வி.ஏ.ஓ., குரூப் 1 , குரூப் 2 என வரிசையாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவினரும் ஆர்வமுடனும், நம்பிக்கையுடனும் அப்ளை செய்கிறார்கள். கலந்துகொள்ளும் பலர் விண்ணப்பத்தாளை பூர்த்தி செய்வதிலேயே போதிய கவனமுடன் இருப்பதில்லை. தன்னுடைய நண்பர்கள் எதை தெரிவு செய்கிறார்களோ அதையே தாங்களும் தெரிவு செய்தல் என தொடங்கி பல பல சொதப்பல்கள் செய்கிறார்கள்.
நண்பர்களே.... எழுத்து தேர்வில் நீங்கள் ஜெயிப்பது மட்டும் வேலை வாங்கி தராது. இந்த எழுத்துத் தேர்வில் ஜெயித்த பிறகுதான் நீங்கள் உண்மையான தேர்வுக்கு அனுப்பப்படுகிறீர்கள். யோசித்து பாருங்கள். நீங்கள் ஒரு லோக்கல் கம்பனியில் வேலை கேட்டு போகும்போது அவர்களுடன் உங்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுகிறது. கம்பெனி காரர்கள் வந்திருக்கும் 25, 30 பேரில் உங்களை தேர்ந்தெடுப்பது சுலபம். ஆனால் அரசாங்க வேலைகள், வங்கிப்பணிகள், கார்பொரேட் வேலைகளுக்கு பல்லாயிரம் பேர் விண்ணப்பிப்பதால், அவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அழைத்து தெரிவு செய்வது மிக மிக கடினம். எனவே தங்களுக்கேற்ற ஆட்களை வடிகட்டி எடுக்கும் வேலைதான் இந்த written exams. இந்த எழுத்து தேர்விலும் வடிகட்டசரியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யப்படாத படிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன. எனவே ஒரு பொதுவான TNPSC Application form ஐ எப்படி fillup செய்வது என்று அடிப்படை விஷயங்களை குறிப்பிடுகிறேன். உங்களில் ஒரு சிலருக்காவது இது உதவலாம்.
> விண்ணப்பத்தாளை வாங்கியதுமே முதல் வேலையாக இங்க் பேனாவில் உங்கள் கையொப்பத்தை போட்டுவிடுங்கள். பெரும்பாலானவர்கள் எல்லாம் பூர்த்தி செய்துவிட்டு, கையொப்பமிட மறந்துவிடுவார்கள்.
> விண்ணப்பத்தாளை நிரப்ப ஆரம்பிக்கும்போது Ballpoint pen, ஒரு blade, ஒரு HP பென்சில், ஷார்ப்னர், ஒரு எரேசர், உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, நீங்கள் கடைசியாக படித்த படிப்பின் Provisional அல்லது Degree certificate மற்றும் இந்த பணி சம்பந்தமான செய்தித்தாள் விளம்பரம் இவற்றை பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள்.
> விண்ணப்பத்தாளுடன் தகவல் சிற்றேடும் தருவார்கள். அதில் நான்காவது பக்கத்தில் ஒரு சாம்பிள் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும். அதை பின்பற்றி (காப்பி பண்ணிடாதீங்க மக்களே...) உங்கள் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். என்னைகேட்டால், முதல் முறை விண்ணப்பிப்பவர்கள் 11 ம் பக்கம் ஒரு காலி விண்ணப்பம் இருக்கும். அதை பூர்த்தி செய்து அதை போல ஒரிஜினலில் நிரப்பலாம்.
> பொதுவாக பின்தங்கிய வகுப்பினருக்கு முதல் மூன்று முறை இலவசமாக அரசு தேர்வுகள் எழுதும் சலுகை தரப்படுகிறது. மற்றவர்களுக்கு முன்ன பின்ன இருக்கலாம்.
> தேர்விற்கு தேர்ந்தெடுக்கும் பாடங்கள் என்பது மிகவும் முக்கியம். நீங்கள் +2 வரை தமிழில் படித்திருந்தால், கவலையே படாமல் பொது தமிழ் எடுத்து விடுங்கள். அதுதான் உண்மையில் மிக சுலபம்.
