Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, July 4, 2011

நண்பர்களே... கோவிச்சுக்காதீங்க...

நாம மட்டும் இவங்க ப்ளாக பார்க்கணும், வோட்டு போடணும், கமென்ட் போடணும், பாலோயர் ஆகணும், இவங்க மட்டும் இதெல்லாம் பண்ண மாட்டாங்க.... இது எந்த ஊர் நியாயம் னு என் தளத்துக்கு வரவங்க மட்டும் இல்லாம, மற்ற தளத்துக்கு போறவங்களும் நினைக்கலாம். நானும் அப்படி நினைப்பதுண்டு. ஆனா, அதே சமயம், அவங்க நிலையையும் யோசிச்சு பாருங்க. வீட்ல நெட் கனெக்ஷன் கொடுத்துட்டு பொழுது போறதுக்காக பதிவு போடறவங்க ரொம்ப குறைச்சல். பெரும்பாலும் ஆபிஸ்ல, மீதி பிரவுசிங் சென்டர்ல, இன்டர்நெட் கனெக்ஷன் ப்ரீயா இருக்கற பிரெண்டுங்க ரூம்ல னு போய் பதிவு போடறவங்க தான் அதிகம். ஆபிஸ் வேலை, கூட வேலை செய்யறவங்க தொந்தரவு, பிரெண்டு ஊருக்கு போயிட்டான், பிரெண்டு வீட்டுல மூஞ்ச தூக்கறாங்க னு பல தொந்தரவுக்கு மத்தியில, அவங்கவங்க படைப்ப கொண்டு வர்றதே பெரிய விஷயமா இருக்கு. இதுக்கு நடுவுலயும் அவங்கவங்களால முடிஞ்சவரைக்கும் கமென்ட், வோட்டு எல்லாம் போடற வேலைய எல்லாருக்கும் இல்லாட்டியும், இந்த முறை இவங்களுக்கு, அடுத்த முறை அவங்களுக்குன்னு போட்டுட்டு தான் இருக்கோம். அதிலும் சில பாலோயர்கள் என்ன பேர்ல பதிவு எழுதறாங்கனு லிங்க் ல குடுக்கறதே இல்லை. மெயில் ஐடியும் கிடையாது. அப்பறம் எங்க போய் நாங்க உங்களுக்கு பாலோயர் ஆகறது? கமென்ட் குடுக்கறது?

என் பதிவு பாலோயர்களுக்கு ஒரு வேண்டுகோள்... நீங்க ஏதாவது பதிவு எழுதுபவர்களா இருந்தால், எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க ப்ளீஸ். அதே சமயம், வேலைப்பளு காரணமாக, என்னால் ஒரே நேரத்தில் எல்லோருக்கும் கமென்ட் கொடுக்க முடியாது. மாதம் ஒரு முறை நிச்சயம் உங்கள் எல்லா பதிவுகளுக்கும் தனித்தனியாக கமென்ட் குடுக்கறேன். இதே விஷயத்தை உங்களிடமும் எதிர்பார்க்கிறேன். பிரபல பதிவர் மாணவன் சொல்வது போல 'பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.'


16 comments:

கோவை நேரம் said...

அருமையா சொல்லி இருக்கீங்க

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம்...

:)படிக்கும் எல்லா பகிர்வுகளுக்கும் கருத்து எழுத நினைத்தாலும் நிறைய பதிவுகளில் கருத்து இட முடிவதில்லை....

Samy said...

நான் என்ன சொல்ல வரேன்னா பல பதிவுகளுக்கு பின்னுட்டம் போட்டு இருக்கேன். ஆனா வராது. நீங்க என்னென்ன பின்னுட்டம் போட ஆளே இல்ல என்கறீங்க. என்ன கொடும தாயி. சாமி.

இராஜராஜேஸ்வரி said...

அழுத்தமான பகிர்வு.

மாணவன் said...

//நண்பர்களே... கோவிச்சுக்காதீங்க...///

தலைப்ப பார்த்துட்டு நான் கொஞ்சம் பயந்துட்டேன்... :)

நண்பர்கள் முடிந்தவரை பதிவுகளை படித்து ஊக்கப்படுத்தலாம்... நல்லா எழுதியிருக்கீங்க நன்றி

மாணவன் said...

//பிரபல பதிவர் மாணவன் சொல்வது போல //

ஏன் இப்படி ஒரு வெளம்பரம்... :) பிரபலம்ன்னு இங்க யாரும் இல்லைங்க என்ன உங்களவிட ஒரு பத்து நண்பர்களுக்கு அதிகமா தெரிஞ்சிருக்கும் அவ்வளவுதான்... :))

'பரிவை' சே.குமார் said...

நல்ல விஷயம்...

//படிக்கும் எல்லா பகிர்வுகளுக்கும் கருத்து எழுத நினைத்தாலும் நிறைய பதிவுகளில் கருத்து இட முடிவதில்லை//

Ithuthaan Unmai.

NAGA INTHU said...

எனது மனதில் இருந்த கேள்வி//நாம மட்டும் இவங்க ப்ளாக பார்க்கணும், வோட்டு போடணும், கமென்ட் போடணும், பாலோயர் ஆகணும், இவங்க மட்டும் இதெல்லாம் பண்ண மாட்டாங்க.இது எந்த ஊர் நியாயம்//
சரியான தெளிவான பதிவு.நன்றி
அரவரசன்.

சாதாரணமானவள் said...

@ கோவைநேரம், இராஜராஜேஸ்வரி, சே.குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

சாதாரணமானவள் said...

@ வெங்கட் நாகராஜ்
எப்படியோ என் பதிவுக்கு கருத்து எழுதறீங்களே.. நன்றிங்க...

சாதாரணமானவள் said...

@ சாமி
//நான் என்ன சொல்ல வரேன்னா பல பதிவுகளுக்கு பின்னுட்டம் போட்டு இருக்கேன். ஆனா வராது.//
வர மாதிரி பின்னூட்டம் கொடுங்க.

சாதாரணமானவள் said...

@ மாணவன்
//பிரபலம்ன்னு இங்க யாரும் இல்லைங்க என்ன உங்களவிட ஒரு பத்து நண்பர்களுக்கு அதிகமா தெரிஞ்சிருக்கும் அவ்வளவுதான்.//
இதுக்கு பேர் தான் தன்னடக்கம்.... :-)

சாதாரணமானவள் said...

@ அரவரசன்
எல்லாரும் ஆதங்கபடறது தான். நான் உட்பட. அதனாலதாங்க இந்த பதிவு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//'பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.//

'பாராட்டுகளை விரும்பாத மனிதரே இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவரும் மனிதரே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிஷி நான்.

இப்படி இருப்பதுதானே பொருத்தம்.

சாதாரணமானவள் said...

@யோகன் பாரிஸ்
மிகச்சரி நண்பரே... ஆனால் அந்த டயலாக் மாணவனிடமிருந்து காப்பி அடிச்சதுன்னு குறிப்பிட்டிருக்கேனே. அதனால தான அதை மாற்றவில்லை.

Unknown said...

உண்மைதான்
எங்க MANAGER ஒரு போஸ்ட் படிக்க விடறான..
நாசமா போறவன்:)
இனி உங்களுக்கு மெயில் பண்றேங்க போஸ்ட் போட்டால்.