அப்படினா ஒரு வெளிநாட்டு தியானம். இந்த பதிவு இந்த தியானம் சம்பந்தமான தியரி கிளாஸ் அல்ல. உலகம் முழுதும் நான்கு மில்லியன் மக்கள் கற்ற இந்த தியானம் சம்பந்தமான சில அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.நம்மூரில் இந்த தியானம் அவ்வளவாக விளம்பரப்படுத்தப்படவில்லை. எனவே ஒரு மிகச்சிறிய அறிமுகம், மிகச்சில அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த பதிவு. இதில் குறிப்பிடுபவை பொய்யான, நம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகள் அல்ல. நிஜத்தில் நடந்தவையே. இந்த பதிவு யாரேனும் ஒருவருக்கேனும் பயனுள்ளதாக இருக்கட்டும் என்ற வேண்டுதலுடன் இந்த பதிவை இடுகிறேன்.
நான் கற்றதிலேயே இது ஒரு வித்யாசமான தியான முறை. நான் கற்றிருந்த எல்லா தியானங்களிலும் மன அமைதிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ஆனால், இந்த தியானத்தில் practical life க்கு தேவையான விஷயங்களையும் பெற்றுக்கொள்ள முடிவது உண்மையில் 'அதிசயம்'. எனவே தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதை தயவுசெய்து வேறெந்த தியான முறையுடனும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தியான முறைக்கும் தனிதனி வழிமுறைகளும், சக்திகளும் உண்டு. மறுக்கவே முடியாது. உங்களுக்கு வேறு ஏதேனும் தியான முறை பரிச்சயம் ஆகி இருந்தால், தயவுசெய்து அதிலிருந்து இதை வேறுபடுத்தி கொள்ளுங்கள். அதே போல இது எந்த மதத்திருக்கும் உரியதல்ல. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைத்து மதக்காரர்களும் கற்று பயன் பெறுகிறார்கள்.
அறிமுகம்:
இந்த தியான முறை ஜப்பானில் இருந்து வந்தது. மிகாவ் உசுயி என்பவர் 21 நாட்கள் ஒரு மலைமீது கடும் தவம் செய்தபின் குவான் இன் எனும் தேவதை அவருக்கு இந்த தியான முறையை போதித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படை கான்செப்ட் நம் உடம்பில் உள்ள சக்கரங்கள் என்னும் கண்ணுக்கு தெரியாத சூட்சமமான விஷயம். Kirlian Photography என்னும் முறையில் எடுக்கப்பட்ட இதுகுறித்த படங்களை காணலாம். இந்த தியானத்தின் மூலம் நம் உடலில் உள்ள சக்கரங்கள் தூய்மைபடுத்தப்பட்டு, சக்தி ஊட்டப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனிப்பட்ட ஒரு சப்தம், ஒரு நிறம், ஒரு வடிவம், ஒரு உறுதிமொழி உள்ளது. அவற்றை கொண்டு நம்மையும் ஆன்ம ரீதியாக சரி செய்துகொண்டு, நம் விருப்பங்களையும் அடைய முடிகிறது. மேலும் சில சின்னங்களும் இதற்கு துணை புரிகின்றன.
ரெய்கி செய்பவர்கள் ஐந்து கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். அவை:
இன்று மட்டும்: கோபப்படாதீர்
இன்று மட்டும்: கவலைப்படாதீர்
இன்று மட்டும்: நன்றியுடன் இருங்கள்
இன்று மட்டும்: ஒருமைப்பாடுடன் பணி புரிந்திடுங்கள்
இன்று மட்டும்: மற்றவர்களிடமும் தன்னிடத்திலும் அன்பாக இருங்கள்
இந்த ஐந்தும் ரெய்கி செய்பவர்கள் மட்டுமலாது அனைவருமானது என்பது உங்களுக்கே தெரியும்.
என் குரு:
ரெய்க்கியையே பலர் கற்பித்தாலும், காசு ஆசை இல்லாத, ஸ்டுடண்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குரு இந்த காலத்தில் அரிது. வெளியில் மற்ற குருமார்கள் ஐந்தாயிரம் பத்தாயிரம் என வாங்கிக்கொண்டிருக்கையில், ஈரோட்டில் உள்ள என் குரு 'சாய் ரெய்கி தியான மையம்' என்ற பேரில் இந்த கலை அனைவருக்கும் பயனளிக்கட்டும் என்று மிகக்குறைந்த தொகையில் கற்பிக்கிறார். அது வாங்குவதும் மிகாவ் உசுயியின் கட்டளைப்படி இலவசமாக கொடுக்ககூடாது என்பதால். தொகை குறைவு - தரம் உயர்வு. (டிவியில் பேட்டி தரும் வேறு ஆசிரியரிடம் பயின்ற நான் இவரிடம் மீண்டும் வந்து பயின்று நல்ல குருவின் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன்.)
சில அனுபவங்கள்:
பெரிய பெரிய வாழ்க்கை பிரச்சனைகளில் இருந்து சப்ப மேட்டர் என்று நினைக்கும் அனைத்து விஷயங்களுக்கும் இந்த முறையை பயன் படுத்தலாம்.
