Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Wednesday, August 8, 2012

எது கவிதை ?

 
மடக்கி எழுதினால் கவிதை
மடக்காமல் எழுதினால் கட்டுரை
என்கின்றனர் ஒரு சாரார்

மடக்கி மடக்கி எழுதினால் அது மடக்கி
கவித்துவமாக எழுதினால் அது கவிதை
என்கிறார்கள் இன்னொரு சாரார்

கவிதைக்கும் கணக்குகள் உண்டு
கண்டபடி எழுதினால் அது கவிதையா?
சண்டைக்கு வருகிறார்கள் இன்னும் சிலர்

என்ன செய்வது?
உலகத்தின் முதல் கவிதை
என்னால் எழுதப்பட வாய்த்திருக்கவில்லை...

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை என்னவென்று ஒரு கவிதை...

எப்படியோ நல்ல கருத்துக்கள் சொன்னால் சரி...

(சமீபத்தில் பார்த்திபன்-வடிவேலு ஜோக்ஸ் பார்த்தீர்களா...? ஹா... ஹா... )

நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

MARI The Great said...

இதை வச்சே ஒரு கவிதை எழுதிட்டீங்க போல :)

JR Benedict II said...

அட நல்லா இருக்குங்க

Suji... said...

creativity ! nice ...:)

Thozhirkalam Channel said...

வாழ்த்துகள்..!

வெங்கட் said...

இதுக்கு பேர் தான் கவிதையா..?!!!!!!!!!!!!!

தி.தமிழ் இளங்கோ said...

எது கவிதை என்பதில் யாருக்கும் இன்னும் சந்தேகம் தீரவில்லை புதுக் கவிதை வந்ததால்!நீங்கள் பாட்டுக்கு எழுதுங்கள்!உங்கள் பாட்டு தானே வரும்!

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!!தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

Athisaya said...

அருமை அருமை.இப்படியும் ஒரு கவிதை.வாழ்க..!

இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

VijiParthiban said...

கவிதை என்னவென்று ஒரு கவிதை...வாழ்த்துகள்..

சாதாரணமானவள் said...

நன்றி தனபாலன்

@ வரலாற்று சுவடுகள்
ஆமாங்க :)

@ ஹாரிபாட்டர்
//அட நல்லா இருக்குங்க//
அப்ப நல்லா இருக்காதுன்னு நினைச்சீங்களா?

தேங்க்ஸ் சுஜி, தொழிற்களம்

@வெங்கட்
இல்லையா?

@தமிழ் இளங்கோ
ஹா ஹா ஹா இருக்கலாம்ங்க

@ ஸாதிகா
அப்படிங்களா... ரொம்ப நன்றிங்க.

தேங்க்ஸ் அதிசயா

தேங்க்ஸ் விஜி பார்த்திபன்