Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, October 28, 2010

நண்பனின் காதலி சந்தோஷுக்கு என்ன முறை?

இந்த முறை எழுதப்போவது உலக இணைய வரலாற்றில் முதல் முறையாக ஒரு அற்புதமான காதல் கதையை பற்றி.. இதை சினிமாகாரர்கள் படமாக எடுத்தால் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் தான். உண்மையிலேயே நண்பனின் காதலுக்கு மரியாதை கொடுத்த ஒரு அருமையான மனிதனை பற்றி தான் கூறுகிறேன்.

எங்கள் வீட்டினருகில் சந்தோஷ் என்ற பெயரில் ஒரு பையன். அப்பா கிடையாது. அம்மாவின் வளர்ப்பு. மெக்கானிக்காகவோ, என்னவோ வேலைக்கு போய்க்கொண்டிருந்தான். நண்பர்கள் வட்டம் பெரியது. அதில் ஒரு நண்பனுக்கு காதல் நோய் வந்தது இவன் துரதிர்ஷ்டம்.....

(இந்த பாராவில் வரும் 'எல்லா' என்ற வார்த்தைக்கு முன் 'சினிமாவில் வருவதை போல' என்ற வரியை சேர்த்துக்கொள்ளவும் ) எல்லா நண்பர்களை போலவே இவனும் நண்பனின் காதலுக்கு எல்லா உதவியும் செய்து வந்திருக்கிறான். காதல் ஜோடியும் வானில் சிறகடித்து பறந்திருக்கிறது. எல்லாம் நன்றாக போய்கொண்டிருந்த நேரத்தில் எல்லா பெற்றோரையும் போல பெண்ணின் பெற்றோரும் விஷயம் தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு இடத்தில் கல்யாண ஏற்பாடுகளை துரிதமாக செய்து விட்டனர். எல்லா காதலியையும் போல 'கட்டினா அவனைத்தான் கட்டுவேன்' என்று இந்த பெண் உறுதியாக இருக்க, எல்லா காதலனையும் போல பெண்ணை கடத்தி கல்யாணம் பண்ண காதலனும் தயாராக, புதியதோர் திட்டம் தயாரானது.

அதன்படி, நிச்சயதார்த்த நாள் அன்று காலையில் நண்பர்கள் கட்டம் கட்டி பெண்ணை தூக்கி விட்டார்கள். ரெஜிஸ்டர் ஆபிசில் காதலனையும் காதலியையும் கணவன் மனைவியாக ஆக ப்ரமோஷன் கொடுக்க  நண்பர்கள் தயாராக இருந்தார்கள். பெண் வீட்டாரோ 'எவனா இருந்தாலும் வெட்டுவேன்' ரேஞ்சுக்கு இவர்களை தேடிக்கொண்டிருந்தார்கள். ரெஜிஸ்திரார், தாலி, மாலை, கல்யாண பெண் அனைவரும் ரெடி. ஒரே ஒரு சின்ன பிரச்சனை. மாப்பிள்ளை வரவில்லை. நேரமோ நெருங்க, பெண்வீட்டாரோ கொலைவெறியில் தேட,  பெண்ணோ பதற, நண்பர்களுக்கு அந்த நேரத்தில் என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் தான் நம் சந்தோஷின் வாழ்வில் முக்கிய திருப்பம் வந்தது. பெண்வீட்டார் பெண்ணை பிடித்துச் சென்றுவிட்டால் தன் நண்பனின் காதலி வேறொருவருக்கு மனைவி ஆகிவிடும் சூழ்நிலை சந்தோஷின் மனதில் பெரும் புயலை ஏற்படுத்தியது. எனவே நண்பனின் காதலியை அவள் பெற்றோரிடமிருந்து காப்பாற்ற அவன் ஒரு முடிவு எடுத்தான் பாருங்க....
...........
...........
............
............
அவனே அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டான். (இந்த இடத்தில் பாயும் கடலலை, பறக்கும் பறவைகள், ஆடும் தென்னைமரம் எல்லாம் அப்டியே freeze ஆகி நிக்கணும்).
அதன் பின் சந்தோஷும், சந்தோஷின் மனைவியும்  அவன் நண்பர்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். (ஜகஜம் ஜகஜம் ஜகஜகஜம்ஜம் background music) வீட்டில் அம்மாவிடம் விஷயத்தை சொல்லி அம்மாவையும் கூட்டிக்கொண்டு வேறு எங்கோ சென்று விட்டார்கள். அடுத்த நாள் செய்திதாளில் 'பெண்ணை கடத்திய வாலிபர்' என்று செய்தி வேறு. சரி, விஷயம் இதோடு முடிந்தது என்று இருந்தால், நாடோடிகள் போலவே அதன் பின் தான் சில பல ட்விஸ்டுகள்.  என்ன என்று கேட்கிறீர்களா?

