Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, August 19, 2012

என் விகடனில் சாதாரணமானவள்

எல்லாம் பாத்துக்கங்க.. நானும் ரௌடி தான் ... நானும் ரௌடி தான்....

வெகுநாள் கனவு பலித்தது....

ஏ டண்டணக்கா ஏ டனக்குனக்கா பார்ட் 2

இப்படி எதை வேணும்னாலும் தலைப்பா வெச்சுக்கங்க. நான் அவ்ளோ சந்தோஷத்துல இருக்கேன். கல்யாணம் ஆனதும் நல்ல மாற்றம் வரும்னு ஜாதகத்துல சொன்னாங்க. அது  என் எழுத்து பணியிலங்கறது (?!) இப்பதான் தெரியுது.

என் பெயர் என் ஆத்மநண்பன் 'ஆனந்தவிகடன்' ல வரணும்னு ரொம்ப ஆசை ஆனா கேள்விபதில் எழுதி போட கூட  இதுவரை முயற்சித்ததில்லை. இத்தனை வருஷம் கழித்து நான் கவிதை (ன்னு நினைச்சு) எழுதியதை மட்டும் இன்டர்நெட் வசதி இருந்ததால் அப்பப்ப மெயில் பண்ணுவேன். என் மொபைல்க்கு ' தங்களின் பங்களிப்பு ஆசிரியர் குழுவின்  பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தொடர்ந்து உங்களுடைய பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்  கொள்கிறோம். நன்றி' அப்படின்னு ஒரு மெசேஜ் வரும். அவ்ளோ தான்.

விகடன்ல வலையோசை தொடங்கியதும், அட, நமக்கே நமக்குன்னு ஒரு வாய்ப்பு தராங்கன்னு அதுக்கும் அப்ளை பண்ணினேன். ஒவ்வொரு வாரமும் விகடனை வாங்கறது, இந்த வாரமும்  நம்மோடது இல்லைன்னு பொக்குனு போறதுன்னு நடந்துட்டே இருந்துச்சு.


திடீர்னு முந்தாநேத்து ஈரோடு கதிர் சார் கிட்ட இருந்து ஒரு போன் கால். அவர் எப்படி என் நம்பர சரியான ஆள் கிட்ட இருந்து வாங்கினாரோ... ஆச்சரியம்... இந்த வாரம் உங்களோட பதிவை 'ஆனந்தவிகடன் வலையோசை'ல போடலாமான்னு கேக்கறாங்க. உங்களுக்கு ஓகேன்னா விகடன் ஆபீஸ் ல இருந்து பேசுவாங்கன்னு ' சொன்னார். நான் மயங்கி விழாத குறை. எங்க மாமியார் மட்டும் என் பக்கத்துல இல்லைனா, நிஜமா 'மௌனம் பேசியதே' ல சூர்யா 'Hey Hey... come on aacha' பாட்டுக்கு ஒரு ஆட்டம் போடுவாரே... அப்படி ஒரு ஆட்டம் போட்டிருப்பேன். நான் ஒரு அடக்கமான மருமகள்ங்கறதால (ஹிஹிஹி) அடக்கி வாசிச்சுகிட்டேன்.


அப்பறம் விகடன்ல இருந்து கூப்பிட்டாங்க. 'ஏதோ சுமாரா எழுதறீங்க. கொழந்த புள்ள பொக்குனு போறீங்கலாம். பொழச்சு போங்கன்னு விகடன்ல உங்க தளத்தை அறிமுகப்படுத்த போறோம். என்ஜாய் பண்ணுங்க'ன்னு சொன்னாங்க. என்னோட ஒரே பேட் லக் என்னன்னா இந்த வாரத்திலிருந்து என் விகடன் ஆன்லைன்ல மட்டும் தான் வருமாம். (என்ன கொடுமை சரவணன்.....)

இதோ இந்த லிங்க் ல போனா நீங்களும் பார்க்கலாம்..
http://www.vikatan.com/envikatan/article.php?aid=22889&sid=614&mid=32

'

10 comments:

கோவை நேரம் said...

ரவுடி ஆனதுக்கு வாழ்த்துக்கள்....

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

நன்றி…

சாதாரணமானவள் said...

@ kovai neram & dhanabalan
Thank you friends!

ஸ்ரீ.... said...

தங்களின் வலைப்பக்கம் விகடனால் அங்கீகரிகப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஸ்ரீ....

Anonymous said...

ஆனந்த விகடனில் வருவது என்பது எவ்வளவு சிறப்பான மகுடம் .. உலகத் தமிழர்களை சென்றடைய ஆனந்த விகடன் போல வேறு ஊடு இல்லை - உங்களின் படைப்புக்கள் தரமானவை என்பதை இதுவேக் காட்டுகின்றது .. வாழ்த்துக்கள் சகோதரி !!!

மாணவன் said...

விகடன் அங்கீகாரத்திற்கு வாழ்த்துகள்! :-)

ஹேமா (HVL) said...

வாழ்த்துகள்! மேலும் எழுதுங்கள்.

வெங்கட் said...

வாழ்த்துக்கள்...!!

// என்னோட ஒரே பேட் லக் என்னன்னா இந்த வாரத்திலிருந்து என் விகடன் ஆன்லைன்ல மட்டும் தான் வருமாம். (என்ன கொடுமை சரவணன்.....) //

சேம் ப்ளட்..! :)

Athisaya said...

ரவுடி ரங்கம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்!

Anonymous said...

நன்று