ஒருநாள் வானத்துல இருக்கற சூரியன்ல இருந்து ஒரு துளி பூமில விழுந்துச்சாம். அப்படி விழுந்த துளி ஒரு சின்ன பூவா மாறிடுச்சாம். அதை பார்த்த ஒரு கிழவி, அந்த பூவை தொட்டு ஒரு பாட்டு பாடினாளாம். உடனே அந்த பூ அந்த கிழவியோட இளமைய திரும்ப தந்து அவள ஒரு யுவதி ஆக்கிடுச்சாம். அசந்து போன கிழவி, 'ஓஹோ,,, இந்த பூ இவ்ளோ சக்தி வாய்ந்ததா'ன்னு அந்த பூவ பத்திரமா யாருக்கும் தெரியாம ஒளிச்சு வெச்சு பாதுகாத்து வந்தாளாம். எப்ப எப்ப இளமை போகுதோ அப்ப அப்ப அந்த பூவை தொட்டு பாட்டு பாடி தன் இளமைய தக்க வெச்சுகிட்டாளாம்.
அந்த ஊர் ராஜாவோட மனைவி (ராணி) கர்ப்பமா இருந்தாளாம். அவளுக்கு குழந்தை பொறக்க போற நேரத்துல திடீர்னு உடம்பு சரி இல்லாம போய், சாகற நிலைமைக்கு போய்ட்டாளாம். அப்ப அந்த மந்திரபூவை தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்தா, ராணிய பொழைக்க வைக்கலாம்னு அரண்மனை டாக்டர் சொல்லிட்டாராம். உடனே, ராஜாவோட ஆளுங்க, எங்கடா அந்த மந்திரப்பூ ன்னு தேடி அலைஞ்சாங்களாம்.
ஒருநாள் அந்த கிழவி அந்த பூவுக்கு பாட்டு பாடிட்டு இருக்கும்போது காவலாளிகள் வந்துட்டாங்களாம். உடனே அந்த கிழவி வேகமா ஓடி ஒளிஞ்சுகிட்டாளாம். ஆனா, ஒளிஞ்சுக்கற அவசரத்துல, பூவை மறச்சு வெச்சிருந்த கூடையை தட்டி விட்டுட்டாளாம். இருட்டுல ஒளிர்ந்த அந்த பூவை காவலாளிகள் பார்த்துட்டு அரண்மனைக்கு எடுத்துட்டு போய்ட்டாங்களாம்.
எடுத்துட்டு போய் ராஜாட்ட குடுக்க, ராஜா அதை டாக்டர்ட்ட குடுக்க, அவர் அதை தண்ணில போட்டு மருந்தாக்கி ராணிய குடிக்க வெச்சாராம். அதுக்கப்பறம், ராணிக்கு உடம்பு சரியாகிடுச்சாம். அப்பறம் ராஜா ராணிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பொறந்ததாம். அந்த குழந்தைக்கு கோல்டன் கலர்ல முடி இருந்துச்சாம். குழந்தை பொறந்த சந்தோஷத்த கொண்டாட, ராணியும் ராஜாவும் குழந்தைக்காக ஒரு பறக்கற விளக்கு தயார் செஞ்சு பறக்க விட்டாங்களாம். மக்கள் எல்லோரும் சந்தோஷமா இருந்தங்களாம்.
அன்னைக்கு நைட்டு, எல்லாரும் தூங்கிட்டு இருந்தப்ப, அந்த கிழவி வந்து குழந்தைகிட்ட போய் எப்பவும் பாடற பாட்டை பாடினாளாம். உடனே குழந்தையோட முடி லைட் போட்டது போல தக தகன்னு மின்னுச்சாம். அந்த முடியை கிழவி தடவி கொடுத்ததும் இளமை திரும்ப வந்துடுச்சாம். அதனால கொஞ்சூண்டு முடிய மட்டும் கட் பண்ணி வெச்சுக்கலாம், தேவையானபோது தடவி கொடுத்து இளமை ஆகிக்கலாம்ன்னு கட் பண்ணினாளாம். உடனே கட் பண்ணின அந்த முடி கருப்பா போயிடுச்சாம். கூடவே இவ இளமையும் போயிடுச்சாம். அதனால, அந்த கிழவி குழந்தையையே கடத்திட்டு போய்ட்டாளாம்.
