Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, May 24, 2011

கணவன் மனைவி ஜோக்ஸ்

 எப்படி போலீஸ் திருடன், டாக்டர் பேஷன்ட், ஜட்ஜ் குற்றவாளி ஜோக்ஸ் ரசிக்கப்படுகிறதோ, அவை அனைத்தையும் விட கணவன் மனைவி சம்பந்தமான ஜோக்ஸ் அதிகமாகவே ரசிக்கப்படுகிறது. நான் ரசித்த சில எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்கள் இவை. உங்கள் வீட்டில் நடந்திருந்தால் நான் பொறுப்பல்ல :-)

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்
மனைவி: நேத்துதான் அதை  சாப்பிட்டோம்
கணவன்: அப்படினா கத்திரிக்காய் வறுவல்
மனைவி:: உங்க பையனுக்கு பிடிக்காது
கணவன்:முட்டை பொறியல்? 
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு கெட்டுபோகும்
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போற?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி...



கணவன்: (பேப்பரை படித்தபடி) ஒரு நாளைக்கு ஆண்கள் 15,000 வார்த்தைகளையும் பெண்கள் 30,000 வார்த்தைகளையும் பேசுகிறார்கள் என்று ஒரு ஆய்வுக்குறிப்பு தெரிவிக்கிறது.
மனைவி: அது உண்மைதான். ஏன்னா, உங்களுக்கு நாங்க ஒவ்வொரு விஷயத்தையும் ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்குது.
கணவன்: என்ன?


(லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் )
கணவன் தன் மனைவியின் மொபைல் எண்ணை  எப்படியெல்லாம் ஸ்டோர் செய்து வைத்திருப்பான்?

திருமணமான புதிதில்  - MY LIFE
ஒரு வருடம் கழித்து - MY WIFE
இரண்டு வருடங்களுக்கு பிறகு - HOME
ஐந்து வருட முடிவில் - HITLER
பத்து வருஷம் கழித்து  - WRONG NUMBER

(அநேகமாக ஆண்களில் பலருக்கு இரண்டாவது ஜோக் புரிந்திருக்காது என்று நினைக்கிறேன். )

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

அத்தனையுமே நல்ல ஜோக்ஸ்... ரசித்தேன் சகோ...

Lali said...

கலக்கல் ஜோக்ஸ் எல்லாமே.. நல்லா சிரிச்சேன்.. :)
http://karadipommai.blogspot.com/

bandhu said...

//அநேகமாக ஆண்களில் பலருக்கு இரண்டாவது ஜோக் புரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.//எனக்கு புரிஞ்சுது! (நான் தான் ரெண்டு தடவை படிச்சேனே!)

Speed Master said...

எல்லா ஜோக்கும் புரிந்தது

அந்த மனநல காப்பாக நம்பர் கொடுங்க
எங்க ஏரியாவுல 2 பேர் கஸ்டபற்றாங்க


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
முடிஞ்ச பதில் சொல்லுங்க
http://speedsays.blogspot.com/2011/05/talk-me.html

சுபத்ரா said...

:)))))))))))))

நன்பேண்டா...! said...

நல்ல ஜோக்ஸ் ரசித்தேன்!!!

Marimuthu Murugan said...

இரண்டாவது ஜோக்கின் ஹை லைட் இதுதான்"கணவன்: என்ன?"