு விவசாயம் தெரியாது என்று கூறாதீர்கள். நாம் ஒண்ணும் பிறக்கும்போதே கம்ப்யுட்டர் கற்றுக்கொண்டு வரவில்லை. ஆனால் இப்போது தட்டு தட்டென்று தட்டவில்லையா? விவசாயமும் அப்படித்தான். உங்கள் கடைசி காலத்தில் ஒரு நகரத்தின் டிஸ்கோதே பப்பில் அல்லது முதியோர் இல்லத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சியையும், ஒரு பசுமையான வயல்வெளியில் உட்கார்ந்திருக்கும் காட்சியையும் நினைத்துப்பாருங்கள். எது சுகம் என தெரியும்.
5. இது எனக்கு உட்பட கொஞ்சம் சிரமம். ஆனாலும் மனம் இருந்தால் செய்யலாம்தான். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உங்களுக்கு இருந்தால் அவர்களில் ஒருவரை விவசாயி ஆக்கலாம். எல்லோரும் அலுவலகத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்று சட்டம் இல்லையே. விவசாயத்துறையின் மேன்மையை விளக்கி, உங்கள் குழந்தைக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் அவர்கள் விவசாயி ஆக விரும்பினால் தடுக்க வேண்டாமே...
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது 'HAPPY PONGAL' என குறுஞ்செய்தி அனுப்புவதற்காக அல்ல. விவசாயிகளை நினைப்பதற்காகவும் தான். உழவன் சூரியனுக்கு நன்றி சொல்லட்டும். நாம் உழவனுக்கு நன்றி சொல்வோம்.
இந்த விவசாய நாட்டின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் என் போன்ற சாதாரண பெண்ணுக்கே ஐந்து ஐடியாக்கள் தோன்றினால் இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருக்கும் எத்தனை ஐடியாக்கள் தோன்றும். அவற்றையும் முடிந்தால் இங்கே பதிவு செய்யுங்கள். பதிவு செய்வதை விட அவற்றை follow செய்யுங்கள். நம் வாரிசுகளுக்காகவாவது...
.
19 comments:
அருமையான பதிவு
நல்ல பதிவு....
வேற என்ன சொல்லுறதுனு தெரியல...
நீங்க சொல்லுறது நல்லாதான் இருக்கு, நடைமுறைக்கு சாத்தியமா? வீம்பு சாத்தியம்னு சொன்னாலும் மனசாட்சிய அடகு வெச்சிட்டு பொய் சொல்ல முடியல....
பார்ப்போம்
//உங்களுக்கு விவசாயி யாரேனும் நண்பனாக இருந்தால் அவர்கள் கஷ்டமான நிலையில் இருந்தால் அவர்கள் தொடர்ந்து விவசாயம் நடத்த at least loan apply செய்தல், அரசின் புதிய சலுகைகளை பெறும் வழிமுறைகள் போன்ற சிறு சிறு உதவிகளாவது செய்து கொடுக்கலாம்.//
மிஹவும் சரியா சொன்னீங்க சகோ நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன்வரவேண்டும்
//பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது 'HAPPY PONGAL' என குறுஞ்செய்தி அனுப்புவதற்காக அல்ல. விவசாயிகளை நினைப்பதற்காகவும் தான். உழவன் சூரியனுக்கு நன்றி சொல்லட்டும். நாம் உழவனுக்கு நன்றி சொல்வோம்//
சிறப்பாக சொல்லியிருக்கீங்க, நன்றி சொன்ன உங்களுக்கும் சிறப்பு நன்றிகள் பல...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
சொன்னது எல்லாம் சரி தான்... ஆனா பிரக்டிகல்லா செய்ய முடியுமா தெரில....
முதல் மூன்று ஐடியாக்கள் possible தானே நண்பர்களே... மேலும் இந்த பதிவை படிக்கும் நண்பர்கள் முயற்சியாவது செய்யலாமே...முயலாமல் இயலாதென்பது தவறல்லவா...
