Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, March 3, 2011

கலைமகள் கல்வி நிலையத்தில் பிரித்தாளும் கொள்கை

                          நான் பள்ளி படிப்பை முடித்தது ஈரோட்டில் உள்ள கலைமகள் கல்வி நிலையத்தில். மேல்நிலையில் நான் ஒரு commerce student. நம்ம கிளாஸ் டீச்சர் நம்மள போலவே செம லயன் லேடி. எங்க குரூப் மட்டுமில்லாம maths group மற்றும் science group மாணவிகளுக்கும் ஏன் மற்ற டீச்சர்களுக்கும் கூட அவர் ஒரு சிம்ம சொப்பனம். வளவளனு கிளாஸ் எடுக்காம நறுக்கு தெறித்தார் போல அவர் வகுப்புகள் இருக்கும். மற்ற வகுப்புகளில் ஆட்டம் போடுவதை போல இவர் வகுப்பில் ம்ஹும்.... மூச்! 

                இவருக்கு உடலில் தீக்காயங்கள் இருக்கும். (ஏதோ பர்சனல் காரணங்களால் தானே வைத்துக்கொண்டதாக கூறுவார்கள்.) அதனால் தானோ என்னவோ இவருக்கு அழகான, சிவப்பான மற்றும் பணக்கார தோற்றமுள்ள பெண்களை ரொம்ப பிடிக்கும். Students எல்லாரையும் வாங்க போங்க என்றுதான் கூப்பிடுவார். திட்டுவதானாலும் கூட... இவரிடம் நான் வாங்கிய 200/200 வணிகவியல் பரீட்சை பேப்பர் இன்னும் என் பொக்கிஷம். 

                   +2 Farewell அன்று இவர் வகுப்பின்போது, படிக்க சொல்லிவிட்டு இவர் staff room சென்றுவிட, இங்கே நாங்க எல்லாம் கேமேராவோடு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, திடீரென அவர் திரும்பி வந்து விட, எதேச்சையாக கவனித்த நான் உள்ளே போய் 'மிஸ் வராங்க மிஸ் வராங்க' என எச்சரிக்க, புத்தகம் பறக்க, கேமெரா தெறிக்க எல்லோரும் அவரவர் இடத்தில் உட்கார்ந்துகொள்ள, உள்ளே வந்த மிஸ் என்னை பிடிபிடியென பிடித்துவிட்டு செல்ல, அவர் போன பின்பு மொத்த வகுப்பும் என்னோடு சேர்ந்து சிரித்த அனுபவம் இன்னும் பசுமையாக.... ஒரு வேளை டைம் மெஷின் கிடைத்து அதை உபயோகிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் செல்ல விரும்புவது என் +2 வாழ்க்கைக்கே. 

                         ரொம்ப நாள் கழிந்து விட்டதால், சமீபத்தில் சந்தித்த அந்த பள்ளியின் மாணவிகளிடம், நான் படித்த போது இருந்த ஆசிரியைகளை பற்றி விசாரித்தேன். அப்போது அந்த மிஸ் வி.ஆர்.எஸ் வாங்கி சென்று விட்டதாக அறிந்து அதிர்ச்சியுற்றேன். என்ன காரணம் என்று கேட்டால் இன்னும் அதிர்ச்சி. சீனியாரிட்டியின்படி இந்த மிஸ் தான் ஹெச்.எம் ஆகி இருந்திருக்க வேண்டுமாம். ஆனால் இவர் தேர்ட் குரூப் எடுக்கும் ஆசிரியை என்பதால் முதல் குரூப் எடுக்கும் இன்னொரு ஆசிரியைக்கு அந்த போஸ்டை கொடுத்து விட்டார்களாம். முட்டாள்தனமாக தோன்றியது. 

                       நான் தேர்ட் குரூப் படித்த ஸ்டுடென்ட்  என்பதால் அல்ல. பொதுவாகவே கேட்கிறேன், எல்லா படிப்பும் ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்கிறது அல்லவா? அப்படி இருக்கையில், இந்த படிப்பு உயர்வு இந்த படிப்பு தாழ்வு என்று எப்படி இவர்களாக முடிவெடுக்கலாம்? முதல் க்ரூபில் படித்த ஒருவர் எஞ்சினியராக முப்பதாயிரம் சம்பளம் வாங்கினால், தேர்ட் குரூப் படித்தஒருவர் ஆடிட்டராக, லீகல் அட்வைசராக அறுபதாயிரம் எழுபதாயிரம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று பேருமே எனக்கு நண்பர்கள் என்பதால் இந்த விஷயத்தை அந்த பெண்களிடமும் சொன்னேன். அவர்களும் எங்கள் பள்ளியின் முட்டாள்தனமான முடிவில் அதிருப்தியை தெரிவித்தார்கள்.

