Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Sunday, December 22, 2013

இப்போது நான் பாதி கார்டியாலஜிஸ்ட்

போன மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு 1மணிக்கு போன்  வந்துச்சு. தூக்கக்கலக்கத்துடன் போன் பேசினேன். கனவா நிஜமான்னு தெரியாத நிலையில் வந்த அதிர்ச்சி தகவல் தூக்கத்தை துரத்திடுச்சு. என் அத்தை "கண்ணு... தைரியமா இரு... அப்பாவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. ஹார்ட் அட்டாக்காம். எதுக்கும் ஒரு தடவை நேர்ல பார்த்துடு"ன்னு சொன்னாங்க. ஒண்ணுமே புரியாம திணறிட்டேன்.

 

 எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர்ற அளவு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மிதமான சாப்பாடு. தியான மாஸ்டர். கவலை இல்லாத வாழ்க்கை. ஒரு வேளை இது நிஜமில்லையோ.. அத்தை தப்பா போன் பண்ணிட்டாங்களோ... என்னென்னவோ தோணுச்சு . இது உண்மை தான்னு தெரிஞ்சதும் உடனே கணவருடன்  கிளம்பி ஹாஸ்பிடலுக்கு போனேன். (வழியெல்லாம் அழுதுகிட்டே தான் ). செக் போஸ்டில் நிறுத்திய போலீஸ்காரர் கூட ஆறுதல் சொல்லும் அளவுக்கு அழுதேன். ஒரே பொண்ணு... அதுவும் அப்பா செல்லம் இல்லையா..

 ஹாஸ்பிடலில் "அப்பா ஐ.சி.யூ ல இருக்காங்க. நல்லா தான் இருக்காரு. ஒண்ணும்  பயந்துக்காத. "ன்னு அம்மா சொன்னாங்க. உள்ளே எட்டி பார்த்தப்ப அப்பா நல்லா இருக்கேன் கவலைபடாதன்னு சிக்னல் பண்ணினார். நர்ஸ் கிட்ட கேட்டப்ப அவங்களும் பாசிடிவ்  பதில் தந்தாங்க. அதுக்கப்பறம் தான் மனசு நிம்மதி ஆச்சு.

விஷயம் என்னன்னா காலைல உருளைக்கிழங்கு குழம்பு (சார் சைவம்) சாப்பிட்டுட்டு மதியம் பவானி வரைக்கும் பைக்கிலேயே போய்  இருக்கிறார். வழியிலேயே வலி வந்துடுச்சு. சரி... வாய்வு தொல்லையா இருக்கும்ன்னு அவர் பிரெண்ட் வீட்டுலேயே ரெஸ்ட் எடுத்திருக்கார். அட்டாக் வந்தா ஒண்ணா வாந்தி இல்லாட்டி பேதி வருமாமே... இவருக்கு பேதி ஆயிருக்கு. சுத்தமா டயர்ட் ஆகி அங்கேயே ஒரு மணிநேரம் படுத்து பார்த்திருக்கார்.  ரெஸ்ட்லெஸ் நிலையே தொடரவும், வீட்டுக்கு போனால் போதும்ன்னு  திரும்ப வண்டியிலேயே சமாளிச்சு ஓட்டிட்டு வந்திருக்கார். வீட்டுக்கு வந்தும், செமையா வேர்த்திருந்த அவருடைய சட்டை பனியனை கழட்டி எவ்வளவு ஈரம்னு வேற அம்மா கிட்ட காமிச்சிருக்கார் .

அலோபதி சிகிச்சையை பொதுவா அப்பா விரும்ப மாட்டார். அவரோட ஒரு ஸ்டுடன்ட், அக்குபஞ்சர் டாக்டரா  இருக்காங்க. அந்த நேரம் அந்த அம்மா வந்திருந்தாங்க. அவங்களும் என்னத்த டயக்னைஸ் பண்ணினாங்களோ... இது வாய்வு தான்னு ஒரு மணிநேரம் என்னென்னமோ செஞ்சுருக்காங்க. அவங்க போனதுக்கப்பறமும் ரெண்டு கையிலயும் பயங்கர வலி ப்ளஸ் நடு நெஞ்சுல (இடது பக்கம்னு சொல்லல) வலி தொடர்ந்து இருக்கவும், அம்மா கட்டாயப்படுத்தி ஈரோடு ட்ரஸ்ட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க. அங்க போனதும் ECG  எடுத்து பார்த்துட்டு டாக்டர் "இது ஹார்ட் அட்டாக் தான். அதுவும் மாஸிவ் அட்டாக்." ன்னு கன்பார்ம் பண்ணி அட்மிட் பண்ணிட்டாரு. அட்டாக் வந்து எட்டு மணி நேரத்துக்கு பிறகு தான் அப்பா ஹாஸ்பிடல் போய் இருக்கார். அதுக்கப்பறம் ரெண்டு மணி நேரம் கழிச்சுதான் விஷயம் தெரிஞ்சுருக்கு.