> விருப்பப்பாடம் என்பது நீங்கள் பட்டப்படிப்பு படித்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த எழுத்து தேர்வில் நீங்கள் தேர்வு பெற்றவுடன் நடக்கும் இன்டர்வியூவில் உங்களிடம் நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்ப பாடத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படும். எனவே நீங்கள் எந்த துறையில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியுமோ அந்த துறையை விருப்ப பாடமாக தேர்ந்தெடுங்கள்.
> எல்லாவற்றையும் விட முக்கியம் பதவி முன்னுரிமை. பெரும்பாலானோர் தங்கள் தகுதி- பதவிக்குரிய தகுதி இரண்டையும் கவனிக்காமல், அதிக அளவில் எந்த துறையில் ஆட்கள் தேவையோ அதற்கு விண்ணப்பிக்கிறார்கள். இது மிக மிக தவறு. அதிக ஆட்கள் கேட்கும் துறைகளில் நிச்சயமாக குறிப்பிட்ட படிப்பிற்கோ, தகுதிக்கோ முன்னுரிமை தருகிறார்கள். இன்னும் சில பதவிகள் மாற்று திறனாளிகளுக்கோ, பழங்குடியினர் போன்றோருக்கோ மட்டுமே தரப்படுகிறது. and என்பதற்கும் or என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை மனதில் நிறுத்தி பதவியை தேர்ந்தெடுங்கள். உங்கள் தகுதிக்கென ஒதுக்கப்பட்ட பதவிகளில் குறைந்த இடமே இருக்கலாம். ஆனால் அதற்கு போட்டி மிக மிக குறைவாக இருக்கும். உதாரணமாக நூறு காலியிடங்கள் உள்ள பதவிக்கு ஐம்பதாயிரம் பேர் போட்டி இடலாம். ஆனால் பத்து காலி இடங்கள் உள்ள இடத்திற்கு நூறு பேர் மட்டுமே போட்டி இடலாம்.
>> அடுத்ததாக ஆட்கள் தேர்ந்தெடுக்கும் முறை. சில பதவிகளுக்கு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு இரண்டுமே தேவைப்படுகிறது. ஆனால் சில பதவிகளுக்கு எழுத்து தேர்வு மட்டுமே போதுமானதாக உள்ளது. இதை பெரும்பாலானோர் கவனிப்பதே இல்லை.
>> மேலும் , தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவை தேவைப்படும் பதவிகளுக்கு சில சமயம் சலுகையும் வழங்கப்படுகிறது. அதாவது, அந்த பதவிகளுக்கு அப்ளை செய்யும்போது நிர்ணயிக்கப்பட்ட தகுதி இல்லாவிட்டாலும், நீங்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது அந்த தகுதி பெற்றிருக்க வேண்டும் என. ஸோ, நீங்கள் இதன்மூலமும் கணிசமான வெற்றி வாய்ப்பை பெற முடியும்.
> இணைக்க வேண்டிய சான்றுகள் பிரிவில் நீங்கள் Date of Birth, Educational qualification for adequate knowledge in Tamil, HSC மூன்றுக்குமே பொதுவாக +2 சர்டிபிகேட் ஜெராக்சை வைத்தால் போதுமானது. உங்கள் அதிக பட்ச கல்வி தகுதிக்கான சான்றிதழ் ஜெராக்ஸ், ஜாதிச் சான்றிதழ் ஜெராக்ஸ், நடத்தை சான்றிதழ் கட்டாயம். மற்றவை உங்கள் தகுதிக்கேற்ப இணைக்கலாம். இணைத்துவிட்டு அவற்றையும் ஷேட் செய்யவும். இவற்றில் நடத்தை சான்றிதழ் தவிர, மற்ற அனைத்தும் ஜெராக்ஸ் என்பதால் அனைத்திலும் 'True Copy Attested' என்று எழுதி உங்கள் கையொப்பமிடவும்.
