Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, January 10, 2012

ப்ளாக் எழுதுவது எப்படி? இரண்டாம் பாகம்

முதல் பகுதியை படிக்க இங்கே செல்லவும் . இந்த மாதிரி கலர் மாறியோ, underline பண்ணி இருந்தாலோ, மௌசை கொண்டு போனால் hand symbol வந்தாலோ அவங்க ஏதோ இன்னொரு லிங்கை குடுத்திருக்காங்கன்னு அர்த்தம். உங்களுக்கு வேணும்னா அங்க கிளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.

இப்ப உங்க ப்ளாக் ரெடி ஆகிடுச்சு இல்லையா? இப்ப அந்த ஸ்க்ரீனை பாருங்க.

மேலே இடப்புறம் ஒரு காலி இடம் இருக்குதா? அங்கே நீங்கள் போகும் ப்ளாகில் குறிப்பிட்ட பக்கத்தை தேட keyword எனப்படும் குறிச்சொல்லை குடுக்கலாம். அப்படி கொடுத்தால் அவங்க எந்தெந்த பதிவில் அந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறார்களோ அந்த பதிவை கொண்டுவந்து கொடுக்கும்.

அடுத்து FOLLOW : அந்த ப்ளாக் உங்களுக்கு பிடித்திருந்து, அவங்க பதிவுகளை இடும் போது  உங்களுக்கு அது தெரிவிக்கப்பட வேண்டுமானால் இதற்காக நீங்கள் தனியாக bookmark வைப்பதெல்லாம் தேவை இல்லை. இதை க்ளிக் செய்துகொண்டால் நீங்க அந்த பதிவருக்கு follower ஆகிடுவீங்க. மேலும் ஒருத்தருக்கு எத்தனை followers என்பது அந்த பதிவர் காட்டும் கெத்து. (அதனால் நீங்க பதிவு எழுதறீங்களோ இல்லையோ follower சேர்க்கப்பாருங்க). நீங்கள் அவங்க பதிவுகளை உங்க பேரிலும் படிக்கலாம். பேர் சொல்ல விரும்பாமல் anonymous ஆகவும் படிக்கலாம். உங்க விருப்பம்.


SHARE: அந்த பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம்னா share மூலமாக   twitter, facebook, google reader க்கு பகிர்ந்துகொள்ளலாம். 

REPORT ABUSE: இது பத்தி எனக்கு கொஞ்சம் டவுட்டு. நல்லா தெரிஞ்சவங்க யாராவது விளக்கம் தரலாம். எனக்கு தெரிஞ்சு (எனக்கு தெரிஞ்ச இல்ல) கெட்டவார்த்தை அல்லது தொந்தரவு தரும் விளம்பரம், வன்முறை வார்த்தைகள், copyright piracy செய்யப்பட்ட வார்த்தைகள் இருந்தால் அதை நாம் பிளாக்கர் மாமாவிடம் ரிப்போர்ட் செய்ய இந்த பட்டன் உதவும்.

NEXT BLOG: இதை கிளிக் செய்தால் மற்றவர்களின் ப்ளாகை காட்டும். இது எந்த கான்செப்டில் வேலை செய்கிறது எனக்கு இன்னும் புரியாத புதிர்.


அடுத்து வலது புறம் நீங்கள் என்ன ஈமெயில் ஐடியில் உள்ளே நுழைந்தீர்களோ அந்த அட்ரஸ் காட்டும்.


DASHBOARD: இது  உங்க ப்ளாகில் உங்க பிரைவேட் ஏரியா. இது கொஞ்சம் பெரிய ஏரியா என்பதால் சுருக்கமா இப்போதைக்கு சொல்றேன். இங்க இதுவரை நீங்க குடுத்த settings, details, appearance, நீங்க follow செய்யறவங்களோட பதிவுகள், இன்னும் பிற விஷயங்கள் இருக்கும். முக்கியமான ஏரியா.


MY ACCOUNT: நீங்க உங்க ப்ளாக்ல இருந்தா மட்டும் இது வரும். மத்தவங்க ப்ளாக்ல இருந்தா வராது. இங்க நீங்க Password, Mail id, Photo மாத்திக்கலாம். Privacy setting, இன்னும் என்னென்னவோ இருக்கு. இங்க நான் நுழைய அவசியம் வரல. அதனால விளக்கமா சொல்லமுடியல.


