Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Wednesday, January 20, 2016

இங்கிலிஷ்ல பேசுனா புரியும். ஆனா திருப்பி பேச முடியல?

யாருக்கெல்லாம் இங்கிலீஷ் வராது?

யாருக்கெல்லாம் இங்கிலிஷ்ல பேச தெரியும் ஆனா பயமா இருக்கு?

யாருக்கெல்லாம் இங்கிலிஷ்ல பேசுனா புரியும். ஆனா திருப்பி பேச முடியல?

நிறைய பேர் கை தூக்குவீங்களே...

எனக்கு தெரியும்...

இதெல்லாம் எப்படி சமாளிக்கறது?

அதுக்கு தான் இந்த பதிவு
english fear க்கான பட முடிவு

நான் இங்கிலீஷ் வகுப்பு நடத்தும்போது பெரும்பாலானவ்ர்களின் பிரச்சனையா மேலே சொன்ன கேள்விகள் இருக்கு. 
இத்தனை வருஷமா மாணவர்கள் மாறிட்டே இருந்தாங்களே தவிர கேள்விகள் மாறவே இல்லை.
சரி நாம தான் நெட் ல நாய் வாய் வெச்ச மாதிரி எல்லாத்த பத்தியும் எழுதறோமே... இத பத்தியும் எழுதிடலாம்னு இந்த பதிவு போடறேன்.

இங்கிலிஷ்ல பேசுனா புரியும். ஆனா திருப்பி பேச முடியல?

இந்த வகை ஆட்கள் ஒரு உண்மைய தெரிஞ்சுக்கணும். உண்மையில உங்க கூட இங்கிலிஷ்ல பேசறவங்க தான் உங்களுக்கு புரியற மாதிரி பேசறாங்களே தவிர, உங்களுக்கு இன்னும்  இங்கிலீஷ் பேச தெரியலங்கறது தான் உண்மை. ஏன் பேச தெரியலன்னா  மொழி பெயர்க்கும்போது நீங்க பேச தேவையான வார்த்தை இங்கிலிஷ்ல எதுன்னு உங்களுக்கு தெரியல. 

உதாரணத்துக்கு
 "நான் ரோட்ல போகும்போது குழில விழுந்துட்டேன்" ன்னு சொல்லனும்னா நான் - I , ரோடு -road , போகறதுக்கு go , விழுகறதுக்கு fall ன்னு தெரியும்.
குழி க்கு என்ன சொல்றதுன்னு தெரியாததால மத்த வார்த்தைகளையும் உபயோகிக்க முடியாம திணற வேண்டியதா போகுது.

மற்ற உதாரணங்கள்:
சொம்பு எடுத்துட்டு வா 
மொட்ட மாடில துணி காயுது 
குக்கர்ல தண்ணி ஊத்து

english vocabulary க்கான பட முடிவு
சட்டில இருந்தாதான் அகப்பைல வரும்ங்கற மாதிரி முதல்ல உங்க கிட்ட இங்கிலீஷ் ல பேச நிறைய வார்த்தைகளை ஸ்டாக் வெச்சுக்கணும். அப்ப தான் தேவையான நேரத்துல அதுல இருந்து எடுத்தது அள்ளி வீச முடியும். உதாரணத்துக்கு உங்க கிட்ட காசே இல்ல. நான்  ஒரு ரெண்டாயிரம் கேக்கறேன். உங்களுக்கு தர மனசு இருக்கு. ஆனா காசு இல்ல. நீங்க உங்க savings ல  ஒரு லட்சம் வெச்சிருந்தா எனக்கு 2000 தந்திருக்கலாம் இல்லையா? . அது மாதிரி முதல்ல நீங்க ஒரு வார்த்தை வங்கி உருவாக்குங்க. அதுல நிறைய வார்த்தைகளை சேர்த்து வைங்க. விருப்பம் போல விசிறியடிச்சு செலவு பண்ணுங்க.அதுக்கு என்ன செய்யணும்?:

நிறைய படிக்கணும். மத்தவங்க சொல்ற மாதிரி நான் நியூஸ் பேப்பர் படிக்க சொல்ல மாட்டேன். அது எழுத்து வடிவம். பேச லேட் ஆகும். நாம மேடை ஏறி பேசப்போறது கிடையாது. சாதாரணமா பக்கத்துல இருக்கறவங்க கூட பேச ஸ்போக்கன் வடிவம் தான் தேவை. பேப்பர் ல 'இந்த சட்டம் அமலுக்கு வந்தது' ன்னு போடுவாங்க. ஆனா நாம பேசும்போது 'இந்த சட்டம் கொண்டு வந்தாச்சு'ன்னு சொல்வோம். இது தான் பேச்சு வடிவம். அதனால நிறைய இங்கிலீஷ் நாவல் படிங்க. அதுவும் வாய் விட்டு படிங்க.


