Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Saturday, March 10, 2018

போலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்

ரொம்ப கோபத்தோடும் வருத்தத்தோடும் இந்த பதிவை எழுதறேன்
fake media cartoon க்கான பட முடிவு

இந்த மீடியாக்கள் நம்மை நல்லா  ஏமாத்துதுன்னு ஒவ்வொரு விஷயமா தெரிய வரும்போது செம்ம கோவம் வருது. அருவி படத்துல ஒரு ஸீன் வரும். அந்த பொண்ணுக்கு எய்ட்ஸ் ன்னு தெரியறவரைக்கும் அவளை  'பாதிக்கப்பட்ட பெண்' ன்னு  சொல்லுவாங்க. எய்ட்ஸ் னு தெரிஞ்சதும் அந்த ஆண்களை 'பாதிக்கப்பட்டவர்கள்' ன்னு சொல்வாங்க. அது போல தான் இந்த போலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் தோணுது.
usha police க்கான பட முடிவு

போலீஸ் போன்னு சொன்னா போகணும் நில்லுன்னு சொன்னா நிக்கணும். இது தான் போலீசுக்கான சுதந்திரம் நம்முடைய கடமை. நாம நல்லவங்க தான். என்னை தடுத்து நிறுத்தி ஏகப்பட்ட கேள்வி கேட்டா கோவம் வரும் தான். ஆனா நான் நின்னு பதில் சொல்லி 'என் மேல தப்பு இல்ல, நீங்க என்மேல சந்தேகப்பட தேவை இல்ல' ன்னு நான் தான் டாக்யூமென்ட்ஸ் காட்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி அவங்க சந்தேகத்தை clear பண்ணனும். வேற வழி  இல்ல.  அத்தனை கேள்வி கேக்கறது தான்  அவங்க வேலை. கேக்க தான் செய்வாங்க.

போலீஸ் பத்தி தனிப்பட்ட முறையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். இந்த பதிவுல நான் போலீஸ் க்கு சப்போர்ட் பண்ணல. என் கோவம் எல்லாம் அந்த புருஷன்காரன் மேல தான்.

இந்தாளு - அந்தம்மா புருஷன்- என்ன பண்ணனும்?ஹெல்மெட் போட்டு வண்டி ஒட்டி இருக்கணும். போடலையா.. மாட்டிகிட்டியா...  நிக்க சொன்னதும் நிக்கணும். நிக்க உனக்கு என்ன கேடு?

போலீஸ்காரனுக்கு தெரியாது உன் பொண்டாட்டி கர்ப்பம் ன்னு.
ஆனா உனக்கு தெரியும்ல? என்ன வெங்காயத்துக்கு நிக்காம போன?

போலீஸ் துரத்துதுன்னு தெரிஞ்சும் ஏன் வேகமா போன? போலீஸ் காரனுக்கு சந்தேகம் வலுக்குமா இல்லையா?

ஒரு கிலோமீட்டர் ரெண்டு கிலோமீட்டர்னா பரவால்ல.. ஆறு கிலோமீட்டர் போலீஸ் துரத்த துரத்த நீ வண்டி நிறுத்தாம வந்திருக்கன்னா நீ எப்பேர்பட்டவனா இருப்ப?

முதல் தடவைலயே  அந்த அம்மா விழல. மூணாவது தடவை உதைச்சப்ப தான் விழுந்திருக்கு. நீ பொண்டாட்டி மேலயும் குழந்தை மேலயும் அக்கறை இருந்திருந்தா உன் உசுரு போனாலும் பரவால்ல ன்னு முதல் உதைலயே வண்டிய ஓரம் கட்டி நிறுத்திருக்கணும்ல..

இத்தனைக்கும் போலீஸ் காரன் உதைச்சு தான்  விழுந்தாங்கன்னு எந்த ப்ரூஃப்பும் இல்ல. இந்த ஆளு வண்டிய விழுக்காட்டிட்டு மாட்டினா சங்குன்னு ஏன் அந்த போலீஸ் மேல பழி  போட்டிருக்க கூடாது?

 நாடகம் ஆடறான் ஹாஸ்பிடல்ல. அவன் அழுதா அவன் நல்லவனா?
usha police க்கான பட முடிவு

இதுல இன்னொரு சந்தேகம் வேற நம்ம புத்திசாலிங்களுக்கு  வருது. போலீஸ் காரன் குடிச்சிருந்தான். இல்லாட்டி இவ்ளோ வேகமா ஆறு கிலோ மீட்டர் துரத்திட்டு வர மாட்டான்னு. இந்த புருஷன் காரன் குடிச்சுட்டு ஆறு கிலோ மீட்டர் ஒட்டி இருக்க மாட்டானா? இவன் குடிச்சிருக்க மாட்டான் னா  போலீசும் குடிச்சிருக்க மாட்டான்னு சொன்னா மறுக்க முடியுமா? இத்தனைக்கும் போலீஸ் ஜீப்ல தான் வந்திருக்கு. இந்தாளு பைக் ஓட்டிட்டு வந்திருக்கான்.  ரெண்டாவது போலீஸ் குடிச்சிருந்தா என்ன குடிக்காட்டி என்ன? (actually i don't support any drunkard) . நீ தப்பு பண்ணி போலீஸ் பிடிச்சா நீ நிக்கணும்ல ..

 நம்மள எல்லாம் இந்த மீடியா பன்னாடைங்க  'மக்கள் லூசுபசங்க.. எமோஷனலா பேசினா கண்ணீர் விட்ட உருகிப்போய் உண்மை என்னன்னு யோசிக்க மாட்டாங்க. அதுவும் போலீஸ் அராஜகம்ன்னா 'ஆமாமா' ன்னு கண்ணு விரிய படிப்பாங்க. வாய் கிழிய பேசுவாங்க.  'ன்னு தெரிஞ்சுகிட்டானுங்க. அவனுங்க பொழைச்சுக்கறாங்க. நீங்க எது சரின்னு தேடுங்க. கேக்கறதெல்லாம் பாக்கறதெல்லாம் நம்பாதீங்க. இந்த பதிவை கூட.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

தொடர்புடைய படம்
எனக்கு தோணுனத நான் எழுதி இருக்கேன். உண்மை எதுன்னு தெரியாம, இது தான் உண்மைன்னு சொல்றவங்களுக்கு நடுவுல, இது ஏன் உண்மையா இருக்க கூடாதுன்னு கேள்வி கேட்டு பார்த்து, இந்த பதிவை போட்ருக்கேன். கேஸ் கோர்ட்டுக்கு போய் எது உண்மையோ அது வெளி வரட்டும்.என் சந்தேகக்கேள்விகள் தவறாகக்கூட போகலாம். ஆனா நான் ஒரு விஷயத்தை வேறு கோணத்திலும் அணுகி இருக்கேன்ங்கற திருப்தி போதும். நீங்க இதுக்கு அப்பறம் படிக்கும் எந்த செய்தியும் வேறு கோணத்திலும் பார்க்கப்படும்ங்கற மனநிறைவோடு இந்த பதிவை முடிவுக்கு கொண்டு வரேன்.

நன்றி


2 comments:

சுபத்ரா said...

Hi. How r u.. Didn't expect such a post from u. Sorry

சாதாரணமானவள் said...

Finally my perspective was right. it is disclosed that the lady was not actually pregnant. This is what I told in that blog. Don't believe whatever you see