குத்தகைக்கு யார் வாங்குவாங்க??. வாங்கி என்ன பண்றது?? இங்க மஞ்சள் வெட்டுறதுக்கு கூலி எவ்வளவு தெரியுமா ௦௦ 500 ரூபாய்..!!!! எங்க போய் விவசாயி சொல்லி அழறது ??. நாங்க போட்டு இருக்கறது 20 செண்டு நாத்து ( நெல்லு). அதுக்கு அறுப்பு கூலி எவ்ளோ தெரீமா??? 2000 ?? அறுவடை ஒரு பொதி தான், சோத்துக்கு சரி, வாங்கின கடன எப்டி கட்றது?? வெங்காய வெல வானத்து அளவுக்கு ஏறி இருக்கு. எங்க காட்ல அடி மாட்டு வெலைக்கு வாங்கிட்டு போறாங்க. நாங்களே போய் விக்கலாம் !! ஆனா அங்க ஒரு கூட்டமே இருக்கு அடி வெலைக்கு தான் வாங்குவாங்க. எல்லாமே சரிங்க. யாரு விவசாயம் பண்ணுவாங்க ஒரு ஆளு கூலி எவ்ளோ தெரிமா? 200 . இதுல போய் எப்டி வெல்லாம எடுத்து கடன அடைச்சி புள்ள குட்டிய படிக்க வச்சு கல்யாணம் பண்ணி கொடுக்கறது ?????
விவசாயம் பாக்க எல்லாம் 40 வயசுல உக்காந்துக்க முடியாது. அதுக்கு நீங்க காசு நெறைய வச்சிருந்தா கூலிக்கு, முட்டுவளிக்கு எல்லாம் சமாளிச்சுக்கலாம் இல்லாது போனால் தலைல துண்டு தான். எல்லாரும் தொழில் சாலைக்கு தான் வேலைக்கு போறாங்க. விவசாயம் பார்க்க நாதி அற்று தான் நிற்கிறோம். யாருமே வேலைக்கு வறது இல்ல. சரி சரி இயந்திரம் பயன் படுத்துங்கனு சொல்றீங்களா?? காசுக்கு எங்க போறது? வாங்கில கேக்க சொல்றீங்களா? அவங்க அந்த பத்திரம் கொண்டா, இந்த பத்திரம் கொண்டாங்கரங்க .. இங்க சோத்துக்கே திண்டாடுறோம் .
//பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது 'HAPPY PONGAL' என குறுஞ்செய்தி அனுப்புவதற்காக அல்ல. விவசாயிகளை நினைப்பதற்காகவும் தான். உழவன் சூரியனுக்கு நன்றி சொல்லட்டும். நாம் உழவனுக்கு நன்றி சொல்வோம்//
உண்மை ...... நல்ல பதிவு ...........
உண்மைதான் கவி. விவசாயம் சம்பந்தமான விழிப்புணர்வு நம் சமுதாயத்தில் இல்லாததால் தான் இந்த நிலை. அரசாங்கம் விதிக்கும் விலை விவசாயிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதல்ல. அதனால் தான் போட்ட முதலை எடுக்க முடியாமல் விவசாயி வாடுகிறான். அவர்கள் போராட்டம் வெளிச்சத்திற்கு வரவில்லை என்பதால் தான் நொந்து போய் தன் பிள்ளைகுட்டிகளை விவசாயம் பார்க்க விடாமல் வேறு வேலைக்கு துரத்துகிறான். இதை கண்டும் காணாமல் நாம் போனால் நஷ்டம் நமக்கு தான். இது அரசாங்கமும் சாதாரண மக்களாகிய நாமும் கவனித்து கைதூக்கி விடவேண்டிய துறை.
வாங்க வந்து கலந்து ஆலோசிங்க. ஆலோசனை பண்ணுங்க பண்ணுங்க, பன்னுவேங்க ஒரு 10 வருஷம்???? ஆமா தானே???. இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்றாரு சொல்றாரு பல வருசமா.... உங்க கேவுருமேண்டு கேடுச்சுன்களா ???. என்ன பண்ணினிங்க???.