ராஜாவும் எங்கெங்கோ தேடி பார்த்தாராம். குழந்தை கிடைக்கவே இல்லையாம். ராஜாவும் ராணியும் ரொம்ப வருத்தப்பட்டு, குழந்தையோட பர்த்டே அன்னைக்கு குழந்தைக்காக பறக்கும் விளக்கு தயார் பண்ணி, அதை குழந்தை எங்க இருந்தாவது பார்த்து நம்மகிட்ட வரும்னு ஒவ்வொரு வருஷமும் பறக்க விட்டாங்களாம்.
ரொம்ப வருஷம் ஆச்சாம். யாருக்கும் குழந்தை பத்தி தெரியவே இல்லையாம். கடத்திட்டு போன கிழவி, குழந்தையை, ஊருக்கு வெளில, காட்டுக்கு நடுவுல, ஒரு பெரிய்ய்ய்ய டவர் மேல பத்திரமா வெச்சு வளர்த்துகிட்டு வந்தாளாம். அந்த குழந்தைகிட்ட 'உன் அம்மா நான்தான். இங்க இருந்து வெளில எங்கயும் போகாத. வெளில போனா, ரொம்ப மோசமான அரக்கர்கள் இருக்காங்க. அவங்க உன்னை கடிச்சு சாப்டுடுவாங்க. உன் இந்த அழகான முடிய கட் பண்ணி எடுத்துட்டு போய்டுவாங்க' அப்படி இப்படின்னு கதை சொல்லி நம்ப வெச்சு வெளிய எங்கயும் போகாம பார்த்துகிட்டாளாம்.
நாளாக ஆக, குழந்தையும் வளந்துடுச்சாம், அதோட முடியும் ரொம்ப நீளமா வளந்துடுச்சாம். எவ்ளோ நீளமா வளந்ததுன்னா அந்த கிழவி டவர் மேல போக இருந்த கதவை எல்லாம் அடைச்சுட்டு, இந்த பொண்ணோட முடியை புடிச்சு கீழ இறங்கற அளவு வளந்துடுச்சாம். எங்கயாவது போயிட்டு வந்து, அந்த பொண்ண கூப்பிடுவா. உடனே அந்த பொண்ணும் தன் தலைமுடிய மேல இருந்து கீழ தொங்க போடுவாளாம். அதை புடிச்சுட்டு இந்த கிழவி மேல வந்துடுவாளாம். தினமும் அந்த பொண்ணோட முடியை தொட்டு தடவரதால, அந்தபொண்ணுக்கு இவள் கிழவிங்கற விஷயமே தெரியாது.
கிழவி வெளியே போற நேரத்துல சின்னபொண்ணுக்கு போரடிக்கும் இல்லையா? அதனால அவ வீடு முழுக்க தனக்கு புடிச்ச விஷயங்கள ஓவியமா வரைஞ்சு வெச்சா. மஞ்சள் கலர்ல பூ பூவா வரைவா, சூரியனை வரைவா, முக்கியமா மலைக்கு பின்னாடி ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் தெரியும் பறக்கும் விளக்குகளையும் வரைஞ்சு வெச்சாளாம்..