                         இன்னும் ஒரு கொடுமை. எங்கள் பள்ளியில் Prayer Hall என்ற இடத்தில் அனைவரும் உட்கார்ந்து படிக்கலாம். அங்கே இப்போது பாகம் பிரித்து விட்டார்களாம். இந்த தூரம் வரை maths and science குருப்களுக்கு. மீதி தூரம் மற்றவர்களுக்கு என பிரிக்கப்பட்டுள்ளதாம். கேனத்தனமாக தோன்றியது. இதற்கும் சண்டை வேறாம். I , II குருப் பெண்கள் படிக்கும்போது அங்கே தேர்ட் குரூப் பெண்கள் படிக்கக்கூடாதாம். வகுப்பின் உள்ளேயே படித்துக்கொள்ள வேண்டுமாம். படிப்பவர்கள் எங்கே அமர்ந்தாலும் படிக்க மாட்டார்களா? இதே கல்வி நிறுவனம்  முதல் மற்றும் இரண்டாம் குரூப்களுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை மற்றவர்களுக்கும் கொடுத்திருந்தால் அவர்களும் ஸ்டேட் டாப்பர்களாக வந்திருப்பார்கள் அல்லவா? இல்ல, எங்களுக்கு first and second group தான் முக்கியம் என்றால் மற்ற பிரிவுகளை இழுத்து மூடிவிட்டு போக வேண்டியது தானே? கிட்டத்தட்ட 65 வருட பாரம்பரியம் உள்ள  ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் இப்படி தீண்டாமை போன்ற ஒரு நிலை உள்ளது என்றால் கல்வி அதிகாரிகள் எல்லாம் எந்த புல்லை பிடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
 

                  எச்சரிக்கை! இவர்கள் செய்வது ஒரு மாபெரும் பிழை. வருங்கால தலைமுறையினர் இடையே மிகப்பெரிய இடைவெளியை விதைக்கிறார்கள். முதல் பிரிவில் கணிதம் எடுத்த பெண்ணும், மூன்றாம் பிரிவில் பிசினஸ் கணிதம் எடுத்த பெண்ணும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள், ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள் எனும்போது எங்கே வந்தது ஏற்றதாழ்வு? அடிப்படையில் மாணவிகளுக்குள்ளும், கல்லூரிகளுக்குள்ளும், வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களுக்குள்ளும் இல்லாத வேறுபாடு நடுவில் உள்ள பள்ளியில் மட்டும் இருப்பது கேவலமாக உள்ளது.

                            என் பாட்ச்சில் முதல் பிரிவு , இரண்டாம் பிரிவு எடுத்து படித்த பெண்களில் வேலைக்கு செல்கிறார்கள் என்று ஒரு பெண்ணை கூட அறியவில்லை. பெரும்பாலும் திருமணமாகி வீட்டில் இருக்கிறார்கள். இது சத்தியம். அதே போல, என் வகுப்பை சேர்ந்த பெண்களில் பாதிக்கு பாதி நல்ல ஆசிரிய பணியிலோ, வக்கீலாகவோ, கணவனுக்கு தொழில் உதவி செய்து கொண்டோ, சிறிய அளவில் தொழில் செய்து கொண்டோ இருக்கிறார்கள். நான் முதல் அல்லது இரண்டாம் பிரிவில் படித்த யாரையும் குறை சொல்லவில்லை. அது அவர்கள் விருப்பம். வசதியை பொருத்தது. ஆனால், ஒரு கல்வி நிறுவனம் முட்டாள்தனமாக குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களால் தான் நாடு முன்னேறுகிறது  அப்டிங்கற ரேஞ்சுக்கு இந்த பிரித்தாளும் வேலையை செய்வது நிச்சயம் கண்டிக்கதக்கதல்லவா?

8 comments:

மாணவன் said...

என்ன செய்வது சகோ, கல்வியை போதிக்கும் பள்ளியிலும் இந்த மாதிரி நிலைமை இருப்பது பெரும் வேதனைக்குரியதாக உள்ளது...

பாலா said...

கல்வியை வியாபாரமாக பார்க்கும் சமூகத்தில் இதெல்லாம் சகஜம்தான். என்ன செய்வது?

சங்கவி said...

நீங்க ஈரோடா....?

சாதாரணமானவள் said...

@ மாணவன், பாலா
என்ன செய்வது என்று யோசித்ததால் தன பதிவிட்டேன் நண்பர்களே. தொழிலில் பாகுபாடு பார்த்தால் கூட பரவாயில்லை. படிப்பில் பார்க்கிறார்களே என்று தான் வெறுப்பாக உள்ளது.

@ சங்கவிNative ஈரோடு தாங்க

jayakumar said...

yes...your angry is agreed...but science is some what superior...however it is...partiality is not acceptable at any cost

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Good post..!

prince of flowers said...

neenga padicha school thane apadi than irukum

prince of flowers said...

நீங்க படிச்ச ஸ்கூல் தானே அப்படி தான் இருக்கும்