Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Monday, June 11, 2012

எங்க அம்மா அப்பாவுக்கு விடுதலை

அட ஆமாங்க... ஜூன் 21 ம் தேதில இருந்து எங்க அம்மா அப்பா சுதந்திரமா இருக்க போறாங்க. டெய்லி காலைல ஒன்பது மணிக்கு  'எந்திரி எந்திரி' ன்னு கத்திகிட்டு இருக்க தேவை இல்ல. பதினொரு மணிக்கு 'சாப்பிடு சாப்பிடு' ன்னு வெத்தல பாக்கு வச்சு அழைக்க தேவை இல்ல. நேரமா 'தூங்கு தூங்கு'ன்னு டென்ஷனாக தேவை இல்ல. முக்கியமா அவங்களோட ரொம்ப ரொம்ப அழகான பொண்ண (No Bad Words Pls) சைட் அடிக்கற பசங்க கிட்ட இருந்து பாதுகாக்கற டென்ஷன் இல்ல.
ஏன்னு கேக்கறீங்களா?

ஏன்னா எனக்கு கல்யாணம்  :)
 


இவ்ளோ நாள் கல்யாண வேலைய கவனிச்சுகிட்டு (அதாங்க... ஷாப்பிங்) ப்ளாக் போட நேரமே இல்லாம பிசியா இருந்துட்டேன். பத்திரிகை விநியோகம் நடந்துகிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே  இருக்கு. எல்லாரையும் கூப்பிட்டுட்டு நம்ம ப்ளாக் நண்பர்களை கூப்பிடாம விட்டா சரியா? அதனால உங்களை என் கல்யாணத்துக்கு கூப்பிடறேன். வந்துடுங்க . இதோ இன்விடேஷன்.

13 comments:

Unknown said...

திருமண கடலில் தொபுக்கடிர் என்று குதிக்கும் நீங்கள் இதே மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்........

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப சந்தோஷம்,
வாழ்த்துக்கள்.

யுவராணி தமிழரசன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சம்பத்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி..

வெளங்காதவன்™ said...

congrates!

Athisaya said...

வணக்கம் சொந்தமே நீண்ட நாட்களின் பின் தங்கள் தளம் வருகிறேன்.யுவராணி சகோவின் விருதிலி பார்த்தேன்.வாழ்த்துக்கள்.என்னங்க நீங்க???ரொம்ப வித்யாசமான அழைபா இருக்கே..???வாழ்த்துக்கள்.சந்திப்போம்.

இராஜராஜேஸ்வரி said...

திருமணம் சிறப்பாக நடைபெற மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள் !

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்.....

சாதாரணமானவள் said...

Thank you so much friends :)

tamilananthan said...

வாழ்த்துக்கள் சகோதரி...

Ganapathi DCW said...

சூப்பர் ஜோடிங்க

majeed said...

ஓ...திருமண அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்,நரக சுகம் அல்லவா நெருப்பை விழிங்கிவிட்டேன்,ஓ... அமிலம் அருந்திவிட்டேன்,

mohan said...

ALL THE BEST MAM