எப்பவாச்சும் வெளி உலகத்த பார்க்கனும்னு அந்த பொண்ணுக்கு ஆசை வருமாம். பயந்துகிட்டே கிழவி கிட்ட பர்மிஷன் கேட்பாளாம். ஆனா, எப்பவும் கிழவி அவளை வெளியுலகம் பத்தி பயங்கரமான கதைகள் சொல்லி பயப்படுத்தி, அம்மாகிட்ட இருக்கறது தான் உனக்கு பாதுகாப்புன்னு சொல்லி அடக்கிடுவாளாம். இப்படி போயிட்டு இருந்த கதைல நம்ம ஹீரோ என்ட்ரி.
ஹீரோ ஒரு பிரபல திருடன். அவன் படத்தை ஊர் பூரா நோட்டீஸ் அடிச்சு ஓட்டி, அவனை புடிச்சு குடுத்தா பல லட்சம் பரிசுன்னு அறிவிச்சிருந்தாங்களாம் . அவன்கூட ரெண்டு பேர். மூணு பேரும் சேர்ந்து ஒருநாள் அரண்மனைல இருக்கற இளவரசியோட கிரீடத்தை திருடிட்டாங்களாம் . அரண்மனை காவலாளிகள் எல்லாரும் தொரத்தினாங்களாம் . இவங்க மூணு பேரும் தப்பிச்சு ஓடினாங்களாம் . எங்க போனாலும் இவன் நோட்டீஸ் வேற. கடுப்பான ஹீரோ போற வழில இருக்கற நோட்டீஸ் எல்லாம் கிழிச்சு போட்டானாம். காவலாளிகள் நெருங்கவும் அவசரத்துல ஒரு நோட்டீஸ கிரீடம் இருக்கற பைல போட்டுட்டு ஓடினானாம். மத்தவங்க ரெண்டு பேரையும் ஏமாத்திட்டு, அவன் கிரீடத்தோட காட்டுக்குள்ள தப்பிச்சு போயிட்டானாம். அப்ப ஒரு குகைக்குள்ள புகுந்து அதோட மறுபக்கம் வந்து பார்த்தா, இந்த டவர் இருக்கு. உடனே அந்த டவர்ல கஷ்டப்பட்டு ஏறி மேல வரானாம்.
உள்ளே நுழைஞ்சதும் படார்னு அந்த பொண்ணு சமையல் பாத்திரத்திலேயே ஒரு அடி போடுது. அவன் மயங்கி விழுந்துட்டானாம். அதுதான் அந்த பொண்ணு முதல் முறையா பார்க்கற ஆளாம். ஆனா, அவனுக்கு அம்மா சொன்னது போல அரக்கர்களுக்கு இருக்கற மாதிரி பல்லு இல்லை, முட்டை கண்ணு இல்ல. இவன் பார்க்க அழகா இருந்தானாம். இருந்தாலும் அம்மாகிட்ட இவனை காட்டணும்னு சொல்லி அவனை ஒரு பீரோல போட்டு அடைச்சு வெச்சுட்டாளாம். அவன் கொண்டு வந்த பையில இருந்த கிரீடத்தை தலைல வெச்சு பார்த்தா, அவ்ளோ அழகா இருந்துச்சாம். சரின்னு அந்த கிரீடத்தை ஒளிச்சு வெச்சுட்டாளாம்.
கொஞ்ச நேரமானதும், கிழவி வீட்டுக்கு வந்ததும் இவனை பத்தி சொல்ல வர்றா. ஆனா, அந்த கிழவி இவ வெளில போறதை பத்தி கேக்க வர்றான்னு, வெளில இருக்கற ஆளுங்க இப்படி அப்படின்னு சொல்ல, அதெல்லாம் பொய்ன்னு இந்த பொண்ணு புரிஞ்சுக்கறாளாம். அதனால அவனை பத்தி சொல்லாம விட்டுடறாளாம். அந்த கிழவி'நகரத்துல பண்டிகை. அதனால நான் திரும்ப வர ரெண்டு நாள் ஆகும்' னு சொல்லிட்டு போன பிறகு, இவனுக்கு மயக்கம் தெளிய வெச்சு, தன்னையும் அந்த பண்டிகைக்கு கூட்டிட்டு போனால், கிரீடத்தை திருப்பி தரேன்னு சொல்றாளாம். அவனும் முதல் முறையா அவளை அந்த டவர விட்டு இறக்கி ஊருக்குள்ள கூட்டிட்டு போறானாம்.