வாங்கின கடன் இருக்கே? ஆள் பற்றாக்குறை தான் இங்கே தல விரித்து ஆடுது. ஒரு குடும்பமே போய் வெள்ளாம பாக்க முடியாது. எல்லாமே கொடுக்கும் கேவுருமேண்டு . எங்க கேள்வி மொதல்ல கொடுங்க அப்றோம் பாக்கலாம். கண் முன்னே எங்கள் விவசாயம் அழிந்து போய்க் கொண்டு இருக்கிறது. நீங்கள் கை தூக்கி விட்டாலும் எழுந்து நிற்கும் நிலையை தாண்டிவிட்டோமே??? .
நிச்சயம் மாற்றம் வரும். நம்பிக்கை இருக்கு. ஏன் சொல்றேன்னா நாளாகி சோத்துக்கு வழி வேணுமே. நிச்சயம் வழி கிடைக்கும் வெளிச்சம் வரும். காத்திருக்கிறோம்.
எனக்கு உங்கள் வாதம் புரியல. நான் நாம எல்லாரும் விவசாயத்தை கேவலம்னு ஒதுக்காதீங்கனு சொல்லிட்டு இருக்கேன். நீங்க அவங்க நிலைமை மோசமா இருக்கு, அரசாங்கம் கூட உதவ மாட்டேங்குதுன்னு நெகடிவ் விஷயங்களை சொல்லி பயமுறுத்தறீங்க. நீங்க விவசாயத்துக்கு சப்போர்ட் பண்ணாட்டியும் பரவாயில்ல. சப்போர்ட் செய்யலாமோனு நினைக்கறவங்கள பயமுறுத்தறீங்க. நீங்க விவசாயம் பண்றவங்கள கேவலமா நினைக்காதீங்க என்பது தான் என் பதிவு. என் வேண்டுகோள். புரிந்துகொள்ளுங்கள் தோழி.
இல்லை இல்லை தோழி. எதிர்மறையான விஷயம் அல்ல இது.நான் சொன்னதெல்ல்லாமே என் கண் முன் நடக்கும் நிஜம். ஒவ்வொரு விவசாயியும் இப்பொழுது எதிர் கொண்டிருக்கும் உண்மைகள். ஏதோ கேட்டதை இங்கே பதிவிட வில்லை. அனுபவத்தில் கண்டுகொண்டிருப்பதில் முக்கிய பிரச்சினைகளை தான் பதிவிட்டுள்ளேன். நான் சொன்னது எல்லாம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எதிர்மறை கருத்தை மட்டும் கூறுவதாக இருக்கலாம் ஆனால் நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை இது.
நான் ஒரு முழு விவசாயக் குடும்பத்தில் இருக்கும் பெண். நங்கள் இப்பொழும் விவசாயம் தான் பார்க்கிறோம். மேற்சொன்ன அனைத்தும் எங்கோ யாரோ சந்தித்த நிலை இல்லை. எங்கள் குடும்பம் சந்திதுக் கொண்டிருக்கும் பிரச்சினை. என் கண் முன்னே நாங்கள் படும் கஷ்டம் மட்டுமே தான் நான் சொன்னேன். அனைத்துமே உண்மை உண்மை. உண்மையை சொன்னால் எதிர்மறையாக, பையை ஏற்படுத்துவதாக உங்களுக்கு இருந்தால் இதில் சீரழியும் எங்களுக்கு எப்படி இருக்கும் ??. இன்னொரு விஷயம் இது கடந்த 15 க்குள்ளாக மட்டுமே . ஆனால் மற்றம் விரைவில் வரும். இங்கே விலைவாசி அப்படித் தானே போய்க் கொண்டிருகிறது மாற்றம் வராமல் இருக்க வேறு வழியுமில்லை.
