ஆபரேஷன் முடிஞ்சதும் பெட்ல எல்லாம் படுக்க வைக்கல. அப்படியே கைய புடிச்சு கூட்டிட்டு போய் ஒரு சேர்ல உக்கார வைக்கறாங்க.சினிமால காட்டற மாதிரி முருகன் போட்டோ, நமக்கு வேண்டியவங்க எல்லாம் முதன்முதல்ல காட்டல. டாக்டர் தான் நமக்கு முன்னாடி வந்து கண்ணை திறந்து பாருங்கன்னு சொல்றாரு. அவரை பார்த்ததுக்கு அப்பறம் தான் நானா தேடி எங்க வீட்டுக்காரர் எங்கன்னு பார்த்தேன். அவர் தியேட்டருக்கு வெளில நான் வந்துட்டேனான்னு எட்டி பார்த்துட்டு இருந்தார். ஹப்பாடா... அவர் முகத்தை மறுபடியும் (அதுவும் தெளிவா) பார்க்க முடிஞ்சுதேன்னு கடவுளுக்கு நன்றி சொல்லிகிட்டேன்.
அப்பறம் மறுபடியும் ஒரு முறை விஷன் செக் பண்ணிக்கறாங்க. எல்லாம் சரியா இருந்தா மாத்திரை, சொட்டு மருந்தை எப்ப எப்படி உபயோகிக்கணும்னு ஒரு கிளாஸ் எடுத்துட்டு கிளம்ப சொல்லிடறாங்க. வீடு பக்கம் என்பதால் நான் கணவரின் பைக்கிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். ஒண்ணும் பிரச்சனை இல்ல.ஸோ லேசிக் ஆபரேஷன தைரியமா பண்ணிக்கலாம். ஒண்ணும் பயப்பட தேவையே இல்ல.ஆபரேஷனுக்கு பயந்துகிட்டு இந்த காலத்துல யாராவது குழந்தை பெத்துக்காம இருக்காங்களா? அது மாதிரிதான் இதுவும்.ஒண்ணும் பயப்படாதீங்க.... பார்வை குறைபாடு தைரியமா ஆபரேஷன் பண்ணிக்கங்க.
பொதுவான கட்டுப்பாடுகள்( குறைந்தது ஒரு மாதத்துக்கு):
1. பளீரென்ற ஒளியை பார்ப்பதை தவிர்க்கணும்
2. டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பதை குறைந்தபட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் 2 வாரம் விட்டு விடுங்கள். மனக்கட்டுப்பாடு இல்லாமல் பார்த்தால் கண்களில் பிரச்சனையை வரும்.
3. முகம் கழுவுதல், தலைக்கு குளித்தல் ஆகியவை டாக்டர் சொன்ன பிறகு மட்டுமே செய்யவும். தண்ணீரில் கிருமிகள் இருந்தால் காலத்துக்கும் கண்ணில் பிரச்சனை நிரந்தரமாகி விடும். ஆபரேஷன் அன்று தலைக்கு குளித்துக்கொள்வது உசிதம்.
4. மொபைல் உபயோகித்தல் ரேடியேஷன் பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால் குறைந்தது 3 நாட்களுக்காவது தவிர்க்கவும்.
5. ஒரு வாரம் புத்தகம் படித்தல் கூட வேண்டாம்
6. தூசு படாமல் பார்த்துக்கணும்.
7. கண்களை எக்காரணம் கொண்டும் தேய்க்க கூடாது.
8. ஒரு மாசத்துக்கு தூங்கும்போதும் ஹாஸ்பிடலில் தந்த கண்ணாடி அணிந்தே தூங்க வேண்டும். அப்ப தான் நாம நம்மளையும் அறியாம கண்ணை அழுத்தாம இருப்போம்.
9. புருவம் எடுத்தல், பேசியல் போன்றவற்றுக்கு ஒரு மாதமாவது (சரியான கால அளவு தெரியல) லீவ் விட்டுடுங்க. ஆபரேஷன் முன்பே வேணா செஞ்சுக்கங்க. கண் மை கூட தவிர்த்துடுங்க .
10. ஷவரில் குளிக்கும்போது கண்களில் தண்ணீரின் சாரல் எப்போதும் நேரடியாக விழக்கூடாது.
11. உடற்பயிற்சிகள் , நீச்சல், நீர் நிறைந்த குடம், பக்கெட் போன்ற பளு தூக்குதல் வேண்டாம்.
12. ஆபரேஷனுக்கு பிறகு இரண்டு கண்களையும் ஒன்றை மறைத்து ஒன்று எப்படி தெரியுதுன்னு பார்க்க கூடாது. அது கண் பார்வையை பாதிக்குமாம்.
13. குறைந்தது 3 டிராப்ஸ் தருவாங்க. ஒவ்வொண்ணையும் குறைந்தது 5 நிமிட இடைவெளிக்கு பிறகே உபயோகிக்க வேண்டும்.
