நான் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுப்பதை பற்றி பேசப்போவதில்லை.
இப்பவெல்லாம் ப்ரொபைல் போட்டோ மட்டும் தான் போட்டோ. மற்றெல்லாம் அழகான போட்டோ category ல யே வராது .
1. முடிந்த வரை நேராக நின்று போஸ் கொடுப்பதை விட்டு விடுங்கள். உங்களுக்கு பிடித்த நடிக நடிகைகளின் போட்டோ 99% நேராக இருக்காது.
2. சைடு போஸ் எடுக்கும்போது கன்னத்தின் டொக்கு தெரியாத மாதிரி தான் போட்டோ எடுக்கணும். கன்னத்தின் வளைவு உப்பி பின் கீழே வரவேண்டும். சரேல்ன்னு இறங்கக்கூடாது.
3. உங்க கண்ணு அழகா இல்லன்னா அல்லது சின்ன கண்ணா இருந்தா பேசாம கூலிங் கிளாஸ் போட்டுகோங்க.
4. அழகான பெரிய கண்ணு ன்னா கூலிங் கிளாஸ சட்டைல மாட்டிக்கோங்க
5. பொண்ணுங்க கண்ணுக்கு மை வெச்சா கண்டிப்பா போட்டோல அழகா இருப்பாங்க.
6. பசங்க தாடி மீசை புது ஹேர்ஸ்டைல்ல என்ன கூத்தடிச்சு இருந்தாலும் அதை காட்ட சைடு போஸ் மட்டும் தான் குடுக்கணும்.
7. முடிஞ்சவரைக்கும் கேமராவ பார்க்காதீங்க
8. வெயில் நேரத்துல போட்டோ எடுத்தா, சூரிய வெளிச்சம் முதுகு பக்கம் இருக்கற மாதிரியும், முடில படற மாதிரியும் எடுத்தா செம லைக்ஸ் குவியும். நான் கேரண்டி.
9. புல் போஸ் குடுப்பேன்னு அடம் பிடிச்சா சுவற்றிலோ மரத்திலோ கம்பத்திலோ சாஞ்சு நின்னு போஸ் குடுங்க.
10. போட்டோ எடுக்கும்போது 'சீஸ் (cheese)' சொல்லுங்க. நிறைய பேர் பல்லு தெரிஞ்சா போட்டோ நல்லா இருக்காதுன்னு அவங்களே நினைச்சுகிட்டு போட்டோவ சொதப்பிடுவாங்க. உண்மையில் மெல்லிசா கோடு மாதிரி பல் தெரிஞ்சா தான் அழகு. சீஸ் ன்னு சொல்லும்போது அது தேவையான அளவுல பல் தெரிய வைக்கும்
11. கன்னம் சப்புன்னு இருக்கறவங்க நல்லா காது வரைக்கும் சிரிங்க. உங்க முகம் போட்டோக்கு அழகா இருக்கும்.
12. எதிர்காலத்த சிந்திக்கற மாதிரி போட்டோ வேணும் னா மேல் நோக்கி பாருங்க
13. இறந்த காலத்த பத்தி யோசிக்கற மாதிரி வர போஸுக்கு கீழே பாருங்க
14. நேரா தான் பார்ப்பேன் ன்னா கண்ணுல ஒரு வைப்ரேஷன் குடுங்க
15. கண்களில் சிரிப்பு இருக்கும் படங்களே அதிகம் ஈர்க்கும். பெரும்பாலும் குழந்தைகள் சிரிப்பில் அதை காணலாம்
.
அவ்ளோ தாங்க டிப்ஸ். இத வெச்சு லைக்ஸ் சம்பாதிச்சுகோங்க

4 comments:
நல்ல டிப்ஸ்! :)
அட இம்புட்டு இருக்கா...
அது சரி...
எதிர்க்காலம் எப்படி இருக்கு என்று பார்க்கிறேன்...
அழகான குறிப்புகள்...
These much types to take a photo? Wowww
Post a Comment