வாழ்க்கையில் முதல் முறையா அவள் அந்த டவர விட்டு கீழ இறங்கி புல் தரைல கால் பதிக்கறா, ஆத்து தண்ணில நடந்து பார்க்கறா, மரத்து மேல ஏறி பார்க்கறா, எல்லாமே முதல் முறையா, அதிசயமா, ஆனந்தமா இருக்காம்...இவ சந்தோஷமா நகரத்தை நோக்கி போற போது, அங்க அவங்க அம்மா வழிதவறிய அரசாங்க குதிரைய பார்த்துட்டு, முன்னாடி பூவை பறிச்சுட்டு போன மாதிரி இந்த முறை அந்த பொண்ணை தூக்கிட்டு போய்ட்டா என்ன பண்றதுன்னு வேகமா டவருக்கு திரும்ப போய், அவளை கூப்பிட்டு பார்க்கறாளாம். அந்த பொண்ணு வரலையாம். உடனே, அடைச்சு வெச்ச கதவை எல்லாம் திறந்து மேல போய் பார்த்தா, எங்கயுமே பொண்ண காணோமாம். என்னடா பண்றதுன்னு திகைச்சு போய் திரும்பி பார்த்தா, ஒரு பெட்டிக்குள்ள என்னமோ மின்னுதாம். எடுத்து பார்த்தா, ஒரு பை. அதில கிரீடமும், ஹீரோவோட நோட்டீசும். இவங்கள எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு டவர்ல இருந்து இறங்கி பொண்ணை தேட ஆரம்பிக்கறாளாம்.
வழியில ஹீரோவும் இந்த பொண்ணும் ஒரு குகைக்குள்ள மாட்டிக்கறாங்களாம் . அங்க இருந்து வெளிய வர வழி கண்டுபிடிக்க முடியாத அளவு இருட்டாம். அப்ப, அந்த பொண்ணு தன்னோட முடி பத்தி சொல்லி, பாட்டு பாடினா முடியில வெளிச்சம் வரும்னு சொல்லி பாட்டு பாட, முடியில வெளிச்சம் வந்து அவங்க தப்பிக்க வழி தெரியுது. அது வழியா ரெண்டு பேரும் தப்பிச்சுட்டாங்களாம்.
அதுக்குள்ள அங்க என்ன ஆகுது, அந்த கிழவியும் ஹீரோவோட ரெண்டு கூட்டாளிகளும் சந்திச்சு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கறாங்களாம். கிழவி கிரீடத்தை குடுத்து, 'இந்த கிரீடத்தை விட ஹீரோவ புடிச்சு குடுத்தா அதிக மதிப்பு, அதனால அவன நீங்க புடிச்சுட்டு போங்க, கிரீடத்தையும் வெச்சுகோங்க, என் பொண்ணை மட்டும் என்கிட்டே குடுத்துடுங்க'ன்னு சொன்னாளாம். சரின்னு அவங்களும் ஒத்துக்கிட்டாங்களாம்.
அங்க குகைல இருந்து தப்பிச்ச சமயம், ஹீரோ கையில காயம் ஆகிடுது. அதை அந்த பொண்ணு முடில சுத்தி பாட்டு பாட, முடி ஜொலிச்சு, காயம் சரியாகிதாம். அவன் அதிசயப்பட்டுட்டே, தூங்க போயிடறான். அப்ப, கிழவி அங்க வந்து, இந்த பொண்ணுகிட்ட, 'அம்மாவை நம்பாம அவனை நம்பறல்ல... அவன் உன்னை ஏமாத்திடுவான் பாரு'ன்னு சொல்லிட்டு போறா.
