Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, January 17, 2013

என்னை பார்த்து ஏன் அந்த கேள்வி கேட்டாங்க?

 கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் ஒரு நான்கு மாதம் கழித்து என்னை சந்திப்பவர்களில்  பெரும்பாலானோர் என்னை பார்த்து இரண்டு கேள்விகளில் ஒன்றை கட்டாயம் கேட்டார்கள்.

1. என்ன இது, இவ்வளவு இளைச்சு போய்ட்ட? (ஏற்கனவே நான் ஒல்லி என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்)
2. அட, எங்க போச்சு உன் கலர்? இப்படி கறுத்துப் போய்ட்ட? (நான் வெள்ளையாக இருந்தேன் என்பது அவர்கள் எண்ணம். நான் பளிச்சென்று இருந்தேன் என்பது என் எண்ணம் . என்னை நேரில் பார்த்தவர்கள் அறிவீர்கள்.)

எங்க போச்சு என் கலரும் உடம்பும்? கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு உப்புமா வேணும்மா... (நான் ஒரு உப்புமா பைத்தியம்) என்று கேட்ட சில நிமிஷங்களில் எனக்கான உப்புமா ரெடியாக இருக்கும். நான் ஒல்லியா இருக்கறதால எங்க அம்மா டெய்லி ஜூஸ் தருவாங்க. ( மென்னு சாப்பிட சோம்பேறித்தனம் ) . மானாட மயிலாட ப்ரோகிராம மிஸ் பண்ணினதே கிடையாது. விருப்பப்பட்ட கிளாஸ்ல சேர்ந்துக்குவேன். அந்த லைப் செமையா இருந்துச்சு.

 நான் எது செய்தாலும் அது பாராட்டப்படும் போது எனக்கு தன்னம்பிக்கை அதிகரிச்சுது. திட்டப்படும்போது கவலையை மனசுக்குள் கொண்டு போகாமல் என்ன காரணத்துக்காக திட்டப்படறேன்னு அனலைஸ் பண்ணிக்க முடிஞ்சுது. ரெகுலரா தியானம் பண்ணி மனசை ஒரு சமநிலையில வச்சுக்க முடிஞ்சுது. மனம் தெளிவா இருந்ததால முகமும் தெளிவா இருந்துச்சு. எல்லாம் ஒரு வட்டத்துல சரியா போயிட்டு இருந்துச்சு.


கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கான உப்புமாவை நானே செய்துகொள்ள வேண்டியிருந்தது. ஜூஸா  குடிக்காத, மென்னு சாப்பிடு, அதுதான் சத்துன்னு எங்க மாமியார் சொல்வாங்க. டிவி அவங்க இஷ்டத்துக்கு பார்த்துக்கட்டும், நாம புக் படிச்சுக்கலாம்ன்னு டிவி பார்க்கறதை விட்டுட்டேன். இந்த ஏரியால எந்த கிளாசும் கற்றுத்தருவது கிடையாது.  தியானம் செய்ய நேரம் இல்ல, சாமி என் இஷ்டத்துக்கு கும்பிட முடியல, பதிவு எழுத முடியல, டைரி எழுத மறந்தே போச்சு, அப்படி இப்படின்னு சில விரும்பாத மாறுதல்களும் நடந்துச்சு. எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டமேன்னு கொஞ்சம் கொஞ்சமா சுய இரக்கம்  தலைகாட்டத்  தொடங்கியது..

எங்க மாமியார் மாமனார் என்னை பொண்ணு மாதிரி நல்லா பாத்துக்கிட்டாலும் என்னை பாராட்டியதில்லை. ஏன்னா அவங்க பாராட்டற மாதிரி நான் நடந்துகிட்டதில்லை. நான் சமையல் வேலைக்கு ரொம்ப புதுசு. மாமியார்கிட்ட கத்துகிட்டு தான் சமைக்க ஆரம்பிச்சு இருக்கேன். இதுக்கு அவங்க என்னை திட்டாம இருக்கறதே பெருசு.

