அச்சச்சோ.... என் கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டே நாள் தான் இருக்கு. நலுங்கு வைக்க அத்தை மாமா எல்லாரும் வந்தாச்சு. ஒரு பக்கம் இன்னும் ஷாப்பிங் போய்கிட்டே இருக்கு. என் ஆத்ம நண்பரையே கல்யாணம் பண்ணிக்க போறேன். நானும் அவரும் தான் ஒண்ணா சேர்ந்து இன்விடேஷன் குடுக்கறோம், தேவையான திங்க்ஸ் வாங்கிக்கறோம். நாங்க நண்பர்களா சுத்துனதை விட வருங்கால கணவன் மனைவின்னு சுத்தறது ஒரு வித்யாசமான உணர்வை தருது.
கல்யாணம்ங்கறது பசங்களுக்கு எப்படியோ. ஆனா பொண்ணுங்களுக்கு கலந்து கட்டி பல உணர்வுகளை உண்டாக்குது.
* கூடை கூடையா நாம அன்பு காட்டவும், நம்ம மேல அன்பு காட்டவும், நமக்கே நமக்குன்னு ஒரு ஆள் வரப்போறாங்கன்னு சந்தோஷம் பொங்குது.
* இத்தனை வருஷமா நம்மள அவ்ளோ பத்திரமா பொறுப்பா இளவரசி மாதிரி நம்மள பார்த்துகிட்ட அம்மா அப்பாவை விட்டு இன்னொரு இடத்துக்கு போறோம்னு அழுகையா வருது.
.............
.............
.............
.............
.............
.............
.............
.............
.............
(ஸீ .... கண்ணுல தண்ணி பொங்குது)
* எந்த பெரிய கவலையும் இல்லாம இஷ்டப்பட்ட மாதிரி வாழ்ந்துட்டு இருந்தோம், இப்ப நிறைய பொறுப்பு வருதேன்னு யோசனையா இருக்கு.
* புகுந்த வீட்டுல அவங்க எல்லாம் என்ன மாதிரி ஆளுங்க, என்ன பேர் எடுக்க போறோம்னு பயமா இருக்கு.
* எனக்கும் அவருக்குமான ரொமான்ஸ் வாழ்க்கைய நினைச்சா படபடப்பா இருக்கு.
* இவ்ளோ நாள் கல்யாணம் ஆகாத பொண்ணுங்கறதால பசங்க சைட் அடிச்சுட்டு இருந்ததை மிஸ் பண்ண போறோமோன்னு கொஞ்சம் கவலையா இருக்கு ;-) .
* எல்லார் மாதிரியும் எனக்கும் குடித்தனம் பண்ண போற தகுதி வந்தாச்சுன்னு ரொம்ப பெருமையாவும் இருக்கு.
ஒரு நிமிஷம் இருக்கற உணர்வு அடுத்த நிமிஷம் இருக்கறது இல்ல. என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் எப்படி இருக்க போகுதோ....... தெரியல. ஸோ , இந்த நிமிஷத்தை என்ஜாய் பண்ணிக்க மட்டும் மனசுக்கு கட்டளை போட்டுகிட்டே இருக்கேன்.

17 comments:
இனிய திருமண வாழ்த்துகள் சகோ...
வாழ்த்துக்கள்...
ஜோடிப்பொறுத்தம் அருமை....
வாழ்த்துகள், வாழ்க வளமுடன், சுகமுடன், பொருளுடன் வாழ்க வளர்க, ஆமா எங்களை ஏன் கல்யாணத்துக்கு கூப்பிடலை...?
உணர்வுகளை எழுத்துக்கள் ஆக்கிய விதம் அருமை சகோ.! ஜோடிப் பொருத்தம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க :D
வாழ்த்துக்கள்..!!! கல்யாணம் ஆகிட்டாலும் ப்ளாக் எழுதறதை மட்டும் நிறுத்திடாதீங்க... அப்புறம் மக்களுக்கு வாழ்க்கையில கஷ்டம்னா என்னான்னே மறந்து போயிடும்... :)
//பொண்ணு ரொம்ப அடக்க ஒடுக்கமா இருக்குல்ல? நம்பிடாதீங்க....//
பொண்ணு இல்லீங்க பையன் தான் அடக்க ஒடுக்கமா இருக்காரு. நீங்க லக்கிதான்.
பதிவு ரொம்ப ஏதார்த்தமா எழுதி இருக்கிங்க.இல்லற வாழ்வு இனிமையாக அமைய வாழ்த்துகள்.
ஆல் தி பெஸ்ட்..நல்ல ஜோடி பொருத்தம் ...
வாழ்த்துகள்
இன்று போல் என்றும் புன்னகையுடன் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள்..ப்ரார்தனைகள் !!-அப்பாஜி, கடலூர்.
Made for each other...
என் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.......
வாழ்த்துகள் :-) ஜோடிப் பொருத்தம் சூப்பர்! MADE FOR EACH OTHER!
பல்லாண்டு வாழ இனிய வாழ்த்துகள்..
இனிய நல் வாழ்த்துக்கள்..!
வாழ்த்துகள்...
இனிய இல்லறதுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ!
ஹி ஹி ஹி TERROR சொன்ன மாதிரி தலிவருதான் அடக்க ஒடுக்கமா இருக்காரு!
வடிவேலு பாணியில சொன்னா "இவற நினைச்சா எனக்கு பாவமா இருக்கு"
btw, எழுத்து நடை தொய்வில்லாமல் சுவாரஸ்சியமா தொய்வின்றி நகைச்சுவையாகவும் இருக்கு!
Post a Comment