Thirukkural
45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.
Tuesday, October 19, 2010
முதலாளியாய் இருப்பது கேவலம். தொழிலாளியாய் இருப்பது பெருமை. எங்கே?
என் நெருங்கிய நண்பர் இன்போசியன் ஆகி விட்டார். புரியவில்லையா? இந்தியாவில் இருப்பவர் இந்தியன். அதுபோல இன்போசிஸ் இல் வேலை செய்பவர் இன்போசியன். தற்போதய கார்பொரேட் உலகம் இன்னும் என்னென்ன வார்த்தைகளை அறிமுகப்படுத்தப்போகிறதோ! நன்று... என் நண்பர் ஒரு தமிழக மாநகராட்சியிலே சொந்தமாக தொழில் செய்துகொண்டிருந்தவர். நல்ல வருமானம் உள்ள நிலையில், 'இன்போசிஸ்' என்ற மந்திரச்சொல் அவரது குடும்பத்தாரையும், நண்பர்களையும் மயக்கி நண்பரின் தொழிலை இழுத்து மூட வைத்து விட்டு, 'ரிஸ்க்' இல்லாத வேலை என்று இன்போசிஸ் க்குள் நுழைய வைத்து விட்டது. எனக்கு புரியவில்லை. தனிக்காட்டு ராஜாவாக இருப்பதை விட கூட்டத்தில் வேலைகாரனாக இருப்பது எந்த விதத்தில் சிறந்தது? கௌரவமாக சொந்த தொழில் செய்பவருக்கு கிடைக்கும் மரியாதை விட அந்நியனுக்கு அடிமை வேலை பார்ப்பது அவ்வளவு பெருமையான விஷயமா? இந்தியா வளர்கிறதா? இல்லை அடிமை தொழிலை வளர்க்கிறதா? ஒண்ணுமே புரியலடா சாமி...
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.. நானும் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாமா என்றே யோசித்து வருகிறேன்...
உங்களுக்கு ஒரு தகவல்...இன்ஃபோசிஸ் அந்நிய நிறுவனம் அல்ல...
உண்மை தான் நண்பரே. ஆனால் இன்ஃபோசிஸில் நம்மவர்கள் வேலை செய்வது அயல் நாட்டு பணிகளை முடித்துத் தர.
நீங்க சொல்றது சரிதான். ஆனா திரை கடல் ஓடியும் திரவியம் தேடு னு நம்ம பெரியவங்க சொல்லி இருக்கங்களே ! சும்மா அயல் நாட்டு பணி அது இது , னு எல்லாரும் சொல்றாங்க, ஆனால் அது என்னவென்று பார்க்க ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தங்கள் நண்பர் சென்றிருக்கலாம்.
கிணற்று தவளைகளாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே தான் இந்த மாறுபட்ட கருத்தை வெளியிட்டிருக்கிறேன்
ஹா ஹா! சுய தொழில் புரிபவர்கள் மட்டுமே அடிமை இல்லாதவர்கள் என நினைத்தால் எந்த ஒரு நிறுவனமும் இருக்க இயலாது. அவரவர் அரசர் என இருந்தால் வாங்குபவர் எவர்?
Post a Comment