14. Life time க்கு வண்டியில போகும்போது plain glass போட்டுக்கணும். அப்பதான் தூசி மற்றும் கண்கள் காற்றில் காஞ்சு போறதுல இருந்து கண்களை பாதுகாக்க முடியும்.
15. இவ்வளவு சொல்றாங்களேன்னு கண்ணை மூடியே வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. கண்கள் விழித்திருப்பதும் அவசியம்.
அவ்ளோதாங்க அட்வைஸ் .
ஹாங்.... சொல்ல மறந்துட்டேனே..
டாக்டர் கிட்ட லேசர் பண்ணிக்க பயமா இருக்கு. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு சொல்றாங்கன்னு சொன்னப்ப டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா?
"யார்கிட்டயும் இதை பத்தி கேக்காதீங்க முக்கியமா நெட்ல இதை பத்தி எல்லாம் படிக்காதீங்க"
18 comments:
எல்லாம் ஓகே, ஒவ்வொரு கண்ணுக்கும் எவ்வளவு ஆச்சு?
மருத்துவர் இவ்வளவு சொல்லியும் நீங்கள் கேட்கவே இல்லை...
நல்ல வேளை.. நான் இந்தப் பதிவைப் படிக்கல :)
@ ஸ்கூல் பையன்
மொத்தமா 30000. :)
@ திண்டுக்கல் தனபாலன்
என்னது.... சொல்பேச்சு கேக்கறதா? அப்படினா?
@ சுபத்ரா
அப்படினா நானும் உங்க கமெண்ட படிக்க மாட்டேன் போங்க..
30000 நா ரொம்ப கம்மியாச்சே... அதுவும் அகர்வால்ல.....
நானும் ஒரு சோடாபுட்டிதான் . லேசிக் பண்ணிக்கலாம்னு பாத்தா . கட்டுப்பாடுகள் ல்லாம் பலமா இருக்கே. ரெண்டாவது லேசிக்கின் ஆயுசு பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . அப்புறம் இன்னொருவாட்டி ஆபரேசன் பண்ணிகனுன்னும் சொன்னாங்க .
//"யார்கிட்டயும் இதை பத்தி கேக்காதீங்க முக்கியமா நெட்ல இதை பத்தி எல்லாம் படிக்காதீங்க"//
நல்ல விளக்கங்கள்... தேவையானவர்களுக்குப் பயன்படும்!
unga vision evloe irundhadhu before operation ? endha hospital la paneenga? vasan or aravindh edhu best for lasik?
தகவலுக்கு நன்றி, வெளி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கண் மருத்துவம் மிக எளிமையாகவும் பாதுகாப்பான தாகவும் தெரிகிறது.
வலி வேதனையை இப்படியும் கூட விவரிக்க முடியுமா?...எப்படியோ நலம் நிறைக...எங்கெங்கும்!....
@ ஸ்கூல் பையன்
offer விட்டிருந்தாங்க. ஒருவேளை அதனால குறைவா இருக்கலாம்.
@ஜீவன் சுப்பு
நிறைய பேர் அப்டி நினைச்சு தான் பண்ணிக்கறது இல்ல. இன்னொரு வாட்டி ஆபரேஷன் எல்லாம் இல்லை. புரை விழுந்தா தான் பண்ணனும். இயற்கையா உங்களுக்கு சாளேஸ்வரம் (தூரப்பார்வை) வர வரைக்கும் ஒண்ணும் பிரச்சனை இல்லை. சாளேஸ்வரம் வந்தா கண்ணாடி மட்டும் தான் தீர்வு. நமக்கு சாளேஸ்வரம் வரும்போது அப்ப ஏதாவது கண்டுபிடிப்பு வந்துடும். 30000 போட்டு வாங்கின ஒரு மொபைல் நாலு அஞ்சு வருஷத்துல பழைய மாடல் ஆகிடுச்சுன்னு தூக்கி போட்டுட்டு வேற வாங்கறோம். 15 வருஷம் கண்ணாடி இல்லாம சுதந்திரமா வாழ செலவு பண்ணினா என்ன சார். சீக்கிரம் பண்ணிக்கோங்க. செமையா இருக்கு. சர்வ நிச்சயமா சுதந்திரமா இருக்கும். 20 வருஷம் கண்ணாடி போட்டிருந்தவ சொல்றேன். நம்புங்க.
@ dhanesh nair
என் விஷன் 4 point something இருந்துச்சு. அகர்வால்ல பண்ணினேன். எது பெஸ்ட்ன்னு எல்லாம் தெரியலைங்க. இங்க செஞ்சேன். நல்லா இருக்கு. அவ்ளோ தான் :) .
@வெங்கட், துரை
நன்றிங்க
@வீர ராகவன்
இருக்கலாம்ங்க :)
SISTER
LASIK VS Zyoptix DIFFERENT PLS.
MY EYE POWER 3.75 EACH
HOW MANY MONEY FOR EACH EYES
PLS.REPLY SISTER
KARTHISWARAN14@GMAIL.COM
https://www.facebook.com/KARTHISWARAN8000
TNK. SISTER
Post a Comment