இதனால என்ன ஆகும்னா
உங்க கண்ணு ஸ்போக்கனுக்கு தேவையான சரியான கிராமரை பாக்குது.
வாய் சரியான கிராமரை படிக்குது.
காது சரியான கிராமரை கேக்குது.
மூளை சரியான கிராமரை பதிய வெச்சுக்குது.
இது உங்க Vocabulary யை (Collection of Words) சீக்கிரம் டெவெலப் பண்ணி விடும். 

என்ன செய்யக்கூடாது? 
புக் படிக்க சொன்னேன் இல்லையா... புக் படிக்கும்போது மறந்தும் டிக்க்ஷனரிய தொடாதீங்க. அப்பறம் புக் படிக்க முடியாது. ஒரு வார்த்தை பார்க்க போய்  வேற வேற வார்த்தைகள் பார்ப்போம். 'வாய் விட்டு படிக்கறது'ங்கற விஷயத்துல இருந்து விலகிடுவோம். கண்ணும் டயர்ட் ஆகிடும். அப்ப அர்த்தம் தெரியாட்டி என்ன பண்றதுன்னு கேக்கறீங்களா? கைல ஒரு பென்சில் வெச்சுக்கோங்க. தெரியாத வார்த்தைகளை அண்டர்லைன் போட்டுட்டே வாங்க. உங்களுக்கு எப்ப ப்ரீ டைம் கிடைக்குதோ அப்ப அர்த்தம் பாருங்க. உண்மையில் நீங்க படிச்சு முடிக்கும்போது உங்களுக்கு கதை புரிஞ்சிருக்கும். நம்பலையா? சரி...நீங்களே ரெண்டு விதமாவும் பண்ணி பாருங்க. அப்பறம் சொல்வீங்க. நீங்க சொன்னது சரிதான் ன்னு.
no dictionary க்கான பட முடிவு

என்ன வெச்சிருக்கணும்?

உங்க எல்லார் வீட்லயும் டிக்ஷனரி இருக்குமே.... அதுவும் இங்கிலீஷ் டு தமிழ் தான? அங்க தான் தப்பு நடந்துச்சு. நீங்க இங்கிலீஷ் வார்த்தைகளை படிச்சுட்டே இருக்கறவரா இருந்தா இந்த டிக்ஷனரி உபயோகமா இருந்திருக்கும். ஆனா நாம தான் இங்கிலீஷ் புத்தகங்களை படிக்கறதில்லையே... அதனால அதை வெச்சுட்டு பூஜை தான் பண்ணிட்டு இருந்திருப்பீங்க.

1. நாம நல்லா இங்கிலீஷ் பேசி பழகற வரைக்கும் translate பண்ணிட்டே தான் இருப்போம். அந்த சமயத்துல நமக்கு தேவையானது தமிழ் டு இங்கிலீஷ் டிக்ஷனரி. 

குழி ன்னா PIT ன்னு எழுதி இருக்கும்.
மொட்டைமாடி ன்னா terrace ன்னு எழுதி இருக்கும்

இந்த டிக்ஷனரிய வாங்கிக்கோங்க. இல்லாட்டி மொபைல்ல டவுன்லோட் பண்ணிக்கோங்க.

2. புது வார்த்தை கத்துகிட்டா அதை ஒரு முறையாவது எழுதி வைச்சுக்கணும். அப்ப தான் மறக்காது. அதனால ஒரு சின்ன நோட்பேட் பேனாவோட வெச்சுக்கங்க. சலிப்பு பார்க்காம குறிச்சு வைங்க. ப்ரீ டைம் ல திருப்பி பாருங்க.
notepad க்கான பட முடிவு

3. இங்கிலீஷ் புக் படிக்கறீங்க. மீனிங் தேவைபடுது. உடனே பழைய படி இங்கிலீஷ் டு தமிழ் டிக்ஷனரிய பாக்காதீங்க. இங்கிலீஷ் டு இங்கிலீஷ் பாருங்க. ஒண்ணுக்கு ரெண்டு வார்த்தை கத்துக்கலாம். சுத்தமா மீனிங் புரியலன்னா மட்டும் தமிழ் டிக்ஷனரிய பார்க்கலாம்.

இப்போதைக்கு இவ்ளோ தான். மத்த பிரச்சனை இருக்கறவங்களுக்கு வேறொரு பதிவு போடறேன்.8 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

உங்களின் கருத்துக்கள் உண்மையே! இந்த வார்த்தை தட்டுப்பாடு அதிகம் இருப்பதால் என்னால் ஆங்கிலம் பேசமுடியவில்லை என்பது உண்மைதான்! உங்கள் ஆலோசனைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன்! சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்! நன்றி!

கார்த்திக் சரவணன் said...

செம... எல்லாமே உண்மை தான்...

திண்டுக்கல் தனபாலன் said...

குறிப்புகள் நன்று...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்
http://thaenmaduratamil.blogspot.com/2016/03/blog-post.html
நன்றி

HVL said...

நீங்க சொல்லியிருப்பது, ஈசியாக பேச நல்ல பயிற்சி தான்!

Siva said...

அருமையான யோசனை. தொடர்ந்து பதிவு எழுதலாமே?

சாதாரணமானவள் said...

Thank you all :)

Yesuraj Guna said...

அருமை