இதை ஒரு காப்பி ஜெராக்ஸ் எடுத்துகொண்டு ரெஜிஸ்டர் தபாலில் அனுப்பி விடவும்.
அவ்வளவு தான். இந்த பதிவு எனக்கு தெரிந்த அடிப்படை டிப்ஸ்களை உள்ளடக்கியது.இன்னும் நன்றாக விளக்குபவர்கள் விளக்கலாம்.
12 comments:
பலருக்கும் உபயோகம் ஆகும்
உபயோகமான நல்ல பகிர்வு. நன்றி!
நல்லா தெளிவாவே விளக்கியிருக்கீங்க அருமை சகோ,
பயனுள்ளதாக இருக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...
உபயோகமான பகிர்வு..
good job.sorry post
தலைவா கொன்னுட்ட போ, பரந்த மனதும் விரிந்த அறிவும் உள்ள உங்களின் சேவை தொடர வாழ்த்துகிறேன்
என்ன ஒரு நல்ல எண்ணம்! பகிர்வுக்கு நன்றி சாதாரணமானவள்!
க்ரூப்-1 அப்ளை பண்ணிட்டேன். க்ரூப்-2 க்கு இனிதான் பண்ணனும்.
விருப்பப் பாடம் தேர்ந்தெடுத்து பரீட்சை எழுதும் முறை முன்பு இருந்தது (யுபிஎஸ்சி போல). இப்பொழுது இல்லையென்று நினைக்கிறேன். சோ, அந்தப் பிரிவை விட்டுவிடலாம் அல்லவா?
பிறந்த சான்றுக்குப் பொதுவாக 10-ம் வகுப்புச் சான்றிதழையே கேட்கிறார்கள்.
சரி, தேர்வுக்குத் தயாராவது எப்படி..என்று ஒரு பதிவு போடலாமே :-)
இன்னொரு விஷயம்... தமிழ் மீடியம் படித்தவர்களுக்குப் பொதுத் தமிழ் எவ்வளவு ஈஸியாக உள்ளதோ, அதே போல் ஆங்கில வழிக்கல்வி படித்தோர்க்கு ஆங்கிலம் மிகச்சுலபமாக இருக்கிறது..! எனவே மாதிரி வினாத் தாள்களைப் பார்த்துவிட்டு முடிவெடுப்பது மிகவும் நல்லது. (ஆங்கிலத்தில் Grammar தெரிந்தால் போதுமானது. தமிழில் கேட்கப்படும் Books & Authors எல்லாம் வராது என நினைக்கிறேன். எனவே முழு மதிப்பெண்கள் (100%) கூட எடுக்க முயற்சிக்கலாம்)
பகிர்வுக்கு நன்றி தோழி...! All the Best for U and all friends.
நன்றி எல்.கே., வெங்கட் நாகராஜ், வெறும்பய, அருண் பிரசாத்,
@ மாணவன்
என்னங்க... டெம்ப்ளேட் கமான்ட் இல்லையா?
@விஜய்
தலைவா இல்லைங்க... வேணும்னா தலைவின்னு சொல்லிகோங்க (நமக்கு இந்த விளம்பரமே புடிக்காதுப்பா)
@ சுபத்ரா
நன்றிங்க. இன்னும் விருப்ப பாட தேர்வு இருப்பதாகத்தான் அறிகிறேன். date of birth க்கு 10th, +2 இரண்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழில் நூல் - நூலாசிரியர்கள் கேட்கிறார்கள். தேர்வுக்கு தயாராவது பற்றிய பதிவு பற்றி யோசிக்கிறேன் :-)
ஹால் டிக்கெட் இணையத்தில் டவுன் லோடு செய்ய ஏதேனும் வழி இருந்தால் விளக்கவும் தயவுசெய்துநன்றி-நண்பன்
சாரி... அது பற்றி எனக்கு எதுவும் விவரமாக தெரியவில்லையே நண்பா..
பகிர்வுக்கு நன்றி....... எதையும் சாதாரணமா விட்டுட கூடாது....
Post a Comment