Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, October 21, 2010

புதிர்... புதிர்... புதிர்....(வலைபதிவை பிரபலமாகும் முயற்சி)

நம்ம வலைபதிவை கொஞ்சம் பிரபலபடுத்த புதிர் போடுவது நல்ல வழியாக தோன்றுகிறது. புது பதிவர்கள் இம்முறையை முயற்சிக்கலாம். இதோ என் முறை.


1 . ஒரு கிளி யானையின் மேல் உட்கார்ந்ததால் யானை செத்துப்போய் விட்டது. இது எப்போது  சாத்தியம் ஆகும்?


2 . ஒரு பூக்கடையின் போர்டில் இப்படி எழுதி இருந்தது.
     சிவப்பு ரோஜா ரூ 10 , வெள்ளை ரோஜா ரூ 8 , மஞ்சள் ரோஜா ரூ 6 என.
ஒரு பொண்ணு வந்து 10 ரூபாய் கொடுத்து ரோஜா வேண்டும் என கேட்டாள். எது வேணும் னு கேட்டு அவள் கேட்ட சிவப்பு ரோஜாவை கடைகாரர் கொடுத்தார். அடுத்து ஒரு பொண்ணு வந்து 10 ரூபாய் கொடுத்து ரோஜா வேண்டும் என கேட்டாள். அதற்கு அவர் எந்த கேள்வியையும் கேட்காமல் அவராகவே ஒரு சிகப்பு ரோஜாவை கொடுத்துவிட்டார். எப்படி?


 3 . COW என்பதை 13 வார்த்தைகளில் எப்படி உச்சரிப்பீர்கள்?


4 . ஆறு ஆப்பிள்களை ஒன்பது பேருக்கு எப்படி சமமாக பகிர்ந்தளிப்பீர்கள்?

எல்லாரையும் போலவே ஒரு நாள் கழித்து இதற்கு விடை சொல்கிறேன் என்று முதலில் சொல்லி இருந்தேன். ஆனால்  என் settings தவறு காரணமாக நண்பர்கள் விடை தர முடியவில்லை. எனவே மேலும் இரண்டு நாட்களுக்கு காலத்தை நீட்டித்து சனிக்கிழமை மாலை விடை பதிவு செய்கிறேன்.
விடை தெரிந்தவர்கள் பதிலளிக்க முயன்று பாருங்கள். விடை தெரியாதவர்கள் எனக்கு நண்பர்கள் ஆகி பாருங்கள் :-)

9 comments:

Ramesh said...

2. அந்தப் பெண் பத்து ரூபாய் சில்லறைகளாகக் கொடுத்தாள்.

3. Carry Over Work

Ramesh said...

ஆ...என்னங்க இது கமெண்ட் பப்ளிஸ் ஆயிடுச்சி....புதிர் போடத் தெரிஞ்ச நீங்க Comment Moderation தெரியாம விட்டுட்டீங்களே....

அப்படியே word verification ம் ரிமூவ் பண்ணுங்க..

பாலா said...

1. அந்த கிளி யானை மூக்கின் துளை மேல் உட்கார்ந்திருக்கலாம். (என்னே அறிவு?)

2. அந்த பெண் விரலால் சுட்டி காட்டி இருக்கலாம்.

3. see o double you

சாதாரணமானவள் said...

ஸாரி ரமேஷ்.. நான் புதிதாக எழுதுவதால் எனக்கு சில பல விஷயங்கள் தெரியவில்லை. comment moderation, word verification போன்றவற்றை நேற்று கொடுத்திருந்தேன். ஆனால் இன்று தான் தெரிந்தது, அவற்றை கொடுத்ததால் followers comment கொடுக்க முடியவில்லை என்று.எனவே மறுபடியும் activate செய்துவிட்டேன்.

பெசொவி said...

Answer for 3rd question :

It should be how do you spell Cow in thirteen letters (not words as told by you)

Answer is

see o double you

சாதாரணமானவள் said...

விடைகள்:
1. ஒரு யானையின் பெயர் கிளி என்றும் கிளியின் பெயர் யானை என்றும் இருந்தால் சாத்தியம்

2. அவள் 10 ரூபாய்களையும் சில்லறைகளாக கொடுத்தாள்

3. See o double you (13 letters)

4. ஹா ஹா ஜூஸ் போட்டு சமமாக கொடுக்கலாம்

சாதாரணமானவள் said...

விடை சொல்ல முயற்சித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.. அதிலும் முதல் கேள்விக்கு பாலாவின் முயற்சியும் மூன்றாவது கேள்விக்கு ரமேஷின் முயற்சியும் பாராட்டத்தக்கவை. ;‍)

Madhavan Srinivasagopalan said...

உங்களது இந்தப் பதிவு (புதிர்) வலைச்சரத்தில் இன்று என்னால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முடிந்தால் வந்து பார்க்கவும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கிளி யானையின் பெயர் யானை கிளியின் பெயர்