அவங்க திட்டற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு மாமனார், மாமியார், என் கணவர் இவங்க அன்புக்காகநானே பல விஷயங்கள்ல என்னை மாத்திக்கிட்டேன்.  நேரமா எழுந்திரிக்கறதுல  ஆரம்பிச்சு நைட் தூங்கற வரைக்கும் நான் செய்யற பல செயல்கள் நானா விருப்பப்பட்டு என்னை மாத்திக்கிட்டேன்.

மேலும், உடம்பு இளைச்சதுக்கு உடல் உழைப்பும், சரியான சாப்பிடாததும் காரணம்.  அம்மா சமையல் டேஸ்ட் வேற. மாமியார் சமையல் டேஸ்ட்  வேற. எனக்கோ சமைக்க தெரியாது. கடமைக்கு சாப்பிட்டேன். 

இந்த சமயத்துல அந்த ரெண்டு கேள்விகளும் அடிக்கடி கேட்கப்பட ஆரம்பிச்சுது. ஒரு பலசாலிய பார்த்து ஊரே 'என்ன இப்படி ஆகிட்டீங்க'ன்னு கேக்க ஆரம்பிச்சதும் அவன் பலம் போய்டுமே... அந்த கதையா நானும் நொந்து போக ஆரம்பிச்சேன். என் கணவருக்கு என் கலரும் என்னிடம் பிடிச்ச விஷயம். ஒரு கட்டத்தில் அவரே 'என்ன இவ்ளோ கருத்துட்ட ?' என்று கேட்க ஆரம்பிச்சார். பயங்கர மனஅழுத்தம். என் கணவர் கிட்ட 'என்னை ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போங்க. எனக்கு ஸ்ட்ரெஸ் ரிலீவ் ஆகணும்' ன்னு கேட்டேன். சரின்னு சொல்லி இருந்தார்.

அந்த சமயத்தில் தான் எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை வந்தது.

(தொடரும்)



6 comments:

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள்... தொடர்கிறோம்...

கதையா...? நிஜமா...?

எப்படி இருந்தாலும் சுவராஸ்யமா இருக்கு... தொடருங்கள்....

சுபத்ரா said...

ஹாய் கௌரி :)

மனசை சந்தோஷமா வெச்சுகிட்டா உடம்பும் நல்லா ஆயிடும். அம்மா பாத்துக்கற மாதிரி வேறு யாரும் நம்மள பாத்துக்க மாட்டாங்க. நான் கூட காலேஜ் முடிச்சு வேலைக்கு சேர்ந்து 6 வருஷம் ஆகுது. அம்மாவோட அரவணைப்பை எப்பவோ மிஸ் பண்ணிட்டேன். அட்லீஸ்ட் கல்யாணம் வரைக்குமாவது நீங்க அதை அனுபவிச்சிருக்கீங்கனு சந்தோஷப்படுங்க :)

மாமியார் வீட்டுல போகப் போக எல்லாம் பழகிடும். டெய்லி ஒரு 15 நிமிடங்கள் ரெய்கி கொடுங்க - Self Healing. அப்புறம்,

இன்று மட்டும்: கோபப்படாதீர்
இன்று மட்டும்: கவலைப்படாதீர்
இன்று மட்டும்: நன்றியுடன் இருங்கள்
இன்று மட்டும்: ஒருமைப்பாடுடன் பணி புரிந்திடுங்கள்
இன்று மட்டும்: மற்றவர்களிடமும் தன்னிடத்திலும் அன்பாக இருங்கள் :-)

ஆல் த பெஸ்ட்

சுபத்ரா said...

அடுத்த பதிவு எப்போது :)

இராஜராஜேஸ்வரி said...

வீட்டுக்கு வீடு வாசப்படி ..

சாதாரணமானவள் said...

@ சே.குமார்
சொந்த கதை சோக கதை தாங்க

சாதாரணமானவள் said...

@ Subadhra
Thank you Subha!!! I am doing the same