SIGN OUT: உங்களுக்கே தெரியும், இது நம்ம கணக்குல இருந்து வெளியேற.


FOLLOWERS : என்னை கேட்டா இவங்க தெய்வங்கள்.... நாம என்ன மொக்கை போட்டாலும் சலிக்காம படிக்கறவங்க. அதிலயும் கமெண்ட் போடறவங்க குலதெய்வங்கள்... நம்ம பதிவை யார் யார் follow பண்றாங்களோ அவங்க விவரத்தை இங்க கிளிக் பண்ணி தெரிஞ்சுக்கலாம். இதே மத்தவங்க blogspot ஆ இருந்தா,  மேல நாம follow பண்ணினோம்ல.. அப்படி follow பண்ணினதும் நம்ம போட்டோ இந்த followers list ல வந்துடும்.  மேல follow பட்டன், இங்க follow this site பட்டன் ரெண்டும் ஒரே வேலையை தான் செய்யுது. அப்படி follow செஞ்ச Site பிடிக்கலேன்னா, sign in ன்னு தெரியுதே அங்க sign பண்ணி  settings ல போய் unfollow செஞ்சுக்கலாம்.


அடுத்து ABOUT ME: அட... என்னை பத்தி இல்லைங்க. அந்தந்த பதிவர்கள் அவங்கவங்கள பத்தி கதை விட்டுக்கறது இங்க தான். சில பதிவுகள படிச்சதும் எழுதுனவங்கள பத்தி தெரிஞ்சுக்க ஆசை படுவோம். அப்படி தெரிஞ்சுக்க இங்க போகலாம். ரொம்ப டீடெயிலா தெரிஞ்சுக்க View my Complete profile க்கு போங்க. அங்க அவங்க வேற ஏதாவது ப்ளாக் எழுதறாங்களாங்கற விவரமும் சேர்ந்து கிடைக்கும்.

இதெல்லாம் இரண்டாவது ஸ்க்ரீனின் விளக்கங்கள்.
(தொடரும்)

13 comments:

Admin said...

புதியவர்களுக்கான வழிகாட்டும் பதிவு..நன்று..சந்தேகம்

பாலா said...

யாரும் சிந்திக்காத வகையில், ப்ளாக் எழுதுவது எப்படி என்பதையே தெளிவாக ஒரு தொடராக தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

சமுத்ரா said...

நல்ல தகவல்கள்

Yaathoramani.blogspot.com said...

மிகவும் பயனுள்ள பதிவு
புதியவர்களுக்கு மட்டும் இல்லை
என்போன்று இதையெல்லாம் தெரிந்து கொள்ளதே கூட
பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கும்தான்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

kavitha said...

நல்ல தெளிவா விளக்கம் தரிங்க. எங்கயோ போய்டிங்க போங்க. உண்மையில் மிகவும் பயனுள்ள பதிவு

வெங்கட் said...

// ப்ளாக் எழுதுவது எப்படி? இரண்டாம் பாகம் //இப்படி சும்மா இருக்கறவங்களை உசுப்பி ப்ளாக் ஆரம்பிக்க வெச்சிட்டு... அவங்களுக்கெல்லாம் பதிவு எழுத ஐடியா மட்டும் குடுக்காம போங்க.. அப்ப இருக்கு கச்சேரி..!:)

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

சாதாரணமானவள் said...

நன்றி மதுமதி

சாதாரணமானவள் said...

@ பாலா

அதென்னங்க? ' யாருமே சிந்திக்காத வகையில்?' தப்பா கீது சிந்திச்சுட்டேனா?

சாதாரணமானவள் said...

@ சமுத்ரா

@ கவிதா

@ரத்தினவேல்



நன்றிங்க

சாதாரணமானவள் said...

@ ரமணி

அட... நானும் உங்கள மாதிரி தான் இருந்தேங்க... இந்த பதிவு போடறதுக்காக தெரிஞ்சுகிட்டது தான். :)

சாதாரணமானவள் said...

@ வெங்கட்

பதிவு எழுத ஐடியா கிடைச்சிருந்தா இந்த மாதிரி பதிவு எழுதுவேனா? உங்களை மாதிரி born genius ஆ பக்கம் பக்கமா எழுதி இருந்திருப்பேனே..

சாதாரணமானவள் said...

@ அப்பு

நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நிச்சயம் மேம்படுவோம் ...