நீங்க மறுபடியும் புரிந்துகொள்ளவில்லை தோழி. உங்கள(விவசாயிகள) யாருமே சரியா கண்டுகொள்ளவில்லை என்பதை உணர்த்த தான் இந்த பதிவு. நீங்க கஷ்டப்படறீங்க அப்டிங்கறது மத்தவங்களுக்கு எப்படி தெரியும்? லட்சத்துக்கு பத்து பேராவது இதை பத்தி சொன்னாதான தெரியும். இந்த பதிவ நான் போட்டதுக்கு காரணம் ஆனந்த விகடன். நாளைக்கு இத பத்தி வேற யாராவது பேச இந்த பதிவு காரணமா இருக்கலாம். நீங்க வாயடைச்சு போய் நிக்கற போது உங்களுக்காக நாங்க குரல் குடுக்க முயற்சியாவது செய்யறோம். யாரும் உங்கள கண்டுக்கல அப்படிங்கறத உங்க ப்ளாக் ல எழுதுங்க. உங்கள் கவிதைகள் யாரையாவது பாதிப்பதை போல, உங்கள் சமூக கோபமும் ஏதோ ஒரு விதத்தில் அது யாரையாவது பாதிக்கும். ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்படலாம். Let's cross our finger.
யோசித்துப் பார்கிறேன். நீங்கள் சொல்ல வரும் கோணத்தில் இருந்து.... ஆம், தவறாக புரிந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்ல வரும் செய்தியை.
\\\நாங்க குரல் குடுக்க முயற்சியாவது செய்யறோம்.\\\\
//சித்தப்பாவ அம்மான்னும் அத்தைய அப்பான்னும் கூப்பிடுபவர்கள் பொங்கலை தமிழ் புத்தாண்டுன்னு சொல்லி கொண்டாடுங்க. நான் சித்திரையை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவேன். எனக்கு பொங்கல் உழவர் திருநாள் தான். யாரோ சொன்னதுக்காகவேல்லாம் இத்தனை நூற்றாண்டு பழக்கத்தை மாத்திக்க முடியாது.//
இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு. அனைவரும் இவரை பின்பற்றுங்க. இல்லையெனில் நம்பலாம் எதோ ராஜா :) காலத்துல வாழ்ந்த மக்கள் ஆகிடுவோம்.
இதை படிக்கும் பொது நான் சில மாதங்களுக்கு முன் படித்த Business today- An article on indian agriculture industry. நினைவில் வருது, இந்தியவின் உணவு பற்றாகுறை வரும் காலங்களில் அதிகரிக்கும் பட்சத்தில், எல்லா விவசாய நிலமும் ரியல் எஸ்டேட் பிசினஸ் காரணமாக பிளாட்ஆக மாற்றம் அடைந்திருக்கும். so people who have farming land will be the richest in future. now politicians and business man spoil the country for their needs, to meet the present demands and for being success in business with out any vision. so the root of the sustainability is damaged. Few multinational agro business companies have started procuring lands in african and latin american nations for meeting the food demand of nations. இதுல உர ஊழல், மழை, வெள்ளம், வறட்சி. நம்ப முதல்வர் குடுக்கற 1 ருபாய் அரிசி எத்தன நாட்களுக்கு பார்போம். இதனால உழைப்பாளிகள் சோம்பேறிகள் ஆகிறார்கல் என்று சொல்றாங்க. சோ நோ விவசாயம், அதிக விலை வாசி அண்ட் நம்ப எல்லாருக்கும் நோ பூவா மிக விரைவில் :)
நீங்கள் கூறுவது நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை சகோ...
இன்றைய விவசாயத்தின் நிலைமை ::
நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....
உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....
பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....
சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....
விவசாயி அழிந்துவிட்டால்
உன்னகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....
நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....
கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவ்வில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....
ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....
நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....
iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?
விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _ உண்மை
இன்று புரியாது. ஆனால்
ஒரு நாள் புரியும்
நன்றி :- Tamil 24x7 Posts
Post a Comment