Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Wednesday, March 28, 2012

நான் ராமேஸ்வரம் போனேனே... பார்ட் 3 (டைரி பதிவு)

அதிகாலை 4 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை என்று சொல்லி இருந்தார்கள். எங்களுடன் வந்திருந்த அத்தை குடும்பம் எப்போதுமே குளிர், சளி என்று பயப்படுபவர்கள். அவர்களுடன் பயணம் முழுவதும் பல காம்ப்ரமைஸ்கள் செய்து கொள்ள வேண்டி இருக்கும் என்பது தெரியும். எனவே அவ்வளவு அதிகாலை நடக்கும் பூஜையை தரிசிக்க முடியவில்லை.

அவர்கள் பிளான் 8 மணியளவில் கிளம்பலாம் என்பது. நான் அப்போதைக்கு சரி சரி என்று சொல்லி விட்டு அதிகாலை 6 மணிக்கு அவங்க ரூமுக்கு போன் செய்து கிளம்ப தயாராக சொன்னேன். ராமேஸ்வரத்துக்கு பரிகாரத்துக்கு போகும் எல்லோரும் கடலில் குளிக்கவே போவாங்க. ஆனா, இவங்க கடல் தண்ணி infection ஆகிடும் ன்னு லாட்ஜிலேயே வெந்நீரில் குளிச்சுட்டு எங்க கூட கடலுக்கு வந்தாங்க. அந்த அளவு அவங்க ஹைஜீனிக் ;-)

கடல் எப்ப வரும், அலை சத்தம் இன்னும் கேட்கலையே ன்னு ஆர்வத்தோட கடலை நோக்கி போனோம். அந்த குறிப்பிட்ட சந்து திரும்பும் வரை கடல் இருப்பதற்கான அறிகுறியே தெரியல. திடீரென்று தான் கடல் தெரிந்தது. அந்த கடலில் அலை அடிக்காது என்பதால் அமைதியாகவே இருந்தது. நேரில் பார்க்கும்போது ஒரு பெரிய ஏரி அல்லது ஆறு போலதான் இருந்தது.
முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுக்கும் இடம் ஆகையால், பசுக்களும், ஆடுகளும், காகங்களுமாக ஒரே கூட்டம். ஒரே பரிகாரத்துக்கு ஒவ்வொரு ப்ரோகிதரும் ஒவ்வொரு ரேட் வெச்சிருக்காங்க. அனேகமா வாய்ல வந்த அமௌண்ட படிஞ்சா லாபம் ன்னு கேக்கறாங்க. அவங்கள விட்டுட்டு வேறொருத்தரை கேட்டா இவரை விட அவர் குறைஞ்ச ரேட்ட சொல்றாங்க. ஒரு கால் மணி நேரத்துல ரெண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கறது அங்க தான் நடக்குது.
 கச கசன்னு ஒரே ஈரமா கண்ட குப்பையும் கிடந்துச்சு. நாம கொஞ்சம் முகம் சுருக்கினா ஒரு பலகை போட்டு அதுல உக்கார சொல்லி ஸ்ரார்தம், பரிகாரம்  பண்ணறாங்க. அங்க நிகேஷ் எப்படி உக்காந்திருந்தான் தெரியுமா?
பாத்தீங்களா? தீர்த்தம் தெளிச்சா சளி புடிச்சுக்கும்னு அவன எந்த கெட்டப்புல உக்கார வெச்சிருக்காங்கன்னு.... ஹஹஹா...
அவங்க பரிகாரம் செய்யும்போது நாங்க கடல்ல குளிச்சுட்டு வந்தோம். எங்க ஊர்ல கடல் இல்லை. அதனால சந்தோஷமாவும் பயமாவும் நானும் அம்மாவும் குளிச்சோம். தண்ணிக்குள்ள குனிஞ்சு மண்ணெடுத்தா அந்த மண்ல சின்ன சின்னதா நிறைய சங்கு இருந்துச்சு. அந்த மாதிரி மண்ணை நான் பார்த்ததே இல்லை. அப்பறம் கரைக்கு போய் ஸ்ரார்தம் பண்ணிட்டு கோவிலுக்குள்ள போனோம். அங்க நடந்துச்சு பாருங்க அநியாயம்.....
(தொடரும்)



7 comments:

Vetirmagal said...

அழகான பதிவுகள். ராமேஸ்வரம் பற்றி சில கோணங்கள் , படித்து ரசித்தேன்.நான் போனதில்லை.நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

தண்ணிக்குள்ள குனிஞ்சு மண்ணெடுத்தா அந்த மண்ல சின்ன சின்னதா நிறைய சங்கு இருந்துச்சு. அந்த மாதிரி மண்ணை நான் பார்த்ததே இல்லை

அந்த மணலைக்கொண்டு வந்து தோட்டத்தில் வைத்தேன்.. கொஞ்ச நாளில் நிறைய சங்குகள் பூத்தன. ரொம்ப அதிசயமாக இருந்தது..

Anbu said...

அருமையான கதைபோல நல்ல நடை, அடுத்த அத்தியாயம் எப்போது?

அமர பாரதி said...

பயண அனுபவத்தை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். புகைப் படங்களும் அருமை. ஆனால் பதிவு ரொம்ப சுருக்கமாக உள்ளது போல ஒரு எண்ணம்.

அமர பாரதி said...

கமென்ட் ஏரியாவில் ஏதோ பிரச்சினை போல? பதிவின் கீழே இருக்கும் கமென்ட் (ஒரு மொழிகளில்) பாக்ஸ் - போஸ்ட் கமென்ட் பட்டன் வேலை செய்யவில்லை.

கோவை நேரம் said...

கால் மணி நேரத்துக்கு இவ்ளோ பணம் சம்பாதிக்க லாமா...? தொழிலை மாத்திடலாமா ன்னு யோசிக்கிறேன்.ராமேஸ்வரம்...நல்லா இருக்கு

Athisaya said...

வணக்கம்..வந்தேன்,படித்தென்,ரசித்தேன்..சங்கு பூத்திச்சா?கடல் அனுபவம் பயமென்றாலும் மிக இனிது