- ஒரு லட்ச ரூபாய் பணம் கடனாக வாங்கிக்கொண்டு, பிறகு 'திருப்பி தர முடியாது. பண்ணுவதை பண்ணு' என்று மனசாட்சியே இல்லாமல் சொன்னவரிடம் இருந்து, எண்ணி ஒரே மாதத்தில் பணத்தை திரும்ப பெற்றார் ஒரு சேட்.
- சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் வந்து சேர்ந்த ஒருவருக்கு, வங்கி கடனுடன், இடம் கிடைக்க வாய்ப்பே இல்லாத இடத்திலிருந்து நல்ல இடம் கிடைத்தது.
- நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவருக்கு, அரசாங்க உத்தியோகமே கிடைத்தது.
- அமெரிக்காவில் இருந்த ஒரு தமிழ் பெண்ணுக்கு கழுத்தில் பிரச்சனை. அந்த பெண்ணுக்கு தமிழ்நாட்டிலிருந்தே distant healing என்ற முறையில் சிகிச்சை அளிக்க, கழுத்து பிரச்சனை தீர்ந்தது.
- நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஒரு சாதாரண சாவி தொலைந்து போனால் கூட, இந்த தியான வழிமுறையில் உடனே கிடைத்து விடும். (Google Search Engine க்கு போட்டி :-) )
அதிகமாக எழுதினால், பல்பொடி விளம்பரம் போல ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது. இந்த பதிவை விளம்பரமாக நினைக்காதீர்கள். ஒரு நல்ல விஷயம். நான் பலனடைந்தேன். இது உங்களுக்கும் உதவலாம். அவ்வளவே. விளக்கிலிருந்து விளக்கேற்றுவது போல.
யாரேனும் reiki channals இதை படித்தால் அவர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய அழைக்கிறேன்.
பலர் ரெய்கி மையத்தின் முகவரி கேட்டதற்கு இணங்க இதோ (பதிவை எடிட் செய்து) :
4, திரு.வி.க. வீதி,
முனிசிபல் காலனி ரோடு,
ஆந்திரா வங்கி அருகில்,
ஈரோடு -4.
தொலைபேசி எண் : 93616 25284
20 comments:
நல்லாயிருக்குப்பா.....
இது உண்மையா
என்ன சொல்லன்னே தெரில.... பலன் கெடைச்சா சரி...
நல்ல பகிர்வு.
எவ்வித குழப்பமும் இல்லாதபடி
மிகத் தெளிவாக ரெய்கி பற்றி
குறிப்பிட்டு உள்ளீர்கள்
நல்ல அறிமுகம்
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
நன்றி நாஞ்சில் மனோ, சே. குமார், ரமணி
@ speed மாஸ்டர், அருண் பிரசாத்
நம்புவதற்கு கடினம் என்பதால் சந்தேகப்படுகிறீர்கள். ஆனாலும் உண்மைதான் நண்பர்களே...
//சாதாரணமானவள் said...
நன்றி நாஞ்சில் மனோ, சே. குமார், ரமணி
@ speed மாஸ்டர், அருண் பிரசாத்
நம்புவதற்கு கடினம் என்பதால் சந்தேகப்படுகிறீர்கள். ஆனாலும் உண்மைதான் நண்பர்களே...
நன்றி
பகிர்வுக்கு நன்றிங்க சகோ,
எனக்கும் இதுபோன்றவற்றில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு...
முடிந்தவரையிலும் தெளிவாகவே விளக்கி சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்....
புது டைட்டில் பேனர் நல்லாருக்குங்க சகோ....
நன்றி மாணவன். இரண்டு கமெண்ட்டுகளுக்கும்...
நிஜமாகவே ரெய்கி நியாயமான வெற்றிக்கு ஒரு நல்ல உபகரணம் ...
Hiii
I am also a Reiki channel :-) Cheers.
We ll discuss abt this soon..
dear satharanamanaval...all type of meditations are only an introvert experience only...pls dont believe beyond this level as you are an educated ...k?...then pls convey this to your frnd subathra also...
நல்ல தியான முறை தான் ஆனால் சிலர் ஓவர் பில்ட் அப் கொடுக்கிறது தான் தாங்க முடியல நன்றி
ரெய்கி கற்று தர மாட்டீர்களா ?
வாழ்க்கைக்கு மிக அவசியமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_16.html
வணக்கம்
இன்று உங்களின் பதிவு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் அருமையான படைப்பு நேரம் மின்சாரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அந்த மையத்தின் முகவரியை, தொடர்பு எண்ணை தரலாமே. (எனது துணைவர் சில ஆண்டுகளுக்கு முன் ரெய்கி பயின்றவர்.)
வலைச்சரம் வழி வந்தேன். வருவேன் தொடர்ந்து.
Hallo, I am sugantha. I have presbyopia(velleluthu- thoorathil ullathu nalla theriyum, pakkathil mangalaga theriyum).I dont want to wear glasses. could u cure me?
Hallo, could u please share saisiva reiki address in erode?
Post a Comment