எப்படி போலீஸ் திருடன், டாக்டர் பேஷன்ட், ஜட்ஜ் குற்றவாளி ஜோக்ஸ் ரசிக்கப்படுகிறதோ, அவை அனைத்தையும் விட கணவன் மனைவி சம்பந்தமான ஜோக்ஸ் அதிகமாகவே ரசிக்கப்படுகிறது. நான் ரசித்த சில எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்கள் இவை. உங்கள் வீட்டில் நடந்திருந்தால் நான் பொறுப்பல்ல :-)
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்
மனைவி: நேத்துதான் அதை சாப்பிட்டோம்
கணவன்: அப்படினா கத்திரிக்காய் வறுவல் மனைவி:: உங்க பையனுக்கு பிடிக்காது
கணவன்:முட்டை பொறியல்? மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை
கணவன்: பூரி? மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா? மனைவி: ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு கெட்டுபோகும்
கணவன்: மோர் குழம்பு?மனைவி: வீட்ல மோர் இல்ல
கணவன்: இட்லி சாம்பார்? மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம். மனைவி: சாப்பிட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போற?மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி...கணவன்: (பேப்பரை படித்தபடி) ஒரு நாளைக்கு ஆண்கள் 15,000 வார்த்தைகளையும் பெண்கள் 30,000 வார்த்தைகளையும் பேசுகிறார்கள் என்று ஒரு ஆய்வுக்குறிப்பு தெரிவிக்கிறது.
மனைவி: அது உண்மைதான். ஏன்னா, உங்களுக்கு நாங்க ஒவ்வொரு விஷயத்தையும் ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்குது.
கணவன்: என்ன?
(லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் )
கணவன் தன் மனைவியின் மொபைல் எண்ணை எப்படியெல்லாம் ஸ்டோர் செய்து வைத்திருப்பான்?
திருமணமான புதிதில் - MY LIFE
ஒரு வருடம் கழித்து - MY WIFE
இரண்டு வருடங்களுக்கு பிறகு - HOME
ஐந்து வருட முடிவில் - HITLER
பத்து வருஷம் கழித்து - WRONG NUMBER
(அநேகமாக ஆண்களில் பலருக்கு இரண்டாவது ஜோக் புரிந்திருக்காது என்று நினைக்கிறேன். )
7 comments:
அத்தனையுமே நல்ல ஜோக்ஸ்... ரசித்தேன் சகோ...
கலக்கல் ஜோக்ஸ் எல்லாமே.. நல்லா சிரிச்சேன்.. :)
http://karadipommai.blogspot.com/
//அநேகமாக ஆண்களில் பலருக்கு இரண்டாவது ஜோக் புரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.//எனக்கு புரிஞ்சுது! (நான் தான் ரெண்டு தடவை படிச்சேனே!)
எல்லா ஜோக்கும் புரிந்தது
அந்த மனநல காப்பாக நம்பர் கொடுங்க
எங்க ஏரியாவுல 2 பேர் கஸ்டபற்றாங்க
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
முடிஞ்ச பதில் சொல்லுங்க
http://speedsays.blogspot.com/2011/05/talk-me.html
:)))))))))))))
நல்ல ஜோக்ஸ் ரசித்தேன்!!!
இரண்டாவது ஜோக்கின் ஹை லைட் இதுதான்"கணவன்: என்ன?"
Post a Comment