சந்தோஷ் இருக்கும் இடம் பற்றிய விவரத்தை எப்படியோ தெரிந்துகொண்டு (எவனோ போட்டு குடுத்துட்டானாம்) பெண் வீட்டார் பின்னாடியே சென்று சந்தோஷை வெளுவெளு என்று வெளுத்து, அன்றே பெண்ணை தங்களுடன் கூட்டி சென்றுவிட்டார்கள். கூடவே, வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் முடிந்தது. சந்தோஷின் நண்பன் அந்த பெண்ணை மறந்துவிட்டு  வெளியூரிலேயே வேலைபார்த்து செட்டில் ஆகி விட்டான். பெண்வீட்டாரின் பின்புலம் பெண்ணை கடத்திய பிறகுதான் தெரிந்திருக்கிறது இவனுக்கு. அதனால் தான் கல்யாணத்தன்று பார்ட்டி எஸ்கேப்.  இப்ப நம்ம சந்தோஷ் என்ன ஆனான்னு தான கேக்கறீங்க? போன வாரம் என் தம்பி பார்த்தாக சொன்னான்.. டீக்கடையில் சந்தோஷ் தன் நண்பர்களுடன் டீசாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு பையன் அவனிடம் சொன்னானாம் 'மச்சி.... அந்த பொண்ணு உன்னையே பாக்குது டா...'
CONCLUSION: சொல்ல மறந்த காதல் கதை :-)

மேற்கூறிய அனைத்து சம்பவங்களும் உண்மை. இந்த காலத்தில் நண்பனின் காதலுக்காக எந்த அளவு பசங்க இறங்கறாங்க என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். இந்த விஷயத்தை கேள்வி பட்டதும் எனக்கு ஒன்றே ஒன்று தான் தோன்றியது. உக்காந்து யோசிப்பாய்ங்களோ....

இதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு முன்கூட்டியே நன்றி !

9 comments:

எல் கே said...

ஹ்ம்ம் என்ன பண்ண, காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை

சாதாரணமானவள் said...

அட.. சுடச்சுட மறுமொழி கொடுத்துவிட்டீர்களே.. நன்றி LK

வெங்கட் said...

ம்ம்.. இது நாடோடிகள் படத்தை
மிஞ்சற ஸ்கிரிப்டா இருக்கே..

சந்தோஷ்.. உனக்கு ரிஸ்க் எடுக்குறது
ரஸ்க் சாப்பிடற மாதிரியா கண்ணா..?!!

மாணவன் said...

"மேற்கூறிய அனைத்து சம்பவங்களும் உண்மை"

நெசமாத்தான் சொல்றீங்களா.......

’காதலும் கற்று மற’

நன்றி
நட்புடன்
மாணவன்

சாதாரணமானவள் said...

சாமி சத்தியமா... மாணவன் சத்தியமா உண்மை... உண்மையை தவிர வேறொன்றும் இல்லை

மாணவன் said...

”நண்பேன்டா”

நிருபித்துவிட்டார் சந்தோஷ்

///”டீக்கடையில் சந்தோஷ் தன் நண்பர்களுடன் டீசாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு பையன் அவனிடம் சொன்னானாம் 'மச்சி.... அந்த பொண்ணு உன்னையே பாக்குது டா...”///

நாங்களும் கலராத்தான் இருக்கோம் எங்கள ஒரு புள்ள யும் பார்க்கமாட்டேங்குது

மச்சி அதுக்கு சந்தோஷ் மாதிரி ராசியான முகம் வேனும்

ம்ம்ம்.... நடத்துங்கடா நடத்துங்க

அப்ப நாந்தான் அவுட்டா........

Ravi kumar Karunanithi said...

nice

Radhakrishnan said...

பொழுது போகனுமில்ல. ;)

சுபத்ரா said...

என்ன இவ்வளவு பெரிய சோஓஓஓஓஓகக் கதைய இவ்வளவு ஜாலியா சிம்பிள்லா சொல்லிமுடிச்சிட்டீங்க? எனக்கு அதிர்ச்சி இன்னும் போகலங்க...