Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, February 17, 2011

என்னை கட்டிப்போட்ட கதை

நான் ஒரு புத்தக பைத்தியம். ஒரு ஆங்கில நாவலை எடுத்துக்கொண்டு, அதை படிக்க ஆரம்பித்ததில், பதிவிடகூட வளையவில்லை. (அதனால் பதிவுலகம் ஒண்ணும் பெருசா இழந்துடலைன்னு தெரியும். விடுங்க... விடுங்க...) அந்த புத்தகத்தோடு, ஒரு ஆங்கில படமும் பார்த்தேன். பதிவு போட உருப்படியா ஒரு விஷயமும் இல்லாததால இதை பதிவா போடறேன். இது மட்டும் உருப்படியான விஷயமான்னு பின்னூட்டம் போடுபவர்கள் கண்டிக்கப்படுவார்கள்.   :-)


பார்த்த படம்: காட் பாதர் (ஆங்கிலம்) (முதல் பாகம்)

ஒரு டானின் வாழ்க்கையை கூறும் கதை. டான் என்றாலும் ஒரு ethic உடன் வாழ்வது, சொந்த வாழ்வுடன் சம்பந்தப்பட்ட பழிவாங்கல்கள், துரோகங்கள், எல்லாம் கிடைத்தும் சமூக அந்தஸ்துக்காக ஏங்குவது, இன்னும் பல விஷயங்களை வேறு பரிணாமத்தில் கூறும் படம். டானின் மகனாக இருக்கும் மைக்கேல் தன டான் தந்தையின் தொழிலை வெறுப்பதில் ஆரம்பிக்கும் கதை, கடைசியில் தானும் ஒரு டானாக மாறுவதில் முடிவடைகிறது. நம்மூர் சிவாஜியுடன் ஒப்பிடப்படும் மெர்லோன் பிராண்டோவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. ஆனந்த விகடனில் வந்த 'உலக சினிமா' பகுதியில் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட படம். ஆக்க்ஷன் படம் அல்ல. கமலின் 'நாயகன்' படம் போன்றது. (காமெடி படம், செண்டிமெண்ட் படம், ஆக்க்ஷன் படம், ஆர்ட் படம், மசாலா  போல இந்த வகை படங்களை என்னவென்று குறிப்பிடுவது என்று தெரியவில்லை.)   subtitle வைத்துக்கொள்வது உசிதம். ஏன்னா, வசனம் பிற மொழிகளிலும் பேசப்படுகிறது. பொறுமையாக படம் பார்ப்பவர்கள் ரசிக்கலாம்.

படித்த புத்தகம்: பீட்டர் விடறேன்னு நினைக்காதீங்க. ஆங்கில எழுத்தாளர் 'ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்' ன் HIT AND RUN . நம்மூர் சுஜாதாவை இவருடன் தான் ஒப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் கதை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இவருடைய கதைகள் a very good starter. எழுத்தாளர் பாலகுமாரனால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர். எளிய ஆங்கில நடையில், விறுவிறுப்பு குறையாமல், பல திருப்பங்கள் உள்ளடக்கிய கதைகள் இவருடையது.

இந்த கதையில் பெரும்பணக்காரரான ரோஜருக்கு கூட்டாளியாகும் வாய்ப்பு ஸ்காட்டுக்கு கிடைக்கிறது. பேரழகியான ரோஜரின் மனைவியின் அழகால் சலனமடையும் ஸ்காட்டுக்கு அவளுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அதுவும் ரோஜருக்கு தெரியாமல் சொல்லிக்கொடுக்க வேண்டும். அவள் கார் ஓட்டி போய் ஒரு போலிசை கொன்றுவிடுகிறாள். அந்த விபத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க ஸ்காட் முயற்சிக்கிறான். ஆனால் போனில் ஒரு மர்மக்குரல் இது சம்பந்தமாக பணம் கேட்டு இருவரையும் மிரட்டுகிறது. ரோஜருக்கு தெரியாமல் இந்த சிக்கலை ஸ்காட் எப்படி தீர்க்கிறான் என்பது தான் கதை. உண்மையில் செம்ம்ம்ம்ம த்ரில்லிங். இதை சும்மா சில வரிகளில் சொல்லிவிட்டேன். ஆனால், படித்து பாருங்கள். நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.

18 comments:

Speed Master said...
This comment has been removed by a blog administrator.
Speed Master said...

உண்மையிலேயே உருப்படியான செய்தி

படத்தை பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன்

ம்ம் பார்த்துடுவோம்

Speed Master said...

நீங்கள் கண்டித்தால் நாங்கள் பயந்திருவோமா

போங்க மேடம் ஊருக்குள்ள நம்ளபத்தி கேட்டுப்பாருங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>>>நான் ஒரு புத்தக பைத்தியம்.

பரவால்லை.. நான் வெறும் பைத்தியம்.

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு ஓக்கே சார்

Speed Master said...

//
சி.பி.செந்தில்குமார் said...
>>>>நான் ஒரு புத்தக பைத்தியம்.

பரவால்லை.. நான் வெறும் பைத்தியம்.

இதை நான் வழிமொழிகிறேன்

sakthistudycentre-கருன் said...

ஏற்கெனவே படித்துவிட்டேன் .. ஒப்புகோள்கிறேன்...

sakthistudycentre-கருன் said...

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

மாணவன் said...

சினிமா விமர்சனம் & புத்தக விமர்சனம்

பகிர்வுக்கு நன்றிங்க சகோ :)

மாணவன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
பதிவு ஓக்கே சார்/

சி.பி அண்ணே, இவங்க சார் இல்ல மேடம் :))

சே.குமார் said...

Nalla pakirvu...

சங்கவி said...

Nice Post....

N.H.பிரசாத் said...

ஹாலிவுட் படங்களில் எனக்கு பிடித்த முதல் உலக சினிமா இந்த Godfather .

krishnamoorthy said...

நல்ல முயற்சி .நல்ல செயல் .இன்னும் விரிவாக தொடர வாழ்த்துக்கள்

Sairam said...

நன்றாக இருக்கிறது நானும் முயற்சிக்கிறேன்

Vetrimagal said...

Hi,
I am glad to know about one more admirer of Godfather. :-)

The book was grand enough, but the movie did more. Even today , when it is telecast, I leave all my work and enjoy it. Each time I find new nuances.

Great indeed.

vinu said...

great unga "ennai baathiththa kathai" link interesting...


but avaroda bloggula neenga entha storyyai point pannuneengannu figure out panna mudiyalay....

prince of flowers said...

அருமையான ஸ்டோரி இதை போலவே james இன் இன்னொரு ஸ்டோரி trusted லைக் தி பாக்ஸ் அதுவும் விறு விருப்பான கதை அதையும் புல்லா படிங்க சூப்பர்