அடுத்த நாள் ஊருக்குள்ள போய் பார்த்தா, ஊர்ல எல்லாரும் சாதாரண மனுஷங்களா, அரக்கர்கள் மாதிரி இல்லாம, அன்பா, சந்தோஷமா இருக்கறாங்க. ஒரு ராஜா ராணி குழந்தை ஓவியம் வரைஞ்சு வெச்சிருக்கறத பார்க்கற இந்த பொண்ணுக்கு அவங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. அங்க இருக்கற கொடி எல்லாம் சூரியன் கொடி. அன்னைக்கு நைட்டு எல்லோருடனும் சேர்ந்து இவளும் பறக்கும் விளக்கை வானத்துல பறக்க விடறா.
அப்ப வழில ஹீரோ தன்னோட ரெண்டு கூட்டாளிகளையும் பார்க்கறான். அவங்களால எந்த தொல்லையும் வரக்கூடாதுன்னு, இந்த பொண்ணுகிட்ட 'இரு இரு... அவங்க கிட்ட பேசிட்டு வந்துடறேன்'ன்னு சொல்லிட்டு அவங்க கிட்ட போறான். அவங்க இவனை அடிச்சு ஒரு போட்ல கட்டி போட்டு அரண்மனை பக்கமா அனுப்பிட்டு, இந்த பொண்ணை புடிக்க வராங்களாம். இந்த பொண்ணு பயந்து போய் கத்த, அந்த கிழவி வந்து இவனுங்கள அடிக்கற மாதிரி ஆக்க்ஷன் பண்ணி, அந்த பொண்ணுகிட்ட 'அதோ பார். அவன் உன்னை இவங்க கிட்ட புடிச்சு குடுத்துட்டு போய்ட்டான்'ன்னு சொல்லி காட்டறா. நிலா வெளிச்சத்துல பார்த்து இவளும் நம்பிடறாளாம். அழுதுகிட்டே அம்மா கூட டவருக்கு போயிடறாளாம்.
அங்க வீட்டுல தனியா யோசிச்சு பார்த்தா, இவளுக்கு பழைய நினைவு திரும்பி வந்துடுது. தன்னை அந்த படத்துல இருந்த ராஜா ராணி கொஞ்சினது, தனக்காக விளக்கு விட்டது, குழந்தைல பார்த்த சூரியன் கொடி, எல்லாம் ஞாபகத்துக்கு வருது. இளவரசி நான் தான் னு தெரிஞ்சு கிழவி கிட்ட சண்டை போடறா. உடனே கிழவி இவள கட்டி போட்டு வெச்சுடறா.
அங்க ஹீரோ, அரண்மனைல இருந்து தப்பிச்சு, டவருக்கு வந்து இவள கூப்பிடரானாம். அவளோட முடி வந்து விழுகுது, அதை புடிச்சுட்டு இவன் மேல போய் பார்த்தா, அவளை கட்டி போட்டுருக்காங்க. அதை பார்த்து அதிர்ச்சி அடைஞ்சு இவன் நிக்கும்போது, பின்னாடி இருந்து ஒரு கத்தில இவனை கிழவி குத்திடறா. உடனே அந்த பொண்ணு, 'அவனை காப்பாத்த விடு. வாழ்நாள் முழுக்க உன்கூடவே இருந்திடறேன். எங்கயும் போக மாட்டேன்னு' சத்தியம் பண்றா.