அதுக்கப்பறம் திங்கள் நைட்டு, அப்பாக்கு ஆஞ்சியோகிராம் பண்ணி பார்க்கணும். அவருக்கு அடைப்பு இருக்கும்னு தோணுதுன்னு டாக்டர் சொன்னார். அப்பாவோட ஹோமியோபதி ஸ்டுடென்ட் ஒருத்தர் "ஆஞ்சியோ  மட்டும் பண்ணவே பண்ணாதீங்க. அதுல யூஸ் பண்ற டை, கிட்னில ஸ்டோர் ஆகி கிட்னி ரெண்டு வருஷத்துல வீக் ஆகிடும்" ன்னு பயமுறுத்தினாங்க. ஒருத்தர் இந்த முருகன் டாக்டர் தான்  ஈரோடுல ஹார்ட்டுக்கு பெஸ்ட் டாக்டர்ன்னு சொல்றார். இன்னொருத்தர் ஈரோட்ல பார்க்கறது வேஸ்ட். உடனே கோயம்பத்தூர் கூட்டிட்டு போங்கன்னு சொல்றார். இதுல இன்னொரு ட்விஸ்ட் வேற. இந்த டாக்டரும் ஆஞ்சியோ  பண்றதா இருந்தா நான் ஏற்கனவே பணம் தின்னிகள் பதிவுல குறிப்பிட்ட அந்த ஹாஸ்பிடல்ல தான் பண்ணுவாராம். எனக்கு, அப்பாவுக்கு எல்லாம் ஏற்கனவே அந்த ஹாஸ்பிடல் அலர்ஜி. தலைவலி காய்ச்சல் தவிர பெருசா எதையும் பார்த்திடாத எங்க குடும்பத்துக்கு இதுல எதை நம்பறது எதை விடறது எதை செய்யறது எதை செய்யக்கூடாதுன்னு ஒன்னும் புரியல.


அப்பாவுக்கு வேற மெது மெதுவா நுரையீரல், கிட்னி எல்லாம் பிரச்சனையை பண்ண ஆரம்பிச்சுடுச்சு. நுரையீரல் ல சளியும், கிட்னி ல கிராட்டின் லெவலும் அதிகம் ஆகிடுச்சு. பல்ஸ்  குறைய ஆரம்பிச்சுடுச்சு. இதெல்லாம் சரியானால் தான் ஆஞ்சியோ  பண்ண முடியுமாம். (இந்த பதிவுல நிறைய டெக்னிகல் வார்த்தைகள் உபயோகப்படுத்தி இருக்கேன். பழகிக்கோங்க. நான் பழகல ?) ஆனா எங்களுக்கு என்ன ஆச்சரியம்னா அப்பா கொஞ்சம் கூட அப்நார்மலா தெரியல. எப்பவும் போலவே இருந்தார். வீட்டுக்கு போலாம் எதுக்கு இன்னும் இங்க இருக்கோம்ன்னு கேட்டுகிட்டே இருந்தார். அவருக்கு தெரிஞ்சா பயந்துடுவாரோன்னு வாய்வு தொல்லைக்கும் சளிக்கும் தான் சிகிச்சைன்னு சொல்லியே சமாளிச்சோம். டாக்டர்கள் பொய் சொல்றாங்களோன்னு கூட தோணுச்சு. 

ஒரு அஞ்சு நாள் ஐ.சி.யூ விலேயே காத்திருந்த பிறகு டாக்டர் "நீங்க கோயமுத்தூரே கூட்டிட்டு போங்க. இங்க பல்ஸ ஏத்தறதுக்கு மெஷினரிஸ் இல்ல"ன்னு ஆம்புலன்ஸ் ல அனுப்பி வெச்சுட்டார்.

ஸோ ,
மருந்து செலவு இல்லாமல் ஹாஸ்பிடல் செலவு 15000.
ஆம்புலன்ஸ் செலவு ஈரோடு டு கோவை                     5000

 பெரிய பதிவா போய்டுச்சு. அதனால வழக்கம் போல 
(தொடரும்)

3 comments:

'பரிவை' சே.குமார் said...

அப்பா இப்போ நல்லாயிருக்காங்கல்ல...

தொடருங்க...

உஷா அன்பரசு said...

தொடருங்க.. கடவுள் அருளால் உங்க அப்பா நலமோடு வாழ பிரார்த்திக்கிறேன்.

உங்கள் அப்பாவை போலவே என் மாமனாருக்கும் இதே போல் நடந்தது.... இப்ப நினைச்சாலும் நம்ப முடியலை.. 10 நாள் மருத்துவமனையில் இருந்து 3.5 லட்சம் செலவாகி காப்பாற்ற முடியாமலே போய்விட்டது.. ஒரு வருஷமாயிடுச்சி. இப்ப இந்த பதிவை படிச்சதும் மறுபடியும் அந்த நினைவுகள் வந்து வருத்தமாயிடுச்சி. உடல் கனமில்லாமல் ரொம்ப ஆரோக்கியமா இருந்த அவருக்கு எப்படி வந்ததுன்னு நம்பவே முடியலை... அவரே நம்பவில்லை..

kavitha said...

15,000 ரவுண்டா ஆவுட்டுமேன்னே வெச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. பல்ஸ ஏத்தறதுக்கு மெஷினரிஸ் இல்லன்னு 5 நாலு ஆச்சு பாருங்க அவிங்களுக்கு... இங்க தானுங்க நிக்கிறாங்க டாக்டர்ஸ் எல்லாருமே