சரின்னு அந்த கிழவி விட, இவ தன் முடிய வெச்சு அவனை குணப்படுத்த பார்க்கறா. அப்ப, அவன் சடார்ன்னு தன்னோட கைல இருந்த கண்ணாடி துண்டால, அவளோட நீஈஈஈஈஈஈஈஈஈஈளமான முடிய கட் பண்ணிடானாம். அப்படியே அவளோட எல்லா முடியும் கருப்பா போய்டுதாம். அதோட சக்தியும் போய்டுதாம். அதிர்ச்சில ஓடி வரும்போது கிழவி கால் தடுக்கி ஜன்னல்ல இருந்து கீழ விழுந்து செத்து போயிடறா. ஹீரோவும் செத்து போயிடறான். அவனுக்காக இந்த பொண்ணு அழுகறப்ப அவளோட கண்ணீர் துளி அவன் மேல விழுந்து, அது அவனுக்கு உயிர் குடுத்துடுமாம். அவ முடில மட்டும் சக்தி இல்ல. முழு உடம்பிலும் சக்தி இருக்காம். அப்பறம், ஹீரோ அவளை ராஜா ராணிட்ட கூட்டிட்டு போய் விட்டுடுவானாம். அவங்க ஹீரோவை இளவரசிக்கே கட்டி குடுத்துடுவாங்க . அதோட கதை முடிஞ்சுதாம்.
நல்லா இருக்கா? இதான் 'TANGLED' அப்படிங்கற 3D கார்டூன் படத்தோட கதை. இந்த முழு கதையும் கார்டூன்கறது சில இடத்துல தான் தெரியும். மத்தபடி, அந்த பொண்ணோட முடி கூட, ஒரிஜினல் மாதிரி தான் இருக்கும். அவ்ளோஓஓஓஓஓஓஓஓஓ நீள முடி செம அழகா இருக்கும். ஒரு சீன்ல அருவியும் இவ முடியும் ஒரே பக்கமா விழுகற மாதிரி காட்டுவாங்க. அவ்ளோ அழகு. Free time கிடைச்சா download செஞ்சு பாருங்க. அந்த முடியை நீங்களும் ரசிப்பீங்க.

13 comments:
கார்டூன் கதையா?எம்மாபெரிய கதை?
என்னது அதுக்குள்ள கதை முடிஞ்சிடுச்சி... கொஞ்சம் கண் அசந்தா முடிச்சிடறதா? ;)
விமர்சனமா இது... ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.
நல்ல கதை.. :)
நாளைக்கு இன்னொரு கதை சொல்லுங்க..
நல்ல விமர்சனம். ஒரு படம் பார்த்த திருப்தி.
நான் இந்த படத்தை ரசித்துப் பார்த்தேன். ஆனால் படத்தை பார்த்ததை விட அழகாய் இருந்தது, உங்களிடம் கதை கேட்டது. வாழ்த்துக்கள் பாட்டி.
கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது, 3D யில் பார்த்தால் இன்னும் சிறப்பு.
@ திருமதி BS சுந்தர்
கொஞ்சம் பெரிய கதையா போய்டுச்சுல்ல
Madam
@ அருண் பிரசாத்
இதென்ன சின்ன புள்ள தனமால்ல இருக்கு. கதை சொல்லும்போது தூங்கிகிட்டு. அங்க பாருங்க. உங்க குழந்தை எவ்ளோ அழகா கதை கேட்டுட்டு இருக்குன்னு. கத்துக்கோங்க சார்.
@ சே. குமார்
நன்றிங்க
@ சுபத்ரா
இங்க சொந்த கதையே சோக கதையா ஆயிடுச்சே...
அதைத்தான் அடுத்த பதிவுல போட்ருக்கேன்
@ ரவி
நன்றி
@ ரசிகன்
என்னது? பாட்டியா? ஓ... பியூட்டி ன்னு சொல்ல வந்து பாட்டி னு spelling mistake ஆகிடுச்சா.. Its ok. நான் புரிஞ்சுகிட்டேன். (இதுக்கு ரிப்ளை நெகடிவா வந்தா comment moderation ல delete பண்ணிடுவேன். ஜாக்ரதை.)
@ நம்பிக்கை பாண்டியன்
நன்றிங்க.
Post a Comment